Monday, March 31, 2025

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்..

_27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் .._

அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன்

பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன்

கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக

ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான்

மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன்

திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்

புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன்

ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன்

மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன்

பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர்

உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி

ஹஸ்தம். ... சந்திரன். ... தியாண கோல சிவன்

சித்திரை. ... செவ்வாய். ... பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்

சுவாதி. ... ராகு. ... சகஸ்ரலிங்கம்

விசாகம். ... குரு. ... காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்

அனுஷம். ... சனி. ... ராமர் வழிபட்ட சிவன்

கேட்டை. ... புதன் ... நந்தியுடன் உள்ள சிவன்

மூலம். ... கேது. ... சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

பூராடம். ... சுக்கிரன். ... சிவ சக்தி கணபதி

உத்திராடம். ... சூரியன். ... ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்

திருவோனம். ... சந்திரன். ... சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்

அவிட்டம். ... செவ்வாய். ... மணக்கோலத்துடன் உள்ள சிவன்

சதயம். ... ராகு. ... ரிஷபம் மீது சத்தியுடன் உள்ள சிவன்

பூராட்டாதி. ... குரு. ... விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்

உத்திராட்டாதி ... சனி. ... கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

ரேவதி. ... புதன். ... குடும்பத்துடன் உள்ள சிவன்.

செவ்வாய் கிழமையில் வினை தீர்க்கும் வேல் வழிபாடு...



செவ்வாய் கிழமையில் வினை தீர்க்கும் வேல் வழிபாடு..!
"சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை! சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை" என்றும் "வேலுண்டு வினையில்லை" என்றெல்லாம் கூறுவார்கள்!!  

நம் வாழ்க்கையில் அனுதினமும் ஏதேனும் ஒரு பிரச்சனைகளையும், அதனால் மனக்கவலைகளையும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். இந்தப் பிரச்சனைகளும், கவலைகளும் தீர செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கினால் போதும்.  

நம்முடைய வேண்டுதல்கள் உடனடியாக பலிக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற சிறப்பான பரிகாரங்கள் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.  

செவ்வாய்க்கிழமையில் வீடு, பூஜையறை போன்றவற்றை சுத்தம் செய்து, முருகன் படத்திற்கு வாசனை மலர்களால் மாலை சாற்றி, அவருடைய வேல்-ஐ சுத்தம் செய்து அதனை வழிபடலாம்.  

உங்களுடைய நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறாமல் உள்ளதா? இறைவனை நினைத்து இந்த வழிபாட்டை நீங்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள்... நிச்சயம் நல்ல பலனைப் பெற முடியும்.  

அதுமட்டுமில்லாமல், முருகப்பெருமானை நினைத்து பக்தியோடு வணங்கி வந்தால், நம்முடைய நியாயமான ஆசைகளை அவர் நிறைவேற்றுவார்.  

குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள், கடன் தொல்லைகள், நோய்கள் தீர, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, காதல் கைகூட மற்றும் திருமணத் தடை அகல இந்தப் பரிகாரத்தை 21 வாரங்கள் செய்து வந்தால், கண்டிப்பாக இறைவன் அருள் புரிவார்.  

நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும், அவைகள் யாவும் நொடியில் நீங்கி, பகைவர்கள் ஒழிந்து, முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க...  

வேல் பூஜையில் மந்திரத்தை எப்படி உச்சரிக்கலாம்? என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்...  

புதிய வேலை வழிபாட்டிற்கு பயன்படுத்தும் விதம்:  

முதலில் ஒரு சிறிய அளவிலான வேல் வாங்க வேண்டும்.  

இதனை நாம் நேரடியாக வாங்குவதை விட, நம்முடைய குரு அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலமாக வாங்க வேண்டும். (இதனால் அவர்களின் ஆசீர்வாதத்துடன் இந்த வேலை நாம் பெறுகிறோம்.)  

அந்த வேல் மீது மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.  

ஒரு செம்பு சொம்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.  

இந்தச் சொம்பை சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து, அதனுள் விபூதியை நிரப்ப வேண்டும்.  

இப்பொழுது இந்த வேலை விபூதிக்குள் சொருக வேண்டும்.  

அதன்பிறகு, பூக்களை வேல் மீது சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.  

அதன் பின், உதிரி பூக்களை எடுத்து "ஓம் முருகா" என்று கூறி பூக்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.  

இவ்வாறு 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும்.  

பின்னர், தூப, தீப, ஆராதனைகள் காண்பித்து, கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.  

இப்படி உச்சரித்து வந்தால், வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பங்களும் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.  

இதனை முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் செய்து வர, முருகனின் அருள் பரிபூரணமாக நமக்குக் கிடைக்கும்.   

அந்தவகையில் முருகனுடைய வேல்-ஐ வைத்து, அதற்கு வழிபாடுகள் செய்து, கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்... எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் உடனே நீங்கும் என்பது ஐதீகம்.  

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம்:  

எனது சங்கடங்கள் அனைத்தும் விலகிடச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

நவகிரகங்கள் ஒன்பதும் நன்மையே அருளச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

சகல விதமான தோஷங்களும் என்னை விட்டுப் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

எல்லா விதமான வருத்தங்களும் என்னை விட்டு அகல வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

துக்கங்களிலிருந்து நிவாரணம் எனக்குக் கிடைக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

என்னுடைய தாபங்கள் தீர்ந்து விட அருள் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

பாவங்கள் என்னிடம் நெருங்காமல் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

என்னை வாட்டுகிற நோய்கள் உடலை விட்டு ஓடிவிடட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

எதிரிகள் என்னை விட்டு விலகிப் போவார்களாக ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

உடல் சார்ந்த நோய்கள் தீர்ந்து போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

என்னைச் சுற்றுகிற பீடைகள் மறைந்து விடட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

எனக்குப் பயம் என்பதே இல்லாமல் போக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!  

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகத்தை தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள்தோறும் சொல்லி வழிபட்டு வந்தால், வேலாயுதத்தின் சக்தியால், நம்மைச் சுற்றியுள்ள அத்தனை பிரச்சனைகளும் நீங்கி, நமக்கு நல்ல ஒரு பாதை பிறக்கும்.  

வேலை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்:  

காரிய தடைகள் விலகி, திருமணம் கைகூடும்.  

குழந்தைப்பேறு கிடைக்கும்.  

கல்வியில் மேன்மை, மனப் பயம் நீங்கி வலிமை உண்டாகும்.  

வியாபாரத்தில் லாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.  

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.  

மரண பயம் நீங்கி, நீண்ட ஆயுள் பெறலாம்.  

சொந்தமாய் வீடு மற்றும் நினைத்த காரியம் நினைத்தப்படியே நிறைவேறும்.  

கலைகளில் தேர்ச்சி, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும்.  

"வெற்றிவேல், வீரவேல்" என முழங்கும் இடத்தில், வேலின் ஆற்றலும், முருகனின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கும்! 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மஹா சிவராத்திரி அன்று பகல் வேளையில் ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும் கோவில்...

வருடத்தில் 
ஒருமுறை நிகழும் #மகாசிவராத்திரி அன்று ஒருநாள் மட்டுமே திறக்கப்பட்டு 
பக்தர்களுக்கு 
காட்சி தரும் தலமான,
வாமதேவர் பிறப்புக்கு அஞ்சி சிவலிங்க பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்ட இடமான,
இந்தியாவில் உள்ள ஏழு புண்ணிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் 
#காஞ்சிபுரம் (திருக்கச்சி )
மாவட்டத்தில் உள்ள 
#சிவகாஞ்சியில் (#பெரிய_காஞ்சி)
உள்ள வெண்குளம் தென்கரையில் மேற்கு நோக்கி காட்சி தரும் 
#காஞ்சிபுரம்_பிறவாத்தனம் (பிறவாஸ்தனம்)
#பிறவாதீசுவரர்
(#பிறவாத்தானேசுவரர்,
அபுணர்பவேஸ்வரர்)
திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 
காஞ்சிபுரம் பிறவாதீசுவரர், பிறவாத்தானேசுவரர் (பிறவாத்தானம்) என்று அறியப்படுவது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும் . மேலும், சிவகாஞ்சி வெண்குளம் தென்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.

மூலவர் பிறவாதீஸ்வரர்.,
காஞ்சிபுரம் புதிய ரயில்நிலையம் அருகில் உள்ளது,இறாவதீஸ்வரர் கோவில் எதிரே அமைந்துள்ளது.

#தல_வரலாறு:

வாமதேவ முனிவர் பிறப்புக்கு அஞ்சி, (பயந்து) பிறவாமையை அளிக்குமாறு தன் தாயின் கருவிலிருக்கும்போதே, இறைவனை எண்ணி (நினைத்து) வேண்டினார். இறைவன் கருவுக்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்கு காட்சி தந்து, "காஞ்சிக்கு வந்து எம்மை பூசித்தால் பிறவியணுகா"தென்று அருளிச்செய்தார். வாமதேவரும் அவ்வாறே பூமியிற் பிறந்து, காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறாகும். இதனாலேயே இத்தலம் பிறவாத்தானம் எனப்பட்டது.

காஞ்சிபுராணத்தில் இவ்வாலயம் அபுணர்பவேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. வாமதேவ முனிவர் பிறப்புக்கு அஞ்சி, பிறவாமையை அளிக்குமாறு தன் தாயின் கருவிலிருக்கும் போதே, இறைவனைஎண்ணி வேண்டினார். இறைவன் கருவுக்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்கு காட்சி தந்து, "காஞ்சிக்கு வந்து எம்மை பூசித்தால் பிறவியணுகா"தென்று அருளிச்செய்தார்.வாமதேவரும் அவ்வாறே பூமியிற் பிறந்து, காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுபிறவி நீங்கப் பெற்றார் என்பது இந்த தல புராணமாகும்.

இதனாலேயே இத்தலம் பிறவாஸ்தானம் எனக் இக்கோயில் பற்றி காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

மலைகற்களே இல்லாத காஞ்சிபுரத்தில்,தனது தலைநகரில் கோயில் கட்ட முடிவெடுத்த ராஜசிம்மன், அதற்கு அடித்தளமாககாஞ்சிபுரத்தில் கட்டிய முதல் கோயிலஇது,இவற்றில் பலமுதல்  வேலைப்பாடுகளை வெளி கொண்டுவந்து இருக்கிறார்,இதற்கு பிறகே கைலாசநாதர் கோவில் முதலிய பிற கோவில்களை கட்டியுள்ளார் எனக் கூறப்படுகின்றது..

கோயில் கட்டுமானம் பாதபந்த அடித்தளம் கொண்டு, மேலே விருத்த ஸ்புடித கிரீவம் கொண்டு இரண்டுதள விமானம் அமைந்து இருக்கிறது.உப கிரீவத்தில் பூதவரி உள்ளது. அர்த்த மண்டபத்துடன் கூடிய மிக சிறிய கோவில் இது. 

விருச்சிக கரணம், கஜலட்சுமி, தக்க்ஷிணாமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி,ஜலந்தரஸம்ஹர மூர்த்தி, பிரம்மா,விஷ்ணு மற்றும் துவார பாலகர்கள் என ஆலய மூன்று பக்க சுவர்களில் நிறைந்திருக்கிறார்கள்.

எப்போதுமே பூட்டி கிடக்கும் இந்த பிறவாதீஸ்வரர் கோயிலை நிர்வாகிப்பதும், இறாவதீஸ்வரர் கோவில் அர்ச்சகரே,இவரிடமே இக்கோவிலுக்குக்கான சாவி உள்ளது.

மத்திய தொல்லியல்  துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும்,
இக்கோயில் ஒருமுறை மட்டுமே வரும் மஹா சிவராத்திரி அன்று பகல் வேளையில் ஒரு நாள் 
மட்டுமே திறந்திருக்கும்.

#அமைவிடம்:

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடக்கு பகுதியில், பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலைலிருந்து காஞ்சிபுரத்தை இணைக்கும் சாலையில், பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெரு காமராஜ் நகர் குடியுறுப்பு பகுதியில் உள்ளத. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Sunday, March 30, 2025

ஆகமங்களின் அடிப்படையில் ஐவகை நந்திகள்...

ஐவகை நந்திகள்


ஐவகை நந்திகள் என்பவை சிவ ஆகமங்களின் அடிப்படையில் சிவாலயங்களில் அமைக்கப்பெரும் ஐந்து நந்திகளாவர். 

ஆகமத்தில் ஒவ்வொரு நந்தியை அமைக்கும் விதமும், அமைவிடமும், அந்த நந்திகளின் வரலாறும் இடம்பெற்றிருக்கின்றன.

 *1. கைலாச நந்தி* 

கைலாச நந்தி என்பது ஐவகை நந்திகளில் முதலாவது நந்தியாகும். அனைத்துச் சிவாலயங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப் பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்தது. 

இவர் கரங்களில் பொன்னாலான பிரம்பினையும், வீர வாளினையும் கொண்டுள்ளார். 

இவர் எப்பொழுதும் தன்னுடைய மூச்சுக்காற்றினால் இறைவனாகிய சிவபெருமானைக் குளிர்வித்துக் கொண்டே இருப்பவர் என்கிறன சிவ ஆகமங்கள். சிவ ஆலயத்தினுள் இந்த நந்தி நிறுவப்படுகிறது.

 *2. அவதார நந்தி* 

அவதார நந்தி என்பது ஐவகை நந்திகளில் இரண்டாவது நந்தியாகும். சிவாலயங்களில் காணப்பெறும் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். 

சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள். இதற்கும் ஒரு கதை இருக்கிறது. 

அசுரர்களின் தொல்லைகளைத் தாங்கமுடியாமல் முனிவர்களும், தேவர்களும் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேரில் சிவபெருமான் போரிடப் புறப்பட்டார். அவர் அசுரர்களை நோக்கிச் செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது. சிவபெருமான் போரில் பின்தங்காமல் இருப்பதற்காக, திருமால் காளையாக வடிவெடுத்து சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச் சென்றார். 

இதனால் ரிஷபாரூடர் என்ற பெயர் சிவபெருமானுக்கு வந்தது. அவ்வாறு விஷ்ணு ரிசபமாக மாறியதால் சிவாலயங்கள் அனைத்திலும் விஷ்ணு நந்தி அமைக்கப்பெருகிறது. இருப்பினும் நான்கு நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த விஷ்ணு அவதார நந்தி நிறுவப்படுவதில்லை.

 *3. அதிகார நந்தி* 

அதிகார நந்தி என்பது ஐவகை நந்திகளில் மூன்றாவது நந்தியாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானைத் தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால், இதற்கு அதிகார நந்தி என்ற பெயர் வந்தது. 

சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பெற வேண்டுமென சிவ ஆகமங்கள் கூறுகின்றன. 

கைலாயத்தில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். 

சிவபெருமானின் காவலனான நந்தி தேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். 

சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பி வர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளேச் செல்ல முயன்றார். 

இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார். 

தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப் பெற்றார் என்று ஒரு கதை கூட உண்டு.

 *4. சாதாரண நந்தி* 

சாதாரண நந்தி என்பது ஐவகை நந்திகளில் நான்காவது நந்தியாகும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப் பெறுவதில்லை.

 *5. பெரிய நந்தி* 

பெரிய நந்தி என்பது ஐவகை நந்திகளில் ஐந்தாவது நந்தியாகும். சிவாலயங்களில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் காவலனாக எந்நேரத்திலும் பேர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் இந்த நந்தி இருக்கிறார். அதன் காரணமாக இவரை மகாநந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலின் முன்பகுதியில் இருக்கும் நந்தியை இந்நந்திக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, March 29, 2025

தஞ்சை பூதலூர்வட்டம், அரங்கநாதபுரம் சிவன்கோயில்...



தஞ்சை மாவட்டம், பூதலூர்வட்டம், அரங்கநாதபுரம் சிவன்கோயில்

 

திருவையாற்றில் இருந்து மேற்கில் 17 கிமி தூரத்தில் உள்ளது அரங்கநாதபுரம். திருக்காட்டுப்பள்ளியை தாண்டி மூன்று கிமி தொலைவில் ரங்கநாதபுரம் செல்ல இடதுபுறம் ஒரு அலங்கார வளைவு உள்ளது அதில் இரண்டு கிமி தூரம் சென்றால் ரங்கநாதபுரம் அடையலாம்.    

ஊரின் முகப்பிலேயே உள்ளது சிவன்கோயில் கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் இது முதலாவது கோயிலாகும். கோயிலின் காலம் 1800ஆண்டுகளாகலாம். யானைக்காட்டுக் கோயில் என்றும் பூரட்டாதிக் கோயில் என்றும் கொண்டாடப்படும் திருவானேசுவரர் கோயில்,

கோயில் கிழக்கு நோக்கியது, எனினும் வாயில் மேற்கில்  ஒன்றும் வடக்கில் ஒன்றும் உள்ளது வடக்கில் சிறிய ராஜகோபுரம் போன்ற அமைப்பில் வாயில் உள்ளது. வலம்புரி விநாயகர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னதிகள் கீழ் தளத்தில் உள்ளன. மற்றும் வடபுறம் சண்டேசர் சன்னதியும் உள்ளது, சண்டேசர் சன்னதியை ஒட்டி துர்க்கைக்கு மாடம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் துர்க்கை வைக்கப்பட்டு உள்ளார். முற்கால சோழர் காலத்தை சார்ந்த வலம்புரி விநாயகரும், சண்டிகேஸ்வரரும் புடைப்பு சிற்பமாக உள்ளனர். 

வலம்புரி விநாயகரின் விமானம் கஜபிருஷ்டம் போல அமைக்கப்பட்டு உள்ளது. கரண்டமகுடம், சரப்பளி, தோள், கை வளைகள், சிற்றாடையுடன் வலம்புரியராய் லலிதாசனத்திலுள்ள பிள்ளையாரின் வல முன் கையிலும் தும்பிக்கைச் சுருட்டலுக்குள் மோதகம். இட முன் கை தொடையில் முஷ்டியில் இருக்க, பின்கையில் இடப்புறம் கரும்புத்தோகை, வலப்புறம் தந்தம். பிள்ளையாரின் வலத்தந்தம் உடைந்திருக்க, இடப்புறம் தந்தமில்லை. சுகாசனத்திலுள்ள சண்டேசுவரரின் சடைப்பாரம் இருபுறமும் கனத்துப் பரந்துள்ளது. பனையோலைக் குண்டலங்கள், முத்துச்சவடி, முப்புரிநூல், தோள், கை வளைகள், அரைக்கச்சு இருத்தும் சிற்றாடை அணிந்துள்ள அவரது இடக்கை தொடைமீதிருக்க, வலக்கையில் மழு ஏந்தி உள்ளார். 

வடகிழக்கில் நவக்கிரக மண்டபம் உள்ளது. தென்புறம் ஒரு மாடத்தில் சிறிய நந்தி ஒன்று உள்ளது, இது மேல் தளத்தில் உள்ள அம்பிகைக்கு உரியது.  தென்புறம் பெரிய வில்வமரம் ஒன்று பசுமையான தழைகளுடன் காய்த்து நிற்கிறது. 

 கபிலர் மாமரத்தைத் ‘தேமா’ என்று குறிப்பிடுகின்றார் பழுத்தவுடன் இனிக்கும் வகையை தேமாங்கனி என சொல்ல கேட்டிருக்கலாம். வாழை, பலா, மா முதலிய முக்கனிகளுள் ஒன்றாகும். தேமா மரம் ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளாக இந்திய நாட்டில் உள்ளது. இதுவே இத்தல மரமாகும். 

இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் மேல் தளத்தில் உள்ளனர். இறைவன்- திருவானேஸ்வரர் இறைவி - காமாட்சி அம்மன் 

காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார். இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இந்த அரங்கநாதபுரம் என தல புராணம் கூறுகிறது. இக்கோயிலும் ஏழு யானைகளின் மேல் உள்ளபடி அமைத்துள்ளனர். தற்போது கிழக்கு திக்கில் மட்டுமே யானை தெரிகிறது. 

மூலவர் விமானம் கஜகடாக்ஷசக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

இதனால் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம்.

ஏழைகளுக்கு ஏழு வகையான வண்ண ஆடைகளை இங்கு வந்து தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரைத் தொடராமல் விலகும் என்பது நம்பிக்கை.

.

காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் ஒரு வார காலம் தங்கி தியானம் செய்துள்ளார் என்பதே பெரும் சிறப்பு. 

கிழக்கு நோக்கிய மாடக்கோயில் மேற்கில் ஒரு சிறிய வாயிலும், வடபுறம் சிறிய கோபுரத்துடன் ஒரு வாயிலும் உள்ளது. தென்புறம் மாடக்கோயிலின் மேலேற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.   கீழ் தளத்தின் கிழக்கில் ஐராவதம் யானை அந்த மாடக்கோயிலையே தாங்கி நிற்பது போல அமைத்துள்ளனர். 

முதல் தலத்தில் மாடக்கோயில் கருவறை அதன் முன்னர் ஒரு அர்த்தமண்டபம் மகாமண்டபம் என உள்ளது. பத்து படிகள் ஏறியவுடன் மகாமண்டபத்தினை அடையலாம். இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார், அவரின் முன்னம் ஒரு சிறிய நந்தியும் கருவறை வாயிலில் சிறிய விநாயகரும் உள்ளனர். மகாமண்டபத்தில் தொட்டி போன்ற அமைப்பு கட்டப்பட்டு  அதில் அழகிய  பெரிய நந்தி பலிபீடம் உள்ளது அம்பிகை காமாட்சி சன்னதியில் இரு அம்பிகைகள் இருக்க காணலாம். கருவறையில் ஒன்றும் இடைநாழியில் ஒன்றும் உள்ளன. இடைநாழியில் உள்ள அம்பிகை கரம் பின்னமானதால் புதிய மூர்த்தியை வைத்துள்ளனர் என நினைக்கிறேன். 

மாடக்கோயிலின் மேல்தள கருவறையினை சுற்றி வர பிரகார அமைப்பு உள்ளது கருவறை கோட்டங்களில் தென்புறம் தக்ஷணமூர்த்தி மட்டுமே உள்ளார்.  பிற மாடங்கள் காலியாக உளளன. கல்வெட்டுக்கள் மிக சமீபத்தவை 1984 இக்கோயிலில் கஜலட்சுமி சன்னதியினை வைத்தியநாதர் மகன் சுப்பிரமணியன் என்பவர் கட்டிய செய்தியும் உச்சிகால பூஜைக்கு ஒரு ஏக்கர் நிலமும், வடக்கில் அவரது துணைவியார் சிறிய கோபுரம் அமைத்ததையும் குறிக்கிறது.. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மகாகாளநாதர் மாகாளேசுவரர், காளகண்டேசுவரர்...

அம்பர் (அம்பல்) என்ற திருத்தலத்தில் ஒரு கி.மீ இடைவெளியில் சம்பந்தரால் பாடல் பெற்ற இரண்டு பெரிய கோயில்கள் உள்ளன.  
ஒன்று அம்பர் பெருந்திருக்கோயில். இது மாடக்கோயில். பிரம்மா அன்னமாம் பொய்கை தீர்த்தத்தில் நீராடி பிரமபுரீஸ்வரரை வணங்கி தனது அன்னப்பறவை தோற்ற சாபம் நீங்கி மீண்டும் நான்முகனாக உருப்பெற்ற தலம்.  

மற்றொன்று "அம்பர் மாகாளம்". 

அம்பர் சோமாசி மாற நாயனார் அவதாரத்தலம் என்பதால் இவ்விரண்டு கோயில்களிலும் அவருக்கு திருவுருவச்சிலைகள் உள்ளன.  

இனி அம்பர் மாகாளம் குறித்து சிந்திப்போம்.  

திருமாகாளம்,
மகாகாளநாதர் கோயில்,    கோயில் திருமாளம், பூந்தோட்டம் - 609 503.
நன்னிலம் வட்டம், 
திருவாரூர் மாவட்டம்.

*மூலவர்:
மகாகாளநாதர், மாகாளேசுவரர், காளகண்டேசுவரர்,

*தாயார்: அச்சம் தவிர்த்த நாயகி, ராஜமாதங்கி
பட்சயாம்பிகை

*தல விருட்சம்:
கருங்காலி, மருதமரம்

*தீர்த்தம்:
மாகாள தீர்த்தம் 

*பாடல் பெற்ற தலம். 
திருஞானசம்பந்தர்  மூன்று தேவாரப்பதிகங்கள் அம்பரில் அருளியுள்ளார்.               

"மாகாளம்" என்ற பெயர் பெற்ற சிவத்தலங்கள் இந்தியாவில் மூன்று உள்ளன. அவை, வடஇந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம். 

*அசுரர்களாகிய அம்பன், அம்பாசுரன் ஆகியோரைக் கொன்ற பாவம் தீர காளி தேவி வழிபட்ட திருத்தலம் இது என்பதால் "மாகாளம்" எனப்பட்டது. 

*திருமணத் தடை நீக்கும் தலமாக  மாகாளநாதர் கோவில் விளங்குகிறது.   மதங்க மகரிஷி தனக்கு புத்திரப்பேறு வேண்டி இத்தல இறைவனை  வழிபட்டு, இறைவன் அருளால் பிறந்த பெண் குழந்தைக்கு ராஜமாதங்கி என்று பெயரிட்டு வளர்த்து, உரிய பருவம் வந்ததும், இவ்வாலயத்தில் உள்ள இறைவனுக்கு அவளை மணமுடித்து வைத்தார். 

திருமணக் கோலத்தில் வீற்றிருக்கும்போது, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று பார்வதியிடம் இறைவன் கேட்க, அதற்கு பார்வதி, இத்தலம் வந்து நம் இருவரையும் வழிபடும் திருமணமாகாத ஆண், பெண் இருபாலாருக்கும் திருமணம் விரைவில் நடைபெற அருள செய்ய வேண்டும் என்ற வரம் கேட்டுப் பெற்றாள். 

எனவே நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்துகொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும். 

*சோமாசி மாற நாயனார், நாள்தோறும் சுந்தரருக்கு அவர் திருவாரூரில் இருந்தபோது உணவுக்குத் தூதுவளை கீரை கொண்டுவந்து தரும் தொண்டை செய்து சுந்தரரின் நட்பைப் பெற்றார். 
அவரிடம் சோமாசிமாறர், "தான் செய்யவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றும், அதற்குச் சுந்தரர் உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். சுந்தரர், சோமாசிமாறரை அழைத்துச்சென்று திருவாரூர்ப் பெருமானிடம்  வேண்டுகோளைத் தெரிவித்தார். 
அதற்கு இசைந்த இறைவன், "தான்வரும் வேடம் தெரிந்து இவர் எனக்கு அவிர்ப்பாகம் தர வேண்டும்" என்று பணித்தார்; சோமாசிமாறரும் அதற்குச் சம்மதித்தார். 

யாகம் நடைபெறும் இடத்திற்குத் தியாகராசப் பெருமான், புலையர் வேடத்தில், நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி உடன் பிடித்துக்கொண்டு, தோளில் இறந்துபோன கன்றினைப் போட்டுக்கொண்டு,  தலையில் தலைப்பாகை (முண்டாசு) கட்டிக்கொண்டு, விநாயகரையும், முருகப்பெருமானையும் சிறுவர்களாக்கிக் கொண்டு, உமாதேவியை புலையச்சி வேடத்தில் தலையில் கள்குடம் ஏந்தியவாறு அழைத்துக்கொண்டு வந்தார்.  
இக்கோலத்தில் வந்த இறைவனைப் பார்த்து, எல்லோரும் அபசாரம் நேர்ந்து விட்டதென்று எண்ணியும், இக்கோலத்தைக் கண்டு பயந்தும் ஓடினர். 
ஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியாரும் அவ்விடத்திலேயே அச்சத்துடன் நிற்க - தந்தையார் வருவதைக் குறிப்பால் விநாயகர் சோமாசிமாறருக்கு உணர்த்தி அவர்கள் அச்சத்தை நீக்கினார். இறைவனை அவர்கள் அந்த வடிவிலேயே வீழ்ந்து வணங்கி வரவேற்க - இறைவன் மகிழ்ந்து சோமாசிமாறருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது தலவரலாறு. 

சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கும் அம்பர்பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது; இன்று அந்த இடம் "பண்டாரவாடை திருமாளம்" என்று வழங்குகின்றது. 
இன்றும் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று சோமாயாகப் பெருவிழா இங்கு நடக்கிறது.      

*வாசுகி என்ற நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றது. 
நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் அடையலாம். 

*சம்சாரசீலன் என்பவனிடம் தேவேந்திரன் தோற்று இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான். சுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார்.  சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.  

*சோழர் காலக் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.           

*இத்தலம் மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், பூந்தோட்டம் எனும் பகுதிக்கு அருகே அரசலாற்றின் கரையில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஶ்ரீ நாகேஸ்வரர் முட்டம், கோயம்புத்தூர்



*அருள்மிகு ஶ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில், முட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்,தமிழ் நாடு*
தென்னிந்திய (தமிழக)கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம்1000 ஆண்டுகள் முதல்,1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் , திருக்கோவில் முழுக்க முழுக்க எம்பெருமான் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

🛕 முக்கிய தெய்வம் எம்பெருமான் :
 🪷சிவன் 
🪷நாகேஸ்வரர்

🛕தலவிருட்சம் : வில்வம்

🛕அம்மன்/தாயார்: முத்துவாளி அம்மன் 

🛕தீர்த்தம்:
காஞ்சிமாநதி தீர்த்தம்

🛕தலவிருட்சம்: மாமரம் 

🛕ஆகமம் பூஜை: இரண்டு கால பூஜைகள்

🛕இடம் : முட்டம்

🛕மாவட்டம் : கோயம்புத்தூர் 

🛕மாநிலம் : தமிழ் நாடு

🛕பாடல் வகை:
🪷திருப்புகழ்


🛕பாடியவர்கள்:
🌷அருணகிரிநாதர், 
🌷கச்சியப்ப முனிவர்

⚛️தமிழ்மாதம் முதல்தேதி, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, அஷ்டமி ஆகிய தினங்களில் வழிபாடுகள் சிறப்புற நடைபெறுகிறது.

⚛️ பவுர்ணமி அன்று சிவனை வழிபட்டு சிறப்படைவது தமிழ்ச் சமய மரபு. 

☯️சித்ரா பவுர்ணமி, மகாசிவராத்திரி ஆகிய விழாக்கள் இத்தலத்தின் சிறப்பு பெருவிழாக்கள் ஆகும்.

🛕தல சிறப்பு:
இங்குள்ள சிவ லிங்கப்பகுதியில் நாகத்தின் உருவம் அமைந்திருப்பது சிறப்பாகும். 

☯️இத்தலத்தில் பூஜைகள் அனைத்தும் தூய தமிழில் நடைபெறுவது பெருஞ்சிறப்பு.

🛕பொது தகவல்:

விநாயகப் பெருமான் சன்னிதி கன்னிமூலையில் அமைந்துள்ளது.

🌷 நாகேஸ்வரருக்குரிய ஆவுடையார் முன்பு சதுர வடிவில் பீடமாக பழுதுற்ற நிலையில் இருந்தது. பழமையான திருக்கோயிலின் வட்டவடிவமான ஆவுடையாரை பக்தர் ஒருவர் வழங்க, முன்பிருந்த சதுர வடிவ ஆவுடையார் கீழே பொருத்தப் பெற்று, மேலே வட்ட ஆவுடையாரில் உயரமாக நாகேஸ்வரரை லிங்க வடிவில் எழுந்தருளச் செய்யப் பெற்றது நாகாபரணத்துடன் கூடிய அலங்காரத்தில் அருள் புரியும் நாகேஸ்வரரை துதித்து அருள் பெறலாம். இத்தலத்தில் தூய பசும்பால் மட்டுமே அபிஷேகத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பாக்கெட்பால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இதையடுத்து சண்டிகேஸ்வரர், முருகன், திருமால் ஆகியோருக்குத் தனி சன்னிதிகள் உள்ளன.

🍃 கோவிலின் வடகிழக்கு பகுதியில் பைரவர் தனிச் சன்னிதியும் நவகிரஹ சந்நதியும் உள்ளன. 

🌹ராகு, கேது, நாகங்கள் சிவபெருமானை வழிபட்ட தலம் ஆதலால் ஐந்துதலை ஆதிசேசன் விளக்கு தூண் நிறுவப்பட்டுள்ளது. 

✡️ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருநாளன்று இத்தூணின் மீது தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். 

🌺காஞ்சிமா நதிக்கரையில் இருந்து நாகம் ஒன்று. தினமும் நடு இரவில் வந்து வழிபட்டுச் சென்றுள்ளது. நாககன்னிகள் காஞ்சிமா நதி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்ததாக ஐதீகம்.

🛕பிரார்த்தனை
இராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் துன்பம் நீங்கி இன்ப நிலையை எய்துவர்.

✡️இராகுகேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கார்த்திகை தீபத்திருநாளன்று கோயிலிலுள்ள ஆதிசேசன் விளக்கு தூண் மீது தீபம் ஏற்றி வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

🛕தலபெருமை:

அம்பிகை முத்து வாளியம்மன் என்ற திருநாமத்தில் அருள்புரிகின்றார்.

🕉️ முத்துக்களால் அமைந்த காதணி அணிந்ததால் இப்பெயர் பெற்றார். அம்மனின் சிற்பத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். உயர்ந்த பேரழகுடன் கூடிய சிற்பம் உலகில் வேறு எங்கும் காண இயலாத ஒன்று. வலது கையில் நீலோத்பல மலரை ஏந்தி உள்ளார். முன்கையில் பரியகம் எனும் ஆபரணம் உள்ளது. இருதோள்களிலும்அடுக்கடுக்காக அரும்புகள் பொருந்திய கடகங்கள் உள்ளன. அவற்றின் நடுவே வட்டமான மலர்மொட்டுக்கள் உள்ளன. கை விரல்களில் உள்ள மோதிரம் மற்றும் ரேகைகளைக் கூட காண முடிகிறது.

🔯 தலையில் உள்ள முடி 9 அடுக்குகளாக பூவேலைப்பாடுகளுடன் பொருந்தியுள்ளது. மூக்கில் மூக்குத்தி அணியத்தக்கவாறு ஒரு சிறு துவாரம் உள்ளது.


🍃 மணிக்கழுத்தில் சவடியும் காறைகளும் சிறப்பாக அமைந்துள்ளது. இவைகளின் நடுவே ஒரு சிறு துவாரம் உள்ளது. இதில் அணிகலனை மாட்டலாம்.

🌷அம்பாள் திரிபுரை அம்சமானவர் ஆதலால் மணிவயிறும் மார்பும் பிடியளவு இடையுடன் காட்சியளிக்கிறார். 

☯️இடுப்பில் மேகலை என்ற ஆபரணம் சிறப்புடன் விளங்குகின்றது. மேகலை இதழ் இதழாகத் தொங்குகின்றன.

⚛️ மேகலை மாட்டுவதற்கு 16 துவாரங்கள் உள்ளன. 16 கோவை உள்ள மேகலைக்கு கலாபம் எனப் பெயர். 

🪷இவ்வணிகலனை அணிந்து ஒயிலாக கலாப மயில் போல் காட்சியளிக்கிறாள் மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியோடு விளங்கும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் தொழலாம். (கோயில் அர்ச்சகர் இத்துவாரங்களில் ஊது பத்தி குச்சியை நுழைத்து துவாரம் இருப்பதைக் காட்டினார்) கற்சிலையில் துல்லியமாக சிறிய துவாரங்களை ஏற்படுத்துவது என்பது எளிதான காரியமில்லை. 

🌹மதுரை மீனாட்சியம்மன் சிலையையும், இச்சிலையையும் ஒரே சிற்பி வடித்ததாக கூறப்படுகிறது. 

🌺தட்சிணாமூர்த்தி சிலையில் மடித்து வைத்துள்ள இடதுகாலை நந்தியானது வருடிக் கொண்டுள்ளதைக் காணலாம். வேறெங்கும் காணக்கிடைக்காத ஆபூர்வ சிற்பம் ஆகும்.

🌺தல வரலாறு:
தென்கயிலை எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஊர் முட்டம். 

🔯மலையின் அடிவாரமே முட்டம் என அழைக்கப்படுகிறது. வெள்ளியங்கிரி மலையில் இருந்து தோன்றிய காஞ்சிமாநதி தெற்குநோக்கி ஓடி புகழ்பெற்ற முட்டமாகிய தலத்தைத் தாண்டி கூடுதுறையில் சிற்றாறு எனும் நொய்யல் நதியில் கலந்து பேரூரை அடைகிறது.

✡️ கயிலையின் சிறப்புக்கு கங்கை நதி தென் கயிலைக்கு வளம் சேர்க்க காஞ்சி மா நதி எனப்படும் நொய்யல் ஆகும். இந்நதி கரூர் வழியாக பயணிக்கின்றது. 

🕉️முட்டத்தில் தொடங்கி கரூர் வரை 36 சிவன்கோயில்களை சோழ மன்னர்கள் கட்டி உள்ளனர்.

🕉️மிகப் பழமை வாய்ந்த சிவன்கோயில்களை கரிகாற் சோழன் திருப்பணி செய்ததாக சரித்திர சான்றுகள் மூலம் அறியப்படுகிறது. அந்நாளில் இவ்வூரை அமர புயங்க நல்லூர் சதுர்வேதி மங்கலம் என வழங்கியதாக கல்வெட்டு குறிப்புகளில் காணப்படுகிறது.

⚛️ இத்தலத்தைச் சுற்றி கோட்டையும் அடர்ந்த வனங்களும் சூழ்ந்திருந்தன. கோயில் அருகே ஒரு குளம் அமைந்திருந்தது.

☯️ கோயில் மிகுந்த கலைநயத்துடனும், சிற்பங்கள் மிகத் துல்லியமாக கலை நுணுக்கத்துடன் சிற்ப கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது.

🌷 சேர சோழர்கள் காலத்தில் சிறப்பு விளங்கிய கோயில் படிப்படியாக பராமரிப்பின்றி அழியத் துவங்கின. 

🪷ஓய்சள வல்லாளர் காலத்தில் முற்றிலுமாக கவனிப்பாரற்று சேதம் அடைந்து விட்டது. அயல் சமய தாக்கங்களாலும் ஆங்கிலேயர் படையெடுப்பாலும் கோயில் பொலி விழந்தது.

🍃கோயிலில் பூஜித்து வந்த அந்தணர்களும் மானிய குழப்பங்களாலும் இயற்கை சூழலாலும் குடிபெயர்ந்து விட்டனர். காலப்போக்கில் பெருங்காடாக மாறிவிட்டது. 

🌹கோயிலைச் சுற்றிலும் சப்பாத்தி கள்ளி மரங்கள் அடர்ந்து வளர்ந்து கொடிய மிருகங்கள் வாழும் புகலிடமாக மாறிவிட்டது.

🔯 தொல்லியல் அறிஞர் ஐ-இராமசாமி, பதினைந்து வயது முதல் முட்டத்து கோயிலுக்குச் சென்று வருகிறேன். அம்மனின் தோற்றமும் பேரழகும் என்னைக் கவர்ந்தன. அம்மன் கோயிலுக்கு கதவுகள் கிடையாது. கோயில் பாதி அளவு மண் மூடி இருந்தது. எங்கும் சப்பாத்தி கள்ளி மரங்கள் சூழ்ந்திருந்தன. கோயில் புதர்களால் மூடப்பட்டு கிடந்தது. குறுங்காடை குருவிகளின் அவலக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. என கோயில் நிலைபற்றி குறிப்பிட்டிருந்தார்.

🛕 இக்கோலத்தில் இருந்த கோயிலை, பழந்திருக்கோயிலின் அமைப்பிலேயே அமைக்க வேண்டும் என முடிவெடுத்து பழைய பொலிவு மாறாமல் திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டத்தில் பேரூராதினத்தின் பங்கு அளிப்பறியதாகும்.

✡️ முட்டத்து நாகேஸ்வரம் காலம் தோறும் மன்னர்களாலும், சான்றோர்களாலும் போற்றி பாதுகாக்கப்பட்ட இத்தலம் 14.12.11 அன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்று பக்தர்கள் வழிபாட்டுக்குரியதாக திகழ்கின்றது.

🛕சிறப்பம்சம்:
 இங்குள்ள சிவ லிங்கப்பகுதியில் நாகத்தின் உருவம் அமைந்திருப்பது சிறப்பாகும்.

⚛️ இத்தலத்தில் பூஜைகள் அனைத்தும் தூய தமிழில் நடைபெறுவது பெருஞ்சிறப்பு.

✡️•திறக்கும் நேரம்:
காலை9 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.


🛕 திருக்கோயில் முகவரி
*அருள்மிகு ஶ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில், முட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்,தமிழ் 

Friday, March 28, 2025

இந்தியாவில், சூரிய கிரகணம் தெரியுமா?

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம்  மார்ச் 29-ம்தேதி ஏற்பட உள்ளது. இது பகுதி சூரிய கிரகணமாக இருக்கும் என்பதால் இந்த நிகழ்வை இந்தியாவில் காண முடியாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.



இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும், இது சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கியது. பகுதி சூரிய கிரகணம் என்பது நிலவு சூரியனை முழுமையாக மறைத்துவிடாது. மாறாக சிறியதாக, பாதியளவுக்கு மட்டுமே மறைக்கும். சுமார் 80 கோடி மக்கள் இதனை பார்க்க முடியும். ஆனால் இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது. ஆனால் நாசாவின் கூற்றுப்படி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியும்.

இந்தியாவில், சூரிய கிரகணம் IST பிற்பகல் 2:20 மணிக்குத் தொடங்கி மாலை 6:13 மணிக்கு முடிவடையும்; தோராயமாக நான்கு மணி நேரம் நீடிக்கும். கிரகணம் மாலை 04:17 மணிக்கு உச்சத்தை அடையும். இருப்பினும், நேர வேறுபாடு மற்றும் நிகழ்வின் சீரமைப்பு காரணமாக இந்தியாவால் கிரகணத்தைக் காண முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே இந்து கோவில்களில் சூரிய கிரகண பரிகார பூஜைகள் நடைபெறாது. 

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்தானது. இது விழித்திரை காயங்கள் மற்றும் மீளமுடியாத கண் சேதத்தை ஏற்படுத்தும். சூரிய கிரகணத்தைக் பார்க்கும் போது எப்போதும் பொருத்தமான கண் பாதுகாப்பு கவசங்களை அணிய அறிவுறுத்தப்படுகிறது. அதாவது சூரிய கிரகணத்தைப் பார்க்க பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும் அல்லது சர்வதேச பாதுகாப்பு தரநிலை ISO 12312-2 ஐப் பின்பற்றும் கிரகணம் பார்ப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக, 2025-ம் ஆண்டுக்கு இரண்டு சூரிய கிரகணங்கள் நிகழும் என்று நாசா கணித்துள்ளது. முதலாவது மார்ச் 29-ம் தேதி (நாளை) திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது செப்டம்பர் 21-ம் தேதி நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

பிறக்கும் குழந்தை நல்ல இறை சிந்தனையோடு பிறக்க பள்ளியறை பூஜை கான்க.

பொதுவாக கோவில்களில் நடக்கும் ஒவ்வொரு பூஜையும் சிறப்புக்குரியது. காலை பள்ளியறை பூஜை துவங்கி, இரவு பள்ளியறை பூஜை வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவற்றில் ஒவ்வொரு பூஜைக்கும் ஒரு பலன் உண்டு.

அவற்றில் சகல நலன்களையும் பெற்று தரும் முக்கிய பூஜையும் உண்டு. அதில் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பூஜைய இது தான். அது தான் பள்ளியறை பூஜை. எல்லா கோயில்களிலும் நடக்கும் பள்ளியறை பூஜை விசேஷமானது என்றாலும் சிவன் கோவில்களில் நடக்கும் பள்ளியறை பூஜை கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும்.
அதாவது கோயில்களில் நடை சத்துவத்திற்கு முன்பாக சுவாமி மற்றும் அம்பாளை பள்ளியறை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டி பாடல்கள் பாடி பூஜை செய்வார்கள். இதனை பள்ளியறை பூஜை என்பார்கள். 44 ஆயிரம் பழமையான சிவாலயங்களில், 36 ஆயிரத்திற்கும் அதிகமான ஆலயங்களில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பள்ளியறை பூஜை நடைபெற்று வந்துள்ளது.

ஆனால், இப்பொழுது இந்த பள்ளியறை பூஜை மிக குறைவான சிவாலயங்கள் மட்டுமே நடக்கிறது. அப்படியாக, இந்த பள்ளியறை பூஜையின் சிறப்புக்கள் பற்றி பார்ப்போம். கருவறையில் பல்லக்கில் புறப்படும் சிவபெருமானை, பக்தர்கள் பலரும் சுமந்து செல்வார்கள் அப்பொழுது சிவபுராணமும் பதிகங்களையும் பாடுவார்கள்.

ஈசன் பள்ளியறை வந்த பிறகு அம்பாள் ஈசனின் திருப்பாதங்களுக்கு பூஜை செய்து அழைத்துச் செய்வார். பின்னர் சுவாமி- அம்பாளுக்கு பால், பழங்கள் நைவேத்தியமாக வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தி, பாசுரங்கள் பாடி திருக்கதவுகள் மூடப்படும்.

இந்த பள்ளியறை பூஜையானது சுமார் அரை மணி நேரம் வரை நடைபெறும். இந்த பூஜையை காண்போருக்கு கோடி புண்ணியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு பள்ளியறை பூஜையை சிறப்பான நாட்களில் தரிசனம் செய்வது இன்னும் சிறந்த பலனை கொடுக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

சிலர் வீடுகளில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் உண்டாகும். அல்லது காரணமே இல்லாமல் பிரிந்து வாழ்வார்கள். இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ அசுபதி நட்சத்திரம் சேர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் பள்ளியறை பூஜையில் பங்கேற்க மீண்டும் அவர்கள் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்வார்கள்.

வாழ்க்கையில் தடைகள் விலகி வெற்றி பெற திங்கட்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்பது வெற்றியையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். மேலும், திருமண தாமதம் ஏற்படும் பெண்களும், ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த பெண்களும் ஒரு வருட காலம் செவ்வாய் தோறும் இந்த பூஜையில் பங்கேற்றால் விரைவில் திருமணம் கைக்குடி வருவதோடு நினைத்த கணவனுடன் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

அனைத்து விதமான சித்திகளும் கிடைக்க, அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும். கணவன் மற்றும் மனைவி உடல் ஆரோக்கிய குறைபாடுகள் சரியாக வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்பது நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சனிக்கிழமை நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதோடு, பள்ளியறை பூஜையில் பங்குகொள்பவர்கள் பூஜைக்கு தேவையான  பால், நைவேத்தியங்கள் கொடுப்பவர்களுக்கு, பொருளாதார கஷ்டங்கள் விலகும்.

கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு நல்ல முறையில் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க பள்ளியறை பூஜையில் பங்குகொண்டு முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்து வந்தால், அவர்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கும். அதோடு பிறக்கும் குழந்தை நல்ல இறை சிந்தனையோடு பிறக்கும்.

பள்ளியறை பூஜை முடிவில் அன்னதானம் செய்பவர்களுக்கு தொழில் நல்ல லாபம் கிடைக்கும். சில ஆலயங்களில் பள்ளியறை பூஜை நடைபெறுவதில்லை. அவ்வாறான ஆலயங்களுக்கு பள்ளியறை கட்டுவதும், மீண்டும் பள்ளியறை பூஜையைத் தொடங்க முயற்சி மேற்கொள்வதும் கோடி புண்ணியத்தைத் தரும்.

அப்பருக்கு கைலாய காட்சி கண்ட திருத்தலமான திருவையாறு..


உலகப் புகழ்பெற்ற 
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,
அப்பர் சுவாமிகளுக்கு
(திருநாவுக்கரசர் நாயனார்)
கைலாய காட்சி கண்ட திருத்தலமான, தமிழகத்தில் உள்ள காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்றான,
அம்மனின் சக்தி பீட வரிசையில் 
"#தர்ம_சக்தி_பீடமான" 
#தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 
உலகப் பிரசித்திப் பெற்ற 
#திருவையாறு 
#ஐயாறப்பர் என்ற #பஞ்சநதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள 
#அறம்வளர்த்தநாயகி என்ற #தர்மசம்வர்த்தினி_அம்பாளுக்கு 
#ஸ்ரீசக்ரம்_மேருடைய_தாடங்கம் பலவருடங்களுக்குபின் 
சாத்தப்பெற்ற காணக்கிடைக்காத காட்சி 🙏🏻 🙏🏻 🙏🏻 

அம்மனின் சக்தி பீட வரிசையில் தஞ்சை மாவட்டம், திருவையாறு தர்மசம்வர்த்தனி அம்பாள் உடனுறை ஐயாறப்பர் கோயில் தர்ம சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 51-வது சிவத்தலமாகும்.
திரு+ஐந்து+ஆறு - ஒற்றை ஆறாக உருண்டு வரும் காவிரியானது திருவையாறு அருகே காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்று ஐந்து கிளை ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் இவ்வூர் திருவையாறு என்று பெயர் பெற்றது.

#தல வரலாறு:

சிலாது மகரிஷி யாகசாலை நிலத்தை உழுதபோது அவருக்கு பெட்டியில் கிடைத்த குழந்தை நந்திகேசர். அந்தக் குழந்தைக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதை அறிந்த மகரிஷி அதுகுறித்து கவலை அடைந்தார். குழந்தை வளர்ந்த பிறகு கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடும் தவம் புரிந்த நிலையில், சிவபெருமான் அக்குழந்தையை அரவணைத்து, ஐந்து விதமான அபிஷேகங்கள் செய்தார். அம்பிகையும் தாயுள்ளத்தோடு குழந்தைக்குப் பால், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரிணி தீர்த்தம், நந்தி வாய் நுரைநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இத்தல ஈசன் ‘ஐயாறப்பர்’ என்று அழைக்கப்படுகிறார். நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை தோற்றுவித்தவர். தருமபுரம் ஆதீனமும், திருவாவடுதுறை ஆதினமும் இப்பரம்பரையைச் சேர்ந்தவை.

*அறம் வளர்த்த நாயகி:

ஆண்கள் தர்மம் செய்வதைவிட ,குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால், பலன் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம். அதன்படி ‘தர்மசம்வர்த்தனி’ என்ற பெயரை ஏற்று, பார்வதி தேவி இத்தலத்தில் எழுந்தருளி, தர்மத்தின் அவசியத்தை பெண்களுக்கு அறிவுறுத்துகிறார். அனைத்து நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்கே அஷ்டமி திதியில் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

அம்பாள், மேல் கரங்களில் சங்கு சக்கரத்துடனும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் திருமால் அம்சமாக அருள்பாலிக்கிறார். அதனால், திருவையாறு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் திருமாலுக்குக் கோயில்கள் இல்லை. காஞ்சி காமாட்சியைப் போன்று இறைவனிடம் இரு நாழி நெல் பெற்று, 32 அறங்களையும் செய்ததால், அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்று அழைக்கப்படுகிறார்.

*தனக்குத் தானே அபிஷேகம்:

திருவையாறு ஐயாரப்பருக்கு தினமும் அபிஷேக, ஆராதனைகள் செய்யும் அர்ச்சகர், ஒருசமயம் காசிக்குச் சென்றதால், குறித்த நேரத்தில், பூஜை செய்ய கோயிலுக்கு வர இயலவில்லை. இச்செய்தி மன்னருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மன்னர் வந்து பார்த்தபோது, அர்ச்சகர் ஐயாரப்பருக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். காசிக்குச் சென்ற அர்ச்சகர் மறுநாள் திருவையாறு வந்தடைந்தார். ஊராரும், மன்னரும் ஆச்சரியப்பட்டனர். அர்ச்சகரால் வரமுடியாத சூழல் ஏற்பட்டதால் ஐயாரப்பரே அர்ச்சகர் வடிவில் வந்திருந்து, தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டுள்ளார். உண்மையான பக்தி கொண்டு தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாரப்பர் என்பது இதன் மூலம் அறியப்படுகிறது.

*கோயில் அமைப்பு:

ஐயாரப்பர் கோயில் 15 ஏக்கரில் அமைந்துள்ளது. திருவீதிகள் உட்பட 5 பிரகாரங்களைக் கொண்ட இக்கோயிலில் சோழர் கால கல்வெட்டுகளும், சிற்பங்களும் நிறைந்துள்ளன. முதல் பிரகாரத்தில் ஐயாரப்பர் சந்நிதி அமைந்துள்ளது, அதே திருச்சுற்றில் உமா மகேஸ்வரர், சங்கர நாராயணர், பிரம்ம தேவர், திரிபுரசுந்தரி மற்றும் பரிவார மூர்த்தங்கள் அருள்பாலிக்கின்றனர்.

இரண்டாம் பிரகாரத்தில் பஞ்சபூத லிங்கங்கள், சப்த மாதாக்கள், ஆதி விநாயகர், நவக்கிரங்கள் எழுந்தருளிய ஐப்பேசுர மண்டபமும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் அமைந்துள்ளன. சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு தனித்தனி ராஜ கோபுரங்கள் உண்டு. கிழக்கிலும் தெற்கிலும் இரு கோபுரங்கள் உள்ளன. திருவிழாவின்போது, தெற்கு கோபுர வாசல் வழியாக ஐயாரப்பர் வீதியுலா வருவார். தென்கோபுர வாயிலில் ஆட்கொண்டார் எமனை காலின் கீழ் வைத்து வதைக்கும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். குங்கிலியம் இட்டு இங்கு வழிபாடு செய்யப்படும். குங்கிலியப் புகை பரவும் எல்லைவரை எமபயம் மற்றும் விஷம் இருக்காது என்பது நம்பிக்கை.

மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ‘ஐயாரப்பா’ என்று சொன்னால் ஏழு முறை எதிரொலிக்கும். நான்காம் பிரகாரத்தில் சூரிய புஷ்கரணி குளம், தென்கயிலாயம் (அப்பர் கையிலையைக் கண்டு தரிசித்தது), வடகயிலாயம் (ஓலோக மாதேவிச்சுரம்) அமைந்துள்ளன.

சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தில் நான்கு குழிகள் காணப்படுகின்றன. சுண்ணாம்பு, கருப்பட்டியை சேகரித்து வைக்க இரண்டு குழிகளும், மண்டபத்தைக் கட்டியவர்களுக்கு தரப்படும் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைக்க இரண்டு குழிகளும் தோண்டப்பட்டன. இந்த நான்கு குழிகளை இன்றும் கோயிலில் காணலாம். இந்தத் தியான மண்டபத்தில் அமர்ந்து பஞ்சாட்சரம் ஓதினால், அது லட்சம் மடங்கு பலன் தந்து, மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

*சப்தஸ்தான விழா:

நந்திகேசருக்கு அருள்பாலித்த சிவபெருமான், அவருக்கு ஞானோபதேசமும், சிவகணத் தலைமையும், முதல் குருநாதனாம் தகுதியும் அளித்தார். மேலும், தானே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகளாம் சுயசாம்பிகையை, பங்குனி புனர்பூச தினத்தில் திருமணம் செய்து வைத்தார். இதுதொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும். திருவையாறு (ஐயாரப்பர்), திருப்பழனம் (ஆபத்சகாயேஸ்வரர்), திருச்சோற்றுத்துறை (சோற்றுத்துறை நாதர்), திருவேதிகுடி (திருவேதிகுடி ஈசன்), திருக்கண்டியூர் (பிரமசிரக்கண்டீசுவரர்), திருப்பூந்துருத்தி (புஷ்பவனேஸ்வரர்), தில்லைஸ்தானம் (நெய்யாடியப்பர்) ஆகிய ஊர்களில் இருந்து பல்லக்குகளில் சிவபெருமான் அம்பிகையுடன் எழுந்தருளி, ஒரே இடத்தில் சங்கமித்து, பூச்சொரிதல் விழா நடைபெறும். விழாவின் இறுதியில் ஏழு கோயில் இறைவனும் இறைவியும் அவரவர் கோயில்களுக்குச் திரும்பிச் செல்கின்றனர்.

*திருவையாற்றில் கைலாயக் காட்சி:

திருநாவுக்கரசர், கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். முதலில் நடந்து சென்று பயணத்தைத் தொடங்கிய நாவுக்கரசர், பின்னர் தவழ்ந்து செல்லத் தொடங்கினார், அடியாரின் சிரமத்தைப் பார்த்த ஈசன், அவரை ஆட்கொள்ள எண்ணினார்.

ஒரு முனிவர் போன்று வேடம் தரித்த ஈசன், அருகில் மானசரோவர் குளத்தை அமைத்தார். நாவுக்கரசரிடம் சென்று, கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களைக் கூறி, திரும்பி ஊருக்குச் செல்லப் பணித்தார். ஆனால், கைலாயம் சென்று ஈசனை தரிசிக்காமல் ஊர் திரும்ப இயலாது என்பதில் நாவுக்கரசர் உறுதியாக இருந்தார். மானசரோவர் குளத்தில் மூழ்கி, திருவையாற்றில் உள்ள சூரிய புஷ்கரணியில் எழுந்து வருமாறு, நாவுக்கரசரைப் பணித்தார் ஈசன். அவ்வாறே செய்த நாவுக்கரசருக்கு, திருவையாற்றில் கைலாய தரிசனம் அளித்தார் சிவபெருமான்.

*தட்சிணாமூர்த்தி:

சுவாமி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை திருமால் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் அவருக்கு ‘ஹரிஉரு சிவயோக தட்சிணாமூர்த்தி’ என பெயர். முயலகனுக்கு பதிலாக இவர் ஆமையை மிதித்துக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு. மேல் நோக்கிய வலது கரத்தில் கபாலமும், கீழ் நோக்கிய வலது கரத்தில் சின்முத்திரையும், மேல் நோக்கிய இடது கரத்தில் சூலமும், கீழ் நோக்கிய இடது கரத்தில் சிவஞான போதமும் காணப்படுகின்றன.

*கோயில், தேர் சிறப்பு:

நவக்கிரகங்களில் இது சூரியத் தலமாகும். ஆட்கொண்டேஸ்வரருக்கு இத்தலத்தில் வடைமாலை சாற்றுவது வழக்கம். சுந்தரரும், சேரமான் நாயனாரும் இத்தலத்துக்கு வரும்போது காவிரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுந்தரர் பதிகம் பாடி, வெள்ளம் ஒதுங்கி அவருக்கு வழி கொடுத்தது.

காசிக்குச் சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் (திருவெண்காடு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு) திருவையாறும் ஒன்று. திருவையாறு தலத்தில் சிவபெருமானின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கம் பரந்து கிடப்பதாக ஐதீகம். அதனால் சந்நிதியை வலம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரிக் கரையின் அருகே கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் சமாதி அமைந்துள்ளது. தை மாத பகுள பஞ்சமி தினத்தில், இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி அவருக்கு இங்கே இசை அஞ்சலி இசைப்பது வழக்கம்.

5 படி நிலைகளில், பதினெட்டே முக்கால் அடி உயரத்தில், 12.9 அகலத்தில் பழமை மாறாமல் இத்திருக்கோயிலின் தேர் அமைக்கப்பட்டுள்ளது. 60 டன் இலுப்பை மரங்கள், 2 டன் தேக்கு மரங்கள், 2.5 டன் இரும்பு பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேரில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர், 63 நாயன்மார்கள், அப்பர் கைலாயக் காட்சி, தசாவதாரக் காட்சி, சப்தஸ்தான திருவிழாக் காட்சி, மீனாட்சி திருக்கல்யாணக் காட்சி, சிவபுராணக் காட்சி உள்ளிட்ட 750 சிற்பங்கள் அமைந்துள்ளன.

*திருவையாற்றுப் பதிகம்:

கைலாயக் காட்சியை கண்டபோது, திருநாவுக்கரசர் திருவையாற்றுப் பதிகத்தைப் பாடியுள்ளார். இறைவனின் ஆணைப்படி பொய்கையில் மூழ்கிய அப்பர், திருவையாற்றில் குட்டையில் எழுந்தார். அப்போது யானை, சேவல், குயில், அன்னம், மயில் என அனைத்து உயிர்களும் சிவபெருமான், சக்தி வடிவங்களாகத் தெரிந்தன. இந்த உலகமே கைலாயத்தின் வடிவம்தான் என்பதை உணர்ந்தார். இந்த உலகைத் தவிர வேறு ஒரு கைலாயம் என்று தனியாக இல்லை என்பதை உணர்ந்து தெளிந்தார். தன் கண் முன்னால் இருந்த ஒன்றை தற்போது அறிந்து கொண்டேன் என்பதைக் குறிக்கும் விதமாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘கண்டு அறியாதனக் கண்டேன்’ என்று பாடியுள்ளார் அப்பர். இந்தத் தொகுப்பு பன்னிரு திருமுறையில் நான்காம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. திருவையாறு பதிகம் பாடினால், கணவன் – மனைவி ஒற்றுமை ஓங்கும் என்பது நம்பிக்கை.

*திருவிழாக்கள்:

சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, அமாவாசை, ஆடிப் பூர விழா, பௌர்ணமி தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு இங்கே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வாகனங்களில் எழுந்தருளி, விதியுலா நடைபெறும். சப்தஸ்தான (பங்குனி) விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு. சிவபெருமான் தன்னைத் தானே பூஜித்த ஆத்மபூஜை உற்சவம், சித்திரையில் நடைபெறும். ஆடி அமாவாசை தினத்தில் அப்பர் கைலாயக் காட்சி விழா நடைபெறும்.

 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

ஐவண்ணப்பெருமான்.. திருமூக்கீச்சுரம்..
பிரம்மன் வழிபட்ட தலம்..!!

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்...!!
 

 *இந்த கோயில் எங்கு உள்ளது?* 

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் என்னும் ஊரில் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

திருச்சியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உறையூர் அமைந்துள்ளது. உறையூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?* 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு.

ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம். இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 68வது தேவாரத்தலம் ஆகும்.

 *வேறென்ன சிறப்பு?* 

இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் 'திருமூக்கீச்சுரம்" என்று பெயர் ஏற்பட்டது.

பைரவர், சனிபகவான், சூரியன் ஆகியோர் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது.

இங்கு அம்பாள் காந்திமதி மற்றும் பஞ்சமுக விநாயகரும் தரிசனம் தருகின்றனர்.

இக்கோயில் வரலாற்றுடன் சேவலுக்கு தொடர்பு இருப்பதால் இப்பகுதியினர் சேவலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர்.

எதிரி, யானை அளவு பலம் பெற்றிருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம்.

 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

சித்ராபௌர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடி பௌர்ணமி (இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார்) ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

 *எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.

 *இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?* 

சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், பொங்கல் நைவேத்தியம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, March 27, 2025

சிவபெருமானுக்கு செய்யப்படும் பூஜைகளில் பிரதோஷ பூஜை மிகவும் முக்கியமானது.

பிரதோஷ மகத்துவம்சிவபெருமானுக்கு செய்யப்படும் பூஜைகளில் பிரதோஷ பூஜை மிகவும் முக்கியமானது.
 சுக்ல பக்ஷத்தில் (அமாவாசை முதல் பௌர்ணமி வரையிலான 15 நாட்கள்) மற்றும் கிருஷ்ண பக்ஷத்தில் (பௌர்ணமி முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள்) திரயோதசி மாலை (பதிமூன்றாவது நாள்) மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. 

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வரும் பிரதோஷ நேரம் என்பது சிவபெருமானை வழிபடும் நேரம். அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்வது பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து, இறுதியாக மோட்சத்தைத் தரும் (எனவே பிரதோஷம் என்று பெயர்). பிரதோஷ நேரத்தில் சோம சூத்ர பிரதக்ஷிணம்(1) என்று அழைக்கப்படும் ஒரு விசேஷமான வலம்வருதல் செய்யப்படுகிறது.

பிரதோஷ புராணம்:ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் மந்தர மலையை மத்தாகவும் பயன்படுத்தி பாற்கடலிலிருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். 
அப்போது அப்போது கடலிலுருந்து விஷமும் (ஆலம்) வாசுகி கக்கிய விஷமும் (ஆலம்) சேர்ந்து பயங்கர விஷம் - ஹாலாஹலம் வந்தது. அனைவரும் அச்சமடைந்து ஓடினர். திருமால் அந்த விடத்தைத் தடுக்க முயன்று அவர் தம் திருமேனி நிலவண்ணமானது.

 அனைவரும் தேவதேவரான சிவபெருமானை அடைக்கலம் அடைந்தனர்.  

கருணையின் சிகரமாக இருந்த சிவபெருமான் அந்த விஷத்தை உண்டார். பிறகு அவருடைய கட்டளைப்படி மீண்டும் அம்ருதம் பெறுவதற்கான முயற்சியை தேவர்களும் அசுரர்களும் தொடர்ந்தனர். துவாதசியில் அம்ருதம் கிடைத்தது. அம்ருதம் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லாமல், தேவர்கள் கேளிக்கைகளில் தங்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார்.திரயோதசி அன்று அவர்கள் சிவபெருமானை வணங்கி நன்றி சொல்லாத தங்கள் பெரும் தவறை உணர்ந்து பிழைபொறுக்க வேண்டினர்.

 மிக எளிதில் அருள்புரியும் அசுதோஷியான சிவபெருமான் அவர்கள் பிழை பொறுத்தருளி நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனமாடினார். அந்த நேரம் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. 
பிரதோஷம் என்றால் பெரும் குற்றம் என்று பொருள். குற்றங்களில் பெரும் குற்றமான சிவபெருமானை வணங்காத குற்றத்தை நீக்கும் விரதம் ஆகையால் இதற்குப் பிரதோஷ விரதம் என்று பெயர். அந்த நேரத்தில் சிவபெருமானை யார் வேண்டிக்கொள்கிறாரோ, அவர்களின் விருப்பங்களை சிவபெருமான் நிறைவேற்றி அவர்களுக்கு முக்தியும் தருகிறார்.

பிரதோஷ கால அபிஷேகத்தின் போது கீழ்க்கண்டவை பெரும் பலன் தருவதாகக் கருதப்படுகிறது.
பால் நீண்ட ஆயுளைத் தரும்
 நெய் மோட்ச நிலையைத் தரும்
 தயிர் நல்ல குழந்தைகளைத் தரும்
 தேன் இனிமையான குரல் கொடுக்கிறது
 அரிசி பொடி கடன்களில் இருந்து விடுபடுத்தும்
கரும்புச் சாறு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்
பஞ்சாம்ருதம் செல்வத்தைத் தரும் 
எலுமிச்சை மரண பயத்தை நீக்குகிறது 
சர்க்கரை பகையை நீக்கும் 
இளநீர் மகிழ்ச்சியைத் தருகிறது
 அன்னம் கம்பீரமான வாழ்க்கையை அளிக்கிறது சந்தனம் லட்சுமியின் அருளைத் தரும் சிவபெருமானுக்கு அன்புடன் அபிஷேகம் செய்யுங்கள், அவர் தன்னையே தருபவர் !!
  சிவ பூஜைக்கு வில்வம் மற்றும் பூக்கள் கொடுக்கலாம்.   

ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிவபெருமான் கோவிலுக்குச் சென்று அவர் அருளில் ஆனந்தமாக வாழுங்கள்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, March 26, 2025

மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய பெற்ற தலம் வெள்ளூர் திருக்காமேஸ்வரர்.

வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில்
*மகாலட்சுமி  இனிய சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்*

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோவிலை அடுத்து, ஆனால் முசிறிக்கு  6 கி.மீ. முன்னால் உள்ள தலம்  வெள்ளூர். இத்தலத்து இறைவன் திருநாமம்  திருக்காமேஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டது.
வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத வகையில், இங்கே மகாலட்சுமி கோவில் கொண்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கோவிலின் குபேர பாகத்தில் மகாலட்சுமி தவம் செய்யும் கோலத்தில்,  ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்தோடு சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு, அமர்ந்த திருக்கோலத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி அவதாரமெடுத்தார். அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்பு நிறைந்த கடலில் அசுரர்களை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டு திரும்பும்போது சிவபெருமானின் பார்வையில் மோகினி தென்பட்டாள். மோகினியின் அழகைக்கண்டு சிவபெருமான் மோகிக்க ஹரிஹரபுத்திரர் எனும் ஐயப்பன் அவதரித்தார். இதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி கோபம் கொண்டாள். உடனே வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் எனும் வெள்ளூரில்,மகாலட்சுமி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து  தவம் செய்யலானாள். பல யுகங்களாக தவம் செய்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக்கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வமழையாகப் பொழிந்து சிவபூஜை செய்தாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் மகா லட்சுமியின் முன் தோன்றி, ஹரிஹரபுத்திர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கிக்கூறி மகாலட்சுமியை சாந்தப்படுத்தினார். பின் மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்ராமமாக மாற்றி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமரச் செய்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பெற செய்தார்.
பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் ப்ரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

வில்வமரமாகத் தோன்றி, வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ததின் பலனாக இத்தலத்தில் மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மகாலட்சுமியை சகல செல்வத்துக்கும் அதிபதி ஆக்கினார். அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடன், தல விருட்சமான வில்வ மரத்தடியில் தவக்கோலத்தில் இருந்து அருள்பாலிக்கின்றாள். திருவருட்பாலிக்கிறாள். இத்தலத்திலேயே தங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை அருளும்படி கூறினார். இவள் அபய, வரத திருக்கரங்களோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தருகிறாள். ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்யும் முன் வில்வமரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள்.  மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால் இத்தல இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.

இத்தலத்தின் பிற சிறப்புகள்

சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. ராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான். ஈசன் காமனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியானாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள். மகேசன், மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர் என்றும், மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதராகவும் பெயர் பெற்றார்.

பிரார்த்தனை

தங்கம், வெள்ளி நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். சுக்கிர தோஷம் உடையவர்கள்,வெள்ளிக்கிழமைகளில் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் . தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பிரமபுரீஸ்வரர் திருக்கோயில் அம்பல்பூந்தோட்டம் நன்னிலம்..

அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், 
அம்பல்- 609 503
பூந்தோட்டம் வழி,   
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம். 
*மூலவர்:
பிரமபுரீஸ்வரர்

*தாயார்:
சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை

*தல விருட்சம்:
புன்னை மரம்

*தீர்த்தம்:
பிரம தீர்த்தம் 

*பாடல் பெற்ற தலம்
பாடியவர் சம்பந்தர்.                     

*அம்பர் இன்று  அம்பல் என்று வழங்கப்படுகிறது.
  
*திருக்கோயிலில் "அன்னமாம் பொய்கை" என்று வழங்கப்படும் சிறப்புவாய்ந்த கிணறு உள்ளது.   

*நைமிசாரண்ய முனிவர்கள், எல்லாப் பெருமைகளையும் உடையதும், முக்தி தருவதுமான தலம் ஒன்றின் பெருமையைக் கூறுமாறு சூத முனிவரிடம் கேட்க, மிக்க மகிழ்ச்சியடைந்த சூதர், பிரமபுரி எனப்படும் அம்பர் தலத்தின் பெருமைகளைக் கூறினார். 
"வேண்டுவோர் வேண்டுவன யாவற்றையும் அளிக்கும் இத்தலம், கற்பக விருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும் ஒத்தது. இங்கு சிறிது நேரம் தங்கினாலும் காசியில் தங்கி தருமங்கள் செய்வதற்கு நிகராகும். இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் சிவலோகப் பதவி பெறுவது நிச்சயம். இதன் அருகில் ஓடும் அரிசிலாறு காவிரியே. அதிலும், கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையிலும் நீராடினால் பெறும் பயன் அளவிடற்கரியது. நீராடுவோர் கொடிய பாவங்களில் இருந்து நீங்கப்பெறுவர்."   
*பிரமன் அருள் பெற்றது:    ஒரு சமயம் பிரமனும் திருமாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று நீண்ட காலம் போரிட்டுக் கொண்டனர். அப்போது அவ்விருவரிடையே முதலும் முடிவும் அறியமாட்டாத சோதி வடிவாகச் சிவபெருமான் தோன்றினார். அச்சோதியின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என இறைவன் கூறவே, திருமால் வராக வடிவெடுத்து திருவடியைக் காண்பதற்காக   நிலத்தை அகழ்ந்து   பாதாளம் வரை சென்றும் முடியாதுபோகவே இறைவனைத் தொழுது, " நீரே பரம்" எனக் கூற, பிரமன் அன்னப்பறவை வடிவில் முடி காணச் சென்றார். அது முடியாது போகவே, இறைவனது முடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சி சொல்லுமாறு கூறி விட்டு, தான் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தார். 

"அன்னப்பறவை வடிவிலேயே இருப்பாயாக" என்று பிரமனைப் பெருமான் சபித்து விட்டு, இனித் தாழம்பூவை சிவபூஜைக்கு உதவாதவாறும் சபித்தார். 

பிரமன், அன்னவடிவம் நீங்குவதற்காக புன்னாக வனத்தை அடைந்து கடும் தவம் மேற்கொண்டார்.
சிவபெருமான், பிரமனுக்கு காட்சி அளித்து, அவர் வேண்டியபடியே, அன்ன உருவம் நீங்கிப் பழைய வடிவு பெறுமாறு
அருளினார். 
பிரமா தவம் செய்த பொய்கை, " அன்னமாம் பொய்கை" எனப்படுமாறும்,  மாசி மகத்தன்று அதில் நீராடுவோர் தேவ பதவி பெறுவர் என்றும் பல வரங்களை அளித்தருளினார்.                      

*சம்கார சீலனை அழித்தது: சம்கார சீலன் என்பவன் பிரமனைக் குறித்து தவம் செய்து யாவரையும் வெல்லும் வரம் பெற்றான். இந்திரனையும் பிற தேவர்களையும் வென்றான். அதனால் கலங்கிய இந்திரனைப் பார்த்துப் பிரமதேவன், "நீ புன்னாக வன ஈசனை நோக்கி தவம் செய்தால் அப்பெருமான் அந்த அசுரனை அழித்தருளுவார்" எனக் கூறினார். அவ்வாறே தவம் செய்து கொண்டிருந்த இந்திரனைத் தேடி அசுரன் அம்பருக்கும் வந்து விடவே, இறைவன் கால பைரவரை அனுப்பி அவ்வசுரனை வீழ்த்தினார்.             

*விமலன் அருள் பெற்றது:    காசியைச் சேர்ந்த விமலன் என்ற அந்தணன் தன் மனைவியோடு பல தலங்களை வணங்கி விட்டு அம்பரை  வந்தடைந்து, பெருமானையும் அம்பிகையையும் பல்லாண்டுகள் வழிபட்டுப் பணி செய்து வந்தார்.
இறைவன் அவருக்கு காட்சி அளித்து 
அன்னமாம் பொய்கையில் கங்கையை வச்சிரத் தூண் போல் எழுமாறு செய்யவே, விமலனும் தன் துணைவியுடன் அதில் நீராடி மகிழ்ந்தார். 

*மன்மதன் வழிபட்டது:   தேவலோக மாதர்களால் தனது தவம் வீணானதால் மன்மதன் மீது சினந்த விசுவாமித்திரர் இனி அவனது பாணங்கள் எவரிடமும் பலிக்காமல் போகக் கடவது என்று சபித்தார். அதனால் வருந்திய மன்மதன், பிரமனது சொற்படி புன்னாக வனத்திற்கு வந்து பிரமபுரீசனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றான். 

*நந்தன் பிரமஹத்தி நீங்கியது:  காம்போஜ தேச அரசனான நந்தன்  ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது புலித் தோலால் தன் உடலை மறைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த பிங்கலாக்கன் என்ற முனிவரைப் புலி என்று எண்ணி அம்பு எய்தான்.  முனிவன் அக்கணமே மாண்டார். அரசனை பிரமஹத்தி பற்றியது. அப்பழி தீர வேண்டிப் பல தலங்களுக்கும் யாத்திரை செய்தும் அது அவனை நீங்கவில்லை. 
அவன் இந்த அம்பர் எல்லைக்கு வந்தபோது பிரமஹத்தி அவனைப் பின் தொடர அஞ்சி ஊர்ப் புறத்திலேயே நின்றுவிட்டது.
பிரமபுரீசுவரர் கோயிலுக்குச் சென்ற அரசன் பெருமானைத் தரிசித்துத் தனது பழி தீர்த்தருளுமாறு வேண்டினான். பிரமஹத்தி அவனை விட்டு நீங்கியது. இறைவனது திருவருள் பெற்ற அரசன் மீண்டும் தன்னாட்டிற்குச் சென்றான். 

பின்னர் உத்தமன் என்ற தனது மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டு மீண்டும் அம்பரை வந்தடைந்து தொண்டுகள்கள் பல செய்தான்.

அப்போது அங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டது.
தன் கையிலுள்ள எல்லாப் பொருட்களையும் அளித்துப் பசிப்பிணி தீர்த்து வந்தான். கைப்பொருட்கள் முற்றும் செலவானதும் பெருமானது சன்னதியை அடைந்து, பெருமானே வழி காட்ட வேண்டும் என்று விண்ணப்பித்தான். அவனுக்கு இரங்கிய பெருமான் விநாயகப் பெருமான் மூலம் நாள்தோறும் படிக்காசு பெறச் செய்து பஞ்சம் தீர்த்தருளினார்.  

*சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த,  பெருமானது மலரடிகளை என்றும் மறவாத இவர், திருவாரூர் சென்று  சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதனை ஏற்ற  சுந்தரர், மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். 
யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும், கணபதியும், கந்தனும் 
நீச உருவில்  யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் "யாகம் வீணானது" எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார். 

*இந்த மாடக்கோயிலே கோட்செங்கச் சோழ நாயனாரின் கடைசித் திருப்பணியாகச் சொல்லப்படுகிறது. 

*சங்க இலக்கியங்களில்,   அரசர்களும், கொடையாளிகளும், புலவர்களும், கலைஞர்களும் அம்பரில் வாழ்ந்ததாக குறிப்பு உள்ளதாக அறிகிறோம். 

*மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுள்ளார்.  

*இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு உள்ளன.  

*இக்கோயில் பேரளத்திலிருந்து தென்கிழக்கே சுமார் ஆறு கி.மீ தொலைவில் உள்ளது.  பூந்தோட்டம் இரயில் நிலையத்திற்குக் கிழக்கே 5-கி.மீ. தூரத்திலிருக்கும் அம்பர் மாகாளத் தலத்திற்குக் கிழக்கே 1-கி.மீ. தூரத்தில் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.      
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, March 25, 2025

திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்.

ஸ்ரீபதஞ்சலி ஸ்ரீவியாக்ரபாதர் அதிஷ்டானம். திருப்பட்டூர் வியாக்ரபாதர் பிருந்தாவனம். 
காசிக்கு நிகரான திருப்பட்டூர்!
ஸ்ரீஆதிசேஷனின் அவதாரமாகிய
பதஞ்சலி முனிவருக்கு, அவர் சிந்தனைக்கு ஈடான ஒரு முனிவர் நண்பராகக் கிடைத்தார். அவர்... வியாக்ரபாதர். இருவரும் இணையற்ற நண்பரானார்கள். காட்டிலும் மலையிலுமாக கடும் தவம் மேற்கொண்டார்கள்.

தில்லையம்பதி என்று போற்றப்படுகிற சிதம்பரம் திருத்தலத்தில், இவர்களுக்கு சிவனார் திருக்காட்சி தந்து, தன் திருநடனத்தையும் ஆடிக்காட்டியதைப் புராணம் அழகுறச் சொல்லியிருக்கிறது. ஒருகாலத்தில், மகிழ மரங்களும் வில்வ மரங்களும் சூழ்ந்த திருப்பட்டூர் வனப்பகுதியில், பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அனுதினமும் சிவபூஜை செய்தார்கள். கண் மூடி தவமிருந்தார்கள். பர்ணசாலை அமைத்து, மௌனம் அனுஷ்டித்தார்கள்.

யோகிகள் தவமிருந்த பூமி எனும் சிறப்பும் கொண்ட திருப்பட்டூர் தலத்தில், அமானுஷ்யங்களும் அதிசயங்களும் பக்தர்களுக்கு சத்விஷயங்களாக இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கின்றன.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானம் அருகில், ஒரு பத்துநிமிடம் அமைதியாகக் கண்மூடி உட்காருங்கள். தெளியாத மனமும் தெளியும். தீராத பிரச்னையும் தீரும். உணர்ந்து சிலிர்ப்பீர்கள்.

பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. பயணித்தால், காசி விஸ்வநாதர் ஆலயத்தை அடையலாம். சிறிய அதேசமயம் அழகான கோயில். உள்ளே நுழைந்ததும், வியாக்ரபாதர் திருச்சமாதியைத் தரிசிக்கலாம். அங்கே பிரம்மா கோயிலில் பதஞ்சலி முனிவர் சமாதி. இங்கே, வியாக்ரபாதரின் திருச்சமாதி. மனித உடலும் புலியும் கால்களும் கொண்ட வியாக்ரபாதர், தன் காலால் உண்டு பண்ணிய திருக்குளம் அருகில் உள்ளது. காசிக்கு நிகரான ஆலயம். கங்கைக்கு நிகரான திருக்குளம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

திருப்பட்டூர் வருபவர்கள், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்து, வியாக்ரபாதர் தீர்த்தக்குளத்தில் கால் அலம்பிவிட்டு, சிவனாரைத் தரிசிக்கவேண்டும். முடிந்தால், காசிவிஸ்வநாதருக்கு வஸ்திரமும் ஸ்ரீவிசாலாட்சி அம்பாளுக்குப் புடவையும் சார்த்தி மனதார வேண்டிக் கொண்டால், அதுவரை தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள், நம் பரம்பரையில் உள்ள பித்ருக்கள் சாபம் முதலானவை நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
அடுத்து, வியாக்ரபாதரின் அதிஷ்டானத்துக்கு வந்து, ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து, கண்மூடி பிரார்த்தனை செய்யுங்கள். .. உங்கள் மூதாதையர்கள் அனைவரின் ஆசீர்வாதம் முழுவதும் கிடைக்கப்பெறுவீர்கள்.

காசி விஸ்வநாதர் ஆலயம், காசியம்பதிக்கு நிகரான திருத்தலம்!
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

குழந்தைகள் நோயின்றி வாழ கரவீரநாதர் திருக்கோயில் கரையபுரம்.



சிவஸ்தலம் பெயர் திருகரவீரம் (தற்போது வடகண்டம் கரையபுரம் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர் கரவீரநாதர், பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர் பிரத்தியட்சமின்னம்மை, பிரத்யக்ஷ நாயகி
பதிகம் திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவாரூரில் இருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கரையபுரம் செல்லும் வழி என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோவிலை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும். கோவில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது. அருகில் திருக்கண்ணமங்கையில் (திவ்ய தேசம்) ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு கரவீரநாதர் திருக்கோயில்
கரையபுரம்.
மணக்கால் ஐயம்பேட்டை அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610104

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 
கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள இறைவன் கரவீரநாதர் என்றும் பெயர் பெற்றார். இத்தல இறைவன பிரம்ம தேவனால் பூஜிக்கப் பட்டவர் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற் பெயரும் உண்டு.

கௌதமர் பூசித்த இத்தலம் திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயிலாகும். நான்கு புறமும் மதிற்சுவருடன் ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியில் ஆலயத்தின் தீர்த்தம் அனவரத தீர்த்தம் காணலாம். முகப்பு வாயில் கடந்தால் விசாலமான முற்றவெளியுடன் வெளிப் பிரகாரம் உள்ளது. நேரே பலிபீடம், அடுத்து நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. சுவாமி, அம்பாள் கோயில்களைச் சேர்த்த பெரிய வெளிப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. நந்தி மண்டபத்தை அடுத்து ஒரு சிறிய கோபுரம். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் உள்ளது. இத்தகைய அமைப்புள்ள கோவில்கள் திருமணக் கோலம் என்று கூறுவார்கள். அம்பாள் சந்நிதிக்கு எதிரில் சூரிய பகவானின் சந்நிதியும் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
இக்கோவிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. அமாவாசை நாட்களில் பெண்கள் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. ஆலயத்தின் தல விருட்சமான செவ்வரளி மரம் மேற்கு வெளிப் பிரகாரத்தில் இறைவன் சந்நிதி விமானத்திற்குப் பின்புறம் உள்ளது. இத்தலத்திற்கு வந்து தலவிருட்சமான செவ்வரளிக்கு 3 குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் 3 மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும். பிறகு இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து அந்த நீரில் நேய்வாய்ப்பட்ட குழந்தைகளை குளிப்பாட்டினால் நோய் குணமாகும். குழந்தைகள் நோயின்றி வாழ்வார்கள என்பது ஐதீகம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் முதல் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருஞான சம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார். சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

சுந்தரர் பெருமானுக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர்.

சுந்தரர் பெருமானுக்கு ஊன்றுகோல்_வழங்கிய_பூண்டி_ஊன்றீஸ்வரர்.
கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை.
திருவள்ளூரில் இருந்சேல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் திருவெண்பாக்கம் (பூண்டி) கிராமத்தில் அமைந்துள்ளது, மின்னொளி அம்மாள் சமேத ஊன்றீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இவ்வாலய இறைவன் ஊன்றீஸ்வரர், வெண்பாக்கநாதர், ஆதாரதண்டேஸ்வரர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை என்பதாகும். கனிவாய்மொழி நாயகி என்ற பெயரும் உண்டு. தேவாரப் பாடல்கள் பெற்ற 276 சிவாலயங்களில், இது 250-வது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். அதேநேரம் தொண்டை நாட்டில் உள்ள தலங்களில் 17-வது தேவாரத் தலம் இது.
இந்த ஆலயத்துதின் தீர்த்தம் கயிலாய தீர்த்தம் கொசஸ்தலை ஆறு, தல விருட்சம் இலந்தை மரமாகும். கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிவபெருமான் ஊன்று கோல் கொடுத்து உதவியதால். இங்குள்ள இறைவனுக்கு 'ஊன்றீஸ்வரர்' என்று பெயர் வந்தது.

கோவிலின் வெளிப்புற தோற்றம்
இதற்கு முன்பு இந்த சிவன் கோவில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் திருவுளம்புதூர் என்ற ஊரில் இருந்தது. 1942-ம் ஆண்டு பூண்டி நீர் அணை கட்டுவதற்காக திருவுளம்புதூர் உள்ளிட்ட பல கிராமங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது.

திருவுளம்புதூரில் உள்ள பழைய கோவிலுக்கு பதிலாக. புதிய கோவில் கட்டுவதற்காக திருவெண்பாக்கத்தில் (பூண்டி) மாற்று நிலத்தை அரசு வழங்கியது.

திருவுளம்புதூர் பழைய கோவிலில் இருந்து மூலவர், தூண்கள். சிற்பங்கள் தவிர மற்ற தெய்வ சிலைகள் அகற்றப்பட்டு, புதிய இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த புதிய கோவிலுக்கு 1968-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் பழைய கோவிலில் பிரதான கோபுரத்தின் சில பகுதிகள் பூண்டி ஏரியின் கரையில் இருந்து இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

*#தலவரலாறு#*

சைவ குரவர்களில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் திருவாரூரில் பரவை நாச்சி யாரை மணந்து வாழ்ந்து வந்தார். சிறிது காலங்கள் உருண்டோடிய பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார், திருவொற்றியூரில் சிவ சேவை செய்து வந்த சங்கிலி நாச்சியாரை மணக்க முடிவு செய்தார். இது குறித்து அவர் சிவபெருமானிடம் கூற சிவபெருமானோ இரண்டா வது திருமணம் செய்யக்கூடாது என்று மறுப்பு தெரிவித்தார்.

சுந்தரர் தன்னுடைய நிலையில் மாறாமல் இருந்ததால் சிவபெருமானே அவருக்கு சங்கிலி நாச்சி யாரை தன் தலைமையில் இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். அப்போது 'இனிமேல் முதல் மனைவியான பரவை நாச்சியாரை பார்க்கச்செல்லக்கூடாது' என்று சிவபெருமான் கூறினார். அதற்கு செல்ல மாட்டேன்' என்று கூறினார் சுந்தரர். சங்கிலி நாச்சியாரும் சுந்தரரிடம், நீங்கள் என்னை விட்டு பிரிந்து போகக்கூடாது எனக் கூறினார். மேலும் சத்தியமும் செய்து கேட்டார்.

உடனே சுந்தரர், அந்த இடத்தில் இருந்த மகிழம்பூ மரத்தின் அடியில் நின்று, 'உன்னை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் மனைவியிடம் செல்ல மாட்டேன்' என்று சத்தியம் செய்து கொடுத்தார். சில காலங்கள் சங்கிலி நாச்சியாருடன் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திடீரென முதல் மனைவி பரவை நாச்சியாரின் நினைப்பு வந்து மனதை வருத்தியது. அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

அதனால் சிவபெருமானுக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி திருவொற்றியூரில் இருந்து திருவாரூருக்கு கிளம்பினார் சுந்தரர், திருவொற்றியூர் எல்லையை விட்டு அவர் வெளியேறிய போது சிவன் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோகும்படி செய்து விட்டார்.

சத்தியத்தை மீறியதால் தன் கண் பார்வை போனதை உணர்ந்த சுந்தரர், சிவபெருமானிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தர வில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டு தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்து சேர்ந்தார் சுந்தரமூர்த்தி நாயனார்.

இங்கும் சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். ஆனால் சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. பரம்பொருளாகிய நீங்கள் இங்கு தான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே' என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு சிவபெருமான் இரங்கினாலும், அவருக்கு கண்களை தருவதற்குப் பதிலாக ஊன்றுகோல் ஒன்றை மட்டும் கொடுத்தார்.

தன் நண்பனான சிவன் தனக்கு அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தாருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. இதனால் கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்று கோலைத் தூக்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தி மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் வலது கொம்பு ஒடிந்து விட்டது. 
வேதசத்சங்கம்

*#கொம்பு_உடைக்கப்பட்ட_நந்தி_சிலை#*

இதைக்கண்டு சிவபெருமான் ஆத்திரம் அடைந்தார். ஆனால் அவரது மனைவியான மின்னொளி அம்மனோ, 'தவறு செய்வது மனித இயல்பு எனக்கூறி சிவபெருமானை சமாதானம் செய்தார். சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக் கொண்டு தடுமாறிய போது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டி செல்வதற்காக கிளம்பினாள். ஆனால் சிவன், அம்பாளைத் தடுத்து விட்டாராம்.

இதனை உணர்த்தும் விதமாக இவ்வாலயத்தில் அருளும் அம்மனின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது. பின்னர் அம்பாள் சுந்தரரிடம், 'மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்ப நிகழ்கிறது.

தற்போது உன்னுடைய கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினையே. எனவே கலங்காது செல். தகுந்த காலத்தில் ஈசனின் அருளால் உன் பார்வை திரும்பும்' என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்களால் சுந்தரரை சாந்தப்படுத்தினார். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழி காட்டினாராம்.

இதனால் இத்தல அம்மன் 'மின்னொளி அம்பாள்' என்றும், கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கனிவாக பேசி அருளியதால் `கனிவாய் மொழி நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார்.

பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் ப்ரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

பின்னர் இத்தலத்தில் இருந்து தன்னுடைய யாத்திரையை தொடங்கிய சுந்தரர், காஞ்சிபுரம் சென்றார். அங்கு ஏகாம்பரநா ரை பாடிப்பரவி இடது கண்ணும், திருவாரூருக்கு சென்று தியாகேசனைப் பாடி வலது கண்ணும் பெற்று, பின்னர் பல தலங்களை வழிபட்டு வெள்ளை யானையில் கயிலாய மலையை சென்றடைந்தார் என்பது வரலாறு.

இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இத்தல மூலவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண் பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை சிறப்பாக வடிவ மைக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஆலயத்தில் வழித்துணை விநாயகர், கணபதி, பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, ஆறுமுகவேலவர், வள்ளி, தெய்வானை, லிங்கோத்பவர், மகாலட்சுமி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர் போன்ற திருமேனிகளும் உள்ளன.

இவ்வாலய இறைவனுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணத்தடை விலகும். கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். இத்தல சுவாமிக்கும், அம்பாளுக்கும் தேன் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் படிப்படியாக பார்வை குறைபாடு நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து இருக்கும். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி எப்போது?

*திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் வாங்கிய பஞ்சாங்கம் படியே சனிப்பெயர்ச்சி; கோவில் நிர்வாகம்*
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 2026ம் ஆண்டில் வாங்கிய பஞ்சாங்கம் முறைப்படி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீசனீஸ்வர பகவான் தனிசன்னத்தில் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார். இக்கோவில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா மிகவிமர்ச்சியாக நடைபெறும். திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி தேதிகள் குறித்து நேற்று கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்.. பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி (Saturns transit) தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29ம் தேதி அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளனர். இது தொடர்பாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் "வாக்கிய பஞ்சாங்கம்" முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம்
இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி. 2026ஆம் ஆண்டிலேயே சனிப்பெயர்ச்சி நடைபெறும் என தெரிவிக்கின்றோம். ஆகையினால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு (Transit Rituals) நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.பக்தர்கள். ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் தனி அதிகாரி உத்தரவுப்படி கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

ஸ்ரீ ராம நவமி இந்த வருடம் எப்போது?

*ஸ்ரீராமஜயம்* *நவமி திதிக்கு சிறப்பு சேர்த்த ராமபிரான்* ஸ்ரீ ராமநவமி 06.04.25 அன்று கொண்டாடப்படுகிறது.  ராமாயணம் என்பது மிகப்பெர...