Wednesday, November 19, 2025

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ரகசியங்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள வியப்பூட்டும் சில அற்புதமான ரகசியங்கள் பற்றி அறிந்து கொள்வோமா..!!
பூமத்திய ரேகையின் மையம் :

இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Centre Point of World's Magnetic Equator)

ஒரே நேர் கோடு:

பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE) அமைந்துள்ளது. 

மனித உடலின் அடிப்படை:

மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது...

சுவாசம்:

விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600)

நாடிகள்:

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது...

ஆச்சரியங்கள்:

"பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்து. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களை குறிக்கின்றது,

28 தூண்கள்:

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (Beam), இது 64 ஆயக்கலைகளைக் குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (Cross Beams), மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களைக் குறிக்கின்றது.

பொற் கூரை:

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

ஆனந்த தாண்டவம்:

சிதம்பர நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவ நிலையினை, வெளிநாட்டு அறிஞர்கள் "Cosmic Dance" என்று அழைக்கின்றனர்.

தீர்த்தங்கள்:

கோயிலில் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

கோபுரங்கள்:

இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. 
இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். 
கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. 
இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும். 
இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Tuesday, November 18, 2025

வல்வில் ராமன், திருப்புள்ளம்பூதங்குடி கும்பகோணம்

திருப்புள்ளம்பூதங்குடி
கும்பகோணம் திவ்யதேச யாத்திரையில் அடுத்த கோயில் திருப்புள்ளம்பூதங்குடி 

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக திருவைகாவூர் செல்லும் டவுன் பஸ் பாதையில் சுவாமி மலைக்கு அப்பால் 3 மைல் தூரத்தில் உள்ளது.திருஆதனூர் திவ்யதேசத்திற்கு வெகு அருகாமையில் உள்ள திவ்யதேசம்!

மூலவர் - வல்வில் ராமன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி) .

தீர்த்தம் - ஜடாயு தீர்த்தம், க்ருத்ர தீர்த்தம்.

விமானம் - சோபன விமானம்.

ப்ரத்யக்ஷம் - சக்ரவர்த்தித் திருமகன், க்ருத்ரராஜன்.

பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சீதாப்பிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றபோது ஜடாயு என்னும் கழுகு, இராவணனை எதிர்த்து போரிட்டு உயிர் துறந்தது. சீதையைத் தேடிக் கொண்டு வந்த இராமபிரான், ஜடாயுவிற்கு இறுதிக் கடன்களைச் செய்தமையால் இத்தலம் 'புள்ளம்பூதங்குடி' (புள் - பறவை) என்று அழைக்கப்படுகிறது.

 இராமபிரான், ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தபிறகு, சிரமப் பரிகாரத்திற்காக இத்தலத்தில் சயனித்திருந்ததால் 'சிரமப்பரிகார பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். அதனால் பெருமாளுக்கு அம்பு, வில் போன்ற ஆயுதங்கள் இல்லை.

பொதுவாக ஒருவருக்கு ஈமக்கிரியைகள் செய்யும்போது, செய்பவரின் மனைவி உடன் இருக்க வேண்டும் என்பது விதி. இதை உணர்ந்த ராமபிரான் மானசீகமாக சீதாபிராட்டியை நினைத்தார். உடனே ராமபிரானுக்கு உதவி புரிய சீதாபிராட்டியின் மறு அம்சமாகிய பூமிபிராட்டி தோன்றினார்.

 பூமிபிராட்டியுடன் இணைந்து ஜடாயுவுக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார் ராமபிரான். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.

இங்கே எழுந்தருளி இருக்கும் யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொண்டால், உத்யோகம் கிடைப்பது, மற்றும் உத்யோக உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை.

திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கை, “அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே’ என 10 பாசுரம் பாடினார்.

அறிவதறியா னனைத்துலகும் உடையானென்னை யாளுடையான் குறிய மானி யுருவாய கூத்தன் மன்னி அமருமிடம் நறிய மலர்மேல் சுரும் பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட பொறிகொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே. ~ 

வைணவ சம்பிரதாயத்தில் 2 பூதபூரிகள் உண்டு. பூதபுரி என்றால் பூத கணங்களுக்கு சாப விமோசனம் கிடைத்த இடம் என்பது பொருள். முதல் பூதபுரி – காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமானுஜர் அவதரித்த இத்தலத்தை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். இரண்டாவது பூதபுரி – புள்ளபூதங்குடி – ஆச்சாரியர்கள் சிறப்பித்தார்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Monday, November 17, 2025

சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வது ஏன்?

சிவனுக்கு கார்த்திகை சோம வாரத்தில் சங்காபிஷேகம் செய்வது ஏன்?


கார்த்திகை சங்காபிஷேகம்
கார்த்திகை சங்காபிஷேகம்
சிவபெருமான் அபிஷேகப்பிரியர். அதிலும் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்தால், பக்தனுக்குப் பரமானந்தம் வழங்குவார் என்பது நம்பிக்கை. கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் என்கிறவர்கள் இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.

சங்காபிஷேகம் செய்வது ஏன்?

வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. பகவான் கிருஷ்ணனின் கையில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு குருக்ஷேத்ரமே நடுங்கியது என்பார்கள். சங்கு, இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மையானது. சுட்டாலும் வெண்மை தருவது. மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

இன்று கார்த்திகை சோமவார பிரதோஷம் : வழிபாட்டின் சிறப்புக்களும், பலன்களும்

சங்கு காயத்ரி மந்திரம்

சங்கினுள் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் போன்றவற்றை நிரப்பி அபிஷேகம் செய்தாலும், அதை கங்கையாகப் பாவித்தே அபிஷேகம் செய்ய வேண்டும். அவரவர் வசதிப்படி 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்குகளைப் பயன்படுத்தலாம். சங்கிற்கென்றே தனி காயத்ரியும் உள்ளது.

‘ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே

பவமா நாய தீமஹி

தந்நோ சங்க ப்ரேசோதயாத்’

கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ. அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில் தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் உமா மகேஸ்வர விரத முறையும், பாராயணம் செய்ய வேண்டிய பாடலும்

சங்கில் ஒலிக்கும் ஓம்

ஓம் காரத்தால் ஓம்கார அபிஷேகம்

சங்கு தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்வதானது, அந்தப் பிரணவமாகிய ஓம் காரத்தினாலேயே, அந்தப் பிரணவத்தின் வடிவமே ஆகிய பரம்பொருளுக்கு அபிஷேகம் செய்வது போன்றதாகும். சங்கை நம் காதில் வைத்து உற்றுக் கேட்டால், கடலில் இரைச்சல் போன்ற சப்தம் கேட்கும். உண்மையில் அது பொருளற்ற வெற்று இரைச்சல் அல்ல. பிரபஞ்ச இயக்கத்தின் ஆதார ஸ்ருதியான ‘‘ஓம்’’ காரத்தின் ஒலி.

ஒலி மாசு மறுவே இல்லாத கடற்கரைக்குச் சென்று, மனதை தியான நிலையில் ஒருமுகப்படுத்தி, கடல் அலைகளில் ஓசையை உற்றுக்கேட்டால், அது ஓம்காரமாக ஒலிப்பதை உணரலாம். அதேபோல் அந்தக் கடலில் இருந்து தோன்றக் கூடிய சங்குகளிலும் கடலைப் போலவே ‘‘ஓம்’’காரம் ஒலிப்பதைக் கேட்கலாம். எனில் ‘‘ஓம்’’காரம் ஒலிக்கும் சங்கில் தீர்த்தம் நிரப்பி, ‘‘ஓம்’’காரப் பொருளாகிய அந்தப் பரம் பொருளுக்கு அபிஷேகம் செய்வது என்பது தனிச்சிறப்பு கொண்டது.

கார்த்திகை மாதம் சிவபெருமானை தீப ஒளியால் மகிழ்விக்க வேண்டும் என்பது சிவாகம சாத்திரங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாதத்தில் தீப ஒளியாலும், யோகாக்னியாலும் ஏற்படும் வெப்பத்தைச் சமன் செய்யவும் சிவ ரூபத்தைக் குளிர்விக்கவும் சங்காபிஷேகம் செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது. சங்காபிஷேகத்தைப் பார்த்தாலோ, சிவமூர்த்தத்திலிருந்து விழும் தீர்த்தத்தைப் பருகினாலோ நம் உடல்நிலை சமன் நிலை அடையும். தோஷம் நீங்கும் பிணிகள் அண்டாது.

சபரிமலையில் ஐயப்பனுக்கு நடக்கும் தினசரி பூஜைகளின் முழு விபரம்

சங்காபிஷேகம் நடத்துவது ஏன்?
இறைவன் ஒருவனே

வாழை இலை மீது தானியங்களை பரப்பி அதன் மீது சங்குகளை ஒழுங்கு முறையாக வைத்து நீர் வார்த்து மாவிலை, தர்ப்பை நுனிகளை விட்டு சங்குக்கு பூஜை செய்து சுவாமிக்கு அபிஷேகிப்பர். சங்காபிஷேகம் நடக்கும் முக்கியமான கோயில்கள் திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு, திருவானைக்கோயில், பேரூர், போளுர், திருவேடகம், திருப்பாதிரிப் புலியூர், ராமேஸ்வரம், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆகிய கோயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு வலம்புரிச்சங்கு கோடி இடம்புரிச் சங்குகளுக்கு சமம், எனவே சுவாமிக்கு வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால் விசேஷமானது.

108, 1008 சங்குகளையும் இறைவன் திருச்சந்நதியில், பன்னிரண்டு ராசிக்குண்டங்களாகப் பிரித்து, ஒவ்வோர் ராசி குண்டங்களிலும் ஒன்பது சங்குகள் வீதம் 12 ராசிகளிலும் 108 சங்குகள் வைத்து, எட்டுதிக்குகளுக்கும் எட்டுப் பிரதான சங்குகளையும் நடுவில் வலம்புரி, இடம்புரி என்ற இரு சங்குகளையும் ‘‘சிவசக்தி’’என அமைத்தல் வேண்டும். வலம்புரி, இடம்புரிச் சங்குகளைச் சுவாமியாகவும், அம்பாளாகவும் பாவித்து பிரதிஷ்டை செய்ய வேண்டும், இவ்வாறு அமைக்கப்பெற்ற 118 சங்குகளிலும் ‘‘1+1+8=10=1’’ எல்லாம் ‘‘ஒருவனே’’ என்ற தத்துவப் படியும் அமைத்தல் வேண்டும்.

சங்காபிஷேகம் செய்யும் முறை

* இரண்டு வெள்ளிக் குடங்களில் நன்னீர் நிரப்பி அவற்றில் கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ கோரோசனை, புனுகு, விளாமிச்சை வேர், ஏலம், பன்னீர், மஞ்சள் முதலிய வாசனைத் திரவியங்களைச் சேர்த்து, ஒவ்வொரு சங்கிலும் மாவிலை, தர்ப்பை, மலர்வைத்து யாக குண்டத்தில் எதிரில் அமைத்தல் வேண்டும்.

* பூஜைமுறை சங்குகள் ஒவ்வொன்றும் ‘ஓம், ஓம்’ என்று ஒலித்துக் கொண்டிருக்கும். யாககுண்டத்தைச் சுற்றி ஐந்து நாழிகை நேரம் ஓங்கார மந்திரம் செபிக்க அம்மந்திரம் தீர்த்தத்தில் கலக்கிறது. தர்ப்பைப்புல் மூலம் தெய்வச் சக்திகளையும், மாவிலையில் உள்ள துவர்ப்பு சக்தியையும் ஈர்த்துக் கொள்கிறது.

சங்காபிஷேகம் எப்படி செய்வது?
* வேதசாஸ்திரங்களின் ஜெப மந்திரங்களும் ஓதி ஒவ்வோர் ராசி மண்டலத்திற்கும் எட்டுத் திக்குகளிலுள்ள சங்குகளுக்கும் வலம்புரி, இடம்புரிச் சங்குகளுக்கும் முறையே பூஜைகள் செய்தல் வேண்டும்.

* வேள்வி மண்டபத்தில் யாக குண்டத்தில் ஆகவணீயம், தட்சிணாக்கினியம், காருகாபத்தியம் என்னும் முத்தீயை முறையே அத்தி, ஆல், அரசு, மா, பலா, வெள்ளெருக்கு, வன்னி, நாயுருவி, தர்ப்பை முதலிய சமித்துக்களால் வளர்த்து, நவதானியம், வாசனாதிதிரவியம், கனிவகை, தேன், தேங்காய், பீதாம்பரம், இலவங்கம், தாம்பூலம், பொரி முதலியவற்றோடு நறுநெய் தாரையாகப் பெய்து ஒரே ஜோதிப்பிழம்பாக அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணைக் கடவுளுக்கு அக்னிமூலமாகக் கொடுத்து பலி போட வேண்டும்.

* காரியாக்கினியிலிருந்து மூலாக்கினியாகிய இரு சங்குகளிலும் பிரதிஷ்டை முடித்து தூபதீப, நிவேதனம், கற்பூரார்த்தி முதலியவற்றைச் செய்து, வாத்தியங்களோடு பிரகாரம் வலம் எழுந்தருளச் செய்து உலகம் தீங்கின்றி உய்யும் பொருட்டு வேண்டிக் கொண்டு, ஆசிபெற்று ஒவ்வொரு சங்கு தீர்த்தத்தாலும் இறைவனை முறையே அபிஷேகம் செய்வித்தல் வேண்டும்.

* பல தீபங்கள் ஏற்றி கண்கவர் அலங்காரங்கள் செய்து நவகிரக அலங்கார தீபத்தால், பஞ்சபூதம், பஞ்சஇந்திரியம்(ஐம்புலன்கள்) ஐந்து முகங்களுக்கு பஞ்சமுக தீபாராதனையாக ஜீவன்கள் சுகவாழ்வு பெற வேண்டி கற்பூரார்த்தி முதலிய மங்களகரமான ஆராதனைகள் செய்தல் வேண்டும்.

சங்காபிஷேகத்தின் பலன்

சங்காபிஷேகத்தால் சகோதர ஒற்றுமையும் வளரும். சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். இதைத் தரிசிப்பவர்களுக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். வீடுகளில் நுழைவு வாயிலின் தரையில் சங்கு பதிக்கும் வழக்கம் இருக்கிறது. சில வீடுகளின் வாசல் முன்பும் சங்கைக் கட்டுவதுண்டு. இதனால் திருஷ்டி தோஷம் நீங்கி செல்வம் விருத்தியாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஓதவனேஸ்வரர் திருசோற்றுத்துறை நாதர் பசித் தீர்க்கும் நாதர்.

பசி நீக்கிய இறைவன் திருசோற்றுத்துறைநாதர்
பசித் தீர்க்கும் நாதர்...!
சிவனின் தோவரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 76-வது தேவாரத்தலம் ஆகும். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சோற்றுத்துறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.

இங்கு தாயார் அன்னபூரணியுடன் சோற்றுத்துறைநாதர் (ஓதவனேஸ்வரர்) என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார்.

இவரை திருமணத்தடை உள்ளவர்கள் சித்திரையில் நடைபெறும் நந்தியின் திருமண விழாவை கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை.
பிராத்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி கோவில் திருப்பணிக்கு பொருள் உதவி செய்தும், தங்களது நேர்த்திகடனை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.

தல விருட்சமாக வில்வமரமும், தீர்த்தங்களாக கவேரி, சூரிய தீர்த்தம் குடமுருட்டி உள்ளது.

ஆலயத்திற்கு அருகில் உள்ள திருமழபாடியில் நடைபெற்ற நந்தியம்பெருமான் திருமணத்திற்கு, திருச்சோற்றுத்துறையில் இருந்துதான் உணவுகள் அனைத்தும் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.

எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் உணவுக்கு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம்.

ஒரு காலத்தில் அருளாளர் என்னும் சிவ பக்தரும், அவரது மனைவியான திருநகையாளும், இத்தல ஓதனவனேஸ்வரரை வழிபட்டு, தங்கள் நிலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து வந்தனர்.
ஒரு முறை மழை பொய்த்துப் போனது. அதனால் எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது.

சிவனடியார்களுக்கு அன்னம் பாலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அருளாளரும், அவரது மனைவியும் மனம் வருந்தினர். தங்களின் இந்த நிலையை இத்தல ஈசனிடமும், அம்பாளிடமும் கூறி முறையிட்டனர்.

அந்த நொடியே ஈசனும், அம்பாளும் அவர்கள் முன்பாகத் தோன்றி,அள்ளக்குறையாத அட்சயப் பாத்திரத்தை வழங்கி மறைந்தனர்.

ஈசன் தந்த அட்சயப் பாத்திரத்தின் மூலம், அந்த தம்பதியர் அடியவர்களுக்கு தடையில்லாமல் உணவு வழங்கினார்கள்.

ஊர் மக்களின் பசிப் பிணியையும் போக்கினார்கள் பசியைப் போக்கிய இறைவன் என்பதால், இத்தல ஈசன் ‘திருச்சோற்றுத்துறைநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். தம்பதிக்கு, ஆலயத்தின் உள்ளே இருக்கும் நந்திக்கு அருகில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

மூலவரான சோற்றுத்துறை நாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். பசிப்பிணியை மட்டுமின்றி, பிறவிப் பிணியையும் தீர்த்தருள்பவர் திருச்சோற்றுத்துறைநாதர்.

இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சூரியன், கவுதம மகரிஷி போன்றவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபெற்றுள்ளனர். மூலவரின் கருவறை கோஷ்டத்தின் பின்புறத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.

சுவாமி சன்னிதிக்கு வலதுபுறம்

ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் சுவாமி சன்னிதிக்கு வலதுபுறம், அன்னபூரணி அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி உருவம் வெகு நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இவரை வணங்கினால் எம பயம் நீங்கும்.

ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. கவுதம முனிவருக்கும், அவரது மனைவி அகலிகைக்கும் சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், ஐயனார், சப்த கன்னிகள், சப்த ஸ்தான லிங்கங்களும் உள்ளன.

ஏழுர்ப் பெருவிழா

இங்கு காசி விஸ்வநாதர் தனிச் சன்னிதியில் அருள்புரிகிறார். இந்த ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா சிறப்புக்குரியது.

சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள், திருவையாறு ஐயாறப்பரும், அறம்வளர்த்த நாயகியும், நந்திதேவரும், சுயாம்பிகையும், திருப்பழனம் ஆபத்சகாயர்– பெரியநாயகி ஆகியோர் இங்கு எழுந்தருள்வார்கள்.

இதுவே ‘ஏழுர்ப் பெருவிழா’. அப்போது அனைவருக்கும் மதிய உணவு திருச்சோற்றுத் துறையிலேயே வழங்கப்படும்.

ஊருக்கே உணவிட அட்சயப் பாத்திரம் வழங்கிய சோற்றுத்துறைநாதருக்கு, ஐப்பசி மாத பவுர்ணமியில் சாதத்தால் அபிஷேகித்து அலங்கரிப்பார்கள்.

அந்த அன்னாபிஷேக விழாவில் இறைவனையும், இறைவியையும் வணங்கினால் பட்டினி, வறுமை நீங்கும்.

அதிகர்த்தன் என்பவரின் மகன் நற்கனதேவன். அவனது முற்பிறப்பில் அவனைப் பீடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இத்தல ஈசனை வழிபட்டதும் விலகியது.

அமைவிடம்

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருக்கண்டியூருக்கு கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, November 16, 2025

புதன் கிரகத்திற்குரிய திருவெண்காடு ஸ்ரீசுவேதாரண் யேஸ்வரர் அற்புதங்கள்.

நாகை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்ரீசுவேதாரண் யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது. நவக்கிரக நாயகர்களில் ஒருவரான புதன் ஸ்தலம். சந்திரனுக்கும், தாரைக்கும் பிறந்தவர் புதன். சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து கிரகபதம் அடைந்தவர். சந்திரன் புதனுடன் திருவெண்காட்டை அடைந்து சுவேதாரண்ய பெருமானை வழிபட்டு குருத்துரோகம் செய்த பாவத்தையும், சயரோகத்தையும் நீங்க பெற்றான். இத்தலத்தில் புதனுக்கு தனிச் சன்னதி இருக்கிறது. இந்த கோவில் சோழ வளநாட்டில் காவிரி வடகரையில் அமைந்துள்ள பதினோராவது திருத்தலமாகும். சீர்காழியிலிருந்து 14 கி.மீ. தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 26 கி.மீ தூரத்திலும் உள்ளது.
புதன் பகவான் ஸ்தலம் திருவெண்காடு
புதன் பகவான் ஸ்தலம் திருவெண்காடு
புதன் ஸ்தல பெருமைகள்:

இந்த ஸ்தலம் சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம். சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி ஆகிய மூன்று சிவமூர்த்திகள், பிரம்ம வித்யாம்பிகை, சுவேத மகாகாளி, சவுபாக்கிய துர்க்கை ஆகிய மூன்று சக்திகளின் திருநாமங்கள் அமைந்த தலம். இங்கு மூன்று மூர்த்தி, மூன்று அம்பாள், மூன்று தீர்த்தம், மூன்று விருட்சம் என்று அமைய பெற்ற சிறப்புடையது.
ஸ்ரீசுவேதாரண் யேஸ்வர சுவாமி
மேலும் இந்த திருவெண்காடு திருத்தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. உலகத்தில் உள்ள உயிர்கள் உய்யும் வண்ணம் 1008 விதமாக பெருமான் தாண்டவம் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...


பூஜை நேரங்கள்:

கோயிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 6 முதல் 7 திருப்பள்ளி எழுச்சி, 8.30 முதல் 10 வரை கால சந்தி பூஜையும், 11.30 முதல் 12 வரை உச்சிக்கால பூஜையும், மாலை 5.30 முதல் 6.30 வரை சாயரட்சை பூஜையும், 7.30 முதல் 8.30 வரை இரண்டாம் கால பூஜையும், 8.30 முதல் 9.30 மணி வரை அர்த்தசாமம் பூஜையும் நடைபெறும்.

சிறப்புகள்:


1. புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.

2. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத  கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

3. திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைக்கூடும்.

4. திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

5. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகமம் கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

புராணகதை

இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும்போது அதை பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

புதனை வழிபட வேண்டிய முறை

திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.


கிடைக்கும் பலன்கள்
திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும். திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளை இடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும். சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
சர்வ வல்லமை தரும் திருவெண்காடு புதன் ஸ்தலம்... புதன் பகவானுக்கு விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் பெருகும்...

*புதன் கிரகத்திற்குரிய* *திருவெண்காடு* *கோவில் அற்புதங்கள்*!

1. புதன் திசை ஒவ்வொருவர் வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். 

எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது.

புதன் திசை நடப்பவர்கள் 17 தடவை புதனை சுற்றி வந்து 17 தீபங்கள் ஏற்றி வைத்து  வழிபடுவது மிகவும் நல்ல பலன்களை கிடைக்க செய்யும்.

2.பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

3.திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்.

4.திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

5.இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்.

6.திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

7.ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன.

8.திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.

9.சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.

10.திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.

11.திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லிசூனியம், திருஷ்டிகள் விலகும்.கோர்ட்டு வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

12.அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டு மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.

13.இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும் அதை பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

14.திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியை பெறலாம்.

15. இத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள்.

16. காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.

17. இத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்ட பத்தில் தல வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
 நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.

18. திருவெண்காடு தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் நல்ல பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது.

19.சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கும்.

புதனுக்குரிய 17வருடம் திசா காலத்தில் புதனின் அருளசியைப் பெற புதன் திசை நடப்பவர்கள் செய்ய வேண்டிய  எளிய தாந்திரிக பரிகாரங்கள்.

1. ஒரு புதன் கிழமையன்று புதனுக்குரிய ஹோம வழிபாடு செய்து செந்நாயுருவி என்ற மூலிகையை எடுத்து போட்டு வழிபாடு செய்து வந்தால் அவர்களுக்கு வாழ்க்கையிலே அந்த புதன் தசையானது 17வருடம் நல்ல முறையில் இயங்கி அவர்கள் பெயர்,புகழ்,செல்வம் அனைத்தையும் பெற உதவும்

2.மேலும் புதன் திசை நடப்பவர்கள் புதனுடைய கிழமைகளிலே புதன் ஓரை  நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை பச்சைப்பயிரை ஒரு தாம்பாளத்தட்டில் நிரப்பி அதன் மீது ஒரு ஐந்து முக விளக்கை ஏற்றி வணங்கி வர அவர்களுக்கு அற்புதங்கள் நடக்கும்.

3.மேலும் புதன் திசை நடப்பவர்கள் புதனன்று பச்சைப்பயிறு பாயாசத்தை செய்து  பெருமாள் கோயிலில் சுதர்சன ஆழ்வாரை வேண்டி  விநியோகம் செய்து வந்தால் அற்புதமான பலனைக் காணலாம்.

4.மேலும் புதன்கிழமை அன்று இரவு ஒரு பச்சைத் துணியிலே பச்சைப்பயிரை முடிந்து தலையணைக்கு கீழே வைத்து தூங்கிவர வேண்டும்.

5.ஒரு புதன் கிழமையன்று இதை தொடங்கி ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் இதை செய்து முடித்து பிறகு அதை ஒரு பெரிய பொட்டலமாகக் கட்டி ஓடுகிற நீரிலே போட்டால் புதன் கிரகம் இவர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவார் 

6.மேலும் புதன் என்ற கிரஹத்துக்கு உரிய பச்சை துணியை  வஸ்த்ர தானம் செய்து இவர்கள் வழிபட அருமையான ஒரு மாற்றம் இவர்கள் வாழ்க்கையிலே ஒரு பெரிய ஏற்றம் வருவதை இவர்கள் கண்கூடாக பார்க்க முடியும்.

7.மேலும் புதனின்  அருளாசியைப் பெறுவதற்கு இவர்கள் துளசி செடியை வளர்த்து அதைப் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து வர அற்புதமான மாற்றங்கள் இவரது வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கும் என்றால் அது அற்புதத்திலும் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

8.புதனை அதிபதியாக கொண்டவர்களுக்கு தாய் மாமன் உறவு விட்டு போகும்.எனவே தாய் மாமன்கள் உள்ளவர்கள் தாய்மாமனை வீட்டிற்கு அழைத்து அவருக்கு நல்ல முறையிலே உணவுகளைக் கொடுத்து உபசரித்து தாய்மாமனுக்கு பச்சை நிற வஸ்த்ர தானம் செய்து அவருக்கு வேண்டிய உதவியை செய்யும் பொழுது புதனால் ஏற்படுகின்ற தீமைகள் அனைத்தும் கட்டுக்குள் அடங்கி நல்ல முறையிலே இவர்களுடைய வாழ்க்கையிலே முன்னேற்றம் வரும்.

9.ஒரு தாம்பாளத்தட்டில் பச்சைப்பயிறு,ஒன்பது வெற்றிலை,ஒன்பது பாக்கு,ஒன்பது ஒரு ருபாய் நாணயங்களை வைத்து புதன்கிழமைகளிலே புதன் இருக்கிற திசை வடக்கு நோக்கி இவர்கள் வழிபட்டு வர நிச்சயமாக ஒரு அருமையான முன்னேற்றத்தை இவர்கள் பெறுவார்கள்.

10.இந்த 17 வருட புதன் தசை நடக்கும் பொழுது ஒவ்வொரு புதனன்றும் தன்வந்த்ரியையும் சுதர்சன ஆழ்வாரையும் பெருமாள் கோயில்களிலும் மாலை வேளையிலே நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர 17 வருட புதன் தசை நடக்கும் பொழுது இந்த அற்புதமான பலாபலன்கள் இவர்களுக்கு கிடைத்துவிடும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

கும்பகோணம் கஞ்சனூர் அக்னீஸ்வரர், சுக்ர தோஷ நிவர்த்தி தலம்.

நவகிரகத் தலம் கும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் திருத்தலத்தில், அக்னீஸ்வரர்,

கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். இங்கு சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு.

‘காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா?’ என்பது ஒரு பாடல். ‘ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும்’ என்பது ஒரு பழமொழி. ‘ஒன்னாம் தேதி கொண்டாட்டம், முப்பத்தியொன்னாம் தேதி திண்டாட்டம்’ என்பது பணத்தின் அருமை பற்றி கவிஞர் ஒருவர் பாடிய பாடல். இப்படி பணத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பணத்தை நாம் குவித்து வைத்துப் பார்க்க வேண்டுமானால் லட்சுமி கடாட்சம் நமக்கு வேண்டும். சுக்ர திசை நடப்பவர்களுக்கு, பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். ஆனால் கடக ராசிக்கு சுக்ரன் பாவி, தனுசு ராசி, மீனராசிக்கு ராசிநாதன், குருவிற்கு சுக்ரன் பகை கிரகம். பகைவனாக இருந்தாலும் அண்டி வந்தவர்களுக்கு அள்ளி வழங்குகின்ற ஆற்றல் சுக்ர பகவானுக்கு உண்டு.


அதனால்தான் ‘வெள்ளி சுக்ரன் வேந்தா உன்போல் அள்ளிக் கொடுப்பதற்கு யாரும் உண்டோ’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். பிருகு மாமுனிவரின் மகன் ஆங்கீரஸ முனிவரிடம் பாடம் பயின்றவர் சுக்ரன். நாம் சுக போகங்களை அனுபவிக்கவும், செல்வச் செழிப்பில் மிதக்கவும் வழி வகுத்துக் கொடுப்பவர்.

 கும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் திருத்தலத்தில், அக்னீஸ்வரர், கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு. வெள்ளை ஆடை, மொச்சை, வெண்தாமரை இவருக்குப் பிரியமானது. இறைவன் - இறைவியின் திருமணக் கோலத்தை காண பிரம்ம தேவர் விரும்பினார். அதற்காக இந்த ஸ்தலத்தில் தவமிருந்தார். பிரம்மா விருப்பப்படி திருமண கோலத்தை இறைவன் காட்டி அருளினார். எனவே நாமும் திருமணக்கோலம் காணவும், செல்வ வளம் பெருகவும் யோகபலம் பெற்ற நாளில் சென்று முறையாக வழிபாடு செய்ய வேண்டும்தலங்களுள் சுக்கிரன் தலம் இது. இக்கோயிலின் மூலவரான அக்னீஸ்வரர், திருநாமத்துடன் சற்று பெரிய வடிவமாகக் காட்சி தருகிறார். சிவபெருமான் அருகே அம்பிகை கற்பக நாயகி திருநாமத்துடன் அருள்புரிகிறார். சுவாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கி ஒரே திசையில் காட்சி தருகிறார்கள். இவ்விருவருக்கும் இடையில் சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. இத்தகைய காட்சி சோமாஸ்கந்த தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

ஹரதத்த சிவாச்சாரியார் தீயில் பழுக்கக் காய்ச்சிய பீடத்தின் மீது அமர்ந்து சைவ சமயத்தின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய தலம் இந்த கஞ்சனூர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் முக்தி அடைந்த திருத்தலம் இது.

இத்தலம் தான் பிரம்மா, அக்னி, கம்சன் ஆகியோர் வந்து வழிபட்ட கோயில். கஞ்சனூர் கோயில் குறித்து திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடி உள்ளார். கஞ்சனூர் திருக்கோவில் அக்னீஸ்வரருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில். வழக்கமான சிவன் கோயில் போன்று அத்தனை விழாக்களும் இங்குச் சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி விழா அதைவிடச் சிறப்பாக நடைபெறுகிறது

மேலும் சிவனை வருடம் தொடங்கும் பொழுது வந்து வழிபடுவது சிறப்பான ஒன்றாக இப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். இந்த கோயில் வெள்ளி அதாவது சுக்கிரன் கிரகத்தை வழிபடுவதற்கான முக்கிய தலமாக விளங்குகிறது. காவிரி டெல்டா மாகாணத்தில் புகழ்பெற்ற 9 நவகிரக கோயில்களில் இதுவும் ஒன்று.

இக்கோயிலில் சிவபெருமானே வெள்ளி கிரகத்தைக் குறித்து, அதாவது சுக்கிரனைக் குறித்து சுருக்கமாகச் சொற்பொழிவு அளிப்பதாகக் கூறுகிறார்கள். இந்த புனித கோயில், சூரியானார் கோயிலின் அருகே இருக்கிறது. தெற்கு வாசல் வழியாகத்தான் பக்தர்கள் இந்த கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

சிவன் மற்றும் பார்வதி தெய்வங்களின் சிலைகள் வலது பக்கத்திலும், விநாயகர் சிலை இடது பக்கத்திலும் இருக்கிறது. மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன் என நவக்கிரகங்களில் நால்வர் சன்னதி ஆகிய அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 

இரா இளங்கோவன்

 நெல்லிக்குப்பம். 

Friday, November 14, 2025

சப்தபுரீஸ்வரர் திருத்தாளமுடையார்

அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில்...!
இறைவன் :-  சப்தபுரீசுவரர்
இறைவி :- ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள்
தல விருட்சம் :- கொன்றை
தீர்த்தம் :- சூரிய தீர்த்தம், ஆனந்த தீர்த்தம்
புராண பெயர் :-  சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில்

தேவாரப்பதிகம் பாடியவர்கள் :-
திருஞானசம்பந்தர், சுந்தரர்

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்கணன் தனை எண்கணம் இறைஞ்சும் கோளிலிப் பெருங்கோயில் உள்ளானைக் கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 15வது தலம்.

  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 15 வது தேவாரத்தலம் ஆகும்.  
 
கோயிலின் எதிரில் திருக்குளம் ஆனந்ததீர்த்தம், முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுனையில் ரிஷபாரூடர் தரிசனம்- உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம், நுழையும் போது நால்வர், அதிகார நந்தி சன்னதிகள் உள்ளன.

பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராஜ சபை உள்ளது.

அம்பாள் சன்னதி தனிக்கோயிலாக உள்ளது - நின்ற திருமேனி. ஞானசம்பந்தர் பொன் தாளத்தை இரு கைகளிலும் ஏந்தி நிற்கும் உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.    

தலபெருமை :-

  இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். 

கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். 

இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். 

இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது. 

ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது திருத்தாளமுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.  

தல வரலாறு :-

  பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்கு சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன்.

 குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். 

தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.  

வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், ""ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். 

 மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

திருவிழா :-

  சித்திரை திருவாதிரையில் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் திருவிழா கொண்டாடப்படும். இரண்டாம் நாளன்று பால் உற்சவம் நடக்கும். அதன்பின் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளுவார். 

அன்று இரவு சிவபெருமான் சம்பந்தருக்கு பொன்தாளம் தருவார். மறுநாள் காலை பூப்பல்லக்கில் சம்பந்தர் திரும்புவது இங்கு நடக்கும் சம்பிரதாய திருவிழா. கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக் கிழமை தோறும் தீர்த்தவாரி நடக்கிறது. 

நடைதிறக்கும் நேரம் :-

  காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...