Monday, February 24, 2025

சிவராத்திரிக்கு சிறப்பான தலங்களில் நான்கு தலங்கள் தவறவிட கூடாதவை.

சிவராத்திரி  வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் திட்டை
மகா சிவராத்திரி என்பது ஒவ்வொரு இந்துவும் விரதமிருந்து விழித்திருந்து சிறப்பித்து வரம்பெற வேண்டிய மகா முக்கிய பண்டிகை, அதுவும் மகா கும்பமேளாவில் வரும் இந்த மகா சிவராத்திரி மிக அபூர்வமானது, பெரும் வரம் தர வல்லது

இந்த சிவராத்திரி அன்று வழிபட பல தலங்கள் முக்கியமானவை, அவ்வகையில் சிவராத்திரிக்கு சிறப்பான தலங்களில் நான்கு தலங்கள் தவறவிட கூடாதவை

ஊழி எனும் பிரளய காலம் முடிந்து இந்த பிரபஞ்சம் மீண்டும் ஒரு சிவராத்திரியில் தொடங்கிற்று, அப்போதுதான் ஈசன் தன் தேவியுடன் உலகை சிருஷ்டிக்க தொடங்கினார்
இந்த பிரபஞ்சம் ஈசனில் இருந்து உதித்து ஈசனிலே ஒடுங்கும்,அப்படி ஒடுங்கும் காலமே ஊழி காலம், அந்த ஈசனில் இருந்து அது மீண்டும் உருவாகி வரும் காலம் யுகம் தொடங்கும் காலம்

ஈசன் எனும் அந்த பரம்பொருளே சிவன், ஆதிபராசக்தி, ஆதிநாராயணன் எனும் மூன்றாக பிரிந்து அந்த நாராயணனில் இருந்து பிரம்மா உருவாகி வருவார்

ஈசனுக்கு உள்ள ஐந்தொழில்கள் இப்படி பிரிந்து பல சக்திகளால் செய்யபடும் அவை உதித்தது இந்த தருணத்தில்தான், சிவராத்திரியில்தான்

இன்னும் தேவர்களுக்கான வரமும் அசுரர்களுக்கான வரமும் இன்னும் யட்சர்கள் நாகர்கள் காந்தர்வர்கள் என எல்லாருக்குமான வரமும் அப்போதுதான் கொடுக்கபட்டது

மானுடர் உள்ளிட்ட உயிர்கள் அதன் பின்பே தோன்றின அவர்களுக்கும் ஞானம் அருளபட்டது

சிவராத்திரியின் முதல் சாமம் மானிடர் வழிபடுவது, இரண்டாம் சாமம் யட்சர்கள் நாகர்களுக்கானது, மூன்றாம் சாமம் அசுரர்களுக்கும், நான்காம் சாமம் தேவர்களுக்குமானது
உலகை மீளபடைத்தது தங்களையும் படைத்ததில் எல்லா படைப்புக்களும் சிவனை அந்த இரவில் தொழும் வகை இது

இந்த நான்கு சாமங்களிலும் நான்கு ஆலயங்கள் முக்கியமானவை, சிவராத்திரியோடு தொடர்பு கொண்டவை, இங்கு சிவராத்திரியில் வழிபடுவது சாலசிறந்தது, நான்கு சாமங்களும் நான்கு ஆலயங்களில் வழிபடுதல் நன்று

வாய்ப்பு கிடைத்தவர்கள் செல்லலாம் வாய்ப்பு இல்லாதவர்கள் எங்கிருந்தாலும் மனதால் வழிபடலாம் சிவனருள் நிச்சயம் உண்டு

மகாசிவராத்திரியில் முதல் காலத்தில் நடைபெற்றது எனவே மகா சிவராத்திரி முதல் காலத்தில் வழிபட வேண்டிய ஆலயம் தஞ்சை அருகில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில்

"கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே"

என சம்பந்த பெருமனா.னால் தேவாரம் பாடபெற்ற தலம் இது.

இதன் வரலாறு ஊழிகாலத்தின் முடிவில் புது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து வருகின்றது  திட்டை என்றால் மேடான என பொருள்

ஊழி காலத்தில் ஈசனுக்கு உகந்த  28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி.அது வடகிடிதிட்டை என்றானது

சீர்காழியில் ஊழிக்காலத்தில் ஓம் என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் ஹம் என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும் அழைக்கபட்டது

இன்று  காவிரியாறில் இருந்து கிளைகள் இடையே பிரிந்து வெட்டாறு, வெண்ணாறு இடையே இது அமைந்திருக்கின்றது, இந்த ஆறுகள் காலத்தால் பிந்தியவை இந்த தலம் அதற்கு முந்தையது

இந்த திட்டையில்தான் சிவன் தேவியோடு அமர்ந்தார் அவரும் தேவியும் அமர்ந்து உலகை மீளபடைக்க தேவர்களை இன்னும் எல்லா சக்திகளையும் படைத்தார்கள்

இந்த தலத்தின் பெருமை அறிந்து அங்கு சுயம்புவாய் தோன்றிய சிவனை வழிபட வசிஷ்ட மகரிசி வந்தார், அவர் குடில் அமைத்து வழிபட்ட சிவன் வசிஷ்டேஸ்வரர் என்றானார், சுயம்பாக தோன்றிய ஈசன் சுயம்பூதேஸ்வரர்  என்றும் அழைக்கபடுகின்றார்.

காமதேனு வழிபட்டு சாபம் தீர்த்த இடம் என்பதால் இவருக்கு பசுபதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. ரேணுகா தேவி வழிபட்டதால் இத்தலம் ரேணுகாபுரி என்றும் அழைக்கபடுகின்றது

அன்னை உலகாம்பிகை என்றும் மங்களாம்பிகை என்றும் அழைக்கபடுகின்றார்

இந்த தலத்தின் பெருமை இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் "தெட்சன‌ குடித்வீப மஹாத்மியம்" என்ற நூலில் உள்ளது.  இந்நூல்  "சுயம்பூதேஸ்வரர் புராணம்" என தமிழிலும் உண்டு, அங்கே இதன் வரலாறும் பெருமையும் முழுக்க சொல்லபட்டுள்ளன‌

உலகை இயக்குபவையும் ஆதியானவனையும் வேதங்கள் என்பதால் அவை இங்கு சிவனை வழிபட்டன, நான்கு வேதங்களும் சிவனை பணிந்த தலம் இது

பிரம்மா, மகாவிஷ்ணு, காலபைரவர், சூரிய பகவான், சனீஸ்வரர், யமதர்மன், இந்திரன் என மிக முக்கிய தேவர்கள் வழிபட்டு சக்தியினை மீள பெற்ற தலம் இது அப்படியே மகா ரிஷிகளான‌ கெளதமர், ஜமதக்னி முனிவர் முதலானோரும் ஈசனை நினைந்து தவமிருந்து வரம்பெற்ற இடம் 

சக்தி வாய்ந்த இந்த ஸ்தலத்தை முறையாக ஸ்தாபித்தவர் வசிஷ்ட மாமுனி அவர் நடுவில் இந்த முக்கிய லிங்கத்தையும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கங்களையும் ஸ்தாபித்தார்

வசிஷேடேஸ்வரரை சுற்றி நான்கு லிங்கள் உள்ள இந்த அமைப்பு "பஞ்ச லிங்க ஷேத்திரம்" என கொண்டாடபடுகின்றது, வேறு எங்கும் காணமுடியா அமைப்பு இது

பஞ்சராட்சர மந்திரத்தை விளக்கும் தத்துவமாக இது அமைந்துள்ளது
 
இத்தலம் யுகத்தின் தொடக்கத்தில் உருவான தலம், ஆதி தொன்மையான தலம் இந்த‌ தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களில் வழிபட்ட பலன் கிடைக்கும்

பஞ்ச பூத தலங்களின் மொத்த பலன்களையும் ஒரே இடத்தில் தரும் ஆலயம் இது

இந்த ஆலயம் சந்திரன் வழிபட்ட தலமுமாகும், தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் தன் சாபத்தை போக்கிய ஈசனை இங்கேவழிபட்டார்

இதனால் இந்த கருவறையில் மேல் சந்திரகாந்த கல் பதிக்க்பட்டுள்ளது, இது காற்றில் இருந்து நீரை தானே எடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கபட்டுள்ளது

இதனால் இங்கு சிவலிங்கம் மேல் நீர் தாரை இல்லை, மாறாக சந்திரகாந்த கல்லே குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை நீரை சொட்டு சொட்டாக சிவலிங்கம் மேல் பொழிகின்றது, மாபெரும் அற்புதம் இது

இறைவன் இந்த பிரபஞ்சத்தை தனியாக படைக்கவில்லை தன் சக்தி தேவியுடன் இணைந்தே படைத்தார்,அந்த சக்திக்கு உரிய இடம் இங்கு தனியாக கொடுக்கபட்டுள்ளது

எங்குமில்லா ஒரு விஷேஷ அமைப்பு இங்கு உண்டு,  ஆம், அம்மன் சன்னிதிக்கு முன்புள்ள மண்டபத்தின் மேலே 12 ராசிகள் செதுக்கப்பட்டுள்ளன. 

அந்தந்த ராசிக்காரர்கள், தங்களுக்கான ராசிக்கட்டத்தின் கீழ் நின்று அம்மனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும். திருமணத் தடை, மாங்கல்ய தோஷம் நீங்க அருள் புரிவதால், இந்த அன்னை ‘மங்களாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார்.

ஈசனுக்கு இணையான  பீடத்தில் அன்னை  அமர்ந்திருக்கின்றார்,  பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்

இந்த ஆலயத்தின் விஷேஷம் அந்த‌ ராஜா தக்ஷிணாமூர்த்தி சன்னதி. இங்கு குருவுக்கு தனி சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கும் ஈஸ்வரன் சன்னதிக்கும் நடுவில் தனி சன்னதி கொண்டிருக்கிறார் குரு பகவான் 

இங்கு குரு நின்ற கோலத்தில் 4 கைகளுடன் காணபடுகிறார். எல்லா தலத்திலும் அமர்ந்திருக்கும் குரு பகவான் இங்கு நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்

விநாயக பெருமானும், பைரவரும் தனி தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றார்கள்
 

தட்சாயண காலத்தில் சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும் இன்னும் உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27  தேதிகளிலும்  வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார்.
 

இந்த தலத்தின் முருகபெருமானும் சிறப்பானவர், பிரபஞ்ச இயக்கம் என்பதோ படைத்தல் என்பதோ சாதாரணம் அல்ல என்பதால் அங்கு பெரும் ஞானம் அவசியம் , அந்த ஞானத்தை மும்மூர்த்திக்கும் தேவர்களுக்கும் வழங்க இங்கு முருகன் அமர்ந்திருக்கின்றார்

எல்லா தேவர்களுக்கும் ஞானத்தை வழங்குவதால் இந்த ஆலயம் ஞானமேடு, ஞான திட்டை என முருகபெருமானை முன்னிட்டு அழைக்கபடுகின்றது

இந்த ஆலயம் முழுக்க கருங்கல், ஆலய கலசம் கொடிமரம் என எல்லாமே கருங்கல் ,அந்த அளவு உறுதியாக காலத்தை வென்று நிற்கும்படி கட்டபட்ட ஆலயம் இது
 

இந்த ஆலயம் சிவராத்திரிக்கு ஏன் விஷேஷம் என்றால் இங்கு தேவர்கள் மட்டுமல்ல எல்லா தரப்பும் வழிபட்ட தலம், அப்படியே ராவணனின் முப்பாட்டன் தாயவழி முப்பாட்டர் சுமாலி வழிபட்ட தலம் இது

அவனின் தேர் இங்கே பதிந்து நின்றதால் இது ரதபுரி , தேருர் என்றும் அழைக்கபடும்

நாகங்களில் ஆதிசேஷன்  வழிபட்ட தலம் இது , யட்சர்களில் குபேரனும் இதர லோகத்தவரும் வந்து ஈசனை வணங்கி அருள்பெற்ற தலம் இது

இங்கு ஆலயத்துக்கு வெளியே தீர்த்தம் உண்டு அதன் கரையில் தேவ கன்னியர் மல்லிகை, முல்லை என கொடிகளாக உண்டு, அப்படியே தேவர்கள் வில்வ மரங்களாக உண்டு

இந்த ஆலயத்தின் கல் முதல் மரம் செடி கொடிவரை எல்லாமே தெய்வாம்சம் கொண்டவை, ஒவ்வொன்றும் ஒரு தேவசாயலும் வரமும் கொண்டிருக்கும்

இந்த ஆலயத்தின் தாத்பரியம் புரிந்து கொள்ள எளிதானது

ஒரு விஷயத்தை படைத்து காத்துவருவது எளிதானது அல்ல அதற்கு பெரும் ஞானமும் அறிவும் வேண்டும், இங்கே சிவன் அதை அருளுகின்றார்

வசிஷ்டர் இந்த சிவனை வழிபட்டுத்தான் அயோத்தி எனும் ராமபிரானின் அரசுக்கே ராஜகுருவாக இருக்கும் பெரும் பாக்கியம் அடைந்தார், இன்றுவரை ஒரு ராஜ்ஜியத்தின் அமைப்புக்கும் ஆளுகைக்கும் ராமராஜ்ஜியமே எடுத்துகாட்டு என்றால் அந்த ஞானம் எப்படிபட்டதாக இருந்திருக்க வேண்டும்?

அந்த பெரும் ஞானத்தை , உச்ச ஞானத்தை தரும் ஆலயம் இது , அதனாலே இது குரு தலம், ராஜகுரு தலம் என்றும் அழைக்கபடும்

குரு பகவான் இங்கு வழிபட்ட்டே தேவர்களுக்கும் குருவாகும் யோகம் பெற்றார்

ராமனின் முன்னோர் மட்டுமல்ல ராவணனின் முன்னோரும் வழிபட்டு பெரும் வரம் பெற்ற ஆலயமும் இதுதான்

இந்த யுகத்தின் தொடக்கம் இந்த ஆலயத்தில் இருந்துதான் வந்தது அங்கிருந்தே எல்லா மும்மூர்த்தியும் தேவரும் அசுரரும் பலரும் வரம் வாங்கி வந்தார்கள்

இங்கு சிவராத்திரி அன்று வழிபடும் போது ஒரு மனிதன் புது பிறப்பாகின்றான், சிவராத்திரியின் முதல் வழிபாட்டை இங்கு செய்யும் போது அவன் புதுபிறப்பாக ஞானமும் அறிவும் கொண்ட பிறப்பாக மாறுகின்றான்

இதனாலே இந்த ஆலயத்தில் சிவராத்திரி மகா முக்கியம், மிக பெரிய இடம் அந்த ஆலயத்துக்கு உண்டு

வசிஷ்ர் என ரிஷிகளுக்கும், முப்பெரும் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், நாகங்களுக்கும் இன்னும் பலருக்கும் தொடக்க ஞானமும் அறிவும் தெளிவும் வரமும் அருளிய ஆலயமிது, புது யுகத்தின் தொடக்க புள்ளி இது

வாய்ப்பு கிடைத்தவர்கள் தவறாமல் முதல் பூஜையினை இந்த் தலத்தில் செய்தல் மிக்க நன்று அது பிறப்பையே புதிதாக்கும், வாய்ப்பு இல்லாதவர்கள் முதல் சாம பூஜையில் இந்த வசிஷேஸ்டரை நினைந்து ஒரு வில்வ இலை எடுத்து வைத்து வணங்குங்கள், எல்லா அருளும் உங்களை அந்நொடி தேடிவரும்

புது பிறப்பாக முழு ஞானமும் குருவருளும் திருவருளும் சிவனின் தனி அருளும் உங்களை தேடி வரும் இது சத்தியம்
 
வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர். நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

காட்டாங்குளத்தூர் ஸ்ரீ காளத்தீஸ்வரர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ காளத்தீஸ்வரர் 
*தக்ஷணின் யாகத்தில் கலந்து கொண்டு அவமானத்துக்கு ஆளான பார்வதிதேவி சிவனின் உன்மத்த நடனத்தின் போது பல கூறுகளாக சிதறி அவை சக்திபீடங்களாகின்றன 
*முடிவில் ஈசன் யோகநிலைக்கு தவமிருக்க எண்ணி பூவுலகில் ஸ்தலங்கள் தேட தனது கழுத்தில் கிடந்த நாகத்தை அனுப்புகிறார்.

*நாகம் தேர்ந்தெடுத்த ஐந்து தலங்களில் 
முதலில் காளஹஸ்தி அடுத்து காட்டாங்குளத்தூர் .
*திருநாகேஸ்வரம் திருப்பாம்புரம் கீழ்பெரும்பள்ளம் ஆகியன மற்றவை
*பல்லவர்களால் கட்டப்பட்ட 1500 ஆண்டுகள் பழைமையான ஆலயம். 
அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுயம்புமூர்த்தி
*சுவாமியின் சக்தியை நேரே தரிசிக்க முடியாது ஆபரண நந்தி எனும் அதிகார நந்தி  சாளரங்கள் வழியே தரிசிக்குமாறு சுவர் அமைந்துள்ளது.

*திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை‌ வழிபட்டு ஓர் இரவு இத்தலத்தில் ராகுவும் கேதுவும் தங்கியிருந்ததாக வரலாறு.இருவரும் ஒருவர் பின் ஒருவர் நிற்பது போன்ற அமைப்பு உள்ளது 
*நவகிரஹங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியே உள்ளனர் 

*இது ராகு கேது தோஷ நிவர்த்தி தலம்
*சனிக்கிழமை தோறும் சர்பதோஷ நிவர்த்தி பூஜை 
நடைபெறுகிறது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மஹா சிவராத்திரி நான்கு கால பூஜைகள் பலன்கள்.

 மஹா சிவராத்திரி நான்கு கால பூஜைகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் 
சிவராத்திரி அன்று 4 கால பூஜை என்பது மிகவும் முக்கியமானது. அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும்.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாமம். இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரண்டாம் ஜாமம். நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரையானது, மூன்றாம் ஜாமம். அதைத் தொடர்ந்து காலை 6 மணி வரையான, மூன்று மணி நேரமும் நான்காம் ஜாமம் என்று பிரிக்கப்படுகிறது. இந்த நான்கு ஜாம பூஜை மற்றும் அதன் பலன்களை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

*முதல் ஜாமம்*

முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான விதிப்பயன்கள், ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும்.

*இரண்டாம் ஜாமம்*

இந்த ஜாமத்தில் மகாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம், இந்த சிவராத்திரி நாளில் கூடி வருவது கோடி புண்ணியம் தரவல்லது. 

இந்த இரண்டாம் ஜாம வேளையில், யஜூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். சந்திர தசை, சந்திர புத்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் ஜாம பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

*மூன்றாம் ஜாமம்*

மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை ‘லிங்கோத்பவ காலம்’ என்றும் கூறுவர். இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான இந்த நேரத்தில்தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார். 


மஹா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இறைவனுக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். அதோடு சாமவேத பாராயணம் மற்றும் சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ‘இருநிலனாய் தீயாகி..’ எனும் பதிகத்தையும் பாராயணம் செய்யலாம். இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.

*நான்காம் ஜாமம்*

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். பொழுது புலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடி வரும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள்

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள்

எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள்.

பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்.

கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.

சிவலிங்கத்தைச் செய்விப்பவன் சிவலோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவலோகத்தை அடையும் பலனைப் பெறுவார்கள்.
அகத்தியர்......

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவலோகத்தை அடையச் செய்வான்.

ஒருவனால் செய்ய முடியவில்லையென்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும், அவன் முக்தி அடைவானாம்.

பிரம்மதேவன், யமதர்மனுக்குப் பாசமும் தண்டமும் கொடுத்துப் பாபம் செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அளித்தபோது சிவபக்தர்களை அண்டக் கூடாது என எச்சரித்திருக்கிறார்.

எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், பகவானை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், சிதிலமாகிக்கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள்,

காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கிக் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் வமிசத்தவர்கள் கூட யமதூதர்களால் நெருங்கப் படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

சிவாலயம் சென்று பகவானைத் தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜிப்பவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைவான்.

கிருஷ்ணபக்ஷ சதுர்தசியில் சிவலிங்கத்துக்கு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செய்த பாபங்கள் விலகும். 
பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் சிவலிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்பவன் சகல பாபங்களினின்றும் விடுபடுவான்.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான எம் ஐயனை துதிப்போம் அவன் அருள் பெறுவோம் .

ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு...

தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு!

தலையெழுத்தை யாராவது மாற்ற முடியுமா..... என்றால் நிச்சயம் முடியும். இறைவனாலும் முடியாதே என்று சொல்ல கூடியவர்கள். உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டிய நேரம் இது.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய இக்கட்டான சூழ்நிலைகளில், 'எல்லாம் என் தலையெழுத்து'.. என்று வருத்தப்பட்டோ அல்லது கோபப்பட்டோ சொல்வதுண்டு. ஆனால் அவர்களுக்கு சந்தோஷம் வரும் நேரத்தில் ஒருமுறை கூட ஒருவர் கூட, இத்தகைய நற்பலனை பெறுவதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று கேள்வி எழுப்புவதில்லை.  பொதுவாக மக்கள் இதுபோன்ற துயரங்கள் தாக்கும் சமயத்தில் தமது தலையெழுத்துக்கு கடவுளையும் மற்ற ஜீவராசிகளையும் குற்றம் கூறுவார்களே தவிர நமது கடந்த காலச் செயல்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து உணர்வது அரிதாக தான் உள்ளது. 

ஒருவரின் தலையெழுத்து என்பது, அவனின் ஆசைகள், அவனது கடந்த காலச் செயல்கள், இயற்கையின் செயல்பாடு, கர்ம வினைக்கான காலம் போன்றவை மட்டுமின்றி வேறு சில காரணங்களுடன் கூடி பின்னிப் பினையப்பட்ட ஒரு சிக்கலான முடிச்சு என்றே கூறவேண்டும். இந்தக் காரணங்களின் விளைவுகளைக் கூட்டிக் கழித்த பிறகே அவரவர் அனுபவிக்க வேண்டிய ஒட்டு மொத்த பலன்களே தலையெழுத்து என அறியப்படுகிறது. இந்த தலையெழுத்தை யாராவது மாற்ற முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். இறைவனாலும் முடியாதே என்று சொல்ல கூடியவர்கள். உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டிய நேரம் இது.

தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்திற்கு அருகே திருபுவனம் என்கிற கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கம்பகரேஸ்வரர் என்று அழைக்கப்படும் சபரேஸ்வரர் கோவில். இந்த சபரேஸ்வரர் தான் உங்கள் தலையெழுத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி உங்களுடைய சிக்கலில் இருந்து விடுவித்து அருள் புரிகிறார். இங்கு பிரசித்தி பெற்ற பல கோவில்கள் இருக்க பக்தர்களின் அதிக நம்பிக்கையை கொண்ட கோயிலாக உள்ளது சரபேஸ்வரர் கோவில் தான்.

மனிதன் இந்த கலியுகத்தில் தனக்கு ஏற்படும் துன்பங்களை எல்லாம் போக்கிக் கொள்ளவும், தனக்கு நேரும் அனைத்து ஆபத்துகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் சரணடைய வேண்டிய தெய்வம் சரபேஸ்வரரே. இந்த சபரேஸ்வர் உருவான காரணமும் உண்டு. நாராயணன் இரண்யகசிபுவை வதம் செய்வதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காது திமிரிக் கொண்டிருந்த நரசிம்மனின் உக்கிரத்தை தணிப்பதற்காக அவரை விட உக்கிரமாக வெளிப்பட்ட சிவபெருமானின் வடிவமே சரபேஸ்வர வடிவம் ஆகும்.

சபரேஸ்வரரின் உருவமானது மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை.  அதிலும் தங்க நிற பறவையின் உடலும், இறக்கை இரண்டும் மேல் தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழ் நோக்கியும், 4 கால்கள் மேல் நோக்கிய யபடியும், வால் மேல் தூக்கியபடியும், தெய்வத் தன்மை கொண்ட மனிதத் தலையும் சிங்கமுகமும் கொண்டு விசித்திரமாக அருள்பாலிக்கிறார். ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி தேவி ஆகியோர் இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள். சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து பிரத்யங்கிரா தேவி தோன்றி நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் சரபேஸ்வரரின் சக்தியை பற்றி  லிங்க புராண குறிப்புகளும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி இவர் நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும்
அழைக்கப்படுகிறார்.

சரணாகதியின் மகத்துவம் தெரியுமா?

அக்னி தெய்வமாகவும் சரபேஸ்வரரை  வணங்குகிறோம். நம்மை பாதுகாக்க நம் கண்களுக்கு  புலப்படாத எதிரிகளை அழித்து அபயமளிப்பவர். இவரை வேண்டி வணங்கினால் அனைத்து துன்பங்களிலிருந்தும் தப்பித்து விடலாம். இவரை வழிபட்டால் பில்லி, ஏவல், சூனியம் போன்ற தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபடலாம். தீரா நோயால் பாதிப்புக்குள்ளானாலும் அதிலிருந்தும்  விடுபடலாம். இவரை ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தில் வழிபடுவது சிறப்பு. இந்த காலத்தில் நமது கண்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் என்று ஏராளமானது இருக்கிறது. அவற்றை அழிக்க இவரை வழிபடலாம். 

விதியையும் மாற்றுவார் சரபேஸ்வரர்! வழிபாடும் முறை இதுதான்!

எந்த செயல் செய்தாலும் வெற்றி கிடைக்க வேண்டுமென்றாலும், உடல்நிலை சரி செய்யவும் இவரை வழிபடலாம். அதோடு தரித்தரங்கள் நீங்கவும் இவரை வழிபடலாம். இவரின் சக்திகளான பிரத்யங்கிரா தேவியை வணங்கினால் நமக்கு வரவிருக்கும் ஆபத்து நீங்கும், இன்னொரு சக்தியான சூலினி துர்க்கையின் அம்சத்தை பெற்றிருப்பதால் அனைவரின் நலம் காப்பாள் என்பதால் நாம் செய்யும் காரியங்கள் தடை பட்டால் இவளை வழிபடலாம். இப்படி நமது தலை விதியை மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரரை வழிபட்டு வளமாய் வாழுங்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, February 23, 2025

சோழீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை மாவட்டம் ஈரோடு..



*அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்*
*புராண பெயர்(கள்):*
வாகைப்பெருந்துறை
*பெயர்:*
சோழீஸ்வரர் திருக்கோயில்
*ஊர்:*
பெருந்துறை
*மாவட்டம்:*
ஈரோடு

*வரலாறு:*
கோச்செங்கட்சோழன் எனும் சோழமன்னன் முற்பிறவியில் திருவானைக்காவில் சிலந்தியாக பிறவி எடுத்திருந்தான். சிலந்தி தன் ஞானத்தால், வெண்நாவல் மரத்தடியில் வீற்றிருந்த ஈசனுக்கு தன்னை அறியாமலேயே சிவசேவை செய்து வந்தது. சிவபெருமான் மீது இலை, சருகு, தூசி விழாமல் இருக்க தன் வழக்கப்படி வலை பின்னி வைத்தது. பழம்பிறப்பில் செய்த தவப்பயனால் வெள்ளை யானை ஒன்றும் தினமும் தன் தும்பிக்கையில் நீர் கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதித்து வந்தது. தனது வழிபாட்டிற்கு இடையூறாகத் தொங்கிக் கொண்டிருந்த வலையை இழுத்துப் போட்டு பிய்த்து எறிந்தது யானை. தினம் தினம் சிலந்தி வலை பின்ன, யானை பிய்த்துப் போட, ஒரு நாள் கோபம் மிக அதிகம் கொண்ட சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து கடித்து வதைத்தது. வலியைத் தாங்க முடியாமல் யானை தும்பிக்கையைத் தூக்கித் தூக்கி அடித்து சிலந்தியைக் கொன்று விட்டு தானும் உயிர் துறந்தது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தமிழ்நாட்டில்சிவனுக்குரியஸ்தலங்களின்பெருமைகள்.

தமிழ்நாட்டில்சிவனுக்குரிய
ஸ்தலங்களின்பெருமைகள்.
ராஜ கோபுரத்தை விட மூலவருக்குஉயர்ந்த
விமானம் உள்ள இடங்கள்

1,திருப்புனவாசல் -- ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர்
2,தஞ்சை – பிரகதீஸ்வரர்
3,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
4,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
5,திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவனுக்குரிய விஷேசஸ்தலங்கள்.

1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்.
11. திருபள்ளுர் -- பரசுராம ஷேத்ரம்

சிவ பூஜைக்கு சிறந்தஸ்தலங்கள்.

1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை
7. திருபள்ளுர் --- பிரதோஷ கால பூஜை

காசிக்குமுன் தோன்றிய ஸ்தலங்கள்
1,திருப்புனவாசல் -- ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர் (வ்ருத்தகாசி)

காசிக்குசமமான ஸ்தலங்கள்
1, திருவெண்காடு. 
2, திருவையாறு. 
3, மயிலாடுதுறை. 
4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 
6, ஸ்ரீவாஞ்சியம். 
7, விருத்தாசலம். 
8 மதுரை.
9, திருப்புவனம்.

ராமேஸ்வரத்துக்கு முன் தோன்றிய ஸ்தலம் 
பரசுராமேஸ்வரம்  (தற்போது பள்ளுர் என்னும் கிராமம் ), குருதி தர்ப்பணம் விஷேசம் 
மூன்று  யுகங்களுக்கு முன் பரசுராமர் தவம் செய்து பரசுஆயுதம் பெற்று  குருதி தர்ப்பணம் செய்த  இடம் ,, பரசுராமர்  ஆலயம் பள்ளூர் கிராமம் ,திருமால்பூர் ரயில் நிலையம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்
 

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...