Sunday, October 19, 2025

ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர் பேரூர்.

ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்!- அரிய அபூர்வ தகவல்கள்!
நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. 

இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.

இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,. . .

இறவாத "பனை", 

"பிறவாத புளி," 

"புழுக்காத சாணம்," 

"எலும்பு கல்லாவது," 

"வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து." 

"இதுதான் அந்த அதிசயங்கள்"

இறவாத பனை:-

பல ஆண்டுகாலமாக இன்றும் பசு மைமாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிரு க்கிறது. 

இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம். 

இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், . . .

தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் "இறவாத பனை"

பிறவாத புளி:-

அடுத்து "பிறவாதபுளி," என்றுபோற்ற‍ப்படும் "புளியமரம்" இங்கு இருக்கிறது. 

இந்த "புளியமரத்தின்" கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தேயில்லையாம். 

"புளியம்பழத்தின்" கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். 

"முளைக்க‍வே இல்லை." 

இந்த "புளியமரம்" இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம். 

அதனால் "பிறவாத புளி "என்று அழைக்கிறார்கள்.

புழுக்காத சாணம்,:-

மூன்றாவதாக புழுக்காத "சாணம்," கோயில் இருக்கிற "பேரூர்" எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில் . . .

ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் "சாணம் " 

மண்ணில் கிடந்தால் . . . 

எத்த‍னை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லையாம்.

மனித எலும்புகள் கல்லாவது:-

அடுத்து "மனித எலும்புகள்" கல்லாவது. 

இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை . . .

இ ந்த ஆத்மா புண்ணியம் பெறவேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்களாம். 

அப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற "எலும்புகள் "சிறிது காலத்தில் "கற்களாக உருமாறி" கண்டெடுக்க‍ப்படுகிறதாம். 

என்ன‍அதிசயமாக 

இருக்கிறது அல்ல‍வா? 

*அதுதான்" பட்டீஸ்வரரின்" திருவருள்.

த‌மது வலது "காதை" மேல் நோக்கி வைத்த‍படி மரணிப்ப‍து:-

ஐந்தாவதாக "பேரூரில்" மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது "வலது காதை" மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயமும்   இங்கு  இன்னமும்  நடந்து   கொண்டுதான் இருக்கின்றது.

இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற "பட்டீஸ்வரர்," . . .

இங்கு அமைதியாகத்தான் காட்சித்தருகிறார். 

ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்ச‍ரியத்தைத் தருகின்றது. 

முன்பு இக் கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம். 

அப் போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும் . . .

அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம். 

இதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்த‍வர்தான் நமது "பட்டீஸ்வரர்."

கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்த‍வர் இவர். 

இவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த‍ நிலை, . . . 

மார்பில் பாம்பின் பூணூல், 

தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள், 

சடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள், 

இவைகளோடு " பட்டீஸ்ரர்" தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன.

இதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்  திருக்கிறார்கள். 

இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறிந்து கொண்டிருக்கின்றன.

ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்ன‍ன் ""திப்பு சுல்தான்."" 

இந்தக் கோயில் . . .

அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்தை இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். 

ஆம் இறைவன் குடியிருக்கும் "சிவலிங்கம்" அடிக்க‍டி அசையும் என்று, . . .

இதை நம்பாமல் 

"சிவாலயத்தின் " 

மீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்ன‍ன் "திப்பு சுல்தான்"

அப்போது அவன் உடலில் அதிர்வுகள்தோன்றியிருக்கின்றன. 

நெருப்பின்மீது கைகள் வைப்ப‍துபோல் உணர்ந்து துடித்திருக்கிறான். 

கண்கள் இரண்டு கீழே விழுந்தவன் சிறிது 

நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது "பட்டீஸ்வரரிடம்" தன்னை 

மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.

கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான். 

இவனைப்போன்றே "ஹைதர் அலியும் " நிலங்களை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன.

இக்கோயிலின் "ஸ்தல விருட்சம் அரச மரமாகும்." 

இனி "தாயின் "

சிறப்புக்களைப் பார்போம்.

இங்குள்ள‍ அம்ம‍னின் பெயர் ""பச்சை நாயகியாகும்."" 

""பச்சை நிறமாகிய மரகதக் கல்லில்" அன்னை எழில் ஓவியமாக 

எழுந்தருளியிருக்கிறாள்.

அன்னையின் அன்புமுகத் தைப்பார்த்து கொண்டேயி ருக்க‍லாம். 

அவ்வ‍ளவு அழகு, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். 

*இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. 

அத‌ன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. 

கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள்

நிற்கின்றன. 

அற்புதமாக கலை நுட்பத்துடன் கண்டோர் வியக்கும் வண்ண‍ம் சிங்கத்தின் சிலை உருவா க்க‍ப்பட்டுள்ள‍து. 

ஒரே கல்லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள்.

இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தி வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ன. 

குறிப்பாக கோயிலின் வட பக்க‍ம் உள்ள‍ பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. 

இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள‍ 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன.

சிற்பங்களால் வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ இக்க‍ல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல‍, . . .

தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெருமையால் நமது நெஞ்சு நிமிர்கின்றது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, October 17, 2025

அனேகதங்காவதீஸ்வரர் பிள்ளையார்பாளையம் காஞ்சிபுரம்.

அருள்மிகு அனேகதங்காவதீஸ்வரர் திருக்கோயில்,
பிள்ளையார்பாளையம், 
காஞ்சிபுரம் - 631501.
காஞ்சிபுரம் மாவட்டம்.  

*மூலவர்: கச்சி அனேகதங்காவதேஸ்வரர்.

*அம்மன்/தாயார்: காமாட்சி.

*தீர்த்தம்: தாணு தீர்த்தம்.         

*சுந்தரரால் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.    
*இந்தக் கோயில் காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.                                 

*விநாயகப்பெருமானால் அமைக்கப்பட்டு வழிபடப்பட்ட திருத்தலம் என்ற பொருளில் 'அனேகதங்காவதம்' என்றும், 
வட நாட்டுத் திருக்கோயிலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட 'கச்சி' சேர்க்கப்பட்டு 'கச்சி அனேகதங்காவதம்' என்றும் அழைக்கப்படுகிறது.                     

*பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு “வல்லபை’ என பெயரிட்டு வளர்த்து வந்தார். சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள்.  அப்போது அம்பிகை சிவனிடம், விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும் என்றாள்.             
சிவன், இத்தலத்தில் விநாயகன் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார். 

விநாயகரும் அசுரர்களை அழிக்கச் செல்லும் முன்பு, இவ்விடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 
பின், வல்லபையை மீட்டு வந்தார். சிவன், அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர்.  

*இத்தலத்து இறைவன் தம்மை வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரங்களெல்லாம் (சர்வ அபீஷ்ட சித்தி) அளித்து அவர்களைக் காக்கின்ற அற்புதப் பதி.                 

*விநாயகப் பெருமானால் வழிபடப்பட்ட அநேகதங்காபதேஸ்வரரை வழிபடுவர்கள் கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவன் உறையும் திருக்கயிலாயத்தை அடைந்து அங்கு தங்கும் பேற்றினைப் பெறுவர் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது. 

*திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள விநாயகருக்கு  அருகம்புல் சாத்தி, நைவேத்யங்கள் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் விரைவில் திருமணம் நடக்கும் என நம்புகின்றனர்.
                                   

*குபேரன் தான் செய்த வழிபாட்டுப் பலனாக அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன் அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுக்க, குபேரன் இங்கு சிவபெருமானைத் தன்னைக் காக்கும்படி வேண்டினான். சிவபெருமான் அவனுக்காக சுக்கிரனை விழுங்கி சுக்கிரனின் கர்வத்தை அடக்கினார். குபேரனைக் காத்தார். 

*மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன. முதற் குலோத்துங்க சோழனின் முப்பத்து நான்காம் ஆட்சியாண்டில் தோன்றிய கல்வெட்டு, திருக்கோயிலுக்கு இரண்டுவேலி நிலம் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது. இந்நிலம் காஞ்சீபுரத்தில் இராஜ சிம்மேஸ்வரம் அல்லது கைலாசநாதர் கோயிலுக்கு வடக்கில் உள்ளது. 
குலோத்துங்க சோழனின் இருபதாம் ஆண்டுக் கல்வெட்டு, தாமர்க்கோட்டத்து தாமர்நாட்டுத் தாமர் (தாமல்) அல்லது நித்தவிநோதநல்லூரில், அரசன் மூன்றுவேலி நிலத்தை இறைவர்க்குக் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது. 
மூன்றாவது கல்வெட்டு அநேகதங்காபதக்கோயில் அதிகாரிகள், கோயிலுக்குரிய கைக்கோளர்களுக்கு 1400 குழி நிலத்தைக் கொடுத்ததைக் குறிப்பதாகும். 

*அமைவிடம்:
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, புத்தேரித் தெரு வழியாகக் கயிலாயநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் சென்று இக்கோயிலை அடையலாம். 

*இக்கோயிலில் ஒரு கால பூஜை மட்டுமே. கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 8.30 to 11.30 am. 
மற்ற நேரங்களில் மெய்க்காப்பாளரை தொடர்புகொண்டு கோயிலுக்குள் செல்லலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

தஞ்சை ஒரத்தநாடு காசி விஸ்வநாதர் கோயில்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு சிவன்கோயில்


தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஒரத்தநாடு 20 கி.மீ தொலைவில் உள்ளது. ஒரத்தநாடு பேருந்து நிறுத்தத்திலிருந்து ½கி.மீ தொலைவில் உள்ளது இந்த சிவாலயம். இப்பகுதி முத்தம்மாள்புரம் எனப்படுகிறது. 
ஒரத்தநாடு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் 300 ஆண்டுகளுக்கு முன்னர்  1802-ல் இரண்டாம் சரபோஜி மன்னர் (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832),காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மன்னர் காசி சென்று வந்ததன் நினைவாக கட்டப்பட்டது என ஒரு தகவல். 
இறைவன் - காசி விஸ்வநாதர்
இறைவி – காசி  விசாலாட்சி

கிழக்கு நோக்கிய திருக்கோயில் மிகப்பெரிய வளாகத்தில் இரண்டு சுற்றுகள் கொண்டதாக அமைந்துள்ளது.  கிழக்கில் 5 நிலை ராஜகோபுரமும்  மற்றும் தெற்கில் 3 நிலை ராஜகோபுரத்துடன் கூடியதாக உள்ளது. ராஜகோபுரத்தின் முன்புறத்தில் சன்னதி தெருவினை ஒட்டி பெரிய குளம் ஒன்றும் அமைந்துள்ளது. ராஜகோபுரம் தாண்டி சென்றால்  பலிபீடம், துவஜஸ்தம்பம் மற்றும் நந்தி மண்டபம், உள்ளன. வலதுபுறம் பெரிய உருளை வடிவ தூண்களுடன் வசந்த மண்டபம் உள்ளது. அதனை ஒட்டி அம்பிகைக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. 

கருவறை இடைநாழி,  அர்த்த மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது அம்மன் கோயில்.  அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறார்.
பிரஸ்தரம் எனப்படும் மேல் தளம் வரை கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அம்பிகையின் முன்னே ஒரு நந்தி மண்டபம் கொடிமரம் ராஜகோபுரம் உள்ளன. கருவறையின் சுற்றில் கோஷ்ட மூர்த்திகளாக இச்சா ஞான கிரியாசக்தி அம்மன்கள் உள்ளனர். 

இரண்டாம் பிரகாரத்தில் இருந்து மற்றொரு மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே சென்றால்  நாற்புறமும் திருமாளிகைபத்தி கொண்டு பிரம்மாண்ட காட்சியை தருகிறது. முதல் திருச்சுற்று. 
 முதல் பிரகாரத்தில் நால்வர், சேக்கிழார் கணபதி, ஐயனார் ஐயப்பன், ஆறுமுகன் இரு துணைவியாருடன் மிகப்பெரிய உருவாக உள்ளார். பன்னிரண்டு கைகளில் பத்து கைகளில் ஆயுதம் ஏந்திய கோலம் கொண்டுள்ளார்.
 
சிறிதாக மூன்று  லிங்கங்கள், கஜலட்சுமி, சொக்கநாதர்-மீனாட்சி, சரஸ்வதி, வடகிழக்கில் நவகிரகங்கள், சூரியன், சனி, தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதி,  காலபைரவர், என சன்னதிகள்  உள்ளன.

இறைவனின் கருவறை இடைநாழி, நீண்ட அர்த்தமண்டபம் பெரிய உருளை  தூண்களை கொண்ட நாயக்கர் பாணி கூம்பு வடிவ விதானம் கொண்ட முக மண்டபம் பார்க்க பிரமிப்பை ஊட்டுகிறது. 
கோஷ்டவிநாயகர், தக்ஷணமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். 
 

கோயில் காலை 07.00 மணி முதல் உச்சி காலம் வரை, மாலை 4 மணி முதல்  இரவு 8.00 மணி வரை.  
வைகாசி விசாகம் பத்து நாட்கள் உற்சவம் தேர் என களை கட்டுகிறது. 

காசி விஸ்வநாதர் கோயில் இவ்வளவு பெரிய அளவில் வேறெங்கும் தமிழகத்தில் பார்த்திருக்க இயலாது. அப்படியே முத்தம்மாள் சத்திரத்தினையும் கண்டு செல்வீர். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, October 16, 2025

கரிகாலன் கட்டிய திவ்ய தேசம் கோவிலடி திருப்பேர்நகர் அப்பாலரங்கநாதர்.


108 வைணவத் 
திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் ஒன்றானதும்,
கரிகால சோழனால் கட்டப்பட்ட தலமானதும்,
பஞ்சரங்க தலங்களில் ஒன்றான 
காவிரிஆற்றங்கரையில் 
அப்பக்குடத்துடன் 
புஜங்க 
சயன கோலத்தில் ரங்கநாதர் காட்சி தரும் தலமான 
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
#கோவிலடி என்ற #திருப்பேர்நகர் (#அப்பாலரங்கம்)
#அப்பக்குடத்தான் என்ற 
#அப்பால_ரங்கநாதர் 
#கமலவல்லி_தாயார் திவ்யதேச திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 
கங்கையினும் புனிதமாய காவிரியின் புதுப்புனலால், செந்நெல்லும் செங்கரும்பும் செழித்து பூத்துக் குலுங் கும் பசுஞ்சோலைகளும், தாமரை பூத்த தடாகங்களும் நிறைந்த புனித பூமி சோழ வளநாடு!

இப்புண்ணிய பூமியில் காவிரியின் இரு மருங்கிலும் விண்ணளந்து நிற்கும் சைவ, வைணவத் திருத்தலங்கள் தமிழ்த்திருநாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரங்களுக்குச் சான்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சிறப்புகள் வாய்ந்த சோழவள நாட்டில் பக்தி நெறியைப் பரப்பும் விதமாக அலைமகள் உறைமாா்பன் அா்ச்சாவதாரத் திருக்கோலம் கொண்டு எழுந்தருளிய, ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் பல உள்ளன. கலியுகத்தில் நலம் தரும் நாயகனான ஶ்ரீமந் நாராயணன் தன் பக்தா்கள் எளிதாகத் தன்னைச் சரணடைவதற்காக அமைத்துக் கொண்ட உன்னதமான நிலையே அா்ச்சா ரூபமாகும்.

“தமா் உகந்தது எவ்வுருவம் அவ்வு ருவம் தானே தமா் உகந்தது எப்போ் மற்றப்போ்” என்று அா்ச்சாவதாரத் திருமேனியின் மேன்மையைப் பாடிப் பரவசப்பட்டுள்ளாா் பொய்கை ஆழ்வாா்.

கலியுகத்தில் அா்ச்சாவதாரத் திருமேனியின் மேன்மையை உணா்ந்த மகரிஷிகளும் மன்னா்களும் நமது வழிபாட்டிற்காகப் பல திருக் கோயில்களை நிா்மாணித்து அா்ப்பணித் துள்ளனா்.

இவ்வாறு “அனந்தனின் மலர ணையில் பள்ளி கொண்டு” பேரழகனாக பரந்தாமன் காவிரி நதிக்கரையில் ஶ்ரீஅப்பக்குடத்தான் எனும் திருநாமத்தோடு கோடி சூரியப்பிர காசனாக அருள்புரியும் தெய்வீகத் திருத்தலமே, தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகிலுள்ள கோவிலடி என்னும் திருத்தலமாகும்.

கோவிலடி 
அப்பால ரெங்கநாதர் கோயில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. 
இக்கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் அமைந்துள்ளது. இக்கோவில் சோழ மன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்டது. 
திருப்பேர் நகர் என்பது இத்தலத்தின் பழம் பெயராகும். பஞ்சரங்க தலங்களில் அப்பாலரங்கம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இப்பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுவதால் இவர் அப்பக்குடத்தான் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள பெருமாள் அப்பக்குடத்தான் என்றும், அப்பால ரெங்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் உள்ள தாயார் கமலவள்ளி என்றழைக்கப்படுகிறார்.
கொள்ளிடத்தின் தெற்குக்  கரையில் அமைந்துள்ள இந்த திவ்யதேசம்,
கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள அன்பிலுக்குக் கிட்டத்தட்ட நேர் எதிரே அமைந்துள்ளது கொள்ளிடம் ஆற்றைக் கடந்து சென்றால்  இந்த இரு திவ்யதேசங்களுக்கும் இடையே உள்ள தூரம் 1 கிலோமீட்டர்தான். ஆனால், சாலை வழியே கோவிலடியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, அரியூர் இவற்றைத் தாண்டி அன்பில் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கோவிலுக்குத் தென்புறம் சற்றுத் தொலைவில் காவிரி  ஓடுகிறது.   கொள்ளிடம், காவிரிக்கு இடையே அமைந்திருக்கும் விதத்தில், இந்தக் கோவிலும் ஸ்ரீரங்கத்தை ஒத்திருக்கிறது. இங்கே எழுந்தருளியிருப்பவர் ரங்கநாதர். இவர் ஸ்ரீரங்கத்திலிருயிருந்து தள்ளி - ஸ்ரீரங்கத்துக்கு அப்பால்- அமைந்திருப்பதால், அப்பால ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

21 படிகள் எறி மேலே செல்ல வேண்டும். இந்திரகிரி என்ற குன்றின் மீது அமைந்துள்ளது இந்தக் கோவில்.

சோழர் காலத்தில் பேர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர்

பிற்காலத்தில் திருப்பேர் நகர் என்று பெயர் பெற்றது. ஆழ்வார்கள் தங்கள் பாசுரத்தில் இந்த திவ்யதேசத்தை 'பேர் என்றும் 'திருப்பேர் நகர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

வைணவ மரபில் கோவில் என்றால் திருவரங்கம் கோவிலைத்தான் குறிக்கும். திருவரங்கம் கோவிலுக்குச் சற்றுத் தள்ளி அமைந்திருப்பதால், இந்தத் திருத்தலத்துக்கு கோவிலடி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்பால ரங்கநாதர் என்ற பெயரும் கிட்டத்தட்ட இதே பொருளைத்தான் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மங்களாசாசனம்
இத்தலம் நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.

நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது கோவிலடியில் உள்ள அப்பால ரெங்கநாதர் கோவில்.

கல்லணை- திருக்காட்டுப் பள்ளி சாலையில் கோவிலடி கிராமத்தில் காவிரி கரையோரத்தில் தரைமட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது அப்பால ரெங்கநாதர் கோவில்.

சோழ மன்னா்கள் நிா்மாணித்த மாடக்கோயிலுக்கு எடுத்துக்காட்டாக காவிரி நதி தீரத்தில் நிா்மாணிக்கப்பட்ட இத்தலம் ஶ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக (முந்தியதாக) அடியெடுத்து வைத்த தலம் என்பதால் கோவிலடி என்று வழங்கப்படுவதாக இத்தலத்தின் வரலாறு தொிவிக்கின்றது.

புராணங்களிலும் ஆழ்வாா்களின் பாசுரங்களிலும் திருப்போ் நகா் என்று போற்றி வணங்கப்படும் இத் திவ்யதேசத்தில் இன்றும் பெருமானுக்கு இரவில் அப்பம் செய்து நைவேத்தியம் செய்வது வழக்கமாகப் பின்பற்றப்படுகின்றது.

ஶ்ரீதேவியான திருமகள் திருப்பேர் நகருக்கு வந்து பெருமானை நினைத்து தவமியற்றி, அவரது திருமாா்பில் சேரும் பேறினைப் பெற்ற தலம் என்பதால் இத்தலத்தை “ஶ்ரீ ஆகிய மஹாலக்ஷ்மி உறையும் நகா்” என்ற பொருளில் “ஶ்ரீநகா்” என்றும் போற்றி வணங்குகின்றனா்.

*பஞ்சரங்கத் தலம்!

திருமகள் கேள்வன், ஆதிசேஷன் மீது அறிதுயில் கொண்டு ஶ்ரீரங்க நாதராக சேவை சாதிக்கும் கீழ்க்கண்ட திருத்தலங்கள் பஞ்சரங்கத் தலங்கள் என்று போற்றி வணங்கப்படுகின்றன. அவை,

1. ஆதிரங்கம்: ஶ்ரீரங்கப்பட்டினம், ஶ்ரீஆதிரங்கன்.

2. அப்பாலரங்கம்: திருப்போ் நகா் (கோவிலடி) ஶ்ரீஅப்பாலரங்கன்.

3. மத்திய ரங்கம்: ஶ்ரீரங்கம், ஶ்ரீகஸ்தூரி ரங்கன்.

4. சதுா்த்தரங்கம்: கும்பகோணம், ஶ்ரீசாரங்கபாணி (ஆராஅமுதன்)

5. பஞ்சரங்கம்: திருஇந்தளூா் (மயி லாடுதுறை), ஶ்ரீபரிமளரங்கன்.

இந்த பஞ்சரங்கத் தலவரிசைகளில் அப்பாலரங்கம் என்று போற்றப்படும் திருப்போ்நகா் (கோவிலடி) ஶ்ரீரங்கத்திற்கும் முற்பட்டது என்று வணங்கப்படும் தனிச் சிறப்பினைப் பெற்று விளங்கும் திருத்தலமாகும்.

*மூலவர்: அப்பக்குடத்தான்,புஜங்க சயனம், மேற்கு நோக்கிய திருமுக மண்டலம்.

உற்சவர்: அப்பால ரங்கநாதர்,அப்பக்குடத்தான், கனகவல்லி, பூமாதேவித் தாயார், ஆண்டாள், நர்த்தனமாடும் கிருஷ்ணர்  ஆகியோருடன் சேவை  சாதிக்கிறார்.

தாயார்: இந்திரா தேவி, கமல வல்லி

தலவிருட்சம்: புரச மரம்,

*தீர்த்தம்: காவிரி, இந்திர புஷ்கரணி. கோவிலுக்கு சற்றுத்  தொலைவில் உள்ள புஷ்கரணியில் செடிகள் மண்டி, பயன்படுத்தப்பட்ட முடியாத நிலையில் இருப்பதாக, கோவிலில் மேளம் வாசிப்பவர் கூறினார்.   .

விமானம் : இந்திர விமானம்

பெருமாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் சந்நிதிக்கு வலப்புறமாக விஷ்வக்சேனர் ஆஞ்சநேயர் விக்கிரகங்கள் உள்ளன. பிரகாரத்தின் முடிவில் ஒரு விநாயகர் சந்நிதி இருக்கிறது. இவர் வழிகாட்டி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

*#நம்மாழ்வார் பாசுரம்:

"பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என்நெஞ்சு நிறையப் புகுந்தான்

கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்

ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே.

புராண வரலாறு:

ஒரு காலத்தில் துர்வாச முனிவரின் கடும் கோபத்திற்கு ஆளான உபமன்யு என்ற மன்னன் தன் நாடு நகரங்களை இழந்தான். செய்வது அறியாமல் திண்டாடிய உபமன்யுதன் சாபம் தீர தனக்கு சாபம் அளித்த துர்வாச முனிவரிடமே சரண் அடைந்து சாபம் தீர வழி வேண்டினார். துர்வாச முனிவர் உபமன்யு வின் சாபம் தீர அன்னதானம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதன்படி அன்னதானம் செய்ய கோவிலடி பகுதியில் தங்கியிருந்து அன்னதானம் செய்து வந்தார். அன்னதானம் செய்து வந்த ஒரு நாளில் வயதான அந்தணர் ஒருவர் மன்னன்முன் தோன்றி அன்னம் கேட்டார். தயாரித்து இருந்த உணவு அனைத்தையும் ஒருசேர உண்ட முதியவர் மீண்டும் உணவு கேட்டார்.

இதை கண்டு வியப்படைந்த மன்னர் முதியவரிடம் மன்னிப்பு கேட்டு தங்கள் பசியாற இன்னும் என்ன வேண்டும் என்று கேட்க. முதியவர் ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று கேட்டார். அப்போது தான் வந்திருக்கும் முதியவர் பெருமாளே என்று எண்ணி விரைந்து அப்பம் தயாரித்து குடத்தில் இட்டு முதியவரிடம் அளித்தார். அப்பம் நிரம்பிய குடத்தை உபமன்யுவிடம் இருந்து பெற்ற முதியவர் தன் உண்மையான உருவத்தை காட்டினார். இதனால் உபமன்யு சாபம் நீங்கியது. இந்த அற்புதம் நிகழ்ந்த இந்த இடமே கோவிலடி ஆகும்.

#அப்பக்குடத்தான்:

உபமன்யு மன்னனிடம் இருந்து அப்பம் பெற்றதால் கோவிலடி திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாள் அப்பக் குடத்தான் என்று அழைக்கப்படு கிறார்.
மூலஸ்தானத் தில் வலது கரத்தில் அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் புஜங்க சயனத்தில் மேல்நோக்கி உள்ளார் அப்பக்குடத்தான். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முந்தி அடியெடுத்து வைத்த தலம் என்பதால் கோவிலடி என்று பெயர் வழங்கப்படு வதாகவும் கூறப் படுகிறது. புராணங்களில் திருப்பேர்நகர் என்று அழைக்கப்பட்டு வரும் இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு தினமும் அப்பம் செய்து நைவேத்தியம் செய்யப்பட்டு வருகிறது.

கோவிலடி பெருமாளுக்கு திருமண தடை உள்ளவர்கள்இரண்டு துளசி மாலையை கொண்டு வந்து பெருமாளுக்கு சாத்தி வழிபட்டு ஒரு மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். அப்பக்குடத்தான் சேவடி யில் பூமிதேவி தவம் செய்து கொண்டிருப்பதால் நிலம் தொடர்பாக தீராத பிரச்சினைகள் உள்ள வர்கள் கோவிலடிக்கு வந்து பூஜை செய்து வழிபட்டால் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை.

நோய் வாய்ப்பட்டவர்கள் மூன்று சனிக்கிழமைகள் கோவிலடி பெருமாள் கோவிலுக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட உடல் நலம் பெறுவார்கள். தங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நிலை காரணமாக நிதி நெருக்கடி மற்றும் கணவன்- மனைவி களுக்கிடையே மன மாச்சர்யம் உள்ள தம்பதிகள் வெள்ளிக் கிழமைகளிலும். திருவோண நட்சத்திர நாளிலும் கோவிலடிக்கு வந்து பெருமாள் மற்றும் தாயார் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட தோஷம் நீங்கி ஏற்றம் பெறுவார்கள்.

இத்திருக் கோவிலில் குழந்தை பேறு இல்லாத தம்பதியர் சந்தான கோபால கிருஷ்ணனுக்கு வளர்பிறை நாட்களில் கற்கண்டு நைவேத்யம் செய்து 10 குழந்தைகளுக்கு வழங்கி விட்டு தாங்களும் சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும். கோவிலடி திருக்கோவிலில் மூலவர் அப்பக்குடத் தான். தாயார் கமலவள்ளி தாயார். இத்திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ராபத்து நாட்கள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி நாளில் சுவாமி பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார். பங்குனி மாதத்தில் பெரிய தேரில் பெருமாள் வீதியுலா வருவார். இத்திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினமும் அன்ன தானம் நடைபெறுகிறது.

இந்தத் திவ்ய தேசத்திலிருந்து தான், நம்மாழ்வார் மோட்சத்திற்குப் போனதாகச் சொல்வார்கள். இக்கோயிலில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ் வார்கள், கருடன், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. வைகுண்ட ஏகாதசி விழாவில் 10- நாட்களும் கலந்து கொள்பவர்களுக்கு மோட்சம் உண்டாகும்.

*புரட்டாசி மாத வழிபாடுகள்:

கோவிலடி அப்பக்குடத்தான் கோவிலில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமானதாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவார். நவராத்திரி விழாவில் 9 நாட்களும் கமலவள்ளி தாயார் கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விஜயதசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். இக்கோவிலில் அப்பம் நைவேத்யமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தலச்சிறப்பு
இந்த கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் 8 வது திருத்தலம் ஆகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற பெருமாள் வாசம் செய்யும் திருத்தலங்கள் “திவ்ய தேசங்கள்” என்றும், “திருப்பதிகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. உபரிசிரவசுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு “அப்பக்குடத்தான்” என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலதுகையில் ஒரு அப்பக்குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம்.

பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். பெருமாளுக்கு முன்பே ஸ்ரீதேவி எழுந்தருளிய தலம், நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ள தலம், மார்க்கண்டேயனுக்கு பெருமாள் அருளிய தலம், எனப் பல பெருமைகளை உடைய திவ்ய தேசம், தற்போது “கோயிலடி” என அழைக்கப்படும் திருப்பேர் நகர் ஆகும்.

நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம் செய்துவிட்டு இத்தலத்திலேயே மோட்சம் அடைந்தார் என்று நம்பப்படுகிறது. எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு “வைகுண்ட வாசம் நிச்சயம்” என்பது ஐதீகம். ஐந்து ஸ்ரீரங்கங்களுள் இதுவும் ஒன்று. அதாவது, பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பஞ்ச ரங்க தலங்களில் இது இரண்டாவது தலமாக விளங்கி வருகிறது. இந்த பஞ்ச ரங்க தலங்கள், உபய காவிரி மத்தியில் அமைந்துள்ளன. அதாவது, பிரிந்து பாயும் இரு காவிரிக்கு மத்தியில் உள்ள தலங்களாகும்.

1. ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்),
2. அப்பால ரங்கம் – திருப்பேர்நகர் (கோவிலடி),
3. மத்திய ரங்கம் –ஸ்ரீரங்கம் (திருச்சி),
4. சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
5. பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) – திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).

அப்பால ரங்கம்” என்பதற்கு இரு பொருள்படும். ஸ்ரீரங்கத்திற்கு அடியில் இருப்பதால் அப்பால என்றும், ஸ்ரீரங்கத்தைவிடத் தொன்மையானது என்பதால் காலத்தால் அப்பால் இருக்கும் பழமையானது என்று பொருள்படும் அப்பால என்ற வார்த்தை கூறப்படுகிறது. ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளியதால், “ஆதி ரங்கம்” என்னும் பொருள்பட “அப்பால ரங்கம்” என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

இத்தலத்தில் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் அப்பக் குடத்தான் என்னும் அப்பால ரங்கநாதர், புஜங்க சயனத்தில் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். திருமகள் கேள்வன் என்பதற்கிணங்க பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள். தசாவதார ஒட்டியாணம் அணிந்து அருகில் மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்திருக்க வலது கையால் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார் பெருமாள். தனி சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உட்பிரகாரத்தில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள். இத்திருக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன் பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

*தல வரலாறு:

ஒரு காலத்தில் இந்த ஊர் பலாச மரங்கள் நிறைந்த புரசமரக் காடாக இருந்தது. இதனால் இத்தலம் பலாச வன ஷேத்திரம் என அழைக்கப்பட்டது. ஒரு முறை இந்தப் பகுதியை ஆண்டு வந்த உபரி சர்வசு என்ற மன்னன், வேட்டையாட காட்டிற்குச் சென்றான். அப்போது யானை ஒன்றை அம்பு கொண்டு தாக்கினான். அந்த யானையோ பயத்தில் வேதம் ஓதும் அந்தணர் ஒருவரை மிதித்துக் கொன்றுவிட்டது. அதனால் மன்னனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷ நிவர்த்திக்காக பெற துர்வாச முனிவரிடம் சென்று வேண்டினான்.

அவரோ, ‘பலாச வனத்தில் அமைந்துள்ள ரெங்கநாதர் கோவிலுக்குச் சென்று ‘ஓம் பத்மநாபாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து அன்னதானம் செய்தால் தோஷ நிவர்த்தியாகும்’ என்று அருளாசி கூறினார். அதன்படியே மன்னன் இந்த ஊரில் அரண்மனைக் கட்டி தினமும் அன்னதானம் செய்து வந்தான். அப்போது பெருமாள் அசரீரியாக, ‘மன்னா! நீ கார்த்திகை மாதம் துவாதசியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும்’ என்றார். உபரிசர்வசுவும் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தான்.

அப்போது பெருமாள், வயதான அந்தணர் வேடத்தில் வந்து உணவுக்கேட்டார். சமைத்திருந்த உணவெல்லாம் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் மன்னன். உடனடியாக உணவு தயார் செய்து தருவதாக கூறினான்.

ஆனால் அந்தணர் உருவில் இருந்த பெருமாளோ, ‘சமையல் செய்ய அதிக நேரம் ஆகும். எனக்கு பசி அதிகமாக உள்ளது. எனவே உடனடியாக அப்பம் செய்து கொடு’ என்றார்.

மன்னன் பக்தி சிரத்தையுடன் நெய்யினால் வெந்ததும், வெல்லம் கலந்ததும், அதிக ருசியுடன் தயாரித்த அப்பங்களை ஓர் குடம் நிறைய நிரப்பிக் கொண்டு அந்தணரிடம் கொடுத்தான். பேரானந்தம் அடைந்த பெருமாள், அப்பக் குடத்தில் வலது கரம் வைத்து ஆசி கூறிவிட்டு, மன்னனுக்கு திவ்ய தரிசனம் கொடுத்தார். இதையடுத்து மன்னனின் சாபமும் நீங்கியது.

இந்த நிகழ்வின் காரணமாகவே இத்தல பெருமாளுக்கு ‘அப்பக் குடத்தான்’ என்ற சிறப்பு பெயரும் வந்தது. இத்தல இறைவனுக்கு அப்பமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பெருமாள் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது. திருக்கோவில் ஒரு மேட்டின் மீது உள்ளது. 20 படிகள் ஏறித்தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். படிகள் ஏறும் போதே நடுவில் கொடி மரம் உள்ளது. ஆலய விமானத்தின் பெயர் இந்திர விமானம். தீர்த்தம் இந்திர புஷ்கரணி. தாயாரின் பெயர் இந்திராதேவி எனும் ஸ்ரீகமல வல்லி.

பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது. இக்குடத்திற்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு அதன்மேல் தட்டில் வைத்து அப்பம் நிவேதனம் செய்யப்படுவது தற்போதைய வழக்கமாக உள்ளது. மேலும் இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தனது ஒரு கரத்தால் மார்க்கண்டேயருக்கு ஆசி கூறுகிறார். திருக்கடையூரில் சிவபெருமானால் என்றும் 16 வயதுடன் இருக்க வரம் பெற்ற மார்க்கண்டேயன் இந்த யுகம் முடிந்ததும் மீண்டும் பிறவாமல், மோட்சநிலை அடைய வேண்டி இக்கோவிலுக்கு வந்து தவம் இருந்தார்.

பெருமாள் அவருக்கு மோட்ச நிலையை வழங்கினார். எனவே எமபயம் போக்கும் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். கோவில் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் சிறிய பிள்ளையார் சன்னிதி உள்ளது. சாபம் நீங்க இந்திரனுக்கு வழிகாட்டியதால் இவரை வழிகாட்டி விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.

நம்மாழ்வார்
நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அதன் பிறகு மோட்சம் பெற்றுவிட்டார். இத்தல அப்பக் குடத்தானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும், சாபவிமோசனம் பெறலாம்.

ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை காரணமாக கடுமையான நிதி நெருக்கடி மற்றும் தம்பதியினரிடையே ஒற்றுமையின்மை ஆகியவற்றினால் கஷ்டப்படும் அன்பா்கள் வெள்ளிக்கிழமைகளிலும் திருவோண நட்சத்திர நாள்களிலும் ஶ்ரீ அப்பக்குடத்தான் மற்றும் ஶ்ரீகமலவ ல்லித் தாயாா் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட தோஷம் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் நிலவும்.

ஶ்ரீமாா்க்கண்டேய மகரிஷிக்கு எமபயம் போக்கி அருளியது இத்தல எம்பெருமான் என்பதால் நோயின் தீவிரம் காரணமாக அவதியுறுபவா்கள் அல்லது அவா்களது உறவினா்கள் மூன்று சனிக்கிழமைகளில் இத் தலத்திற்கு வருகை தந்து நெய் தீபம் ஏற்றி வழிபட உடல் நலம் சீரடையும்.

“மாவலியின் வேள்வியில் மூவடி தா” என்று கேட்டு இத்தரணியை அளந்த எம்பெருமானின் திருவடி அருகில் பூமிதேவி தபஸ் செய்து கொண்டிருப்பதால் நிலம் தொடா்பான வழக்குகளில் சிக்கித் தவிப்பவா்கள் இத்தலத்திற்கு வந்து அரங்கனைப் பணிந்து வணங்கிட அவா்களது சிக்கல்கள் அகன்று சுமூக நிலை ஏற்படும்.

கோபியா்கள் கொஞ்சும் குழந்தை யாகவும் தோழனாகவும் விளங்கும் அஞ்சனவண்ணன், ஆயா்குலத் திலகம் கண்ணன் கோவிலடி திருத்தலத்தில் “சந்தான கோபால கிருஷ்ணனாக” அருள்பாலிக்கின்றாா். தன் குமுத வாயால் குவலயம் காட்டியருளிய கண்ணனின் தெய்வீக அழகில் நம் மனதைப் பறிகொடுத்து விடுகின்றோம்.

மழலைப் பேறு இல்லாத தம்பதியினா் சந்தான கோபால கிருஷ்ணனுக்கு வளா்பிறை நாட்களில் வெண்ணெய் மற்றும் கற்கண்டு நிவேதனம் செய்து, அதனைப் பத்து குழந்தைகளுக்குப் பிரசாதமாக வழங்கிய பின் மீதமுள்ள பிரசாதத்தை அருந்தி வர மழலை பாக்கியம் ஏற்படுகின்றது என்பதைப் பலன் பெற்ற அன்பா்கள் தொிவிக்கின்றனா்.

அப்பக்குடத்தானைப் பாடிய ஆழ்வாா்கள்!

சா்வ மந்திரங்களாகவும், மந்திரங் களின் பலனாகவும் இருக்கின்ற ஶ்ரீமந் நாராயணனிடம் ஆத்ம சமா்ப்பணம் செய்த ஆழ்வாா்கள், அவரது அவதாரப் பெருமைகளை பக்திரசம் சொட்டும் பாமாலைகளால் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்தனா்.

அரங்கனைப் பாடும் வாயால் அரசனைப் பாடமறுத்த திருமழிசை யாழ்வாரும், விஷ்வக்சேனரின் அம்ச மாக கலியுகம் பிறந்த உடன் அவதரித்த நம்மாழ்வாரும், குன்றமேந்திக் குவலயம் காத்த கண்ணனின் மழலை அமுதத்தைப் பருகி தன்னை கண்ணனின் தாயான யசோதையாகவே நினைத்து மகிழ்ந்த பெரியாழ்வாரும், திருமாலின் திருக்கரத்தில் அணி செய்யும் “சாா்ங்கம்” என்னும் வில்லின் அம்சமாக அவதரித்து நலம் தரும் சொல்லை திருமந்திரமாக அளித்த திருமங்கையாழ்வாரும், அப்பக்குடத்தானை 33 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்துள்ளனா்.

புளியமரத்து நன்னிழலில் அமா்ந்து ஞானத்தைப் போதித்த “நம்மாழ்வாரிடம்” 108 திவ்யதேச எம்பெருமான்களும் எழுந்தருளி, சேவை சாதித்து, திருவாய்மொழிகளை அவரிடமிருந்து கேட்டுப் பெற்றனா் என்பது வைணவம் கூறும் வரலாறு.

அவ்வாறு திருப்போ் நகரில் (கோவிலடி) அருள்புரியும் அப்பக்கு டத்தானும், திருமாலிருஞ்சோலை கள்ளழகரும், நம்மாழ்வாருக்கு ஒரு சேர சேவை சாதிக்கத் திருவுள்ளம் கொண்டபோது, நம்மாழ்வாா் யாரைப் பாடுவது எனத் திகைக்க, அப்பக் குடத்தான் ஆழ்வாரிடம் உரிமையோடு தன்னைப் பாடவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுள்ளாா்.

“பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ் உலகு உண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே”

−என்று உள்ளம் உருக மங்களாசாசனம் செய்து மகிழ்ந்துள்ளாா் வேதம் தமிழ் செய்த மாறன்.

ஆழ்வாா்களிடத்தில் அப்படி ஒரு உரிமை−அன்பு−பாசம் எம்பெருமானுக்கு! அடியவா்களான ஆழ்வாா்களின் மீது பக்தவத்ஸலன் கொண்ட வாத்ஸல்யத்தின் காரணத்தால் பக்திப் பரவசமூட்டும் பைந்தமிழ்ப் பாசுரங்கள் நமக்குக் கிடைத்தன.

ஶ்ரீஅப்பக்குடத்தானைப் பாடிய திருமங்கையாழ்வாா், திருவெள்ளறைப் பெருமானைத் தரிசிக்கச் சென்றுள்ளாா். அப்பாலரங்கனின் நினைவலை களிலிருந்து மீள முடியாத ஆழ்வாா் திருவெள்ளறைப் பாசுரத்திலும் திருப்போ்நகா் என்ற கோவிலடியில் அருள்பாலிக்கும் எம்பெருமானை நினைத்துப் பாசுரம் பாடியுள்ளாா்.

“துளக்கமில் சுடரை, அவுணனுடல்-
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்-
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே”

−திருமங்கையாழ்வாா்

"போமானை யெய்து பொருமானைக் கொம்புபறித்
தாமானை மேய்த்துவந்த வம்மானைத்--தாமச்
செழுந்திருப்பே ரானைச் சிறுகாலைச் சிந்தித்
தெழுந்திருப்பேற் குண்டோ விடர். (8) 
   - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

*கோவிலடி தலத்தின் பெருமைகள்!

நம்மாழ்வாா் கோவிலடி தலத்தில் அருள்பாலிக்கும் அப்பக் குடத்தானைப் பாடிய பின் நேராக திருநாட்டுக்கு எழுந்தருளினாா். இதனால் நம்மாழ்வாரால் கடைசியாகப் பாடப்பெற்ற திருத்தலம் இத்தலம் தான். அதனால் கோவிலடி தலத்தின் அரங்கனே நம்மாழ்வாரை வைகுண்ட பதவி அளித்து அவரை அழைத்துச் சென்றாா் என்பது ஐதீகமாக உள்ளது.

ஶ்ரீரெங்கராஜசரிதபாணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய சிறப்புகள் கூறப்பட்டுள்ளது.

பூமித்தாய் பச்சை நிறப் பட்டு உடுத்திய வண்ணம் எங்கும் பசுமை போா்த்திக் காணப்படும் காவிரி நதியின் தீரத்தில் அமைந்துள்ள இத் தலத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சூழலை தனது பாசுரங்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளாா் திருமங்கையாழ்வாா்.

காவிரிக் கரையின் மேடான பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலை தூரத்திலிருந்து பாா்க்கும் போது பேரழகுடன் திகழ்வது கண்ணுக்கு இனிய திருக்காட்சியாகும்.

இந்திரா தேவி, கமலவல்லி நாச்சியாா் என இரு தாயாா்கள் இத்தல த்தில் அருள்பாலிக்கின்றனா். இந்திரா தேவி பூமி தேவியாக பெருமானின் கருவறையில் தபஸ் செய்யும் கோலத்தில் எழுந்தருளியுள்ளாா். கமலவல்லித் தாயாா் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளாா். இத் தலத்தின் புனித தீா்த்தம் இந்திர தீா்த்தம் என வழங்கப்படுகின்றது.

பராசர மகரிஷியும் மாா்க்கண்டேய மகரிஷியும் உபமன்யு மன்னனும் அப்பக்குடத்தானின் தரிசனம் கண்டு மகிழ்ந்துள்ளனா்.

*திருவிழாக்கள்:

புரட்டாசி மாதம் கிருஷ்ணனுக்கு உரியடி உற்சவம், நவராத்திரி, மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி உத்திர உற்சவத்தில் திருத்தேர் விழா, தீர்த்தவாரி தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.

எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபத்தில் இருந்து விமோசனம் பெற, தீராத பிரச்சினைகள் விட்டுச் செல்ல, குழந்தை பாக்கியம் பெற, திருமண வரம் அருளப் பெற இத்தல பெருமாளை வழிபடுவது வழக்கம். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர்.

காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

*அமைவிடம்: 

திருச்சியிலிருந்து 25 கி.மீ. தூரத் திலும் கல்லணையிலிருந்து 8 கி.மீ. தூரத்திலும் உள்ளது கோவிலடி திருக்கோயில். தஞ்சாவூரிலிருந்து
திருக்காட்டுப்பள்ளி சென்று அங்கிருந்து கல்லணை செல்லும் பேருந்திலும் கோவிலடி திருத்தலம் செல்லலாம்.

தஞ்சாவூரில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது.

ஆபத்துக் காலங்களில் மட்டுமல் லாது அனைத்து நேரங்களிலும் அப் பாலரங்கனின் திருவடிச் சிந்தனை அரும்பெரும் துணையாக நம்மைக் காத்து நிற்கும். நான்கு ஆழ்வாராதிகள் பாடித் துதித்த இப்பெருமானின் திருச்சந்நிதிக்கு நமது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வணங்க வேண்டும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஐப்பசி_மாதம்_சிறப்புக்கள்..

 ஐப்பசி_மாதம்_சிறப்புக்கள்..! 
ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் நிகழ்கிறது. இம்மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. 

கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

 🌹தீபாவளி_பண்டிகை! தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 

இப்பண்டிகை வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது. இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர். புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். 

உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர். புதுமணத்தம்பதியர் தலைதீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.

 கந்த_சஷ்டி_திருவிழா ! இத்திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.

 நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து வரபில்லா ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்தவிரதத்தினை ஒப்பரும் விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது. எல்லா முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இவ்விரதமுறையில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர். ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். 

இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்கின்றனர். இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த சஷ்டி குறித்த பழமொழியாகும். 

 🌹அன்னாபிஷேகம் ! ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது. தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது. 

வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதியில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது. ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்னமானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது. 

அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்று கருதப்படுகிறது. அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட உணவு தானியங்கள் பெருகி பசிப்பிணி ஏற்படாது.

  🌹துலா_ஸ்நானம் ! ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஏனைய புண்ணிய நதிகள் கலப்பதால் காவிரியில் இம்மாதத்தில் நீராடுவது துலா ஸ்நானம் என்றழைக்கப்படுகிறது. துலா ஸ்நானம் நிகழ்வு, ஸ்ரீரங்கத்திலும் மயிலாடுதுறையிலும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

காவிரியில் துலா ஸ்நானம் செய்வதால் நம்முடைய மற்றும் நம்முடைய முன்னோர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அழகு, ஆரோக்கியம், உடல்நலம், செல்வம், கல்வி, வலிமை, குழந்தைப்பேறு ஆகியவற்றை துலா ஸ்நானம் தருவதாகக் கருதப்படுகிறது. ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையில் காவிரி நீராடல் கடைமுழுக்கு என்றழைக்கப்படுகிறது.  

🌹 ! ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. அன்றைய தினம் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களையும், துணிகளையும், தங்கநகைகளையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமிகுபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

  🌹யம_தீபம் ! ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோச வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர். 

 🌹தன்வந்திரி_ஜெயந்தி ! ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவான் தோன்றினார். எனவே திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவானை வழிபட நோய் நொடி இல்லா ஆரோக்கிய வாழ்வு கிட்டும். 

 🌹யமத்_துவிதியை ! ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒற்றுமை ஏற்படுவதுடன் சகோதர சகோதரிகள் நீடித்த ஆயுள் கிடைக்கப் பெறுவர். சகோதரிகள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர். 

 🌹கோவர்தன_தினம் ! ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று கிருஷ்ண பகவான் கோகுல மக்களை கடும்மழை மற்றும் புயலிலிருந்து காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார். கோவர்த்தன கிருஷ்ணரை வழிபட நம்முடைய கவலைகள் மற்றும் துயரங்கள் நீங்கி வாழ்வில் வசந்தம் வீசும்.  

🌹 கோவத்சதுவாதசி ! ஐப்பசிமாதத்தில் தேய்பிறை துவாதசி கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து வழிபாடு செய்ய வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்சியுடன் இருப்பார்கள். 

 முருகன்_சுக்ரவார_விரதம் ! முருகப்பெருமானுக்கு நாள், நட்சத்திரம், திதி ஆகிய மூன்று முறைகளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாள் விரதம் என்பது வெள்ளிக்கிழமை தோறும் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். இவ்விரதம் முருகன் சுக்ரவார விரதம் என்றழைக்கப்படுகிறது. நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை விரதத்தையும், திதி விரதம் சஷ்டி விரதத்தையும் குறிக்கும். முருகன் சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது. 

இவ்விரத முறையானது பகலில் ஒரு வேளை உணவு உண்டும், இரவில் பழம் உண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையால் துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும். 

 🌹கேதார_கௌரி_விரதம் ! இவ்விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி (விஜயதசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின்பற்றியே உமையம்மை சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். இதனால் இறைவன் மாதொருபாகன், அர்த்தநாரீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். 

இவ்விரத முறையில் அதிரசம் என்ற பொருள் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இவ்வழிபாட்டில் நோன்பு கயிறு வைத்து வழிபடப்பட்டு இறுதியில் எல்லோர் கையிலும் அணிவிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என எல்லோரும் இவ்விரதமுறையைக் கடைப்பிடிக்கின்றனர். 

ஒரு சிலர் இவ்விரதத்தை கடைசி ஒன்பது,ஏழு, ஐந்து, மூன்று நாட்களும், ஒரு சிலர் ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் கடைப்பிடிக்கின்றனர். கோவில்களிலும், வீடுகளிலும் கேதார கௌரி வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்விரதமுறையை மேற்கொள்வதால் நீண்ட நாட்கள் தம்பதியர் ஒற்றுமையாக வாழ்தல், நல்ல வாழ்கைத்துணை, நற்புத்திரர், நல்ல எண்ணங்கள் ஈடேறுதல் ஆகியவை கிடைக்கும். 

 🌹பாபாங்குசா_ஏகாதசி ! ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது பாவங்களைப் போக்கும் கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும். நோய், பசிப்பிணி நீங்கும். நிம்மதி நிலைக்கும். 

 🌹இந்திரா_ஏகாதசி ! ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி இந்திரா என்று அழைக்கப்படுகிறது. இது மூதாதையர்களுக்கு நற்கதி அளிக்கும். இவ்விரத நாளில் பால் அருந்தக் கூடாது. ஐப்பசி மாதத்தை சிறப்பு செய்தவர்கள் ! இம்மாதத்தில் திருமூல நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார், இடங்கழி நாயனார், சக்தி நாயனார், பூசலார் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.

 பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களின் ஜெயந்தியும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

சகல ஐஸ்வர்யங்களையும் தரும் ஐப்பசி மாதத்தில் விரதமுறையை மேற்கொண்டு பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வோம்.!!

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, October 15, 2025

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில் அதிசயம்.

 பத்மனாபசாமி #கோவில் 
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில் உலகப் புகழ்பெற்றதாகும். மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த இந்த கோவிலை பற்றிய ஒவ்வொரு விஷயமும் அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பதாக உள்ளது. அதே போல் தற்போது வரை இந்த கோவிலை சுற்றி உள்ள மர்மங்களும் விலகாமல் உள்ளன. பெரும் அனந்த சயன கோலத்தில் காட்சி தரும் இந்த கோவிலுக்கு திருவிதாங்கூர் மன்னர் தனது ராஜ்யம், சொத்துக்கள் அனைத்தையும் ஒப்படைத்ததாக புராணங்கள் சொல்கின்றன. பத்மநாப சுவாமிக்கு 21 குண்டுகள் முழங்க இந்திய ராணுவத்தால் மரியாதை செலுத்தப்பட்டு வந்த வழக்கம் பிரிட்டிஷ் காலம் முதல் இந்தியாவில் மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்படும் வரை நடைமுறையில் இருந்ததாக வரலாற்று ஆதாரம்கள் சொல்கிறது. உலகிலேயே பணக்கார கோவில் என சொல்லப்படும் இந்த கோவிலுக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பது துல்லியமாக இதுவரை யாருக்கும் தெரியாது. திறக்கப்படாமல் இருக்கும் அந்த மர்ம ரகசிய அறைக்கு பின்னால் என்ன இருக்கிறது? ஏன் அந்த அறை திறக்க முடியாததாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். கேரளாதிருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது மிகப் பழமையான பத்மநாப சுவாமி கோவில். இக்கோவில் கி.மு.500 ல் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாவிஷ்ணு போற்றப்படுகிறார். இக்கோவில் கேரளா மற்றும் திராவிட கட்டிடக் கலை இரண்டும் கலந்ததாக அமைக்கப்பட்டதாகும். இக்கோவில் மகாவிஷ்ணுவின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. திவ்ய தேசங்களிலேயே மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகவும், விஷ்ணு குடிகொண்டிருக்கும் கோவில்களில் மிகவும் புனித தலமாகவும் இக்கோவில் சொல்லப்படுகிறது ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்ய தேசங்களில் பத்மநாப சுவாமி கோவிலும் ஒன்று. இக்கோவில் அனந்த பத்மநாப சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இவரின் பெயராலேயே இந்த ஊர் திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என அழைக்கப்படுகிறது. பாம்பின் மீது சயனித்த கோலத்தில் பத்மநாப சுவாமி காட்சி தருகிறார். மூலவரின் திருமேனி 18 அடி நீளத்தில் சாளகிராமத்தால் ஆனதாகும். பத்மநாபசுவாமி கோவில் தான் உலகிலேயே பணக்கார கோவிலாக விளங்குகிறது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு என்ன என்பது சரியாக இதுவரை யாருக்கும் தெரியாது. இந்த கோவிலில் திறக்கப்படாமல் இருக்கும் 6வது ரகசிய அறைக்கு பின்னால் இருக்கும் மர்மம் பற்றியும், பலரும் அறியாத அரிய தகவல்களையும் இங்கு பார்க்கலாம்
​திறக்கப்படாத 6வது அறையின் மர்மம் :
* பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ள ரகசிய அறைகள் பற்றி பல காலமாக பல கதைகள் சொல்லப்பட்டு வருகிறது. இந்த கோவில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டால் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்கோவிலில் மொத்தம் 6 ரகசிய அறைகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட் தலையிட்ட பிறகு தான் இக்கோவிலில் உள்ள ரகசிய அறைகள் பற்றியும், அதில் பாதுகாக்கப்பட்டு வரும் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பற்றியும் அனைவருக்கும் தெரிய வந்தது. அந்த குழு அளித்த முதல் அறிக்கையின் படி பத்மநாப சுவாமி கோவிலின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆகும். பத்மநாபசுவாமி கோவிலில் Aமுதல் Fவரை மொத்தம் 6 அறைகள் உள்ளன. இந்த அறைகள் பூமிக்கு அடியில் 5 அடி ஆழத்தில் உள்ளன. இதுவரை 1990 ம் ஆண்டில் 2 முறையும், 2002ம் ஆண்டு 5 முறைகளும் மட்டுமே இந்த ரகசிய பெட்டகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் Bஅறை மட்டும் இதுவரை திறக்கப்பட்டது கிடையாது. இப்போது வரை இதற்கு பின்னால் இருக்கும் மர்மம் விலகாமல் உள்ளது.
* இதுவரை திறக்கப்பட்ட 5 அறைகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்க காசுகள் உள்ளன. அதாவது 1700 தங்க காசுகள் உள்ளன. இவை 7 கிலோ மதிப்புடையதாகும். இது தவிர நெப்போலியன் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட 18 தங்க நாணயங்களும் இதில் உள்ளன. விலைமதிப்பற்ற கற்கள் பட்டுத்துணியில் சுற்றி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர 1000 கிலோ தங்கம், நாணய வடிவில் உள்ளன
* Aஅறையில் 2.5 கிலோ தங்கத்தால் ஆன 9 அடி உயர தங்க நெக்லெஸ், தங்க பதக்கம், தங்க பூணால், வேலைப்பாடுகள் நிறைந்த பலவிதமான தங்க, வைர நகைகள் உள்ளன. இந்த ஆபரணங்கள் முழுவதும் பண்டைய கால பெட்டிகள், மண் பானைகள், செப்பு குடங்கள் உள்ளிட்டவற்றில் வைக்கப்ப ட்டுள்ளன.சிறிய தங்கத்தால் ஆன யானை, மூன்றரை அடி உயர மகா விஷ்ணு சிலை உள்ளது. இந்த சிலை முற்றிலும் தங்கம், வைரம், ரூபி கற்றகளாலும், நூற்றுக்கக்கான விலைமதிப்பற்ற கற்களாலும் ஆனதாகும். 1772 சவரன் நகைகள் கார்த்திகதிருநல்ராம வர்மா மன்னனின் ராஜ முத்திரை பதிக்கப்பட்டதாக உள்ளன.
* A அறையில் விலை மதிப்பற்றி தங்க, வைர ஆபரணங்கள் இருப்பதாகவும், C மற்றும் D அறைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும், E மற்றும் F அறைகளில் கோவில் சடங்குகளுக்கு தேவையான பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
* இதுவரை திறக்கப்படாமல் இருக்கும் B அறையின் சுவர் தங்கத்தால் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்த அறையை திறப்பதற்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இந்த அறையை திறந்தால் கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வருவதாகவும், நாடே பெரும் சாபத்திற்கு ஆளாக வேண்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது. Bஅறை மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த அறைக்கு செல்லும் வழியில் இரண்டு பெரிய பாம்புகள் செதுக்கப்பட்டுள்ளன. யாரும் இதற்கு அருகில் வரக் கூடாது என்பதை எச்சரிக்கும் அடையாளங்கள் ஆகும் 
சாபத்தால் மூடப்பட்டுள்ள மர்ம அறை :
* இந்த பி அறை, மன்னர் மார்த்தாண்ட வர்மன் காலத்தில் தலைசிறந்த வேத மந்திரங்கள் தெரிந்த புரோகிதர்களால் நாக பாச மந்திரங்கள் ஓதி பாதுகாக்கப்பட்டு, மூடி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தலைசிறந்த புரோகிதர்களின் உதவியுடன் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஓதி மட்டுமே இந்த சாபத்தை நீக்க முடியும் என சொல்லப்படுகிறது. சாபத்தின் காரணமாகவே இந்த அறையின் கதவு மூடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
* 1930 ம் ஆண்டு இந்த ரகசிய அறைகள் பற்றியும், பி அறையில் இருக்கும் சாபம் பற்றியும் பல சந்தேகக் கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது சந்தேகக்காரர்கள் சிலர் B அறையை உடைத்து திறக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் மர்மமான முறையில் பாம்புகளால் தாக்கப்பட்டதாகவும், பிறகு அந்த பாம்புகள் எங்கு போயின என தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 
மர்ம கதவை திறந்தால் உலகம் அழியுமா?
*தற்போது பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறைகளை திறக்க வேண்டும் என சுப்ரீம் கோட்டில் மனு அளித்த சுந்தர்ராஜன், இந்த ரகசிய அறைகள் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த அறைகள் திறக்கப்படுவதற்கு காரணமாக இருந்த மற்றொருவரின் தாய் இறந்து போனார். இந்த சம்பவங்கள், அந்த அறைக்கு இருக்கும் சாபம் உண்மை தானோ என்ற ராஜ குடும்பத்தினர் உள்ளிட்டோரின் நம்பிக்கைகளை அதிகரிக்க செய்துள்ளன.
* நூறு ஆண்டுகளுக்கு முன் கோவிலின் புரோகிதர்கள் சிலர் இந்த மர்ம அறையின் கதையை திறக்க முயன்றுள்ளனர். இந்த அறையை திறந்தால் நாட்டில் அப்போது இருந்த பஞ்சத்தை தீர்த்து நாட்டை காப்பாற்ற முடியும் என அவர்கள் திறக்க சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் இந்த அறையை நெருங்கி செல்ல செல்ல கதவுக்கு பின்னால் கடல் அறைகள் ஆக்ரோஷமாக பொங்கும் சத்தம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த அறையின் கதவு அரபிக் கடலுடன் தொடர்புடையதாக உள்ளதாக புராண வரலாற்று ஆதாரம்கள் சொல்கின்றன. இந்த மர்ம அறையின் கதவை திறந்தால் உலகம் அழியும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?



ஜீவசமாதிகளுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?
அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பதன் காரணம் என்ன?

சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்?

ஆன்மீகம் என்னும் கடலை கடக்க நினைக்கும் அணைத்து மனிதர்களுக்கும் மனதில் கட்டாயம் இந்த கேள்விகள் எழுந்தே தீரும்.

கேள்வி 1:

சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கு
ம் என்ன தொடர்பு? 

அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன?

யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள் அல்ல.... ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள்.

அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்.... குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை.

கேள்வி 2:

சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்?

ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்..... 

சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள். ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான ஆத்மாவாகதான் பிறக்கிறோம். 

ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை செய்கிறோம், ஒவ்வொரு நாளும் பாவத்தின் கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம்.

ஆக ஜீவசமாதி என்பது உயிர் என்ற ஆத்மாவானது, ஒரு உடலை தேர்ந்தெடுத்து அதில் சஞ்சரிக்கும் போது, எவ்வளவு தூய்மையாக இருந்ததோ, அதே தூய்மையான நிலையை மீண்டும் அடைந்து பரமாத்வாவிடம் ஒருங்கிணைவது என்று அர்த்தம். இதை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தியானம், தவம், கடுமையான விரதங்கள், என கடுமையான மனநிலைகளை கடந்து தான் இந்த ஜீவ சமாதியை நம்மால் அடையமுடியும்.

ஒருவர் ஜீவசமாதி ஆகும் போது அவரின் உடல் அழுகுவது இல்லை. மாறாக ஜீவனற்ற அந்த உடல் சுருங்கி, வற்றி போகும். கெட்டு போகாது இது எப்படி என்ற கேள்வி வரலாம்...... 

விடை காயகல்ப்பம். காயகல்ப்பம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று நாம் உட்கொள்ளுவது அதாவது மூலிகை தயாரிப்பு. மற்றொன்று சுவாச பயிற்சி. இங்கே ஜீவசம்மதி அடைபவர்கள் இரண்டாவது வகை காயகல்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த சுவாச பயிற்சியின் படி, ஒருவர் மூச்சை அடக்கி, மூச்சு விடாமல் உயிர் வாழ முடியும். இதய செயல்பாடு, மூளை செயல்பாடு, மன ஓட்டங்கள் என அனைத்தையும் நிறுத்திவைத்து ஆன்மாவை மட்டும் விழித்திருக்க செய்வார்கள். உடலில் ஆன்மா இருக்கும் ஆனால் மூளை செயல்பாடு, இதயத்துடிப்பு இல்லாமல் போவதால், உயிரற்ற உடலை போல் தெரியும். இவ்வாறு ஜீவசமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்று அகத்தியர் கூறுகிறார்.

பொதுவாக ஜீவசமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள். அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் (vibrations) அந்த ஜீவசமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில் எதிரொலித்து கொண்டே இருக்கும். நாம் அவற்றை வலம்வரும் போது, அந்த அதிர்வுகலானது நம் மனதையும் தாக்கி, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்துவிடும் .........

பல மகான்கள் ஜீவசமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம்.

மறுபுறம் சாதாரண மனிதர்களின் சமாதி என்பது இப்படி இல்லை. அவர்களின் உடல் அழுகிவிடும். எந்த ஒரு அதிர்வுகளும் இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இந்த சூட்சமங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் மகான்கள் ஆகிறார்கள். சூட்சமத்தை பயன்படுத்தி ஜீவசமாதி அடைகிறார்கள்.


ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...