Monday, September 26, 2022

ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம்.

ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.

யார் அந்த ஒன்பது பேர்?

பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்);
இது தவிர சூரியன், சந்திரன்,யமன், காலம்(நேரம்).

பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலேயே எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்– என்று பொருள் கொள்ளவும்

அவை உதவும். யமன் என்பவன் யார்? அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் என்பர் இதன் பொருள் என்ன வென்றால்

நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த=ரகசியமாக) இருக்கிறது.

இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் ‘சித்திர’‘குப்த’ என்றனர். ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது. அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும்.

அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ண்மும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுதன் அல்லது யமனுக்குத் தெரியும். சித்திரகுபதன் அல்லது யமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்கலையெல்லாம் கூட்டிக் கழித்து பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.

நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை.

இந்துக்களுத் தான் இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். இதுவரை வேறு யாருக்கும் அது தெரியாது. நீரை மந்த்ரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.

நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்கினி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும்.

நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும். காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.

இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது!!!

ஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம்
நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்;
நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.

Sunday, September 25, 2022

சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி 'சிவராத்திரி". அம்பாளுக்கு ஒரு ராத்திரி 'நவராத்திரி"

நவராத்திரி ஆரம்பம்... கொலு வைப்பது எப்படி? உகந்த நேரம் இதோ...!!
                நவராத்திரி ஆரம்பம்...!!
சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி 'சிவராத்திரி". அம்பாளுக்கு ஒரு ராத்திரி 'நவராத்திரி" என்பது ஆன்றோர்களின் வாக்கு.

அம்பிகையை வழிபடுவதற்கு பல விழாக்கள் இருந்தாலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அம்பிகையை மூன்று வடிவங்களில் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக, நவராத்திரி விழா விளங்குகின்றது.

முக்கிய விரதங்களில் ஒன்றான நவராத்திரி விழா நாளை (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. 

நவராத்திரி :

மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.

நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.

தனம், தானியம், நிலையான இன்பம், ஆரோக்கியம், சொர்க்கம் மற்றும் வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரிக்கு கொலு வைப்பது ஏன்?

ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி மற்றும் மனிதர் என எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளை காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.


முதல் படி, அதாவது கீழ் படியில் - ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்.

இரண்டாம் படியில் - இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.

மூன்றாம் படியில் - மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.

நான்காம் படியில் - நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.

ஐந்தாம் படியில் - ஐந்தறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.

ஆறாம் படியில் - ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.

ஏழாம் படியில் - சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.

எட்டாம் படியில் - தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.

ஒன்பதாம் படியில் - பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.

கொலு வைக்க சிறந்த நேரம் :

காலை - 06.15 மணி முதல் 07.15 மணி வரை

நண்பகல் - 12.05 மணி முதல் 02.05 மணி வரை

மாலை - 06.05 மணி முதல் 09.05 மணி வரை
நவராத்திரி சிறப்புகள் :

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சர்க்கரை பொங்கல், உளுந்து வடை போன்ற நெய்வேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி நாட்களில் வீட்டில் அரிசி மாவை பயன்படுத்தி கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சிறந்த வழிபாடாகும்.

தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கல பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தான தர்மங்கள் தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவி புரிகின்றன.

திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர்

ஏகதள விமானத்துடன் பிரசன்ன விநாயகர்.. மூஷிக வாகனம்..!!
                அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில்...!!


தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை என்னும் ஊரில் அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 72 கி.மீ தொலைவில் உடுமலைப்பேட்டை என்னும் ஊர் உள்ளது. உடுமலைப்பேட்டையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில் ராஜகம்பீர கோலத்தில் ஏகதள விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

 பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

இத்தலத்தில் மூஷிக வாகனம் பெரிய வடிவத்தில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப்பட்டிருப்பதும் இக்கோயிலின் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது.

கோயில் ராஜகோபுரத்திற்கு நேரே காசிவிஸ்வநாதர், மூலவர் இடத்தில் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். காசிவிஸ்வநாதருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி அருள்பாலிக்கிறார்.

வேறென்ன சிறப்பு?

இத்தலத்தில் தம்பதி சமேதராக முருகன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இக்கோயிலின் முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுர நாயகி உடனாய சௌரிராஜப்பெருமாள், அவருக்கு இடப்புறம் ஆஞ்சநேயர் ஆகியோர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.


மாதக்கிருத்திகை தினத்தில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது இக்கோயிலின் மிகச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.

தேவ விருட்சங்களான வன்னி, வில்வம், அரசு ஆகியன இத்தலத்தில் அமைந்துள்ளன.

இத்தலம் மும்மூர்த்திகள் அமைந்த தலமாக திகழ்கிறது. இங்கு நெய்வேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

அரைச் சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரபுரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர் காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஏகாதசி, ஆடிப்பெருக்கு, அனுமன் ஜெயந்தி, திருக்கார்த்திகை, தை மற்றும் ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தைப்பூசம், மகாசிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

அனைத்து தோஷங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் நீங்கவும், கல்வியில் சிறக்கவும் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் கொழுக்கட்டை நெய்வேத்தியம் படைத்தும், பால் அபிஷேகம் செய்தும், சூரைத்தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்

. காவிரியுடன், பவானி மற்றும் அமுதநதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்ற இடத்தில் சிவன் கோவில்.

இரண்டு தலைகளுடன் பசு.. 63 நாயன்மார்கள்..!!
                அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்...!!


தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி என்னும் ஊரில் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

ஈரோட்டில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் பவானி என்னும் ஊர் உள்ளது. பவானியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


இத்தலத்திற்கு பத்மகிரி என்ற பெயரும் உண்டு. காவிரியுடன், பவானி மற்றும் அமுதநதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன.

மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலம், தென் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. எனவே இத்தல இறைவன் சங்கமேஸ்வரர் எனப்படுகிறார்.

இக்கோயிலில் பெருமாள் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடனும், தாயார் சௌந்திரவல்லி என்ற திருநாமத்துடனும் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

இத்தலத்தில் வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன் பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு பசு ஒரே உடல், இரண்டு தலைகளுடன் காட்சியளிப்பது இத்தலத்தின் வித்தியாசமான அமைப்பாகும்.

இத்தல விநாயகர் சங்கம விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றார்

இக்கோயிலில் உள்ள சனீஸ்வர பகவான் சன்னதி மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இக்கோயிலில் உள்ள அமுதலிங்கம் மிகவும் சிறப்புடையதாகும்.

வேறென்ன சிறப்பு?

இறைவி வேதநாயகி அல்லது வேதாம்பிகை என்றழைக்கப்படுகிறார். இறைவியின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.


இறைவியின் சன்னதிக்கு வலப்பக்கம் சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

மாந்தி (சனி மகன்) கிரகத்தின் ரூபத்தில் சனி பகவான் தனிச்சன்னதியில் உள்ளார்.

இத்தல ஜ்வரஹரேஸ்வரர் தனிச்சன்னதியில் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காட்சி தருகிறார்.

இக்கோயிலின் தென்பக்கம் 63 நாயன்மார்களின் திரு உருவங்கள் அமைந்துள்ளன.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

இங்கு ஆடிப்பதினெட்டில் நீராடுவதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்

சித்ரா பௌர்ணமி, ரத சப்தமி, ஆடி அமாவாசை, சித்திரையில் 13 நாட்கள் திருவிழா போன்றவை இங்கு சிறப்பாக கொண்டாடுகின்றனர்

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும், அனைத்து தோஷங்களும் நிவர்த்தி பெறவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

அடிக்கடி காய்ச்சல், தோல் வியாதி மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

மூன்று கருட சேவை.. சூரிய தலம்..!! அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

மூன்று கருட சேவை.. சூரிய தலம்..!!
                அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்...!!

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி என்னும் ஊரில் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சென்னையில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் பூந்தமல்லி என்னும் ஊர் உள்ளது. பூந்தமல்லியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தல வரதராஜப்பெருமாளின் தலைக்கு பின்புறம் சூரிய பகவான் அருள்வதால் இது சூரிய தலமாகக் கருதப்படுகிறது. இவர் புண்ணிய கோடி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.


ராமானுஜரின் குருவான திருக்கச்சி நம்பிகளின் அவதார தலமான இங்கு திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சி வரதராஜப்பெருமாள் ஆகியோரின் சன்னதிகளும் அமைந்துள்ளன.

இக்கோயிலில் மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடப்பது சிறப்பம்சமாகும். அந்த பிரம்மோற்சவத்தின் போது அவர்கள் மூவரும் திருக்கச்சி நம்பிகளுக்கு கருட சேவை காட்சி தருவர்.

பொதுவாக மற்ற கோயில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். இக்கோயிலில் மூன்று கருட சேவைகள் நடைபெறுகின்றன.

இத்தலத்தில் திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் காட்சியளிக்கிறார்.


ஆனி மாத மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று 108 கலச பூஜை செய்து வரதராஜர், புஷ்பவல்லி, ஆண்டாள் மற்றும் திருக்கச்சி நம்பிகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறும்.

வேறென்ன சிறப்பு?

இங்குள்ள மகாலட்சுமி தாயார் மல்லிகை மலரில் அவதரித்ததால் இவளை புஷ்பவல்லி என்று அழைக்கிறார்கள்.

இக்கோயிலில் புஷ்பவல்லி தாயாருக்கு மல்லிகை மலர் சூட்டி வழிபடுகின்றனர். இந்த தாயாருக்கு வைகாசி பிரம்மோற்சவத்தின் போது புஷ்ப யாகம் நடப்பது சிறப்பம்சமாகும்.

இவ்விழாவின் போது சுவாமி பள்ளியறையில் சயன கோலத்தில் எழுந்தருளுவார். பங்குனி உத்திரத்தன்று வரதராஜர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், புஷ்பவல்லி தாயார்களுடன் சேர்ந்து காட்சி தருவார்.

இவள் பூவில் இருந்தவள் என்பதால் இவ்வூருக்கு பூவிருந்தவல்லி எனப் பெயர் இருந்தது. இப்போது அது மருவி பூந்தமல்லி என ஆகிவிட்டது.


என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

ஆடியில் திருநட்சத்திர விழா மற்றும் வைகாசியில் பிரம்மோற்சவம் ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் வரதராஜருக்கு செவ்வரளி மாலை அணிவித்தும், திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் பிள்ளையார் பட்டி.

6 அடி உயரமுள்ள பிள்ளையார்.. குடைவரை கோயில்..!!
                அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்...!!


 திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி என்னும் ஊரில் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சிவகங்கையில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் பிள்ளையார்பட்டி என்னும் ஊர் உள்ளது. பிள்ளையார்பட்டியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இக்கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்க பெற்றதால் இங்கு கற்பக விநாயகர் சன்னதியை வலம் வர இயலாது. சுமார் 6 அடி உயரமுள்ள கற்பக விநாயகர் சிவபெருமானை நோக்கி தவம் செய்த வண்ணமாக காட்சியளிக்கிறார்.

கற்பக விநாயகர் தனது வலது கரத்தில் சிவலிங்க சின்னமும், இடது கரத்தை தனது வயிற்றை சுற்றியுள்ள கச்சையின் மீது வைத்துக் கொண்டும் அமர்ந்திருக்கிறார்.

பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

திருமண வரமளிக்கும் கார்த்தியாயினி அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்கும் நாகலிங்கம் சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களையும் அளிக்கும் பசுபதீஸ்வரர் சன்னதியும் இங்கு அமைந்துள்ளது.


வேறென்ன சிறப்பு?

குடைவரை கோயிலின் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது.

கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் ஏழு நிலைகளுடன் அமைந்துள்ளது. 

கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரை கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி கோயிலாகவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில், தமிழ்நாட்டுக் குடைவரை கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் 5வது படை வீடாகும்.

விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒரு சில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. 

இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18 படி அளவில் முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யப்படுவது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி 10 நாள் திருவிழாவாக மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், தொழில் அபிவிருத்தி, கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், அருகம்புல் மாலை அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றன

வெவ்வேறு வடிவில் 4 நந்திகள்.. சிறு குழியுடன் லிங்கம்..

வெவ்வேறு வடிவில் 4 நந்திகள்.. சிறு குழியுடன் லிங்கம்..!!
                அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்...!!

🌻 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

🌻 கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூர் என்னும் ஊரில் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

🌻 கோயம்புத்தூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் ஒண்டிப்புதூர் என்னும் ஊர் உள்ளது. ஒண்டிப்புதூரில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. ஒண்டிப்புதூரில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

🌻 இத்தல நீலகண்டேஸ்வர லிங்கம் சுயம்புவாக தோன்றியது. லிங்கத்தின் மையத்தில் சிறு குழியும், வலப்பக்க நெற்றியில் சிறிய தேய்வும், பின்புறம் சிறிய குடுமியும் உள்ளது.


🌻 மூலவரின் இடப்பக்கத்தில் சுயம்வர பார்வதி தேவி உள்ளார். வலப்பக்கத்தில் தண்டத்துடன் ஞான தண்டபாணி காட்சியளிக்கிறார்.

🌻 இத்தலத்தில் மூலவர், இறைவி, ஞான தண்டாயுதபாணி ஆகியோர் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளனர்.

🌻 நீலகண்டேஸ்வரர் மீது மாலை பொழுதில் சூரிய கதிர்கள் பட்டு சுவாமியின் திருமேனி ஒளிர்வது சிறப்பம்சமாகும்.

🌻 இத்தலத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

வேறென்ன சிறப்பு?

🌻 இத்தலத்தில் நவகிரகங்கள் தனிச்சன்னதியில் அமைந்துள்ளன. இத்தலத்தில் உள்ள 4 நந்திகளும் வௌ;வேறான வடிவமைப்பில் காட்சியளிக்கின்றன.


🌻 மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட மார்க்கண்டேஸ்வர லிங்கம் இங்கு உள்ளது. உத்தம சோழன் செப்பேடு, மார்க்கண்டேய பண்டிதர் மடம் செப்பேடு ஆகியவற்றின் மூலமாக இவ்வூரின் பெருமையை அறிய முடிகிறது.

🌻 இத்தலத்தில் பிரம்மதேவன் அமர்ந்த கோலத்திலும், மீனாட்சியம்மன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்திலும் எழுந்தருளியுள்ளனர்.

🌻 தேன் வண்ண பாணலிங்கமாக கிழக்கு நோக்கி சௌந்திரேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

🌻 ஐப்பசி மாதத்தில் நடக்கும் சூரசம்ஹார விழா இத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.

🌻 தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், நவராத்திரி, கார்த்திகை ஜோதி வழிபாடு, மார்கழி மாத வழிபாடு, ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

🌻 ராகு தோஷம், மாங்கல்ய தோஷம், திருமணத்தடை ஆகியவை நீங்க இத்தல சுயம்வர பார்வதி தேவியிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🌻 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...