Sunday, March 9, 2025

சுயம்புவாய் தோன்றிய கோனேரிராஜபுரம் நடராஜர்!

சுயம்புவாய் தோன்றிய கோனேரிராஜபுரம் நடராஜர்!
கும்பகோணம்- காரைக்கால் சாலையில், எஸ்.புதூர் எனும் ஊருக்கு அருகில் உள்ளது கோனேரிராஜபுரம். இங்கு ஸ்ரீநடராஜர் அழகுற கோயில் கொண்டிருக்கிறார். அதுவும் எப்படி?

கும்பகோணம்- காரைக்கால் சாலையில், எஸ்.புதூர் எனும் ஊருக்கு அருகில் உள்ளது கோனேரிராஜபுரம். 

எட்டு அடி உயரம்... கைரேகைகள், தேமல், மச்சம்... என மனிதருக்கே உரிய அங்க அடையாளங்களுடன் திகழும் விக்கிரகத் திருமேனி... நான்கு திருக்கரங்களும் விரிசடையுமாக, தரிசிக்கும் நம்மை வியக்க வைக்கிறார் கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜபெருமான்!

சோழ தேசமெங்கும் பல ஆலயங்களில் கலையம்சத்துடன்கூடிய தெய்வ விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து வந்தார்கள் சக்கரவர்த்தி கண்டராதித்தரும் அவருடைய மனைவி செம்பியன்மாதேவியும். கோனேரிராஜபுரம் கோயிலிலும் ஸ்ரீநடராஜ சிற்பம் அமைக்க தீர்மானித்து, ஸ்தபதி ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.
நாட்கள் நகர்ந்தன... எவ்வளவு முயன்றும் சிலை முழுமையடையாமல் பணி இழுத்துக் கொண்டே போக, செய்வதறியாமல் திகைத்தார் ஸ்தபதி. பணி தாமதமாவதை அறிந்த மன்னன், ஸ்தபதியை கடிந்துகொண்டான். ‘நாளைக்குள் சிலை தயாராகவில்லை எனில் தண்டனை நிச்சயம்‘ என்று எச்சரித்தான்.

ஸ்தபதியும் அவருடைய மனைவியும் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது, அவர்களது இல்லத்தைத் தேடி வந்த வயதான கணவனும் மனைவியும் ‘’உண்ணவோ பருகவோ ஏதேனும் கிடைக்குமா’’ என்று கேட்டனர். ஸ்தபதியோ விரக்தியுடன், ‘’காய்ச்சி உருக்கிய உலோகக் குழம்பைத் தவிர வேறு எதுவும் இல்லை’’ என்றான் விரக்தியாக! அத்துடன் தனது நிலையையும் விவரித்தான்.
இதைக்கேட்ட அந்தத் தம்பதி, சிலை வடிக்க வைத்திருந்த உலோகக் குழம்பை அப்படியே எடுத்துப் பருகினர். மறுகணம்... அங்கே இரண்டு விக்கிரகங்களாக மாறினர். ஆமாம்! ஸ்தபதி எதிர்பார்த்தது போன்றே அழகிய விக்கிரகங்களாக காட்சி தந்தனர். வந்தது சிவ பார்வதி என்பதை அறிந்து சிலிர்த்தான் ஸ்தபதி.

விக்கிரகங்கள் தயார் என்பதை அறிந்த மன்னன், அவற்றைக் காண ஓடோடி வந்தான். அவனிடம், விக்கிரகங்கள் சுயம்புவாகத் தோன்றியதை ஸ்தபதி விவரிக்க... அதை நம்பாத மன்னன், உளியால் விக்கிரகத்தைத் தட்டினான். மறுகணம் விக்கிரகத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. மன்னனின் கை-கால்கள் செயலிழந்தன. தவறை உணர்ந்த மன்னன், ஆலயம் சென்று வலம் வந்து இறைவனை வேண்ட, அவனது அங்கங்கள் குணம் பெற்றன.

கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் உருவானது இப்படித்தான். தானே தோன்றியவர் என்பதால், தம்முடைய மேனியில், மனிதனுக்கு உள்ளது போன்றே ரேகைகள், மச்சங்களுடன் திகழ்கிறாராம்! ருத்ராட்ச பந்தலின் கீழ், ஸ்வாமி தெற்கு நோக்கி அருள, இவரை தரிசனம் செய்தபடி நால்வர் பெருமக்களும் அற்புதமாகக் காட்சி தருகின்றனர்.

ஆனித் திருமஞ்சனத் திருநாளில் இங்கு வந்து ஸ்ரீநடராஜரையும் ஆலயத்தின் மூலவர் ஸ்ரீபூமிநாதரையும் வழிபடுவது வளம் தரும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.

Saturday, March 8, 2025

பாரிஜாதவனேஸ்வரர் திிருக்களர் திருவாரூர்

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்,
திருக்களர் - 614 720. 
திருவாரூர் மாவட்டம்     
*தேவாரப் பாடல் பெற்ற தலம். பாடியவர்:
திருஞானசம்பந்தர்                       

*மூலவர்:
பாரிஜாதவனேசுவரர், 
களர் முளை நாதர்

*தாயார்:
 அமுதவல்லியம்மை

*தல விருட்சம்:
பாரிஜாதம் (பவளமல்லி)

*தீர்த்தம்:
துர்வாசர் தீர்த்தம், பிரமதீர்த்தம், (சிந்தாமணி தீர்த்தம்) ருத்திர தீர்த்தம், ஞானதீர்த்தம்

*இத்தலத்தில் வழிபட்டோர்: பராசர முனிவர், கால பைரவர், துர்வாசர்.          

*களரி என்பதற்குக் கூட்டம், சபை, அரங்கம் எனப் பல பொருள் உண்டு. துர்வாசருக்குச் சிவபெருமான் பிரமதாண்டவ தரிசனம் தந்தருளியமையால் 'களரி' என்னும் இத்தலப்பெயர் பின்பு 'களர்' என்றாயிற்று.     

*இது களர் நிலத்தில் உள்ள கோயிலாததால், திருக்களர் என்ற பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது. 

*பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும், சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர், தானும் அந்தப் பாக்கியத்தைப் பெற விரும்பினார். துர்வாச முனிவர் தேவலோக  பாரிஜாதத்தை இங்கு கொண்டுவந்து வைத்து வளர்த்தார். பிறகு ஒரு சிவலிங்கம் அமைத்து, அதை பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து, தேவதச்சன் மூலமாக இக்கோயிலை எழுப்பினார் என்று தல வரலாறு கூறுகிறது. 

*இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரமதாண்டவ தரிசனம் கொடுத்தருளினார்.  துர்வாசர் எப்போதும் நடராஜ பெருமானின் பிரமதாண்டவத்தை தரிசித்துக்கொண்டிருக்கும் வகையில்   இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளன. 

*நடராஜப் பெருமானின் 8 தாண்டவத் தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது.                   

*மூலவர் பாரிஜாதவனேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக அருள்புரிகிறார்.                   *கல்வெட்டில் சுவாமியின் பெயர் - களர் முளைத்த நாயனார், அடைந்தார்க்கு அருள் செய்த நாயனார் - என்று குறிக்கப்படுகின்றது.       

*இத்தல இறைவன் பாரிஜாதவனேஸ்வரரை வணங்கி வழிபாடு செய்தால், கேது பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வளம் பெறலாம். 
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும் என்பதும் இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். 

*அம்பாள்  கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் அருள்புரிகிறார். 
அம்பாள் சந்நிதி வெளி மண்டபத்தின் கீழ்க்கோடியில் அஷ்டபுஜதுர்க்கை சந்நிதி உள்ளது.       

*முருகப்பெருமான் தனியே குரு மூர்த்தமாக இத்தலத்தில் அருள் புரிகிறார். இந்த முருகப் பெருமான் 60000 முனிவர்களுக்கும், துர்வாசருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில்தான்.  கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு.          

*இங்குள்ள தீர்த்தங்களுள்  கோயில் எதிரே உள்ளது துர்வாச தீர்த்தம். மற்றையவை - 1) பிரமதீர்த்தம்  (தெற்கு வீதியில் உள்ளது)
2) ருத்ரதீர்த்தம் (மேல வீதியில் உள்ளது)
3) ஞானதீர்த்தம் (வடக்கு வீதியில் உள்ளது) 

*கோவிலூர் மடாலயத்தில் அதிபராக இருந்த வீரசேகர ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில் ஆலயத்திற்குப் பக்கத்தில் உள்ளது. அவருக்குத் திருக்களர் ஆண்டவர் என்று பெயர்.     

*சோழர்கள் கால எட்டு கல்வெட்டும், பாண்டியர்களது இரண்டும், விஜய நகரத்தாரது மூன்றும் படி எடுக்கப் பட்டுள்ளன. 

*திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 10 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது திருக்களர்.                     
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, March 7, 2025

சனீஸ்வரன் நவக்கிரகங்களில் ஒருவன். நல்லது செய்பவன் என்று ஏனோ ஞாபகம் வருவதில்லை.

 சனிக்கிழமை சனீஸ்வர பகவான் -  நினைவு வருவது சகஜம் தானே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா பயம் ஜாஸ்தியா என்றால் என்ன பதில்? பயம் தான். ஏன். அவர் ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக எல்லோரும் சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயம்.


இன்று சனிக்கிழமை சனீஸ்வர பகவான் நினைவு வருவது சகஜம் தானே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா பயம் ஜாஸ்தியா என்றால் என்ன பதில்? பயம் தான். ஏன். அவர் ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக எல்லோரும் சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயம். சனீஸ்வரன் பெயர் உண்மையில் சனைச்சரன் மெதவாக நடப்பவன். மற்ற கிரஹங்கள் ஒரு ராசியில் இருக்கும் காலத்தை விட சனைஸ்சரன் வந்து தங்கி கிளம்பி போக ரொம்ப காலம் எடுத்துக் கொள்வான். ரெண்டரை வருஷம். ஒவ்வொருவருக்கும் மூன்று முறை இப்படி ரெண்டரை வருஷங்கள் வரும் என்பதால் அதனால் அவனுக்கு ஏழரை நாட்டான் என்று பெயர் பெயர். ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவர் வந்து விட்டால், ''சனி வந்து தொலைந்து விட்டது. சரியான ஏழரை நாட்டான்'' என்று முணுமுணுக்கிறோம் அல்லது நெருங்கியவர்களிடம் சொல்கிறேன். அல்லது மனதிலேயே திட்டுகிறோம். சனைஸ்சரன் வந்து போவதை சனிப்பெயர்ச்சி என்று கொண்டாடுவதன் காரணம் என்ன? அவனைத் திருப்தி படுத்தினால் நம்மை ரொம்பப்படுத்த மாட்டான் என்பதற்காக. இது ஒரு வித ஆன்மீக லஞ்சம். அவன் பார்வையால் காரியங்கள் சரியாக நடக்காது, மனக்கிலேசம்,நிம்மதியின்மை, வியாதி, போன்ற பல துன்பங்கள் நேரும் என்று ஒரு பயம். பரிஹார ஸ்தலங்கள் என்று பல கோவில்கள் உள்ளன.எல்லா கோவில்களும் சைவர்கள் விஜயம் செய்பவை. சிவன் மூல விக்ரஹம். சனி நம்மை பிடிப்பதற்குள் நாம் அவனைப் பிடித்து அவன் நல்லது செய்ய வேண்டிக் கொள்ளவேண்டும் என்று தான் பரிகார ஸ்தலங்களுக்கு செல்கிறோம்.  

ஆனால் சனீஸ்வரனை நினைப்பதில் ஒரு சங்கடம். பக்தியை விட பயம் அதிகம் பலர் முகத்தில் தெரிகிறது. சனீஸ்வரன் நவக்கிரகங்களில் ஒருவன். நல்லது செய்பவன் என்று ஏனோ ஞாபகம் வருவதில்லை. சனிபெயர்ச்சி அன்று எல்லா கோவில்களிலும் அதிக கூட்டம் ஏன்? சனிதோஷம் விலக பரிஹாரம் தேடத்தானே . நமது தேசம் முழுதும் சனி பகவான் கோவில்கள் சில முக்கியமானவை. எனக்கு எல்லா சனி பகவான் கோவில்களுக்கும் செல்லும் வாய்ப்பு இது வரை கிடைக்க வில்லை. சனீஸ்வரன் நியாயவாதி. நேர்மையானவன். நல்லவன். நல்லதே செய்பவன். வீட்டில் அவன் படத்தை, விக் ரஹத்தை வைத்து வணங்குபவர்களை இதை எழுதும் வரை 85 வருஷங்களாக பார்க்கவில்லை.

சூர்ய பகவானுக்கு ரெண்டு பிள்ளைகள் பெரியவன் யமன். சின்னவன் சநைஸ் சரன். பெரியவன் ஆயுளை முடிப்பவன். சின்னவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பவன். எல்லா கோவில்களிலும் நவகிரஹ சந்நிதியில் சனி பகவான் இருந்தாலும் சில கோவில்களில் பிரதான தெய்வமாக இருக்கிறார். சனிபகவான் சந்நிதியில் யாரும் நேரே அவரை நின்று பார்ப்பதில்லை. நம் பார்வை தான் அவர் மேல் படவேண்டும். அவர் பார்வை படவேண்டாம் என்பார்கள்.

சனீஸ்வரன் பிறந்த நாள் புராட்டாசி சனிக்கிழமை ரோஹிணி நக்ஷத்ரம். காஸ்யப கோத்ரம். அம்மா சாயா தேவி.அப்பா சூர்யன். காக்கை வாஹனம். கருப்பு நிறம். ரொம்ப நீதி நியாயவான்.

வடக்கே மஹாராஷ்டிராவில் சனி சிங்கணாப்பூர் என்ற இடத்தில் ரொம்ப பெரிய கோவில். அஹ்மத் நகரில் தேவாஸா எங்கிற கிராமத்தில் 5 1/2 அடி உயர கருப்பு கல் ரூபத்தில் அருள் பாலிக்கிறார். மேலே கூரை இல்லாத கோவில். உலகப்ரஸித்த சனி பகவான் கோவில். ஏக்கர் கணக்கான பரப்பளவு கொண்ட கோவில். சென்று பார்த்து அதிசயித்தேன்.

பம்பாயில் தியோனார் அருகே ஒரு சனீஸ்வரன் கோவில். 7 அடி உயர சனி பகவான் கருப்பாக நிற்கிறார். சனிக்கிழமைகளில் பூஜை முடிந்து அர்ச்சகருக்கு சாமி வந்து சனீஸ்வரன் அருள் வாக்கு சொல்கிறாராம்.

மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் தித்வாலா எனும் ஊரிலும் ஒரு சனி பகவான் இருக்கிறார். புராதன கோவில்.

தெற்கே தமிழ்நாட்டின் அருகே புதுச்சேரி காரைக்கால் பக்கம் திருநள்ளாறு க்ஷேத்ரத்தில் அற்புதமான தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனி பகவான் தனி சந்நிதியோடு இருக்கிறார். தரிசிக்காத ஹிந்துக்களே இல்லை எனலாம். அங்கே நள தீர்த்தத்தில் நீராடியோ அல்லது ஜலத்தை ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டூ சனீஸ்வர பகவானை வணங்கினால், ஏழரை சனி போன்ற பிரச்னைகள் தீரும். திருஞான சம்மந்தர், சுந்தரர், அப்பர் என மூவராலும் பாடல்பெற்ற இந்தத் திருத்தலம், காவிரி தென்கரையில் 52-வது சிவ ஸ்தலம்.

டில்லியில் சனி தாம் என்று சந்தர்பூர் சாலையில் ஒரு சனீஸ்வரன் கோவில் இருக்கிறது. நான் இன்னும் சென்று தரிசிக்கவில்லை. பதேபூர் பெரி அருகே அசோலோ பக்கமாம். சக்தி பீடமாக சனீஸ்வர ஆலயம் திகழ்கிறது. உலகத்திலேயே ரொம்ப பெரிய சனி பகவான் இங்கே தான். பக்தர்களே சனிபகவானை தொட்டு பூஜை பண்ணுகிறார்கள். கடுகு எண்ணெய் அபிஷேகம். நம் ஊரில் நல்லெண்ணெய் தான் பிரதானம்.  
மத்திய பிரதேசத்தில் சனி சாரா கோவில் ஒன்று சனி பர்வதம் என்ற பகுதியில் இருக்கிறது. குவாலியரிலிருந்து 25 கி.மீ. ஹனுமான் லங்கையை வாலால் எரித்த பின் சனி பகவான் அவரை சந்தித்த இடம். விக்ரமாதித்யன் கட்டிய கோயில் என்கிறார்கள்.
இந்தூரில் ஒரு சனி பகவான் இருக்கிறார். மராத்தி ராணி ஹோல்கர் வம்சத்தவள் அஹல்யா பாய் கட்டிய கோவில். அதற்கு முன்னாலே யும் புராண காலத்து கோவில் தான். கோபால் தாஸ் திவாரி என்ற கண் தெரியாதவர் கனவில் சனி பகவான் வந்து மலையில் ஒரு இடத்தில் தோண்டி எடுத்த கோவில் என்று சொல்கிறார்கள்.  

''எனக்கு கண் தெரியாதே நான் எப்படி உன்னை கண்டுபிடிப்பேன்?''
"கண்ணை திறந்து பார் தெரியும்'' என்றான் சனீஸ்வரன்.
 திவாரிக்கு கண் திறந்து மலையைத் தோண்டி சனீஸ்வரன் சிலை அகப்பட்டது என்று கதை செல்கிறது. சனைஸ்சரன் சனீஸ்வரன் ஆகி நவகிரஹங்களில் சனி ஒருவருக்கே ஈஸ்வரன் பட்டம் தானாகவே கிடைத்துவிட்டது.

ஆந்திர தேசத்தில் தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் எர்டானுர் என்ற கிராமத்தில் ஒரு சனீஸ்வரன் கோவில் இல்லிறது. சனிபகவான் 20 அடி உயரம். அண்ணாந்து பார்த்து வேண்டிக்கொள்ள வசதி. யார் தலையும் மறைக்காது.
ஆந்திராவிலேயே இன்னொரு இடத்தில் மண்டபள்ளி என்கிற ஊரில் மாண்டேஸ்வர சுவாமி கோயில் சனி பகவான் சந்நிதி ரொம்ப விசேஷம்..
கர்நாடகாவில் உடுப்பிக்கு பக்கத்திலேயே பன்னஞ்சே என்ற ஊரில் ஒரு சனி க்ஷேத்திரம் உள்ளது. 23 அடி உயர சனி பகவான் பக்தர்களை ரக்ஷிக்கிறார்.
நம் தமிழகத்தில் தேனீ பக்கத்தில் குச்சனுரில் உள்ள ஸ்வயம்பு சனீஸ்வரன் பிரபலமானவர். சனிப் பெயற்சியின் போது நிற்க இடம் தேடவேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் கோரி மெட்டுக்கு அருகே மொரட்டாண்டி என்ற கிராமம். அங்கே வெட்டவெளியில் 27 அடி உயரத்தில் சனி பகவான் நிற்கிறார். நான் பார்த்திருக்கிறேன். “பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்’ என நீளமான பெயர். பஞ்சலோக விக்ரஹம். பீடத்தையும் சேர்த்தால் 33 அடி . ரொம்ப பெரியவர். இங்கே அவர் வாஹனம் காக்கை இல்லை கழுகு. ஆகமம் அப்படி தான் சொல்கிறதாம். நான்கு கரங்கள். மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்.கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரத ஹஸ்தங்கள். நல்ல கூட்டம் எப்போதும்
சனியை பொங்கு சனி மங்கு சனி என்று அழைப்பது வழக்கம். சனி தசையின் பொது கஷ்டங்கள் மேலேமேலே வந்தால் மங்குசனி. அதிர்ஷ்டங்கள் நிறைய அடித்து எதிர்பார்க்காத நன்மை,சுகம் கிடைத்தால் அந்த சனிதசை பொங்கு சனி. வாரியும் கொடுப்பான், வாரியும் விடுபவன் சனி.
ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம் 🌺🌺🌺 🙏🙏
ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம் 🌺🌺🌺 🙏🙏
ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம் 🌺🌺🌺 🙏🙏
திருவருள் புரியும் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம் 🌺🌺🌺 🙏🙏
சனி பகவான் 108 போற்றி
ஓம் அருளுங்கால் இனியனே போற்றி
ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி
ஓம் அனுஷத்ததிபதியே போற்றி
ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் இளைத்த தேகனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் இரும்பு உலோகனே போற்றி
ஓம் ஈடிலானே போற்றி
ஓம் ஈசுவரனானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
ஓம் உபகிரகமுளானே போற்றி
ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
ஓம் எள் விரும்பியே போற்றி
ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாம் கிரகனே போற்றி
ஓம் கரு மெய்யனே போற்றி
ஓம் கலி புருஷனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கருங்குவளை மலரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி
ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருங்கொடியனே போற்றி
ஓம் கருநிறக் குடையனே போற்றி
ஓம் கண்ணொன்றிலானே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காற்றுக் கிரகமே போற்றி
ஓம் குளிர்க் கோளே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி
ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி
ஓம் குளிகன் தந்தையே போற்றி
ஓம் குறுவடிவனே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் கைப்புச்சுவையனே போற்றி
ஓம் சடையனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் சாயை புத்ரனே போற்றி
ஓம் சுடரோன் சேயே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூர்ய சத்ருவே போற்றி
ஓம் சுக்ர நண்பனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி
ஓம் சீற்றனே போற்றி
ஓம் செயலறச் செய்பவனே போற்றி
ஓம் தமோகணனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தீபப் பிரியனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
ஓம் தைரியனே போற்றி
ஓம் தொலை கிரகமே போற்றி
ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி
ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி
ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி
ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பக்கச் சுழலோனே போற்றி
ஓம் பத்மபீடனே போற்றி
ஓம் பத்திரை சோதரனே போற்றி
ஓம் பிணிமுகனே போற்றி
ஓம் பிரபலனே போற்றி
ஓம் பீடிப்பவனே போற்றி
ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் புஷ்பப்பிரியனே போற்றி
ஓம் புதன்மித்ரனே போற்றி
ஓம் பூசத் ததிபதியே போற்றி
ஓம் பேதமிலானே போற்றி
ஓம் பைய நடப்பவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மகரத்தாள்பவனே போற்றி
ஓம் மாங்கல்ய காரகனே போற்றி
ஓம் மதிப்பகையே போற்றி
ஓம் மநு சோதரனே போற்றி
ஓம் முடவனே போற்றி
ஓம் முதுமுகனே போற்றி
ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
ஓம் மேல் திசையனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் யமுனை சோதரனே போற்றி
ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி
ஓம் வன்னி சமித்தனே போற்றி
ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
ஓம் வக்கரிப்பவனே போற்றி
ஓம் வளை மூன்றுளானே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றி
.ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரக மூர்த்தியே நின் திருவடிகளே சரணம்
சனி பகவானுக்கு உரிய பரிகாரங்கள்
...
வன்னி மரத்தடி விநாயகருக்கு பச்சரிசி மாவை அல்லது பச்சரிசியை அவரை சுற்றிலும் தூவி வருவது. எறும்புகள் அதை எவ்வளவு காலம் வரை பத்திரமாக எடுத்து வைத்து இருக்கிறதோ, அத்தனை காலம் தேவர்களின் ஆசி நமக்கு தொடர்ந்து
சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம்.
இவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.
கறந்த பசும் பாலினைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், சனிக் கிழமைகளில் சிவனை வில்வம் கொண்டு அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பு. பிரதோஷ வழிபாடு மிக நன்று. சிவ புராணம், பஞ்சாட்சரம், சுதர்சன மூல மந்திரம், சுதர்சன அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்வதும், சிறந்த பலன்களை கொடுக்கும்.
விநாயக பெருமானை வழிபடுவதும், ஆஞ்சனேயரை சனிக் கிழமைகளில் துளசி மாலை அல்லது வடை மாலை அணிவித்து, அர்ச்சித்து 27 முறை வலம் வருவதும் அஷ்டமச் சனி தோஷ நிவர்த்தி தரும்.
காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.
சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிகையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.
தசரத மஹாராஜா அருளிய, சிவனை போற்றும் "தாரித்ரிய தஹன ஸ்தோத்திரம்" பாராயணம் செய்வதன் மூலம் சனி தோஷத்தால் உண்டான பணக் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து சனி பகவானின் கடாட்சம் கிடைக்கும்.
தாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம் (கடன் நிவாரண ஸ்தோத்ரம்)
1. விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹணாய நமசிவாய
2. கௌரீ ப்ரியாய ரஜனீச கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தனாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
3. பக்தி ப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ரராய துர்க பவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸீந்ருத்யகாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
4. சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய
பாலேக்ஷனாய பணிகுண்டல மண்டிதாய
மஞ்சீர பாத யுகளாய ஜடாதராய
தாரித்ரிய துர்க்க தஹனாய நமச்சிவாய
5. பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம் சுகாய புவனத்ரய மண்டிதாய
ஆனந்த பூமிவரதாய தமோமயாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
6. கெளரி விலாஸ புவனாய, மஹேஷ்வராய
பஞ்சானனாய சரணாகத கல்பகாய
ஷர்வாய, சர்வ ஜகதா மதிபாய - தஸ்மை
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
7. பானுப்ரியாய பவஸாகர தாரணாய
காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
8. ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய
புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
9. முக்தேச்வராய பலதாய கணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹனாய
மாதங்க சர்மவஸனாய மஹேச்வராய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
வசிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம்
சர்வ தாரித்ரிய நாசனம்
சர்வ சம்பத்கரம் ஷீக்ரம்
புத்ர பெளத்ராபி வர்தனம்
...
சனீஸ்வர பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்கிட, தசரத சக்கரவர்த்தி நமக்கு அருளிய " புத்திர ப்ராப்தி ஸ்தோத்திரத்தினை " பாராயணம் செய்திடலாம்.
ஸ்ரீ கணேசாய நமஹ
அஸ்ய ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்திர மந்த்ரஸ்ய
தசரதரிஷி : சனைச்சர தேவதா
த்ரிஷ்டுப் சந்த : சனைச்சர
ப்ர்த்யர்த்தே ஜபே வினியோக
தசரத உவாச :
1. கோணோந்த்தகோ ரௌத்ரயமோநத பப்ரு:
க்க்ஷ்ருண : சநி : பிங்களமந்தஸெளர
நித்யம் ஸம்ரு தோமு யோ ஹராதக பீடாம்
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
2. ஸூரா ஸூரா : கிம்புருஷோர கேந்த்ரா
கந்தர்வ வித்யாதர பன்னகாச்ச
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
3. நரா நரேந்திரா : பசவோ ம்ருகேந்திரா
வன்யாச்ச யோ கீட பதங்க்கப்ப்ருங்கா
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
4. தேசாச்ச துர்காணி வனானி யுத்ர
ஸேனான நிவேசா : புரபத்தனானி
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
5. திலைர்யவைர்மாஷ குடான்ன தானை:
லோஹேன நீலாம்பர தானதோவா
ப்ரீணாதி மந்த்ரைர் நிஜ வாஸரே ச
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
6. ப்ரயாக கூலே யமுனாதடே ச
ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்
யோயோகினாம் த்யான கதோநபி ஸூஷ்ம
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
7. அந்த்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட
ஸ்திதீய வாரே ஸ நர : ஸூகி ஸ்யாத்
க்ருஹாத் கதோ யோ ந பு ந : ப்ரயாதி
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
8. ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர்வனத்ரயஸ்ய
ந்ராதா ஹரிசோ ஹரதே பிநாகீ
ஏகஸ்த்ரிதா ருக்யஜூ சாம மூர்த்தி :
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
9. சன்யஷ்டகம் ய : ப்ரயத : ப்ரபாதே :
நித்யம் ஸூபத்ரை : பசுபாந்த வைச்ச
படேத்து ஸௌக்யம் புவி போக யுக்த :
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
10. கோணஸ்த : பிங்களோ பப்ரு :
க்ருஷ்ணோ ரௌத்ரோ பிந்தகோயம
ஸெளரி : சனைச்சரோ மந்த :
பிப்பலா தேன ஸம்ஸ்துத :
11. ஏதானி தச நாமகநி ப்ராதருத்தாய ய : படேத்
சனைச்சரக்ருதா பீடாத கதாஷித் பவிஷ்யதி
இதி ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

 சனிபகவான் வழிபாடு பற்றிய பதிவுகள் :
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவகிரகமாக சனி கருதப்படுகிறார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட சனிபகவானின் பார்வையை, சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. 

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை அழைக்கலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனி பகவானே ஆவார்.

பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாது. கோவில்களில் இரண்டு பக்கங்களில் நின்று தான் வழிபட வேண்டும். சனிபகவான் என்று மட்டும் இல்லை, கோயிலில் உள்ள எந்த தெய்வத்தையும் நேருக்கு நேர் நின்று தரிசிக்கக்கூடாது.

தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தி நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற தெய்வ வாகனங்களுக்கு மட்டுமே உண்டு.

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இதை ஸ்தான பலம், ஸம்யோக பலம், திருஷ்டி பலம் என்று கூறுவர்.

சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனி பகவானுக்கு பிடித்தமான ஒன்றாகும். எனவே இந்த வழிபாடு மேற்கொள்பவர்கள் சனியின் பார்வையிலிருந்து தப்பலாம்.

சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வரும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் ஏதேனும் ஒன்றில் சனி பகவானுக்கு விரதம் தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.


இயற்கையிலேயே அசுப கிரகமான சனி கிரகத்தின் 3, 7, 10ம் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், சனீஸ்வரரை நேருக்கு நேர் நின்று தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள்.

சனிக்கிழமை தோறும் நவக்கிரகம் சுற்றும் பழக்கம் உள்ளவர்கள், சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் சன்னதிகளின் இரு பக்கங்களில் நின்று வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வையால் நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.

மேலும், ஏழரை சனி, பாதச் சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி நடைபெறும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சனிபகவானுக்கு 27 தடவை சுற்றி வந்து எள் விளக்கு ஏற்றி வந்தால் சனீஷ்வரனின் தாக்கம் குறைந்து, ஆபத்துகள் விலகும் என்பது ஐதீகம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, March 6, 2025

திருமூலநாதர் கோவில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம்.

அம்பாசமுத்திரம் திருமூலநாதர் கோவில் – திருநெல்வேலி
அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் சிவபெருமான் திருமூலநாதசுவாமி என்று அர்ப்பணிக்கப்பட்டுள்ள திருமூலநாதர் கோயில் ஒரு புகழ்பெற்ற கோயிலாகும்.

தெய்வங்கள் :
மூலஸ்தானம் : திருமூலநாதர் (சுயம்பு லிங்கம்).
துணைவி : உலகம்மை தேவி .
தீர்த்தங்கள் : பிரம்ம தீர்த்தம் மற்றும் சரஸ்வதி தீர்த்தம் , தெய்வீக தோற்றம் கொண்டதாக நம்பப்படுகிறது.
முக்கியத்துவம் : திருகோஷ்டியூர் கோயில் (ஊரக்காடு) மற்றும் திருமூலநாதர் கோயில் (வல்லநாடு) ஆகியவற்றுடன் முப்பீடா கோயில்களில் ஒன்று (மூன்று புனிதத் தலங்கள்).
அருகாமை : புருஷோத்தம பெருமாள் கோயிலுக்கு அருகில் .
1,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானதாக மதிப்பிடப்பட்ட இந்த கோயில், புராணங்கள் மற்றும் வரலாற்றில் மூழ்கியுள்ளது, பக்தர்களுக்கு ஆன்மீக ரீதியாக வளமான அனுபவத்தை வழங்குகிறது.
மீனாட்சி மற்றும் சொக்கநாதர் .
விஷ்ணு தனது இரண்டு மனைவிகளுடன்.
நவகிரகம் (ஒன்பது கிரகங்கள்), விநாயகர், வள்ளி மற்றும் தேவசேனாவுடன் சுப்ரமணியர், சாஸ்தா தனது இரு துணைவியருடன், அண்ணாமலையார்.
தனித்துவமாக, தட்சிணாமூர்த்தி மற்றும் விஷ்ணு துர்க்கை ஆகியோர் வழக்கமான அடிப்படை சிற்பங்களுக்குப் பதிலாக, துணை ஆலயங்களுக்குள் முழு சிற்பங்களாகத் தோன்றுகிறார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

நயினா தீவு அருள்மிகு நாகபூஷணி அம்மன் திருக்கோவில்.



*நல்வாழ்வு அருளும் நயினா தீவு அருள்மிகு நாகபூஷணி அம்மன் திருக்கோவில்*
இலங்கை நாட்டின் பழம்பெரும் அம்மன் கோவில், 64 சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழும் ஆலயம், அம்மன் சுயம்புவாக தோன்றிய திருத்தலம், தலபுராணச் சிற்பங்கள் நிறைந்த சித்திரத் தேர் கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டு விளங்குவது, நயினா தீவு நாகபூஷணி அம்மன் திருக்கோவில். 
முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வழிபாட்டுத் தலங்களில், ஈழ நாட்டில் உள்ள ‘நயினா தீவு’ம் ஒன்றாகும். 64 சக்தி பீடங்களில் இது, புவனேஸ்வரி பீடமாக திகழ்கின்றது. காளிதாசரால் வணங்கப்பட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. நயினா தீவில் கோவில் கொண்டுள்ள நாகபூஷணி அம்மன் வரலாறு, மிகவும் தொன்மையானதாகும். கருவறையில் உள்ள மூலவர் சிலையானது, காந்தார சிற்பக் காலத்தைச் சார்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Wednesday, March 5, 2025

திருவைகாவூர் வில்வவனநாதர் சிவராத்திரி தலம்..

#மகாசிவராத்திரி பிறந்த தலமான, 
வேடன் ஒருவன் மகாசிவராத்திரி
நாளில் புலிக்கு பயந்து வில்வ மரத்தின் மீது ஏறி உறங்காமல் 
வில்வம் பறித்து அறியாமல்
சிவலிங்கதிருமேனி மீது இட்டு பூசை செய்து வேடனுக்கு சிவபெருமான் காட்சி அளித்து முக்தியளித்த தலமான, 
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான 
கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட ,
வேதங்கள் வில்வ விருட்சங்களாக தவம் புரிந்து வரும் இடமான
#தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டம் 
#திருவைகாவூர் 
(#வில்வ_வனம்)
#வில்வவனேஸ்வர்
(வில்வவன நாதர்)
#வளைக்கைநாயகி
(சர்வஜன ரக்ஷகி அம்மன்)
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 
 
திருவைகாவூர் வில்வவனநாதர் கோயில் மூவரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். 
இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்த வேடன் வில்வ மரத்திலிருந்து தூங்காமல் வில்வத்தைப் பறித்துப்போட இறைவன் காலையில் தோன்றி அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). 
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 48வது சிவத்தலமாகும்.

*மூலவர் : வில்வவனேசுவரர்
*அம்மன் :வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி
*தல 
விருட்சம் : வில்வமரம்
*தீர்த்தம் : எமதீர்த்தம்

*வழிபட்டோர் : 

சப்தகன்னிகள், வேதங்கள், தவநிதி என்ற முனிவர், மகா சிவராத்திரி மோட்சம் அடைந்த ஓரு வேடன் , யமன் மற்றும் தேவாரம் பாடிய மூவர், சேக்கிழார், அருணகிரிநாதர் 

*பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர் மற்றும் சேக்கிழார் 

திருக்காளத்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் போல மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம், திருவைகாவூர் ஆகும். சிவராத்திரி வழிபாடு பிறந்தது இத்தலத்தில்தான் என்பது ஐதீகம். வேதங்கள் வில்வ மரமாக இருந்து வழிபட்டதால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு 'வில்வவனேசுவரர்' என்றும் பெயர் வந்தது. பெருமாள், பிரம்மா இருவரும், இறைவன் சன்னதியில் துவார பாலகர்களாக உள்ளனர். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவர் மீது அம்பெய்த முற்பட்டான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து, வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.

அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக, இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி இருப்பதாக ஐதீகம்.

திருவைகாவூர் மகாசிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு மிகவும் பெயர் பெற்ற தலம்.சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் மகா சிவராத்திரி பிறந்தது.

வேடன் ஒருவனுக்கு ஒரு மகாசிவராத்திரி நாளில் இறைவன் காட்சி கொடுத்து அவனுக்கு மோட்சம் அருளிய தலம்.

இத்தலத்திற்கு வில்வவனம் என்றும் பெயருண்டு.

எல்லாம் அறிந்த மார்க்கண்டேயருக்காக ஈசன் எழுந்த தலம் திருக்கடவூர்.
ஏதும் அறியாத வேடனுக்காக ஈசன் எழுந்த தலம் திருவைகாவூர்.

இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

அனைத்து நந்திகளும் எதிர் திசையில் நம்மைப் பார்த்து உள்ள ஒரே தலம், இங்குள்ள நந்திகள் அனைத்தும் இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி உள்ளது. யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக அவ்வறு இருப்பதாக ஐதீகம்.

பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.

 பிரளய காலத்தில் தன்னுடைய ஆக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கேணி உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டபின் ஆலய துவாரகாலகனாக ஒருபுறம் அமர்ந்து விட்டார். சலந்திரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறினார் திருமால். இதை அறிந்து கொண்ட அவள் மகாவிஷ்ணுவை சபித்தாள். அச்சாபம் தீரவே திருமால் இங்கே துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது தலபுராணம்.  

சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக திருவைகாவூர் விளங்குகிறது.

உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். கோயில் முகப்பில் வேடனை, புலி விரட்டிய சம்பவம் சுதை சிற்பமாக உள்ளது.

வேதங்கள் வில்வ விருட்சங்களாக இங்கே தவம் புரிவதாக ஐதீகம். ஊழிக் காலத்தில் அனைத்து அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் சிவபெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது.

கோயில்களின் மாநகரான கும்பகோணத்திலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில் உள்ள கிராமம் திருவைகாவூர். இது பாபநாசம் வட்டத்துக்குள் இருக்கும் ஒரு நதியோரத்து கிராமம். பரந்து விரிந்து கிடக்கும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் புகழ் வாய்ந்த சிவன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை கூட்டம் கூடுகிறது. அதாவது மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகா சிவராத்திரியன்று பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து வழிபடுகிறார்கள். மூன்று நாள்கள் கோயிலில் மகாசிவராத்திரி விழா களை கட்டி விடுகிறது.

வில்வநாத சுவாமி என்பது இங்கு உறையும் இறைவனின் பெயர். இறைவி மங்களாம்பிகை. வில்வ வனங்களுக்கு நடுவே கோயில் கொண்டிருந்ததால் இறைவனுக்கு இப்பெயர். தல விருட்சமாக வில்வமரம்.

சோழர் காலப் பாணியில் இக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் முகப்பில் வவ்வாலத்தி மண்டபம் உள்ளது. அதனுள் நுழைந்தால் மிகவும் விசாலமான பிரகாரச் சுற்று. உயர்ந்து நீண்ட மதில் சுவர். அதனையடுத்து மிகச் சிறிய ஆனால் கலையழகுடன் கூடிய கோபுரம்.

#வேடனுக்கும் உண்டு மோட்சம்:

இக் கோயிலில் மகாசிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இரவு முழுதும் கண்விழித்து உபன்யாசங்கள் நிகழ்த்தப்படுகின்றன. சிவராத்திரியின் சிறப்பைக் குறிக்கும் விதமாகவும் மற்றொரு கதையும் வழக்கில் உண்டு.

ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வர அதனிடமிருந்து தப்பித்து ஓடி வந்தவன், உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். மதியம் வந்தது, மாலையும் வந்தது. இருள் சூழ, இரவும் வந்தது. புலியோ மரத்தடியில் படுத்துக் கொண்டு நகர்வதாயில்லை. வேடனுக்கோ பசி, தாகம், உறக்கம். தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தது. நெடுநேரமாகியது. கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம்.

பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது எனும் கதை சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சிவராத்திரியன்றும் வேடனுக்கு மோட்சமளித்த புராணக் கதை சொல்லப்படுகிறது. கோயிலின் கோபுர வாசலில் சிறிய சிற்பமாகவும், பழைய பாணி ஓவியமாகவும் இந்தக் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது.

#எமனை விரட்டிய நந்தி:

முன்னாலிருக்கும் நந்தி வித்தியாசமாக இருக்கிறது. மற்ற சிவாலயங்களில் பெரும்பாலும் நந்தி கோயிலின் கருவறையை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ நுழைவாயிலை நோக்கிக் கொண்டு படுத்திருக்கிறது.

அதற்கொரு கதையும் சொல்லப்படுகிறது. எமன் ஒரு முறை சிவபெருமானோடு மோதி, விரட்டிக் கொண்டு வர, அதனால் கோபமுற்ற நந்தி தேவர் எமனை விரட்டிக் கொண்டு ஓடி வந்து சீறிய வேகத்தில் எமன் பாய்ந்து கோயிலின் எதிரில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் எமன் கோயிலுக்குள் நுழையாமல் பாதுகாப்பாக நந்தி இன்னமும் திரும்பிப் படுத்துக் கொண்டிருக்கிறது. எமன் விழுந்த குளம் எம குளம் என்ற பெயரில் இன்றளவும் வழங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பட்டீஸ்வரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் நந்தி சந்நதிக்கு எதிரே நிற்காமல் சற்று விலகியிருக்கிறாரே தவிர திரும்பியிருக்கவில்லை.

மற்ற சிவாலயங்களைப் போலவே, விநாயகர், முருகன், துர்க்கை, சன்னிதிகளும் உள்ளன. கோயில் திருச்சுவர்களில் கல்வெட்டுகளும் ஆங்காங்கே தென்படுகின்றன.

சிவராத்திரி விழா, சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர்.

கல்யாண வரம், குழந்தை வரம், தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.

#திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

"கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடுவகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாந்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே

.

அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடஅழ கார்குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே.

ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறுமழகார்
வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.

இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவுந்
தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.

வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே.

நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல் கரந்தசிவ லோகனமர் கின்றஇடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழின்இசை யெண்ணரிய வண்ணமுளதாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.

நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையாற்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.

கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடன் நெரித்தஅழ கன்றனிடமாங்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.

அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாஞ்
சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.

ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடந்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.

முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனைச்
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனுரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.

#கோவில் அமைப்பு:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம். 11-ஆவது நூற்றாண்டில் ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழன் இவ்வாலயத்தில் திருப்பணி செய்திருப்பதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சம்புவராய மன்னர்களில் சகலபுவனசக்கரவர்த்தி இராச நாராயணசம்புவராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. முகப்பு வாயிலின் மேற்புறம் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முகப்பு வாயிலுக்கு எதிரே யம தீர்த்தம் உள்ளது. வாயில் வழியே உள்ளே சென்றால் பலிபீடத்தையும், நந்தி நம்மைநோக்கி திரும்பி (கிழக்குநோக்கி) இருப்பதைக் காணலாம். இவற்றையடுத்து சுற்றிலும் மதிற்சுவருடனுள்ள ஒரு சிறிய 3 நிலை கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம்.

இத்தல மூலவர் வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறார். இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. நேர்கோட்டில் சுவாமி ,அம்பாள் சந்நிதிகள் உள்ளன. கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம். மிகவும் பிரசித்திபெற்ற அம்பாள்.

அம்பாள் வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி) மிகவும் அருள் வாய்ந்தவர். கிழக்கு முகமாக ஐயனின் இடப்புறம் அம்பிகையின் சந்நிதி.இதனை மணக்கோலம் என - அகத்திய மாமுனிவர் தரிசனம் கண்டார்.அருணகிரி நாதரும் வழிபட்டிருக்கின்றனர். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும்.சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். இவர் கூறியதுபோலவே எல்லா விசயங்கள் நிகழ்ந்திருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சன்னதியும், சுந்தரமூர்த்திவிநாயகர் சன்னதியும், ஒரே கல்லில் மயில், திருவாட்சி ஆகியன ஒன்றாக அமைந்த வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சன்னதியும் உள்ளன.கை ரேகை, நகம் எல்லாமே அந்த சிற்பத்தில் தெளிவாக தெரியும்.இதில் இச் சந்நிதியில் மயிலின் முகம் திசை மாறியுள்ளது மற்றோர் சிறப்பு. மகாமண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, வீணா தட்சிணாமூர்த்தி மூலத் திருவுருவங்கள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி அழகான திருவுருவம். லிங்கோத்பவரும், அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும் கோஷ்டத்தில் உள்ளனர். துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. திருமால், நாராயணி, பைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான் முதலிய மூலத் திருமேனிகள் உள்ளனர்.

இத்தலத்தில் மகா சிவராத்திரியன்று நான்காம் யாமத்தில் வேடன், வேடுவச்சி, இறைவன் காட்சி தரும் ஐதீகம் புறப்பாடு நடைபெறுகின்றன.

*சிறப்புக்கள் :

வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.

கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.
இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்

*திருவிழா:

மாசி மாதம் மகா சிவராத்திரி 2 நாட்கள் திருவிழா

அம்மாவாசை அன்று தீர்த்தவாரி பஞ்சமுக மூர்த்திகள் வீதியுலா இரவு ஓலை சப்பரத்தில் வீதியுலா(ஓலையாலேயே ரிஷபம், சுவாமி, அம்பாள், அனைத்துமே ஓலையால் கட்டி வீதியுலா நடைபெறுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

ஆருத்ரா புறப்பாடு திருவாதிரை, விஜயதசமி, திருக்கார்த்திகை ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம்..

*அமைவிடம்:

அருகில் உள்ள தொடருந்து நிலையம் கும்பகோணம். கும்பகோணத்திலிருந்து எண் 30, 12, 57, 69 குறிப்பிட்ட பேருந்துகளில் செல்லலாம். 18 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்று அங்கிருந்தும் செல்லலாம் (8 கிமீ).

அல்லது கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை வழியே திருவலஞ்சுழி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து சுவாமிமலை வழியாகவும் செல்லலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...