Tuesday, October 29, 2024

தீப ஒளி திருநாளாம் தீபாவளி அன்று என்ன சிறப்பு?



🌹 🌿 தீபாவளி என்றும் அழைக்கப்படும் தீபாவளி, இந்து சமூகத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். 
🌹 🌿 நம்முடைய பண்டிகைகளில் தீபத்திற்கு முக்கியத்துவம் உண்டு. தீபம் இல்லாத வழிபாடே இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக தீப ஒளி திருநாளாம் தீபாவளி அன்று வரிசையாய் விளக்கேற்றி வைக்கும் போது, புற இருள் மட்டுமின்றி, அக இருளும் அழிந்து போகும்.
தீபத்திற்கு ஹிந்துக்கள் பண்டிகை நாட்களில் மட்டுமல்ல தினசரி வாழ்விலேயே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதற்கு காரணம் தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து வருகின்றனர் என்ற நம் ஐதீகமே.

🌹 🌿 இந்த நல்ல தருணத்தில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதன் பின்னணியைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். நரகாசுரன் மரணம் அடையும் தருவாயில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் தான் மரணம் அடையும் நாளில் எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
ஒரு மனிதனின் மரணத்திற்கா இத்தனை ஒலி - ஒளிகொண்டாட்டங்கள் என்கிற கேள்வி எழலாம்.அதற்கு முதலில் நாம் நரகாசுரன் யார் என்று தெரிந்துக் கொள்வது அவசியம்.

🌹 🌿 தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரத்தை மஹாவிஷ்ணு எடுத்தபோது அவருக்கும்,பூமாதேவிக்கும் மகானாக பிறந்தவன் தான் நரகாசுரன். ஆரம்பத்தில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான்.
அவன் வளர வளர தன்னுடைய அசுர குணதிற்கே உரித்தான அம்சத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான்.தவத்தில் சிறந்த மகரிஷிகள்,குருமார்கள் போன்றவர்களை இகழவும் செய்தான்.

🌹 🌿 ஈரேழு லோகங்களையும் வென்று விட வேண்டும் என்று எண்ணிய அவன், பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரியத் தொடங்கினான். பிரம்மாவும் அவன் தவத்தை மெச்சி, “உன் தவத்திற்கு மெச்சினேன், என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். “எனக்கு சாகா வரம் அருளுங்கள்” என்று கேட்டான்.

🌹 🌿 அதற்கு பிரம்மா, உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். அது தர இயலாது ஆகையால் வேறு எதாவது கேள்”என்றார். ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு யார்மூலமாகவும் மரணம் அடையக்கூடாது என்ற வரத்தை நரகாசுரன் கேட்டான்.
நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய் என்று பிரம்மாவும் வரம் அளித்தார். சாகா வரம் கிடைத்த நரகாசுரனின் அட்டகாசம் அதிகரித்தது. எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆவல் கொண்டு தேவர்களைச் சிறையில் அடைத்தான்.
மிஞ்சிய சிலர் கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் அளித்த கிருஷ்ணர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார்.

🌹 🌿 நரகாசுரன் அதற்கு செவி சாய்க்காததால்,போர் ஆரம்பித்தது. வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள் என்பதால், தனக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார்.கடும்போரில், நரகாசுரன் தன் கடாயுத்தை கிருஷ்ணணரை நோக்கி வீச, அதில் காயம்பட்டு மயங்கி விழுவது போல் மாயக் கண்ணன் நடித்தார்.
கிருஷ்ணன் மயங்கி விழுந்ததுப் பார்த்த சத்தியபாமா கோபத்தில், நரகாசுரன் மேல் சரமாரியாக அம்பை எய்ய அவனும் கீழே சாய்ந்தான்.அவன் கேட்டபடி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். அவனுக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்து, அவனுக்குத் தேவையான வரத்தைக் கொடுப்பதாகச் கூறினார்.

🌹 🌿 இறக்கும் தருவாயில் அகங்காரம் அழிந்தது மட்டுமின்றி, கிடைத்தற்கரிய விஷ்ணுவின் அவதார கோலத்தைக் கண்டு மனம் திருந்திய நரகாசுரன், தான் இறக்கும் இந்த நாளை எல்லோரும் காலையில் எழுந்து குளித்து , புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
இதுவே ஹிந்க்கள் தீபாவளி கொண்டாடு வருவதற்கு காரணம்.

தீபாவளித் திருநாளில் மட்டுமல்ல என்னாலும் நம் மனதில் இருக்கும் அசுர குணங்களை கைவிட்டு ஞான வாழ்வை நோக்கி பயணிப்போம் என்று இந்நன்னாளில் உறுதியேற்போம்.

🌹 🌿 தீபாவளி எண்ணெய் குளியல் (கங்கா ஸ்நானம்) பின் உள்ள பல்வேறு உண்மைகள் தெரியுமா? 

🌹 🌿 தீபாவளி தினத்தை கங்கா ஸ்நானம் எனும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து தொடங்கி லட்சுமி பூஜை செய்து கொண்டாடி மகிழ்ந்து வாழ்வின் அனைத்து பலன்களையும் பெறுவோம்.

🌹 🌿 தீபாவளியை எப்படி கொண்டாடுவது?

தீபாவளி தினத்தில் அதிகாலை  4.30 முதல் 6.00 மணிக்குள்  கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். அதாவதுஎண்ணெய் குளியல் செய்தல் அவசியம் குறித்து இங்கு பார்ப்போம்.

🌹 🌿 கங்கையில் நீராடும் பாக்கியம்:

இந்த விரத நாளில் எண்ணெய், அரப்பு தூள் (சியக்காய்), வெந்நீர்.எண்ணெய்யில் மகா லட்சுமி, சியக்காயில் சரஸ்வதி, வெந்நீரில் கங்கா தேவி குடிகொண்டிருப்பாள். அதனால், அந்த நேரத்தில் நாம் எண்ணெய் தேய்த்து குளித்தல் வேண்டும்.

🌹 🌿 இந்த தினத்தில் சுவாமி படத்திற்கு முன் ஒரு கிண்ணத்தில் எண்ணெய்,சீயக்காய் வைத்து, எங்கள் குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு, வீட்டின் பெரியவர் மற்றவர்களின் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும்.
அனைவரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து வருவது கங்கா ஸ்நானம் என்று பெயர்.
நரகாசுரன் கொல்லப்பட்டதற்காக தீபாவளி கொண்டாடப்படவில்லை. உண்மையான புராண கதை தெரியுமா?

🌹 🌿 எண்ணெய் குளியலின் பலன்கள்:

🌹 🌿 நாம் தீபாவளி அன்றைய  தினத்தில், எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நம் உடலுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கின்றது. 

மற்ற நாட்களில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு கால் அல்லது அரை மணி நேரமாவது இளம் வெயிலில் நில்லுங்கள். உங்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் எண்ணெய் மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும்.

🌹🌿தீபாவளி தினத்தில் வழிபாடு செய்வது எப்படி?

நம் வீட்டில் பூஜை அறையில்,  வாழை இலை போட்டு, நாம் செய்துள்ள இனிப்பு பலகாரங்கள், உணவு பொருட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அதோடு நாம் புதிதாக வாங்கி இருக்கும் உடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.அன்றைய தினம் கார்த்திகை தீபத்திற்குப் பயன்படுத்தும், தீப மண் அகல் விளக்கை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் அனைத்திலும் நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். அல்லது ஒரே ஒரு தீபத்திற்காவது நெய்யில் ஏற்றலாம்.

🌹 🌿 தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் இருளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் சுலபமாக விடுபடலாம் என போதித்தார். இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து யமதீபம் ஒன்றை ஏற்றிவைக்க வேண்டும். யமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து அகாலமரணம் சம்பவிக்காமல் காத்திடும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.

🌹 🌿 எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்று கூறினார். இப்படித்தான் தீபாவளி திருநாள் தோன்றியது. தீபாவளியன்று இரவில் லட்சுமி குபேர பூஜை செய்து, குபேர வாழ்வை பெறலாம். யமுனையின் சகோதரனான யமதர்ம ராஜாவை தீப ஒளிகளால் பூஜித்து நீண்ட ஆயுளைப் பெறலாம். இந்த பூஜையை சகோதரிகள் சகோதரனுக்காக இந்த பூஜையை செய்ய வேண்டும். அமாவாசை அன்று கேதார கவுரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட வேண்டும். தீபாவளி என்பது சாதாரண பண்டிகை அல்ல. ஏதோ நீராடி புத்தாடை உடுத்தி, பண்டங்களை உண்பது மட்டும் தீபாவளி அல்ல. அப்படி செய்யும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.

தீபாவளிக்கு முந்தைய கொண்டாட்டங்கள் பின்வருமாறு - வீட்டை சுத்தம் செய்தல், புதுப்பித்தல் பணிகள். தீபாவளியின்போது, மக்கள் தங்கள் வீடு மற்றும் வேலை இடத்தை விளக்குகள், பூக்கள் மற்றும் ரங்கோலியுடன் அலங்கரிக்கின்றனர். .

🌹 🌿 தீபாவளியின் முதல் நாள் தன்வந்தரி திரியோதாசி அல்லது தன் தேராஸ் என்று அழைக்கப்படுகிறது.

🌹 🌿 தீபாவளியின் இரண்டாவது நாள் நரக சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது. இது கார்த்திக் மாதத்தின் இருண்ட இரவின் பதினான்காம் சந்திர நாள் (திதி) 

ஸ்கந்த புராணத்தின் படி, மண் விளக்குகள் அல்லது தியாக்கள் சூரியனை அடையாளப்படுத்துகின்றன, இது ஒளி மற்றும் ஆற்றலின் அண்டத்தை கொடுப்பவர் என்று விவரிக்கிறது.

🌹 🌿 ராமர் அயோத்திக்குத் திரும்பினார்:
இந்து காவியமான ராமாயணத்தின்படி, தீபாவளி என்பது 14 ஆண்டுகள் காடுகளில் கழித்த பின்னர் ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோர் அயோத்தி திரும்பிய நாள். பல இந்துக்கள் லட்சுமி தேவி தீபாவளியன்று அண்ட சமுத்திரத்தின் (சமுத்திர மந்தன்) பிறப்பின் போது பிறந்தார் என்றும் நம்புகிறார்கள். ஆகவே, ராமர் அயோத்தியிற்கு திரும்பியதைக் கொண்டாட தீபாவளி அனுசரிக்கப்படுகிறது.

🌹 🌿 லட்சுமி பூஜை:

 'சமுத்திர மந்தன்' என்று அழைக்கப்படும் சமுத்திரத்தை ஒருபுறம் அசூரர்களும் , மறுபுறம் 'தேவர்களும் சமூத்திரத்தை கடையும் போது லட்சுமி தோன்றினாள். எனவே, தீபாவளி நாளில்  லட்சுமி தேவியை வழிபடுவது ஒரு பாரம்பரியமாக மாறியது.தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். இதனால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். "சுக்லாம் பரதரம்' சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்."ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம'
என108 முறை சொல்லலாம்.

🌹 🌿 நரக சதுர்தசி

🌹 🌿 வட இந்தியாவில், தீபாவளி பண்டிகைகளின் ஒரு பகுதியாக நரக சதுர்தசி அனுசரிக்கப்படுகிறது, மேலும் இது சோதி தீபாவளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாள் நரக சதுர்தசி என்ற பெயரை நரகாசுரனின் புராணக்கதையிலிருந்தும், இறுதியில் கிருஷ்ணரின் கையிலிருந்தும் எடுக்கிறது.

🌹 🌿 அரக்கன் மன்னர் நரகாசுரன், இந்திர இராச்சியம் 'ஸ்வர்கலோக்' உட்பட பிரபஞ்சம் முழுவதும் தனது ஆட்சியை பரப்பினார். கடவுளின் தாயான அதிதியின் நகைகளையும் திருடி 16000 சிறுமிகளையும் பெண்களையும் கடத்திச் சென்றார். பகவான் கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்று, இந்திரனின் ஆட்சியையும், அதிதியின் மரியாதையையும் மீட்டெடுத்து, கடத்தப்பட்ட 16000 பெண்களை விடுவித்து திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு, பகவான் கிருஷ்ணரின் கையில் நரகாசுரனின் விடுதலையைக் குறிக்கும் நாள் கொண்டாடப்படுகிறது.

🌹 🌿 குலதெய்வ வழிபாடு

நம் வீட்டு குலதெய்வத்தை நினைத்து- முக்கியமாக பெண் தெய்வங்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உடை, பூஜைப் பொருட்கள், பட்சணங்கள் வைத்து வணங்க வேண்டும். இதை ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மிகவும் நல்லது.

🌹 🌿 முன்னோர் வழிபாடு

நம் வீட்டில் இறந்துபோன முன்னோர் களை எண்ணி, அவர்களுக்குப் பிரியமானவற்றை வைத்து வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். நன்மைகள் கிடைக்கும்.

🌹 🌿 கேதார கௌரி நோன்பு

இது தீபாவளியுடன் சேர்ந்து வரும் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் செய்யும் நோன்பு. இதனால் மாங்கல்ய பலம் கூடும். பார்வதி தவம் இயற்றி ஈசனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீ ஆன நாள் இது. தீபாவளியன்று பெண்கள் கணவனுடன் இணைபிரியாது வாழ மேற்கொள்ளும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். 21 அதிரசம் படைப்பர்.

🌹 🌿 தன்வந்திரி பூஜை

பாற்கடலைக் கடையும்போது தோன்றியவர் தன்வந்திரி பகவான். இவர் மருத்துவக் கடவுள். கையில் அமுத கலசம், வைத்திய ஏட்டுச் சுவடிகளுடன் தோன்றிய திருமாலின் அம்சமான இவரை வணங்கி தீபாவளி லேகியம் செய்து சாப்பிட வேண்டும்.

🌹 🌿 யமதீபம்

தீபாவளியின் முதல் நாள் இரவு யமதீபம் ஏற்ற வேண்டும். ஒரு ஆழாக்கு எண்ணெய் பிடிக்கும் அளவு பெரிய அகலில் ஏற்ற வேண்டும். நம் வீட்டு மொட்டைமாடி அல்லது மேற்கூரையில் எவ்வளவு உயரம் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் யமதீபத்தை தெற்கு நோக்கி வைக்க வேண்டும். இதனால் யமபயம் நீங்கும்.

🌹 🌿 யமத்வீதியாஉறவுகளை உறுதிப்படுத்தி உயர்வடையச் செய்யும் உன்னத நாள். தீபாவளியன்று இந்துக்கள் தங்கள் சகோதரிகளுக்கு பணம் அனுப்பும் வழக்கம் உள்ளது.

🌹 🌿 சூரியனின் பிள்ளை யமன்; பெண் யமுனா. இருவரும் பாசப்பிணைப்புடன் உள்ளவர்கள். ஒருசமயம் யமுனா தன் சகோதரன் யமனை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாள். சகோதரியைக் காண வந்த யமன் ஏகப்பட்ட துணிமணிகள், நகைகள், பட்சணங்களை சீர்வரிசையாகக் கொண்டு வந்து கொடுத்தான்.
யமுனா தன் அண்ணனுக்கு தன் கையாலே பலவித பட்சணம் தயாரித்து சாப்பிட வைத்தாள். இதனால் மனம் மகிழ்ந்த யமன் தங்கையை "தீர்க்க சுமங்கலி பவ' என வாழ்த்தினான். இதனால் தன் சகோதரனால் தன் கணவனுக்கு ஆபத்தில்லை என்று ஆனந்தப்பட்டாள். இப்படி பாசமுடன் பழகும் உடன்பிறப்புகளுக்கு யமபயம் இருக்காது. அது முதல் சகோதரிகளுக்கு தீபாவளி பணம் கொடுக்கும் பழக்கம் உருவானது. யமத்வீதியா நன்னாளில் சகோதரனை சந்தோஷப்படுத்தும் சகோதரிகளுக்கு விதவைக் கோலம் உண்டாகாது என்பது நம்பிக்கை.

🌹 🌿 கோவர்தன் பூஜை

பகவான் கிருஷ்ணர் கோகுலன் குடிமக்களை தனது சிறிய விரலில் சுமந்து செல்லும் கோவர்தன் மலையின் கீழ் பெய்த மழையிலிருந்து காப்பாற்றிய நாளைக் குறிக்க, கோவர்தன் பூஜை தீபாவளியின் அடுத்த நாளில் அனுசரிக்கப்படுகிறது. சிறந்த மழை மற்றும் பண்ணை விளைச்சலை எதிர்பார்த்து இந்திரனுக்கு பதிலாக கோவர்தன் மலையை வணங்கும்படி கோகுல் குடிமக்களிடம் கிருஷ்ணர் கேட்டபோது இந்திரனின் கோபத்தின் வெளிப்பாடாக இந்த மழை பெய்தது. எப்போது, பல நாட்கள் தொடர்ந்து மலையைச் சுமந்த பிறகும் கிருஷ்ணர் பின்வாங்கவில்லை, இந்திரன் தோல்வியை ஒப்புக் கொண்டு மழையை நிறுத்தினான். இவ்வாறு, கோவர்தன் மலையின் நினைவாகவும், இந்திரன் மீது ஆண்டவர் கிருஷ்ணர் பெற்ற வெற்றியாகவும், நாட்டின் பல பகுதிகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒரு சிறிய மாட்டு சாணம் ஒரு நாளில் தயாரிக்கப்பட்டு வணங்கப்படுகிறது. விவசாயிகளும் தங்கள் கால்நடைகளை வணங்குகிறார்கள், அன்றைய தினம் அவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கிறார்கள்.

🌹 🌿 பாய் தூஜ்

பாய் தூஜா தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது மற்றும் தீபாவளி கொண்டாட்டங்களின் ஐந்து நாட்கள் கொண்டாட்டங்களை நிறைவு செய்கிறது. பாய் தூஜைச் சுற்றியுள்ள மிகவும் புகழ்பெற்ற புராணக்கதைகளில் ஒன்று யம்ராஜா மற்றும் யமுனாவின் கதையை விவரிக்கிறது. இந்த நாளில் யம்ராஜா தனது சகோதரி யமுனாவை சந்தித்தார்.

அவரது அன்பு மற்றும் பாசத்தால் மகிழ்ச்சி அடைந்த  யமதர்மராஜா, தனது சகோதரிக்கு ஒரு  (வரம்) கொடுத்தார், இந்த நாளில் யார் அவரைச் சந்திக்கிறாரோ அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுவார்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

வினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்.

வினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்...!
மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம்.கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார்.

நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார்.

தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான். 

கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம்.மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத் தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழை பொழியும் அற்புதம் நிகழ்கிறது. 

மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம்.பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார்.

அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம்.இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார்.

லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம். 

நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதி கும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம்.இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார்.இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.

கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம்.

இக் கோவிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

சேலம் மாவட்டம்,ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம்.இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார். 

சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ.தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார்.

நம்பியாண்டார் நம்பிக்கு அருள் புரிந்த விநாயகர் இவர்.ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர்.உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை.இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

ஓசூர்,பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார்.

இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரும், மலைக்கோட்டை மாணிக்க விநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர். 

திருச்சி உச்சிபிள்ளையார் கோவிலின் அடிவாரத்தில்,மாணிக்க விநாயகர் கோவில் உள்ளது.இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவிலில் வேத விநாயகர் அருட்பாலிக்கிறார்.

இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவி சாய்த்த விநாயகர் என்கிறார்கள்.

கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார். 

திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோவிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார். 

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம்.நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார். 

தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்)ஆலயம் அமைந்துள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Monday, October 28, 2024

யமதீபம் என்றால் என்ன யம தீபம் ஏற்றினால் என்ன பயன்....



சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் யம தீபம் எல்லோரும் ஏற்றினார்கள் ஆனால் இப்போது ஒருசில வீடுகளில் மட்டுமே ஏற்றி வருகின்றனர்.

 || யமதீபம் என்றால் என்ன 
யம தீபம் ஏற்றினால் என்ன பயன் ||

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் கலாச்சாரம்.
நம் கடமையும் கூட

யம தீபம் ஏற்றினால் நம் குடும்பம் பித்ருக்களின் பரிபூர்ண ஆசிர்வாதத்தை பெற முடியும். 

தொழிலில் முன்னேற்றம் தெரியும். 

திருமணத் தடை மற்றும் தாமதம் விலகும், 

சொத்துகள் பிரச்சினை மற்றும் முடக்கம் நல்ல முடிவுக்கு வரும். 

வீட்டில் செல்வம் சந்தோஷம் பெருகும்.

முக்கியமாக தரித்திரம் ஒழியும்.

அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, நல்லது தானாகவே நடக்கும்.

மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.

அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது 
"யம தீபம்" மட்டுமே.

யம தீபத்தை நீங்கள் தீபாவளியில் 
வருகிற திரயோதஸி திதியில் தான் ஏற்ற வேண்டும்.

இது எப்போதும் ஒவ்வொரு தீபாவளிக்கும் முதல் நாள் அன்று வரும்.

யம தீபம் ஏற்றி நம் முன்னோர்களுக்கு வழிகாட்ட உதவும்.

அந்த வருடம் முழுவதும் 
நல்ல பலன்களைத் தரும்.

யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. 

அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களை கண்டிப்பாக செய்வார்கள்.

சாஸ்திரப்படி யம தீபம் ஏற்றும் முறை:

1. உங்கள் வீட்டின் வெளிப்புறமோ அல்லது உள்ளேயும் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். 

வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம்.

2. தெற்கு திசை எமனுக்கு உகந்ததாக இருப்பதால் யமதீபம் தெற்கு நோக்கி எரிய வேண்டும்.

3.ஒரு விளக்கு ஏற்ற வேண்டும்., 

4.பின்னர் யமதர்மராஜா அஷ்டோத்ரம் பாராயணம் செய்யவும்.

5.மலர்களால் அந்த விளக்கை சுற்றி அலங்கரிக்க வேண்டும்.

6.இது உங்கள் பித்ரு தேவர்களை மனதில் ஓரிரு நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

7.பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்வதாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை
 நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

மேலேயுள்ள ஸ்லோகத்தை 9 முறை பாராயணம் செய்து முன்னோர்களை நினைத்து சாஷ்டாங்கமாக ஒரு முறை நமஸ்காரம் செய்யுங்கள்.

அவ்வளவே தான்.

இதற்காக ஒரு 20 நிமிடங்கள் வரை தான் ஆகும்.

சில பேர் செய்யும் தவறு என்ன என்றால்

ஸ்வாமிக்கு ஏற்றும் தீபத்தில் பித்ருக்களுக்கு ஏற்றக் கூடாது.

ஸ்வாமிக்கு தனியாக 
பித்ருக்களுக்கு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தீபாவளி அன்று தட்ப வெப்பத்தாலோ ஏற்படும் மாற்றங்களாலோ
வித விதமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உற்பத்தியாகி 
மக்களை தாக்கும் அதற்குத்தான் பட்டாசு வெடிக்க சொன்னாங்க பிரதர்ஸ் & சிஸ்டர்ஸ்.

அப்படி செய்தால் புகையில் அவை இறந்து விடும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 


செவ்வாய் ருண விமோசன பிரதோஷம்..


ருண விமோசன பிரதோஷம்
***********************************
நாம் முற்பிறவியில் பட்ட கடன்களைத் தீர் க்கவே மறுபடியும் பிறக்கிறோம் என்பது சாஸ்திரம் சொல்லும் பிறவி ரகசியம். ஆனால், பட்டகடனை தீர்க்க வேண்டி மறுபடியும் பிறக்கும் நாம், மேலும் மேலும் கடனாளியாகி, முடிவில்லாத பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கிறோம்.

கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற அளவுக்கு இன்றைய பொருளாதார ச் சூழல் உருவாகிவருகிறது. பேராசையும், பொருள்களை வாங்கிக் குவிக்கும் மனோ பாவமும் ஒவ்வொருவரையும் கடன்காரரா க மாற்றிவருகிறது.

'கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று சொல்வார்கள். நாளும் கடன் பிரச்னைகளால் கலங்கித் தான் வருகிறோம். இதோ நமது பிறவிக் கடன், பொருளாதாரக்கடன் எல்லாவற்றை யும் போக்க உதவும் திருநாள் வரவிருக்கிறது. 
செவ்வாய்க்கிழமையன்று வரும் பிரதோஷம்,  'ருண விமோசன பிரதோ ஷம்’ என்று அழைக்கப்படுகிறது. 'ருண’ என்றால் கடன். கடன் தொல்லைகளில் இருந்து விமோசனம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு இன்று நடைபெற உள்ளது.

செவ்வாய் பகவான் ருண ரோகத்துக்கு காரக த்துவம் வகிப்பவர். இவரே கடன் தொல்லை உண்டாகவும் அவரை வழிபட்டால் கடன்களை த் தீர்க்கவும் அருளுவார்.

செவ்வாய்க்கிழமை அன்று வரும் இந்த பிரதோஷம் செவ்வாய் பகவானை மகிழ் விக்கும் வேளை என்பதால்,  'ருண விமோசன பிரதோஷம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது.

தேவர்களையும் ஜீவராசிகளையும் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானை எல்லோரும் துதித்து வணங் கிய வேளையே பிரதோஷ காலம். எல்லா மாதங்களிலும் வளர்பிறை, தேய்பிறை கால திரயோதசி திதியன்று வருவதே பிரதோஷ நாள்கள். 

அந்த நாளில் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான காலமே பிரதோஷ பூஜைக்கு உரிய நேரம். இந்த அற்புதமான வேளையில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை தரிசித்து வணங்குவது சிறப்பு.

இந்த நாளில் பிரதோஷ வேளையில் சிவ லிங்கத்திருமேனிக்கு பால், இளநீர், தேன், தயிர், விபூதி, சந்தனம், பன்னீர், பஞ்சாமி ர்தத் தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, செவ்வந்தி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தூப, தீப வழிபாடுகள் நடைபெறும்.

அதற்கு முன்பு நந்தியெம்பெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும். அருகம்புல், மலர்க ள் சாத்திய பிறகு வில்வத்தால் நந்திதேவருக் கு அர்ச்சனை செய்வார்கள். நந்தி பகவானு க்கு தீபம் காட்டி, அதன் பின்னர், மூலவருக்கு நடைபெறும் தீபாரா தனையை நந்தியெம் பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு தரிசிப்பது விசேஷம். இதனால் சகல பாவங்களும் நீங்கி மகிழ்ச்சி அடையலாம் .

ருண விமோசன பிரதோஷ வேளையில் இப்படி ஈஸ்வரனையும் நந்தியையும் வண ங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவா னை யும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை.

சித்தர்களின் சமாதிகள், சரபேஸ்வரர் சந்நிதி, லட்சுமி நரசிம்மர் கோயில் போன்ற இடங்களி லும் வழிபட்டு கடன்களில் இருந்து விமோச னம் பெறலாம். முருகப்பெருமானின் தரிசன மும் செவ்வாயின் அருளைப் பெற்றுத் தரும்.

செவ்வாயன்று வரும் பிரதோஷ நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவ து நம் கடன்களைத் தீர்க்க உதவுவதுடன், அளவ ற்ற நன்மைகளையும் தரும். ருண விமோசன பிரதோஷ நாளில் இருக்கும் மௌன விரதம் கூடுதல் பலன் தரும். இந்த நாளில் ரத்ததானம், அன்னதானம், பூஜைகளுக்காக மலர் தானம் போன்றவை செய்வது மிக மிக நல்லது.

சிவபுராணம், நீலகண்டப் பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங் கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வ து நல்ல பலனைத் தரும். சில ஆலயங்க ளில் பிரதோஷ வேளையில், ஈசான்ய திசையில் பூத கணங்களுக்காக ஈசன் ஆடிய 'பூத நிருத்தம்' நடைபெறும். இந்த நாட்டியத்தை தரிசிப்பது நற்பலன்களை அருளும்.

நெற்றி நிறைய நீறணிந்து, உள்ளத் தூய்மை யோடு ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து ஈசனின் தாள் பணிந்து இறை ஞ்சுவோருக்கு, கட்டாயம் அவர் அருள் செய்வார். பிறவிக் கடனையும், உங்கள் பொருளாதாரக் கடன் களையும் அவர் சீக்கிரமே தீர்த்துவைப்பார். எடுத்த பிறவி யே போதும் என்ற அக்கறை யான வேண் டுதலை, ஏழையர்க்கு எளியவரா ன பரமன் நிச்சயம் நிறைவேற்றுவார்..

ஓம் நமசிவாய. 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

துர்க்கை அம்மனை வழிபட்டால் கிடைக்கும் நற்பலன்கள்...

ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டால் வாழ்வில் கிடைக்கும் நற்பலன்கள்

ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் ,வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் .

செவ்வாய் : ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் .

புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் , ரத்த சம்பந்தமான நோய் தீரும்.

வியாழன் : வியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் .

வெள்ளி : வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும்.

சனி : காலை 9-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்.. 

Sunday, October 27, 2024

திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள்....

திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள் பற்றிய பதிவுகள் .

1. இந்திரலிங்கம் :

இந்தலிங்கம் கிழக்கே பார்த்து
அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நீண்ட
ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

2. அக்னிலிங்கம் :

இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது.

3. எமலிங்கம் :

இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது. எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம். இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.

4. நிருதி லிங்கம் :

இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். இதை வேண்டும் பக்தர்கள்
நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

5. வருண லிங்கம் :

இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருண தேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

6. வாயு லிங்கம் :

இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை வழிபட்டு வந்தால் இருதயம், வயிறு, நுரையிரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்துகொள்ளலாம்.

7. குபேர லிங்கம் :

வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

8. எசானிய லிங்கம் :

வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Saturday, October 26, 2024

1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் ஸ்ரீ ராமானுஜர் பூத உடல்.

ஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்...!
ஆதிசேஷனின் அவதாரம் 
என்றென்றும் நிலைத்திருக்கும்
இராமானுஜர்..

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.

இராமானுஜரின் பூதவுடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு, இன்றளவும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் பச்சைக் கற்பூரமும், குங்குமப்பூவும் கொண்டு அபிஷேகம் செய்து வருகிறார்கள். அமர்ந்த நிலையில் சற்றே பெரிய திருமேனியாக இராமானுஜரை இன்றும் நாம் ஶ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதியில் தரிசிக்கலாம் (உடையவர் என்பது இராமானுஜரின் சிறப்புப் பெயர்).

இந்த அதிசய செய்தியை இந்துக்களிலேயே பலரும் அறிந்திருக்கவில்லை.

ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியே ஸ்ரீராமனுஜர் சந்நதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜரின் பூத உடல் என்று அறிவது இல்லை, சந்நதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து கடந்துப் போகிறார்கள்.

தானான திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.
இராமானுஜர் தமது 120-ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார்.

அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.

அவரது உயிர் பிரிந்த உடனே:
தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது! என்பர்.

நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த ஆடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம்.

உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி, அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த ஆடையையும் சூடிக்களைந்தத் தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம்.

பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் “பிரம்மமேத ஸம்ஸ்காரம்” என்கிறார்கள்.

இதன் பின்பு இராமானுஜரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு, இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும், ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம்.

பல்லாயிரக்கணக்கான சீடர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுஜர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர்.

தொடர்ந்து ‘இராமானுஜர் நூற்றந்தாதி” ஓதியபடி ஶ்ரீரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர்.

மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுஜர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது

தரிஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார்! என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்

“இராமானுஜன் என்தன் மாநிதி

என்றும்

இராமனுஜன் என்தன் சேமவைப்பு”

என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம்! அரங்கன்.

அதாவது இராமானுஜர், எனது மிகப் பெரும் செல்வம்; எனது சேமநிதி! என அரங்கன் திருவாய் மலர்ந்தருளினார்.

நமது பணத்தை. நாம் வங்கியில் நிரந்தர சேமிப்பு வைப்பு நிதியாகப் பாதுகாப்பதைப் போல; அரங்கன், இராமரின் தம்பி இலட்சுமணரின் அவதாரமான இராமனுஜரை என்றென்றும் பாதுகாத்து வைத்திட அருள் செய்தார்.

அப்படியானால் பிற சிரஞ்ஜீவிகளைப் போல இவரையும் ஏன் என்றென்றும் உயிரோடிருக்கச் செய்யவில்லை?

என்றால், கலியுகம் அந்தப் பாக்கியத்தைப் பெறவில்லை! எனலாம். உயிர் பிரிந்து பூதவுடலானாலும் திருமேனி எப்போழுதும் அடையாதிருப்பதே இறைபக்தி மற்றும் இறை நம்பிக்கையற்றவர்கள் இதைக் கண்ணாரக் கண்டு, அறிவு பெற்றிட வேண்டும்! என்பது திருமாலின் திருவுள்ளமாக இருக்கலாம்.

எனவே இராமனுஜரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சந்நதிக்குள்ளேயே, (யதிஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்! பெரியோர்கள்.

பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. 

இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் சந்நதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு

தானான திருமேனி என்று பெயர்.

ஆதிசேஷனின் அவதாரமல்லவோ இராமானுஜர்! இலட்சுமணரின் மறுபிறவி அல்லவோ இராமனுஜர்,

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Followers

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் பலன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள எட்டு திசை லிங்கங்களே (அஷ்ட லிங்கங்கள்) நவகிரக தோஷங்...