Tuesday, November 25, 2025

27 நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் மரம்

27 நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் மரம்

நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்

நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை,பாவ கதிர்களை கிரகிக்கும் சக்திவிருட்சங்களுக்கு 
உண்டு..உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால்நட்டு ,நீரூற்றி வளர்த்து  
வாருங்கள்.அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளம்பெறும். 

உங்கள்பாவக் கதிர்களை
கிரகித்து, உங்களுக்கு அற்புதமான  ஒரு  ஆன்ம  தொடர்பை இந்த  மரங்கள் செய்யும்.

சிலமரங்களை  வீட்டில்  வளர்க்க முடியாது. உங்கள் கண்படும்  இடங்களில், உங்கள் தோட்டத்திலோ,  சாலை  ஓரங்களிலோ, இல்லைஆன்மிக ஸ்தலங்களில், 
ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமி மலை) தென்மேற்குப்பகுதியில் சூரியக்கதிர்கள்  படும்  இடத்தில்  
நட வேண்டும் 

அந்த மரக்கன்றையும் அவரதுபிறந்த  நட்சத்திரம் உதயமாகும்  நாளில்  நடுவது  மிகநன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டுஊறிய நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,அம்மரக்கன்று வளர,வளர அதைநட்டவரின் வாழ்க்கை மலரும் அந்த மரக்கன்றை நட்டவரின்  பிறந்த ஜாதகத்தில்  இருக்கும் அனைத்து  தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும். 

அம்மரக்கன்று  பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும். 

அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும் .

கர்ம வினைகளை வெற்றிகொள்ள  ‘விருட்ச சாஸ்திரம் ’இப்படி ஒரு  வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரியவிருட்சம் எனப்படும் மரம் எதுவெனப்பார்ப்போம்

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள்.

சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.

அருகில் இருக்கும் 
சித்தமருத்து-வரையோ, அல்லது, கூகுள்லெயோ  தேடிப்பாருங்கள் இல்லையா, அந்தநட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல 
விருட்சங்கள் உண்டு.

அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது, நீங்கள்
அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. 

ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது. 

திருவண்ணாமலை சென்றால், 
அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்.  

உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு. உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் .. 

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள் இவை :

அஸ்வதி – எட்டி
பரணி -- நெல்லி
கார்த்திகை – அத்தி
ரோகிணி ---  நாவல்
மிருகசீரிஷம் --- கருங்காலி
திருவாதிரை - செங்காலி
புனர்பூசம் - மூங்கில்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - புரசு
உத்திரம் - இலந்தை
அஸ்தம் - மகாவில்வம்
சுவாதி - மருதம்
சித்திரை - அகண்ட வில்வம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழம்
கேட்டை - பராய்
மூலம் - மரா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
பூரட்டாதி -- மா
உத்திரட்டாதி – வேம்பு
ரேவதி – இலுப்பை

ஒவ்வொரு மரத்தையும் நட்சத்திர அதிதேவதையுடன் பூஜை செய்தால் வாழ்வில் நலம் பெருகும்.

வருஷாதி விருட்சங்கள்
பிரபவ                      - கருங்காலி மரம்
விபவ                       - அக்ரூட்மரம்
சுக்ல                         - அசோக மரம்
4.ப்ரமோதூத
பிரஜோர்பத்தி       - பேயத்தி மரம்
ஆங்கீரஸ்              - அரசுமரம்
திருமுக                  - அரைநெல்லி
பவ                            - அலயாத்தி
யுவ                           - அழிஞ்சில் மரம்
தாது                          - ஆச்சாமரம்
ஈஸ்வர                   - ஆலமரம்
வெகுதான்ய         - இலந்தை மரம்
பிரமாதி                  - தாளைபனைமரம்
விக்ரம                   - இலுப்பை மரம்
விஷு                     - ருத்திராட்சம்
சித்ரபானு             - எட்டி மரம்
யுவபானு              - ஒதியம்
தாரண                    - கடுக்காய் மரம்
பார்த்திவ               - கருங்காலி மரம்
வியய                     - கருவேலமரம்
சர்வஜித்                - பரம்பை மரம்
சர்வதாரி              - குல்மோகூர்மரம்
விரோதி                - கூந்தல் பனை
விக்ருதி                - சரக்கொன்றை
கர                           - வாகை மரம்
நந்தன                   - செண்பகம்
விஜய                   - சந்தனம்
ஜய                         - சிறுநாகப்பூ
மன்மத                 - தூங்குமூஞசி மரம்
துன்முகி              - நஞ்சுகண்டாமரம்
ஏவிம்பி                - நந்தியாவட்டை
32.விளம்பி 
விகாரி                 - நாவல்
சார்வரி                - நுணாமரம்
பிலவ                   - நெல்லி மரம்
சுபகிருது            - பலா மரம்
சோபாகிருது    - பவழமல்லி மரம்
குரோதி                 - புங்கம் மரம்
விசுவாவக        - புத்திரசீவிமரம்
பராபவ                - புரசுமரம்
பிலவங்க           - புளிய மரம்
கீலக                    - புன்னை மரம்
சவுமிய               - பூவரசு மரம்   
சாதாரண           - மகிழமரம்
விரோதிகிருத -  டம்பை
பரீதாபி               - மராமரம்
பிரமாதீச            - மருதமரம்
ஆனந்த              - மலைவேம்பு
ராட்சஸ            - மாமரம்
நள                       - முசுக்கொட்டை மரம்
பிங்கள              - முந்திரி
காளயுக்தி        - கொழுக்கட்டை மந்தாரை
ஸித்தார்த்தி   - தேவதாரு
ரவுத்ரி               - பனை மரம்
துன்மதி            - ராமன்சீதா
துந்துபி             - மஞ்சள் கொன்றை
ருத்ரோத்காரி- சிம்சுபா
ரக்தாக்ஷி
குரோதன        - சிவப்புமந்தாரை
அட்சய             - வெண்தேக்கு

இது போன்ற தெய்வீக மரங்களை வளர்த்து வணங்கி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சங்கடங்களை உடனடியாக நீக்குவார் சக்கரத்தாழ்வார்

சங்கடங்களை உடனடியாக நீக்குவார் சக்கரத்தாழ்வார்
சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ??

திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.

திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.

பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மாராக அவதரித்தார்.

தாயின் கருவில் இருந்து வராததாலும் கருடருடன் வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர்.

பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.

நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார்.

அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாரின் தலை நெருப்புபோல ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

பாதங்கள் சக்கரத்ததைப்போல சுழன்று அருள் செய்ய எப்போதும் ஆயத்த நிலையில் இருக்கும்.

சக்கரத்தாழ்வாரை ஆறின் மடங்குகளான எண்ணிக்கையில் 6, 12, 24, 48 என்று வலம் வருதல் நலம்.

சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நாளையென்பது
நரசிம்மருக்கு
கிடையாது என்பர்.

துன்பத்திலிருந்து
விடுபட்டு உடனடியாக
நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும்
நரசிம்மரையும்
ஒரு சேர வழிபடுவது
மிகச் சிறப்பு.

இதன் அடிப்படையில்தான் சக்கரதாழ்வர்க்கு பின் நரசிம்மர் இருப்பார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

நவபுலியூரின் இரண்டாம் ஆலயமான திருப்பாதிரிப்புலியூர்.

நவபுலியூர் 02 : திருப்பாதிரிபுலியூர
இந்திய தமிழகத்தின் இந்து ஆலயங்களெல்லாம் மிக மிக தொன்மையானவை, ஒவ்வொன்றும் எக்காலத்தில் உருவானதென அறியமுடியாதபடி பழமையானவை, ஒவ்வொரு ஆலயத்துக்கும் தனி சிறப்பும் தத்துவமும் தனித்துவமான ஆற்றலும் உண்டு
அப்படி ஒரு அபூர்வமான ச்கதி நிலையமே நவபுலியூரின் இரண்டாம் ஆலயமான திருப்பாதிரிபுலியூர

அன்று "கடை ஞாழலூர்" என்றும் இன்று கடலூர் என்றும் அழைக்கபடும் அந்த ஊரில்தான் இந்த சக்தியான ஆலயம் ஸ்தாபிக்கபட்டிருக்கின்றது

சோழ மன்னர்களும் பல்லவர்களும் பாண்டியர்களும் நாயக்கர்களும் மராட்டிய மன்னர்களும் கண்போல் காத்துவந்த தலம் இது
இது தேவாரம் பாடபட்ட தலம், சம்பந்தபெருமான் பாடுகின்றார்

"போதினானும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள்
ஆதிநாலும் அவலம் இல்லாத அடிகள் மறை
ஓதிநாளும் இடும் பிச்சை ஏற்றுண்டுணப் பாலதே".

அப்படியே அப்பர் பெருமானும் பாடுகின்றார்

"கருவாய்க் கிடந்து உன்கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய் பொலியச் சிவாய நம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி  பாதிரிப் புலியூர் அரனே."

பாதிரி மரங்கள் நிறைந்திருந்த இந்த பகுதியில் யார் இந்த ஆலயத்தை தொடங்கிவைத்தார்கள் என்றால் அதை அன்னை சக்தியே சிவனின் திருவுளத்துக்க்கு ஏற்ப ஸ்தாபித்து கொடுத்தார்

அவ்வளவுக்கு பெரும் பெருமை கொண்ட ஆலயம் இது

இந்த ஆலயம் சிவாலயமாக கருதபட்டாலும் அன்னைக்கான தலமாக இருக்கவேண்டும் என திருவுளம் கொண்ட  பெருமான், ஒரு நாடகம் நடத்தினார்

அதன்படி அவரும் தேவியும் அமர்ந்திருந்த நேரம், சிவனின் கண்களை விளையாட்டாக பொத்தினார் தேவி, தேவர்களே உலகை காக்க இமையா கண்களை பெற்றவர்கள், அவர்கள் கண் இமைக்கும் நொடியில் கூட உலகம் மாறிவிடும் கடமை தவறிவிடும் என்பதால் ஒரு நொடி கூட கண்ணை மூடாதபடி திறந்த கண்ணோடு இருப்பார்கள், அவர்கள் கண் இமைக்காது

தேவர்களுக்கே அப்படி என்றால் சிவபெருமான் எப்படி இருக்கவேண்டும்? அவர் கண்ணை மறைத்தால் என்னாகும்?

எங்கும் இருள் உண்டாயிற்று, அன்னை சட்டென அஞ்சி கைகளை எடுத்தாலும் பெரும் குழப்பம் வந்தது
இந்த குழப்பத்துக்கு காரணமான நீ பூலோகம் செல் என சாபமிட்டார் சிவன், தேவி தவறை உணர்ந்து மன்றாடினாள்

அவள் மேல் இரக்கம் கொண்ட சிவபெருமான் , நீ போய் எல்லா ஆலயங்களையும் வணங்கு, எங்கே உன் இடது கண்ணும் இடது தோளும் துடிக்குமோ அங்கே நீ இழந்த நிலையினை மீட்பாய், என்னை அடைவாய் என பரிகாரமும் சொன்னார்

தேவி பூலோகம் வந்து தானாக உருவாகிய எல்லா லிங்கங்களையும் தரிசித்து வழிபட்டாள், இந்த லிங்கத்தை அதாவது பாதிரி மரங்கள் நிரம்பிய இந்த இடத்தில் இருந்த லிங்கத்தை வணங்கியபோது அவளின் இடது கண்ணும் தோளும் துடித்தது, அன்னை அங்கே சாபம் நீங்கி சிவனை அடைந்தாள்

எந்த பாதிரி மரத்தடியில் அவள் தவமிருந்தாளோ அந்த மரத்தின் பெயராலே அவ்வூர் திருப்பாதிரிபுலியூர் என்றாயிற்று
அந்த மரம் அதாவது அன்னை எந்த மரத்தடியில் தவமிருந்தாளோ அது இன்றும் உண்டு.

அங்கிருந்துதான் தொடங்குகின்றது இந்த ஆலய வரலாறு, இது சிவனை அன்னை மீண்டும் அடைந்த இடம் என்பதால் பிரிந்தவர் சேரவும், இழந்ததை கொடுக்கும் தலமாகவும் விளங்குகின்றது

கடைஞாழல், கன்னிவனம், பாடலவுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாதிரிப்பதி, புலிசை என இதற்கு பல பெயர்கள் உண்டு
அப்படியான இந்த தலத்தில்தான் புலிக்கால் முனிவர் புலிபோல் விடாபிடியாக தவமிருந்த காரணத்தால் புலியூர் எனும் பெயரும் சேர்ந்துகொண்டது

அன்னை சிவனை வேண்டி தவமிருந்தபோது சில காட்சிகளை அரூபமாய் கண்டாள், பெரும் பெரும் ஞானியரும் ரிஷிகளும் தெய்வீக பாடகர்களும் வந்து சிவனை பாடுவதையும் அதிலே அவர் மகிழ்வதையும் கண்டாள்

அதனால் பாடலை ஏற்று மகிழும் சிவனை பாடலீஸ்வரர் என அவளே பெயரிட்டாள், அந்த பாடலீஸ்வரரை நோக்கி தவமிருந்ததால் அவள் அருந்தவ நாயகி என்றுமனாள்

இந்த தலத்தின் பெருமை இன்னும் நீண்டது, புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிவனின் உத்தரவுக்கு ஏற்ப இங்கு வந்து வணங்கி பலன் பெற்றார்கள்

அப்படியே வியாக்ரபாதரரின் மகன் உபமன்யு இங்கு தவமிருந்தார், சில சாபம் காரணமாக முயல் வடிவம் பெற்ற அவர் இங்கேதான் தவமிருந்து தன் இழந்த வடிவினை மீட்டெடுத்தார்

அகத்தியர், கங்காதேவி, அக்னிபகவான் என பலர் வந்து சிவனை பணிந்து இழந்ததை எல்லாம் மீட்டார்கள்

காலம் காலமாக இப்படி பலர் வந்து வழிபட்டு இழந்ததை மீட்ட ஆலயத்தில், பிரிந்தவர் இங்கு வந்து முறையிட்டு வழிபட்டு மறுபடி சேர்ந்த ஆலாய்த்தில்தான் அப்பர் பெருமானுக்கு பெரும் அதிசயம் செய்தார் சிவ‌பெருமான்

அப்பர் பெருமான் வாழ்வில் எல்லோரும் அதிசயிக்குமிடம் அல்லது பெரும் அற்புதமான இடம் அவரை கல்லை கட்டி கடலில் இட்டபோது அவர் கம்பீரமாய் கட்டுமரமாய் மிதந்து கரையேறிய காட்சி

அந்த அதிசயமே அப்பர் பெருமானை பணிந்து சமண மன்னன் மகேந்திர வர்மனை சைவத்தை ஏற்றுகொள்ள செய்தது
அப்பர் சுவாமிகள் முதலில் மதம் மாறிமருணீக்கினியார் என சமணராக மதம் மாறி பெரும் சமண பண்டிதராக அவர் வலம் வந்ததும் இந்த திருபாதிரிபுலியூரில்தான்

அங்கேதான் அவருக்கு நஞ்சூட்டி கொல்வது, அதிவெப்பமான சுண்ணாம்பு காளவாயில் அவரை தள்ளியும் அவர் பிழைத்தது என பல கொடுமைகள் நடந்தன‌

கடைசியாக அவரை கல்லைகட்டி கடலில் இட்டதும் அங்கேதான், ஆனால் அவர் கல்லோடு மூழ்கவில்லை. அந்த கல் கட்டுமரம்போல் மிதந்து அவரை கரையேற்றியது

அந்த இடம் இன்றும் "கரையேறிய குப்பம்" என அழைக்கபடுகின்றது, "சோற்றுனை வேதியன் சோதியில் வானவன்" என்ற பதிகத்தை பாடியபடியே கரை ஏறினார் அப்பர் சுவாமிகள்

கரையேறி அவர் பாடிய தலம் இதுதான், அந்த பாடல்தான் " 'ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் பாடல்

அதாவது இந்த ஆலயத்து சிவனேதான் தன்னை காப்பாற்றி தன்னோடு சேர்த்துகொண்டான், கடலில் மடிய இருந்த தன்னை இந்த சிவன் மீண்டும் தன்னோடு சேர்த்துகொண்டார், இழந்த பாக்கியத்தை கொடுத்தான் என அவர் பணிந்தது இந்த ஆலயம்தான்
சிவன் தனக்கு தாயாய் வந்தான், சக்திவடிவாய் அன்னையாய் வந்தான் என, தாயினை பாடுவது போல் " 'ஈன்றாளுமாய்" என பாடினார் அப்பர் சுவாமிகள்

இந்த ஆலயம் பிரிந்தோரை சேர்க்கும் இழந்ததை கொடுக்கும் என அன்னையாலும் ரிஷிகளாலும் வணங்கபட்ட ஆலயம், இங்கிருக்கும் முருகபெருமான் சன்னதிக்கு அருணகிரி நாதரும் வந்து பாடியிருகின்றார்
இந்த தலம் சந்திரன் ஆதிக்கம் கொண்ட தலம், இதனால் இங்கு சந்திரனுக்கு தனி சன்னதி உண்டு
நாம் முன்பே பார்த்தபடி நவபுலியூரும் நவகிரகங்களின் அருளை அருள்பவை, சிதம்பரம் சூரியனுக்கு என்பது போல சந்திரனுக்கானது இந்த திருப்பாதிரிபுலியூர்
பிரபஞ்ச ரீதியாக வானியல் ரீதியாக சந்திரன் மகா முக்கிய கிரகம்
காலத்தின் அதிபதி யாராக இருந்தாலும் காலத்தின் அளவை சொல்பவன் சந்திரனே, அவ்வகையில் சந்திரனை முன்னிட்டே நாள், திதி,மாதம் என எல்லாமும் நிர்ணயிக்கபடுகின்றது
கால பைரவராக கால்த்தின் அதிபதி சிவன் என்றால் சூரியன் சிவன் அம்சம் என்றால், சந்திரன் காலத்தை அளந்து காட்டும் சக்தி தேவியின் அம்சம்

பவுதீக ரீதியாக சந்திர சுழற்சியாலே மழை பொழிகின்றது, பருவம் மாறுகின்றது, பூமியோடு சேர்ந்து சூரியனை சுற்றும் நிலவு இல்லையேல் பூமி இல்லை, அது இயங்காது

சந்திரனின் ஈர்ப்பு விசையே பூமியில் பல மாறுதல்களை செய்து  இயக்குகின்றது, அதுதான் பருவகாலமாகின்றது
ஜாதகரீதியாகவும் இன்னும் பல தொடர்புகள் ரீதியாகவும் சந்திரனுக்கும் மானுட மனதுக்காமன் தொடர்பு மிக மிக நெருக்கமானது

அதற்கு முன் சிவன் தலையில் சந்திரன் அமர்ந்த கதையும் அதில் இருக்கும் உண்மையினையும் காண வேண்டும்

சந்திரனுக்கு 27 மனைவியர் அதாவ்து 27 நட்சத்திரங்களும் மனைவியர் என்பதும் ஒரு சாபத்தால் சந்திரன் பிறை நிலவாய் சிவனிடம் அடைக்கலாகி அவரின் சிரசில் அமர்ந்து சிவன் கண்காணிப்பில் கடமையாற்றுகின்றான் என்பதும் புராண செய்தி
இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், 27 நட்சத்திரகாரர்களுக்கும் சந்திரன் தொடர்பு உண்டு, சந்திரன் இல்லாமல் ஜாகதகமே இல்லை

சந்திரன் இருக்குமிடமே தாயின் ஸ்தானத்தை குறிப்பதாக ஜோதிட நுணுக்கங்கள் சொல்லும், அவ்வகையில் தாய் எனும் சக்தி அருளை பெற சந்திரன் அருள அவசியம்

தேவியின் அருளை பெற சந்திரன் அவசியம்

இன்னும் சந்திரனாலே மனதின் உணர்ச்சிகள் எண்ணங்கள் எழுகின்றன, சந்திரனே மனதிடம் மனோபலத்துக்கான அதிபதி என்பதும் ஜோதிடம் சொல்லும் உண்மை

சந்திரன் மனதுக்கான கிரஹம், பவுர்னமி அமாவாசையில் கடல்மட்டம் எழுவதும் குறைவதும் கண் காணும் உண்மைகள்
அதாவது நீரானது பவுர்னமி அன்று பொங்குகின்றது,அப்படி நீரால் இயங்கும் உடலிலும் நீரில் மிதக்கும் மூளையிலும் சில மாறுபாடுகள் வரும்

அதனாலே சிலருக்கு பவுர்னமி அன்று ஒருவித அதீத எழுச்சிகள் வரும் நிலையற்ற தன்மை வரும், அமாவாசையில் அது தலைகீழாகும்

இதெல்லாம் மனம் சம்பந்தபட்டது சந்திரன் என்பதற்கான பெரும் சான்றுகள், அதனாலே ஜாதகத்தில் சந்திரன் இருக்குமிடம் முக்கியமானது

மனம் சரியாக இருந்தாலே புத்தியும் செய்யும் தொழிலும் சரியாகும் செல்வம் வாய்க்கும், இதனாலே சந்திரன் செல்வத்துக்கும் அடையாளமான கிரஹமானார்

திருப்பதி ஸ்தலம் சந்திரனின் தலம் என அழைக்கபடுவது அப்படித்தான்

சந்திரன் கால நேரத்தை அளந்து தரும் கிரஹம், உணர்ச்சிகளின் அதிபதி, இன்னும் தெளிவாக சொல்லபோனால் ஈர்ப்பு விசைகளை கட்டுபடுத்துபவர்

பூமியின் ஈர்ப்பு விசை எப்படி சந்திர கிரஹணம், அமாவாசை, பவுர்ணமியில் மாறுமோ இன்னும் வள்ர்பிறை தேய்பிறையில் மாறுமோ அப்படி மனம் கொள்ளும் பற்றுகளில் இருந்தும் அதனை விடுவிக்கவும் கட்டிவைக்கவுமான சக்தி சந்திரனுக்கு உண்டு
சந்திரனின் பார்வையே ஒரு பொருளை பற்றவும் செய்யும், மனம் விரும்பும் ஒன்றை துறக்கவும் செய்யும்

இதனாலே பற்றற்ற கோலத்துக்கு செல்ல சந்திரன் அருள் அவசியம், இறைவனை பற்றி நிற்க அந்த அருள் அவசியம்
அப்பர் கடல்நீரில் மிதந்தார் என்பது சிவனருளில் நடந்த ஒரு அதிசயம் மட்டும் அல்ல, அங்கும் விஞ்ஞான ரீதியாக சந்திரனின் கரங்கள் உண்டு

பூமி எல்லா பொருளையும் ஈர்க்கும் ஆனால் சந்திரனின் சக்தியால் அந்த ஈர்ப்பில் மாறுபாடு காட்டமுடியும், பவுர்ணமியில் கடல் பொங்குவது அப்படித்தான்

அப்பர்  க்டலில் வீசபட்டபோது சிவன் சந்திரனை நோக்க சந்திரன் தன் ஈர்ப்பு சக்தியால் அவரை மிதக்கவைத்தார், அந்த இடத்தில் புவியின் ஈர்ப்பு சக்தி மீறி சந்திரனின் சக்தி பெருகி நின்றதால் அவர் மிதந்தார்

அதுதான் அங்கு நடந்த அதிச்யம், அதனால்தான் அங்கிருக்கும் சந்திரனுக்கு சக்தியும் அதிகம்

இதைத்தான் சிவன் நடத்திய திருவிளையாடலில் காணமுடியும், தேவிக்கு என்ன சொல்லி அனுப்பினார் சிவன்?

எங்கே இடது கண்ணும் இடது தோளும் துடிக்குமோ அங்கே உன் சாபம் தீரும் என்றார், அது கவனிக்கதக்கது
ஏன் அப்படி சொன்னார் சிவன்?

மானிட உடலின் இடபாகத்தில்தான் இதயம் உண்டு அதன் அருகே சிதம்பர தத்துவம் சொன்ன மனம் உண்டு, அந்த மனதில்தான் சந்திரனின் உணர்ச்சிகள் பிரதிபதிக்கும்

சந்தோஷம், அழுகை, மகிழ்ச்சி சோகம் என எது என்றாலு இதயம் பக்கம் உணர்வதும் அதனால்தான்

மனம் அங்கேதான் இருக்கின்றது, மனதுக்கு சக்தி கொடுப்பவன் சந்திரன் எங்கே மனோபலம் பெறுகின்றாயோ அங்கே உன் சாபம் தீரும் என சொல்லி அனுப்பினார் சிவன்

இறைவனும் இறைவியும் விளையாடும் நாடகங்கள், திருவிளையாடல்கள் அவர்களுக்கானது அல்ல அது மக்கள் பின்பற்றி நடந்து அந்த பாடத்தை கற்று ந்ன்மைகளை அடையவேண்டும் என்பதற்காக‌

அப்படி இந்த தலம் சந்திரனுக்கானது, சந்திரனால் மனம் பலம் பெறும், ஜாதகத்தில் சந்திரனாஓ இல்லை இதரரீதியாக‌ மனோபலம் குறைந்தவர்களாக இருந்தால் இங்கு வந்து மனபலம் பெற்று செல்லலாம்

இது மனோபலம் அருளும் ஆலயம்

முன்பே பார்த்தபடி சந்திரன் என்பது தாய்ஸ்தானத்தில் இருப்பது, அதனாலே சந்திரனாலே பூமியில் அழை பெய்யும், சந்திரனாலே நேரம், திதி என எல்லாம் வகுக்கபடும், மாதம் வரை காட்டுவது சந்திரனே

சந்திரனே பாச உணர்ச்சிகளுக்கு அதிபதி, தாயினை விட அன்பினை கொட்டுவார் யாருமில்லை

இங்கே சிவனை விட சக்தி பலமாக இருக்கின்றாள், சந்திரனின் அம்சத்தில் அள்ளி கொடுக்க தயாராக இருக்கின்றாள், சூரியன் சிவனின் அம்சம் என்றால் சந்திரன் அன்னையின் அம்சம்

அதனால் இங்கு வழிபட்டால் அன்னையின் அருளோடு சந்திரனின் அருளும் பூரணமாகும், அதனால் மனோபலமும் இதர பலங்களும் வாய்க்கும், தெளிவான தைரியமான மனம் வாய்க்கும் என்பது இந்த ஆலயத்தின் தத்துவம்

புலிக்கால் முனிவர் அதற்கு விளக்கமாக வழிகாட்டுகின்றார்

குட்டிபுலியினை தாய் தொலைவில் இருந்தே கண்காணிக்கும், குட்டி தனியாக விளையாடுவது போல தோன்றினாலும் தாய் தள்ளி இருந்து தன் கண்காணிப்பிலே வைத்திருக்கும்

அப்படி அன்னை தன் பக்தர்களை எப்போதும் கண்காணிக்கின்றாள், புலிபோல் தள்ளி இருந்து ஆனால் பாசமாக காக்கின்றாள், தன் பக்தர்களுக்கு எந்த சோதனையும்  அவள் வரவிடமாட்டாள், ஆபத்தில் அவளே வந்து காப்பாள் என்பதை திருபாதிரிபுலிபூர் சொல்கின்றது

லவ்கீக வாழ்வில் தாய்போல் நின்று எல்லா நலமும் தைரியமும் மன அமைதியும் பலமும் தரும் அந்த ஆலயத்தின் அன்னை துறவிகளுக்கும் ரிஷிகளுக்கும் பற்றற்ற மனமும் தரும் அன்னை அதனை சந்திரன் மூலம் தருவாள் என்பதை சொல்கின்றது அந்த ஆலயம்

கடலூரில் இருக்கும் அந்த திருப்பாதிரிபுலியூர் ஆலயம், இழந்ததை தரும் ஆலயம், அப்படித்தான் தேவி நீங்கிய கையாலத்தை கொடுத்தது, சாபம்பெற்ற உபமன்யு முனியின் தோற்றத்தை கொடுத்தது

புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலிக்கும் ஞானத்தை கொடுத்தது, அப்பர் சுவாமிகளுக்கு மீண்டும் சைவத்தில் பெரும் இடம் கொடுத்தது

பிரிந்தவர்களை சேர்த்துவைக்கும் தலமும் அதுதான், மனதால் மாற்றமும் தெளிவும் கொடுத்து நல்வாழ்வு அருளும் ஆலயமும் அதுதான்

சந்திர பரிகாரம், சந்திரனுக்கான குறைகள் இருப்பினும், பிரிந்தவர் கூட தடை இன்னும் பல்வேறு மனசிக்கல்களால் பாதிக்கபட்டு இருப்பினும் அங்கே உடனே நலம் கிடைக்கும், அன்னை அருந்தவ நாயகி அதனை அருள்வாள்

பாதிரிமரம் பூக்கும் ஆனால் காய்க்காது, அப்படி அங்கு வழிபடுவோர்க்கு பிறவி இல்லை என்பதும் இன்னொரு ஐதீகம்
கர்மம் கழிக்க வந்த வாழ்வினை நன்முறையில்  வாழ, சரியாக வாழ்ந்து செல்ல  மனபலம் அவசியம், மனோபலமே ஒருவனை வழிநடத்தும், சந்திரன் அதை அருள்வார். அது கொடுக்கும் பலமே மனோசக்தி, தாயாய் நின்று காக்கும்பெரும் சக்தி

சிதம்பரத்தில் ஆத்ம பலம் பெற்று இங்கே மனோபலம் பெற்று அந்த இருமுனிவர்களும் அடுத்த மூன்றாம் தலத்துக்கு சென்றார்கள், அதை அடுத்து காணலாம். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

குழந்தை பேறு அருளும் துவாக்குடி சோழீஸ்வரர் திருக்கோவில்.

குழந்தை பேறு அருளும் துவாக்குடி சோழீஸ்வரர் திருக்கோவில்...!
இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் தங்கை கோமளவள்ளி. தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய மன்னன், அவளது ஜாதகத்தை அரச ஜோதிடரிடம் காட்டிக் கணிக்கச் சொன்னான்.

ஜோதிடர் சொன்னச் செய்தி, மன்னனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோமளவள்ளியின் ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பதாகவும், அதற்கு உரிய பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று ஜோதிடர் கூறினார்.

மன்னன்.. தாம் வணங்கும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டான்.

அப்போது ‘ஓர் ஆலயம் கட்டு. உன் தங்கையின் தோஷம் விலகும்’ என்ற அசரீரி ஒலித்தது. அந்த அசரீரியை தெய்வத்தின் குரலாய் உணர்ந்த மன்னன், ஓர் ஆலயம் கட்டி முடித்தான்.
இரண்டாம் குலோத்துங்கச் சோழனான, அந்த மன்னன் கட்டிய ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சோழீஸ்வரர். இறைவிக்கு தன் தங்கை கோமளவள்ளியின் பெயரையே சூட்டினான். அந்த ஆலயமே துவாக்குடியில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவில். இது செவிவழி கேட்ட வரலாறு.

ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் விசாலமான நடைபாதை. நடுவே நந்தியம்பெருமான் அருள்பாலிக்கிறார். 

அடுத்து இறைவியின் மகாமண்டபம் உள்ளது. மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகப்பெருமானும் துவாரபாலகராக கொலுவிருக்க, மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை கோமளவள்ளியின் சன்னிதி உள்ளது. 

கருவறையில் அன்னை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்கள் தாமரை மலரை சுமந்து நிற்க, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரையுடன் காணப்படுகிறது.

அடுத்து இறைவனின் மகாமண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர், சிவகாமி அம்மன் திருமேனிகள் சிலையாக வடிவமைக்கப்பட்டு கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. பொதுவாக சிவாலயங்களில் மகாமண்டபத்தில் நடராஜர்-சிவகாமி திருமேனிகள் செம்பு உலோகத்திலோ அல்லது பஞ்சலோக உலோகத்திலோ ஆனதாக இருக்கும். ஆனால் இங்கு விக்கிரகமாக இருப்பது சிறப்பு அம்சமாகும்.

மகா மண்டபத்தின் கிழக்கு திசையில் சூரியனும், சந்திரனும் அருள் பாலிக்க, அர்த்த மண்டபத்தில் விநாயகரும், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமானும் வீற்றிருக் கின்றனர்.

கருவறையில் இறைவன் சோழீஸ்வரர், சிவலிங்க திருமேனியில் கீழ்திசை நோக்கி அமர்ந்து அருள்புரிகிறார். திருச்சுற்றில் தெற்கில் நால்வர், நந்தி, மேற்கில் மகாகணபதி, வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமியும், கிழக்கில் கால பைரவரும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நவக்கிரக நாயகர்கள் தங்கள் துணைவியருடனும் வாகனத்துடனும் அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாகும்.

தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சமான வில்வ மரம் தழைத்தோங்கி கிழக்கு பிரகாரத்தில் செழுமையாக காட்சித்தருகிறது.

பிரதோஷம் இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று சுமார் 200 பேருக்கு அன்னதானமாக, இலை போட்டு விருந்து படைப்பது வழக்கமாக உள்ளது. 

புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் என விருந்து கோலாகலமாக நடைபெறுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நவராத்திரி 9 நாட்களும், சிவராத்தி அன்றும் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும்.

நாக தேவன் இத்தல இறைவன் இறைவியை வேண்டி தனது சாபம் நீங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆலயம் நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.

அதனால்தானோ என்னவோ நாகராஜாக்கள் சர்வசாதாரணமாக கருவறைக்கு செல்வதும், இறைவனின் திருமேனியில் ஊர்ந்து விளையாடுவதும் பக்தர்கள் இங்கு அடிக்கடி காணும் காட்சியாகும். இந்த நாகங்கள் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்வதில்லை.

நாகதோஷம் உள்ளவர்கள் இறைவன் இறைவிக்கு பாலாபிஷேகமும், மாதுளம் பழ அபிஷேகமும் செய்வதுடன், இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஏழு மாதங்கள் வடைமாலை சாத்தி செவ்வரளி மலையிட்டு பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் தானே விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

தோஷம் நிவர்த்தி ஆனதும் இறைவன் இறைவிக்கு வேட்டி, சேலை சாத்தி, பொங்கல், தயிர்சாதம் படைத்து அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்யும் தம்பதியர்களுக்கு விரைவில் அந்த பேறு கிட்டுகிறது. 

அந்த குழந்தைக்கு ஒரு ஆண்டு நிறைவு பெறும்போது ஆலயத்திற்கு அழைத்து வந்து ஆயுசு ஹோமம் செய்கின்றனர். பின்னர் ‘அன்னப்ரசனம்' எனப்படும் குழந்தைக்கு முதன்முதலாக உணவு ஊட்டும் வைபவமும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

ஹோமம் செய்ய வேண்டும் என எண்ணும் பக்தர்கள், தங்கள் வீட்டில் போதுமான இடவசதி இல்லாதவர்கள் இந்த ஆலயம் வருகின்றனர்.

ஆலயத்திலேயே கணபதி ஹோமம், ஆயுள் அபிவிருத்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ம்ருத்ஞ்ஜய ஹோமம் முதலிய ஹோமங்களை இறைவன் இறைவி முன்னிலையில் நடத்தி பயன்பெறுகின்றனர்.

ஆவணி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும், பங்குனி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனியில் ஒளி வெள்ளத்தால் அபிஷேகம் செய்யும் காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயம், காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு கஜலட்சுமிக்கு ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் வளையல் அலங்காரம் செய்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர்.

திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள துவாக்குடியில் உள்ளது இந்த ஆலயம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, November 24, 2025

கஞ்சமலை சித்தர் கோவில் அற்புதங்கள்.

கஞ்சமலை சித்தர் கோவில் அற்புதங்கள் !   சித்தர் திருமூலருக்குச் சிஷ்யனாக இருந்தவர்தான் காலங்கிநாதர் என அழைக்கப்பட்ட கஞ்சமலை சித்தர்.
 தமிழகத்தில் எனக்குத் தெரிந்தவரை பல பிரசித்தி பெற்ற கோயில்கள், சித்தர்கள் சித்தியடைந்த தலமாக இருக்கின்றன. ஆனால், சித்தரே இறைவனாக இருந்து அருள்பாலிக்கும் சிறப்பு சித்தர்கோயிலுக்கு உள்ளது.

 கஞ்சமலை சித்தர் கோவில் கட்டிய மன்னர் தாரமங்கலமத்தை ஆட்சி செய்த மன்னர் ( பூவாணிய நாடு ) கெட்டிமுதலி மன்னர் ஆவார். இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும். இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன.

 மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. "ஞானசற்குரு பால முருகன்' என இவரை அழைக்கின்றனர்.

 இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர். அமாவாசை கோயில் என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம்.

 மிகுந்த மூலிகை வளம் கொண்டது கஞ்சமலை.  

 தங்கம், இரும்பு, தாமரை ஆகியவற்றின் பெயர் கஞ்சம். இங்கு உயர்தர இரும்பு படிவம் ஏராளமாக உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத கஞ்சமலை இரும்பைக் கொண்டுதான் மாவீரன் அலெக்ஸாண்டரின் வாள் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. 

 நான் மலை உச்சிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்த பொழுது கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 20 மாணவர்கள் இந்த மலைக்கு வந்திருந்தார்கள். 

 அனைவரது கையிலும் சுத்தி வைத்துக் கொண்டு இந்த மலையில் கிடைக்கும் வெள்ளை நிறம் மற்றும் கருப்பு நிறம் போன்ற சிறிய கல்களை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். 

 நான் விசாரித்த பொழுது project சம்பந்தமாக வந்துள்ளோம் என்று சொன்னார்கள் நான் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. மலை முழுவதும் இரும்புத்தாது (Magnetite, Grunerite & Quartz) அதனாலேயே இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள்ளது. ஆனால் இந்த மலையில் அரசாங்கத்தால் கனிமவள திட்டப்பணி 1 சதவிகிதம் கூட நடத்த முடியவில்லை.

 சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ள.

 இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் நிறைய உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை இராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.

 இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை 5 ரூபாய்க்கு வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். 

 மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். இராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப்படும் என்று அங்கு இருப்பவர்கள் சொன்னார்கள்.

 இக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படுகின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.

 ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள்.

 சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர் எனவும் . சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி இக்கஞ்சமலையில் பொதிந்து , காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் இக்கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று நம்பபடுகிறது.

இங்குள்ள பொன்னி ஓடையில் கிடைத்த பொன்னைக் கொண்டு,  சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி என பல்வேறு மூலிகைகள் உள்ளன. 

 சுமார் காலை 6:30 மணி அளவில் சித்தர் கோவில் இருந்து மலை உச்சிக்கு போவதற்கு பயணத்தை தொடங்கலாம். 

மலை அடிவாரத்தில் அங்கு ஒரு சிறிய ஓலை குடிசையில் மேற்கு திசையை நோக்கி சிவருமான் லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அங்கிருந்து தான் மலை உச்சிக்கு செல்வதற்கு படிக்கட்டுகள் தொடங்குகிறது. ஆனால் கொஞ்ச தூரம் தான் அந்தப் படிக்கட்டுகள் உள்ளது அதிலும் பாதி சேதமடைந்து விட்டது. 
 அடிவாரத்திலிருந்து மலை உச்சியை அடைவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும் . போகும் வழியில் எங்கும் தண்ணீர் வசதிகள் கிடையாது. 

 அங்கங்கே சிறிய ஓடைகள் இரண்டு மூன்று தென்பட்டாலும் எதிலும் தண்ணீர் இல்லை. மழைக்காலங்களில் அதில் தண்ணீர் வருவதற்கு அறிகுறிகள் தெரிகிறது. 

 சதுரகிரி, பருவதமலை போன்ற மலைகளில் நமக்கு சில இடங்களில் கடினமான ஏற்றம் வரும் பின்பு சமமான பாதை வரும் ஆனால் இந்த மலையில் அதுபோன்ற ஏற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் சிறு ஏற்றம் சிறு இறக்கம் வந்து கொண்டே இருக்கும் பாதையானது மலையை சுற்றிப் போய்க் கொண்டே இருக்கும்.

 இரண்டு மணி நேரம் பயணங்களுக்கு பிறகு ஒரு வழியாக மலை உச்சியை அடையலாம் . அங்கு ஒரு சிறிய கோவிலில் 18 சித்தர்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள். 

 காலங்கி சித்தர் கூடுவிட்டு கூடு பாய்வது மற்றும் அஷ்டமாசித்திகளை அறிந்தவர். காற்றையே உடலாகக் கொண்டவர். இவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலை செய்த போகரின் குரு. 

 திருமந்திரம் எழுதிய திருமூலரின் சீடர். இவர் இங்குள்ள மூலிகை மரபில் உண்டு முதுமையில் இருந்து இளமை தோற்றத்திற்கு திரும்பியது இந்த மலையில் தான். அதனாலேயே இந்த மலைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு "இளம்பிள்ளை"என்று பெயர் பெற்றது. திருமூலரின் உத்தனவின்படி இங்கேயே இருந்து அருள்பாலிக்கிறார். இங்கு உள்ள மூலிகைகளை வைத்து சித்தர்களால் இரும்பை தங்கம் ஆக்க முடியும். இப்படிபட்ட மூலிகை யார் கண்ணுக்கும் தென்படாது. மந்திரம் சொல்லியே அணுகவேண்டும்.

 இந்த இடத்தில் தான் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இரசவாத ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஒரு பாஷாணத்தை போகர் பழனி மலை முருகன் சிலை செய்ய பயன் படுத்தி உள்ளார். ஒன்பது பாஷாணகளில் இதுவும் ஒன்று.

 இன்றும் சித்தர்களின் அருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இங்கு மலை உச்சிக்கு வந்து முழு இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 மலை உச்சியில் வடக்கு புறத்தில் தியானமேடை போல ஒரு இடம் உள்ளது. இரவில் பல இடங்களினூடே 'விசுவிசு'-வென நுழைந்து வந்து அந்த இடத்தில் வீசும் காற்று, 'ஓம்' எனும் ஒலியோடு வெளியாகும். அந்த அனுபவம் கேட்டுணர்வதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

 அந்த இடத்திற்கு அருகில்தான் அவ்வைப்பிராட்டி கருநெல்லி மரத்திலிருந்து 12 வருடங்களுக்கு ஒருமுறை காய்க்கும் கருநெல்லியை பறித்துச் சென்று தகடூரை ஆண்ட மன்னன் அதியமானுக்கு தந்தாக வரலாறு.

 அது விளைந்த இடமும் , இங்கு தான் அங்கவை, சங்கவை திருமணம் நடந்ததும், அகத்தியர் இங்கிருந்துதான் பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், அவரே குறிப்பிடுகிறார்.

சித்தர்களின் அருளாசி அங்கே இன்றும் பூரணமாக நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

 சிவபெருமான் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும். சுழுமுனை சித்தர் குகை, அகத்தியர் குகை, காலங்கி குகை ஆகியவைகளை உள்ளடக்கியது.

 ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கஞ்சமலையில் வகிக்கும் சித்த புருஷர்கள் ஜோதி வடிவில் கஞ்சமலையை வலம் வருவதைத் தரிசிக்கலாம். இரவு பதினோரு மணிக்கு மேல் கஞ்சமலையின் மேல்பகுதியில் சிறிய அளவில் நட்சத்திரம்போல் ஜோதிகள் காணப்படுமாம். அவை மெதுவாக நகர்ந்து மலையை வலம் வரும் என்று சொல்லப்படுகிறது. எல்லாரது கண்களுக்கும் ஜோதி தென்படாதாம். இந்தத் தரிசனத்தைக் காண்பவர்கள் பாக்கியவான்கள். நான் அடுத்த முறை இரவில் சென்று பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

 இத்தனை சக்திவாய்ந்த இந்த சித்தர் கோவிலை அனைவரும் வந்து தரிசிக்க வேண்டும்.

 சித்தேஸ்வர சுவாமி கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் நேரம் முழுவதும் கோயில் திறந்திருக்கும். அமாவாசை நாளன்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சித்தரை வழிபடுகின்றனர். பவுர்ணமி கிரிவலமும் உண்டு.

 சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது இக் கோவிலின் தல சிறப்பம்சமாகும். 

 அமைவிடம்: சேலம் பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து இளம் பிள்ளை என்ற கிராமத்துக்குச் செல்லும் ரோட்டில் 19 கி.மீ., சென்றால் கஞ்சமலை சித்தர் கோயிலை அடையலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

நவக்கிரகங்கள் அவற்றின் நன்மைகள்

நவக்கிரகங்கள் 
*1.சூரியன்.*
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். 
திக்கு - கிழக்கு 
அதிதேவதை - அக்னி 
ப்ரத்யதி தேவதை - ருத்திரன் 
தலம் - சூரியனார் கோவில் 
நிறம் - சிவப்பு 
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை 
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு 
ரத்தினம் - மாணிக்கம் 
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

*2.சந்திரன்.*
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு 
அதிதேவதை - ஜலம் 
ப்ரத்யதி தேவதை - கௌரி 
தலம் - திருப்பதி 
நிறம் - வெள்ளை 
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல் 
மலர் - வெள்ளை அரளி 
வஸ்திரம் - வெள்ளாடை 
ரத்தினம் - முத்து 
அன்னம் - தயிர் சாதம் 

*3 . அங்காரகன் (செவ்வாய்)*
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி. 
திக்கு -தெற்கு 
அதிதேவதை - நிலமகள் 
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில் 
நிறம் - சிவப்பு 
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை 
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி 
வஸ்திரம் - சிவப்பு ஆடை 
ரத்தினம் - பவளம் 
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம் 

*4.புதன்.*
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. 
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி 
திக்கு - வட கிழக்கு 
அதிதேவதை - விஷ்ணு 
ப்ரத்யதி தேவதை - நாராயணன் 
தலம் - மதுரை 
நிறம் - வெளிர் பச்சை 
வாகனம் - குதிரை 
தானியம் - பச்சைப் பயறு 
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை 
ரத்தினம் - மரகதம் 
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம் 

*5.குரு.*
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர். 
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி. 
திக்கு - வடக்கு 
அதிதேவதை - பிரம்மா 
ப்ரத்யதி தேவதை - இந்திரன் 
தலம் - திருச்செந்தூர் 
நிறம் - மஞ்சள் 
வாகனம் - மீனம் 
தானியம் - கடலை 
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம் 
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல். 

*6.சுக்கிரன்.*
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம், 
துலாம் ராசிகளுக்கு அதிபதி. 
திக்கு - கிழக்கு 
அதிதேவதை - இந்திராணி 
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன் 
தலம் - ஸ்ரீரங்கம் 
வாகனம் - முதலை 
தானியம் - மொச்சை 
மலர் - வெண் தாமரை 
வஸ்திரம் - வெள்ளாடை 
ரத்தினம் - வைரம் 
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .

*7.சனி*
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும். 
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி. 
திக்கு - மேற்கு 
அதிதேவதை - யமன் 
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி 
தலம் - திருநள்ளாறு 
நிறம் - கருமை 
வாகனம் - காகம் 
தானியம் - எள் 
மலர் - கருங்குவளை, வன்னி 
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை 
ரத்தினம் - நீலம் 
அன்னம் - எள்ளுப்பொடி சாதம் 

*8.ராகு*
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர். 
திக்கு - தென் மேற்கு 
அதிதேவதை - பசு 
ப்ரத்யதி தேவதை - பாம்பு 
தலம் - காளத்தி 
நிறம் - கருமை 
வாகனம் - நீல சிம்மம் 
தானியம் - உளுந்து 
மலர் - மந்தாரை 
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை 
ரத்தினம் - கோமேதகம் 
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம் 

*9.கேது*
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர். 
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன் 
ப்ரத்யதி தேவதை - பிரமன் 
தலம் - காளத்தி 
நிறம் - செம்மை 
வாகனம் - கழுகு 
தானியம் - கொள்ளு 
மலர் - செவ்வல்லி 
வஸ்திரம் - பல நிற ஆடை 
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்

*நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன.*
இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.

*காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

*நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.

*தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

*கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.

*கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

*தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.

* வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)

*வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

*தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

*வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

*பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.

*16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

*பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

*அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

*சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

*இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.

*வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்

*நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்.*

1.) ஸ்ரீ சூரியன் காயத்ரீ:-ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரீ:- ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ:- ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.

4.) ஸ்ரீ புதன் காயத்ரீ:- ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.

5.) ஸ்ரீ குரு காயத்ரீ:- ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.

6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ:- ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.

8.) ஸ்ரீ ராகு காயத்ரீ:- ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.

9.) ஸ்ரீ கேது காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்

சகல விதமான தோஷங்களின் வீரியத்தை குறைக்க நவகிரக ப்ரீத்தி செய்து கொள்ளுங்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, November 23, 2025

திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது.

🍁"திருவாஞ்சியம் | படையும் பூதமும் பாம்பும் | திருநாவுக்கரசர் தேவாரம்"
காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவாஞ்சியம் தலமும் ஒன்றாகும். மற்றவை திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருசாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை ஆகும். இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென்திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டுவிட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும்.

இறைவர் : ஸ்ரீ வாஞ்சியநாதர்



இறைவியார் : ஸ்ரீ மங்கள நாய

திருச்சேறை, குடவாயில், நறையூர் முதலிய பல பதிகளை வணங்கித் திருவாஞ்சியம் அணைந்துதொழுது பாடி அருளியது இத்திருப்பதிகம்.



🍁"படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்

உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்

புடை நிலாவிய பூம்பொழில் வாஞ்சியம் 

அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே."🍁

——(திருநாவுக்கரசர் தேவாரம் : 05.067.01)



பொருளுரை : படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான் தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை.



ஆலய முகவரி : அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம், PIN - 610 110. 

🍁"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🍁

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...