Saturday, December 31, 2022

🙏*ஸ்ரீராமஜெயம்🙏 *#ஸ்ரீ_கிருஷ்ணர்_தரிசனம்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
                    🙏*ஸ்ரீராமஜெயம்🙏
             *#ஸ்ரீ_கிருஷ்ணர்_தரிசனம் !!*

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

⭕ராதே ! ராதே ! ராதே ! ராதே !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !

⭕அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

⭕நந்தா குமாரா! நவநீத சோரா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !

⭕அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

⭕புராண புருஷா புண்ய ஸ்லோகா
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !

⭕அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

⭕வேணு விலோலா ! விஜய கோபாலா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !

⭕அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

⭕பண்டரி நாதா ! பாண்டு ரங்கா !
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !

⭕அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

⭕ஜெய் ஜெய் விட்டலா ! ஜெய ஹரி விட்டலா !

⭕ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா
 அமையும்.

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

          🙏ஓம் நமோ நாராயணாய 🙏
கிருஷ்ணாவதாரம் / க்ருஷ்ணாவதாரம் / 
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்

⭕நந்தகோபரும், யசோதையும் மிகுந்த சந்தோஷமடைந்தனர். தேவகியும் வசுதேவரும் ஒரு புறம் மகிழ்ச்சியுடனும், மறுபுறம் கம்ஸன் குழந்தை பிறந்தால் கொன்றுவிடுவானே என்று கலக்கமும் அடைந்தனர். ஆவணி மாதம், கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில், விருச்சிக லக்கினத்தில், நடு இரவில், மூவுலகங்களின் துன்பங்களையும் போக்க எண்ணம்கொண்டு, ஆனந்த வடிவான திவ்யமேனியுடன், வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக கிருஷ்ணன் சிறையில்அவதரித்தான். அப்போது,வானம் மழைக்கால மேகங்களால் மூடியிருந்தது. கண்ணனின் நீலநிற மேனியில் இருந்து தோன்றிய ஒளியால் அவ்வாறு மூடியிருந்ததுபோல் தோன்றியது. கருமேகங்கள் மழைநீரைக் கொட்டித் தீர்த்தன. மழைநீரால் அனைத்து திசைகளும் குளிர்ந்திருந்தது. வேண்டிய வரம் கிடைத்ததால் தேவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

⭕குழந்தை ரூபத்தில் இருந்த கண்ணன், தனது திருமேனியில், கிரீடம், கடகம், தோள்வளை, ஹாரம் ஆகியவற்றோடும், சங்கு, சக்கரம், தாமரை, கதை தரித்த கைகளுடனும் காட்சி அளித்தான். அவனது நீலமேனி இந்த எல்லாச் சின்னங்களையும் தரித்து பிரசவ அறையில் விளங்கியது. கம்ஸனுடைய அந்த அறை சோபையற்று இருந்தாலும், அவனது மார்பில் நிரந்தரமாக வசிக்கும் மகாலக்ஷ்மியின் பார்வையால் அந்த அறை லக்ஷ்மிகரமாக விளங்கியது.

⭕ஞானிகளின் மனதிற்கும் எட்டாத அந்த திவ்யஸ்வரூபத்தை வசுதேவர் கண்களால் தரிசித்தார். மயிர்க்கூச்சலுடன், ஆனந்தக் கண்ணீர் வடித்துத் துதித்தார்.“தேவனே! துன்பங்களை அறுப்பவனே! மாயையினால் லீலைகளைச் செய்கிறவனே! தங்கள் கடைக்கண் பார்வையால் என் துக்கங்களைப் போக்கி அனுக்ரஹிக்கவேண்டும்” என்று துதித்தார். தாயான தேவகியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவளும் துதித்தாள். கருணை வடிவான குழந்தைக் கண்ணன், அவர்கள் இருவருக்கும், அவர்களது முந்தைய இரண்டு ஜன்மங்களைப் பற்றிச் சொன்னார். "நீங்கள் இருவரும், முன்பு திரேதாயுகத்தில், பன்னீராயிரம் ஆண்டுகள் தவம் செய்ததால், பிரஸ்னிகர்ப்பன் என்ற பெயருடன் உங்களுக்கு மகனாகப் பிறந்தேன். அதன்பிறகு அடுத்த பிறவியில் நீங்கள் காசியபராகவும் அதிதியாகவும் பிறந்தீர்கள். நான் உங்களிடத்தில் வாமனனாக அவதாரம் செய்தேன். தற்போது மீண்டும் உங்களுக்கு மகனாகப் பிறந்திருக்கிறேன்" என்று கூறினார். இவ்வாறு, மூன்று பிறவிகளிலும் பகவானையே மகனாக அடைந்த அவர்கள் மிகுந்த பேறு பெற்றவர்கள் ஆனார்கள். பின்னர், சங்கு சக்ரங்களைத் தரித்து விளங்கிய அக்குழந்தை, தாயின் வேண்டுகோளுக்கிணங்க மனித உரு எடுத்தார். 

⭕பிறகு, வசுதேவரிடம், " என்னை கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் விட்டுவிட்டு, அவரது பெண் குழந்தையை எடுத்து வா" என்று ஆணையிட்டார். ஞானிகள் மனதில் இருப்பவரும், தாமரை மலரில் இருக்கும் அன்னக்குஞ்சு போல் அழகானவருமான அந்தக் கண்ணனை வசுதேவர் கையில் எடுத்துக்கொண்டார். திருமாலின் ஏவுதலால், கோகுலத்தில் யோகநித்ரையானவள், நந்தகோபர் வீட்டில் யசோதையிடத்தில் அவதரித்தாள்.

⭕நகரமக்கள் அனைவரும் மாயையினால் தூங்கினர். அறிவற்ற கதவுகள் கூட திருமாலின் கட்டளையால் தாமே திறந்து கொண்டன! ஆச்சர்யம்!

⭕பாக்யசாலியான வசுதேவர், கண்ணனை ஒரு துணியில் சுற்றி, கூடையில் சுமத்து, கோகுலம் எடுத்துச் சென்றார். ஆதிசேஷன் தன் படங்களால் மழையைத் தடுத்துக் குடை பிடித்தான். அவன் தலைகளில் இருந்த ரத்னமணிகளின் ஒளியால், இருட்டில் வழிகாட்டிக் கொண்டு வந்தான். யமுனை உயர்ந்த அலைகளுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வசுதேவர் அருகே சென்றதும், மாயவித்தையைப் போல் வடிந்து கணுக்கால் அளவாக ஓடியது. ஆச்சர்யம்!

🌺கோகுலத்தில் எல்லாரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவுகள் திறந்திருந்தன. குழந்தை அழும் சத்தம் கேட்ட வீட்டிற்குள் வசுதேவர் சென்று, யசோதையின் அருகே கண்ணனைப் படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையான யோகமாயாவை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.

⭕சிறையில், குழந்தையின் அழுகுரல் கேட்டு காவற்காரர்கள் எழுந்தனர். அரசனிடம் சென்று தகவல் கூறினர். அவிழ்ந்த தலையுடன் கம்ஸன் விரைந்தோடி வந்தான். தேவகியின் கைகளில் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு சந்தோஷப்படுவதற்குப் பதில் கலக்கமடைந்தான்.  இது நாராயணனின் மாயை என்று நினத்த கம்ஸன், அந்தக் குழந்தையை, தேவகியின் கரத்திலிருந்து வலுவாகப் பிடுங்கி இழுத்து, கற்பாறையில் அடித்தான். 

⭕யமனுடைய பாசக்கயிற்றில் இருந்து விடுபடும் நாராயண பக்தர்கள் போல, அக்குழந்தை கம்ஸனுடைய கையிலிருந்து விடுபட்டு, வேறு உருவத்துடனும், ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களுடனும் வானில் பரந்து விளங்கினாள்.

⭕“கொடிய கம்ஸனே! உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறு எங்கோ இருக்கிறான், அதை நீயே தேடி அறிந்து கொள்” என்று சொன்னாள். பின்னர், தேவர்கள் துதிக்க பூவுலகில் உள்ள அனைத்து ஆலயங்களையும் அடைந்தாள்.
மாயை கூறியவற்றை கம்ஸன் அசுரர்களுக்குச் சொன்னான். அதை கேட்ட பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள், பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று குவித்தார்கள். கருணையில்லாதவர்களுக்கு செய்யக் கூடாதது என்று எதுவும் இல்லை.

⭕நந்தகோபன் வீட்டில் யசோதையின் பக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டு கண்ணனும் அழுதான். கண் விழித்த யசோதையும், கோபியர்களும் செய்தியை நந்தகோபனிடம் கூறினார்கள். கோகுலம் முழுவதும் ஆனந்தக் கடலில் மூழ்கியது. காயாம்பூ போன்ற குழந்தையின் மேனியைக் கண்டு யசோதை மகிழ்ந்தாள். சந்தோஷத்துடன் பாலூட்டினாள். தொட்டுப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இத்தகைய பேற்றைப் புண்ணியசாலிகளும் அடையவில்லை!!  நந்தகோபனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அனைவருக்கும் தானங்கள் செய்தார். எல்லா இடையர்களும் மங்கள காரியங்கள் செய்தனர். கண்ணனைக் கண்டு, கோகுலத்தில் அனைவரும், அளவற்ற மகிழ்ச்சியில் ஆடிப் பாடி கண்ணன் பிறந்ததைக் கொண்டாடினார்கள்

                 🙏ஓம் நமோ நாராயணா🙏

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

     *ஸ்ரீ கிருஷ்ண பகவான் அருளாலே  இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!* 

*ஆத்மார்த்தம்..!*

*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Thursday, December 29, 2022

சைவ சமயம் பெண்டிரும் ஆணுக்குச் சமமாய் இறை வழிபாடு மற்றும் பூசைகள் செய்யலாம் என அனுமதிக்கின்றது.

பெண்ணில் நல்லாள் .
சைவ சமயம் பெண்டிரும் ஆணுக்குச் சமமாய் இறை வழிபாடு மற்றும் பூசைகள் செய்யலாம் என அனுமதிக்கின்றது.பிறிதொரு எந்த சமயத்திலும் இத் தெளிவு இல்லை என்பதே உண்மை.

இதற்கு முன் உதாரணமாக உமைத்தாயரர் அவர்களை எடுத்துக் கொள்ளலாம்.

கயிலையில் தாயார் சிவத்தின் கண் ஆகமப் பாடங்கள் கேட்க சிவமும் 28 ஆகமங்களும் அன்புடன் உரைத்து முடித்தார். "நான் என்ன உங்களைப் போல ஞானம் பெருகியவளா என்ன...?சிறிது எளிமையாக எனக்குச் சொல்லக் கூடாதா.."எனத் தாய் கேட்கிறார்.

சிவம் சிரித்துக் கொண்டே சொல்கிறார்..."ஏன் உனக்கு அத்தனை சிரமம் பூசை செய்தால் எதுவும் விளங்கும் "எனச் சொல்ல பார்வதி உடன் தாம் பூசை செய்ய வேண்டும் என சிவத்தி டம் சொல்லி , அவரின் வழிகாட்டுதலின  படி பூலோகம் வந்து ஒரு  மாமரத்தின் கீழ் பூசை செய்த இடம் காஞ்சீபுரம.சிவம் அம்பிகையின் பூசைக்கு இரங்கி வந்து காஞ்சியில் தரிசனம் கொடுத்தது.

பெரியபுராணத்தில சேக்கிழார் சுவாமிகள் மேற்படி நிகழ்வுகளை தேன் தமிழில் விவரிக்கிறார்.

 வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாம் தெளிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகையா ளுடையாள். (12:19:50)

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள்
பெண்ணில் நல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து.(12:19:51)

சேக்கிழார் சுவாமிகள் உமைத்தாயாரை பெண்ணில் நல்லாள் என்றும் பெருந்தவக் கொழுந்து என்றும் பாராட்டிப் பாடுகிறார்.

பெண்ணில் நல்லாள் என்னும் பதத்தை சேக்கிழார் சுவாமிகள் எங்கிருந்து எடுத்தார் எனப் பார்ப்போம்.
 
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.(3 :24 : 1)

சைவம் இல்லறத்தை ப்போற்றும்.இப்பூவுலகில் இல்லறத்தில் உரிய அறங்களை இல்லக் கிழத்தியுடன் நிறைவேற்றியும் கூட வீடு பேறு அடைய முடியும்.கணவன் மனைவி இருவரும் இணைந்து சிவநெறி கடைப்பிடிக்க வீடு பேறு அடையலாம்.எப்படி என்றால் பெண்ணில் நல்லாளோடு பெருந்தகை சிவம் இருந்தது போல என்கிறார்.

திருமூலர் திருமந்திரம் நான்காம் தந்திரம் , ' ஆதார ஆதேயம் ' தலைப்பில் இரண்டாம் பாடலாக,

தரித்திருந் தாள்அவள் தன்னொளி நோக்கி
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளை
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்தும்
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே . ' 

எனப்பாடி அருளி இருக்கிறார். சத்தியை ' மாது நல்லாள்'  எனச சொல்கிறார்.

சேக்கிழார் பெரியபுராணம் பாடுங்கால் திருமுறைகள் அனைத்தும் உள்வாங்கி அதன் செறிவுகளை நயத்துடன் வெளிப்படுத்துவது சிறப்பாம்.

நம் சைவ சமயம் இல்லறத்தை அனுமதிக்கிறது. மகளிர் விபூதி பூசலாம் , பூசை செய்யலாம் , தீக்கை பெறலாம்..தம் வாழ்க்கைத் துணை நலத்துடன் சிவத் தொண்டுகள் அனைத்தும் நிறைவேற்றலாம்  என வழிகாட்டுகிறது.

பெரியபுராணத்தில ,அமர்நீதி நாயனார் , சிறுத்தொண்டர் நாயனார் , இளையான்குடி மாற நாயனார் , திருநீலகண்டர் முதலிய அடியார் பெருமக்கள் தாங்கள் இல்லத் துணைவி யுடன்தான் வீடு பேறு அடைந்தார்கள் எனச் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதும் நாம் கவனிக்க வேண்டும்.

நம் வீட்டு மகளிர் அனைவரும  பெண்ணில் நல்லாள் மற்றும்  பெருந்தவக் கொழுந்துகள் என்பதையும் நாம் கருத்தில்  கொள்ளல் வேண்டும்.


ஸ்ரீ காளஹஸ்தி லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை பற்றிய அரிய தகவல்கள் !!

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா! ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா! ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா!
சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம்.
ஸ்ரீ காளஹஸ்தி லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை பற்றிய அரிய தகவல்கள் !!

ஒரு சிலந்திப் பூச்சி, தன் வாயிலிருந்து வந்த நூலால் சிவனுக்கு கோவில் எழுப்பியது. ஒவ்வொரு கணமும் அந்த ஆலயத்தை உன்னிப்புடன் கவனித்து, சரி செய்தபடி, சதா சிவ தியானத்திலேயே நேரத்தைச் செலவிட்டது. பூர்வ புண்ணிய பலனால் அந்தப் பூச்சிக்கு அப்பேற்பட்ட விவேகம் வந்து வாய்த்திருந்தது.. ‘சிலந்திக் கூட்டின் கோவிலில் சிவன் வாசிப்பாரா?’ என்று ஆச்சர்யப்படத் தேவையில்லை.

பரந்து விரிந்த விஸ்வமே சரீரமாகக் கொண்ட விஸ்வேஸ்வரன், நாம் கட்டிய கோவிலில் வசிக்கிறாரல்லவா? அணுவை விடச் சிறியவன், பெரியவற்றிற்கெல்லாம் பெரியவன் – ‘அணோரணீயான் மஹதோ மஹீயான்’ ஆகிய அந்த பரமதத்துவம், பக்தன் எங்கு எந்த உருவில் பூஜித்தாலும் அங்கு அந்த உருவில் நிலை கொள்கிறான். அதானால் தான் சிலந்திக் கூட்டைக் கூடக் கோவிலாக ஏற்றான்.
 
எதிர்பாராத விதமாக ஒருமுறை அந்த சிலந்தி நூற் கோவிலுக்கு சேதமேற்பட்டபோது அதனைத் தாங்காமல் பக்தனான அந்தப் பூச்சி உயிரை விடவும் துணிந்து விட்டது. உடனே பக்தவத்சலனான பவானீபதி, அச் சிலந்திக்கு கைவல்யத்தை அனுக்ரஹித்தார்.

அதே போல் ஒரு பாம்பும், ஒரு யானையும் கூட சிவனின் அர்ச்சனையில் போட்டி போட்டுக் கொண்டு தம்மை அர்ப்பணித்துக் கொண்டன. அவற்றுக்கும் சிவ சாயூஜ்யம் கிடைத்தது.


 
அன்று முதல் அங்கிருந்த சிவன், “ஸ்ரீ காளஹஸ்தீச்வரன்’ என்று பெயர் பெற்றார். அதற்கு முன்பு அந்த பிரதேசதிற்கு ‘கஜகானனம்’ என்ற பெயர் இருந்தது. அங்கு வசிஷ்ட முனிவருக்கு பிரம்ம ஞானத்தை அனுக்ரகித்து, யோக லிங்கமாக விளங்கினார் சிவபெருமான்.

 
அதே பரமசிவன் ஒரு பூச்சியாலும் மற்ற ஜந்துக்களாலும் புதிய பெயரை ஏற்றுக்கொண்டார். எந்த உருவமும் இல்லாத லிங்கத்தில் இம்மூன்றின் அடையாளங்களே உருவமாக விளங்குகின்றன. “ஸ்ரீ’ என்றால் ‘சிலந்தி’ என்று ஒரு பொருள் உள்ளது. “காளம்” என்றால் ‘சர்ப்பம்’. “ஹஸ்தி” என்றால் ‘யானை’. இம்மூன்றின் மேலும் தன் கருணையைப் பொழிந்ததோடல்லாமல், அக்காருண்ய லீலையை தன் மேல் சின்னங்களாக தரித்து தரிசனமளிக்கிறார் பரமேஸ்வரன். பக்தர்களின் பெயரே தன் பெயராக, பக்தர்களின் உருவமே தன உருவமாக வெளிப்படுத்திக் கொள்ளும் பக்த வத்சல குணத்திற்கு இந்த க்ஷேத்திரம் ஒரு எடுத்துக் காட்டு.

அது மட்டுமின்றி, திண்ணன் என்னும் வேட்டைக்காரன் அந்த முக்கண் மூர்த்திக்கு தன் கண்ணைச் சமர்ப்பித்து, சிவனுடன் ஐக்கியத்தைப் பெற்றான். அவனுடைய பிரதிபலன் எதிர்பாராத உயர்ந்த பக்தியால் பரவசமடைந்து, யாருக்கும் எளிதில் கிடைக்காத ‘சாயூஜ்ய பதவி’ யை அனுக்ரகித்து அருளினார் சதாசிவன். தன் சந்நிநிதியிலேயே கண்ணப்பன் விக்ரகத்திற்கு அர்ச்சனை நடக்கும்படி நியமித்து, பக்தனான கண்ணப்பனையே தினம் கண் மூடாமல் பார்த்தபடி உள்ளார் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர். இந்த பக்தர்களின் பக்தியில் பிரேமையோடு கூடிய அர்ப்பணத்தைத் தவிர கோரிக்கைகளின் பேரம் எதுவுமில்லை. பூரண பக்திக்குப் பட்டம் கட்டிய திவ்விய க்ஷேத்திரம் இது.

‘வேதங்கள், வாதங்கள், தர்க்கங்கள், மீமாம்சங்கள், பாண்டித்தியம், சர்ச்சை, வேஷம், வஞ்சனை இவை எதுவுமற்ற தூய பக்திக்கே சிவனின் அனுக்ரகம் பிராப்திக்கும்’ என்ற போதனை இந்த க்ஷேத்திரத்தின் மூலம் தெளிவாகிறது.

இக்கதைகளும், இத்தலமும் நமக்கு அனேக செய்திகளை தெரிவிக்கின்றன. கற்பனை வலையைப் பின்னிக் கொள்ளும் நம் அறிவே சிலந்திப் பூச்சி. சிலந்திக்கு தன் பெருமையே அதிகம். நமக்கோ நம் பெருமை! ஆனால் பரமேஸ்வரனுக்கு இரண்டும் சமமே!

ஆனால், சிலந்தி, தன் பெருமையையும், திறமையையும் பரமேஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்தது. நம் அறிவும் சிவார்ப்பணம் ஆக வேண்டும் என்பதே சிலந்தியின் பூஜை காட்டும் உட்பொருள்.

அடுத்து, நம்மில் படமெடுக்கும் அகம்பாவமே ‘சர்ப்பம்’.

‘தேகமே நான்’ என்ற உணர்வோடு கூடிய நடத்தையே ‘கஜம்’.

இந்த அகம்பாவம், உடலால் செய்யும் செயல்கள்- இவை கூட சிவனின் கைங்கர்யத்திற்கே விநியோகிக்ககப்பட வேண்டும். அதற்குத் தேவையான தகுதியே ‘திண்ணன்’.

கண்ணை அர்ப்பித்து , ‘கண்ணப்பன்’ ஆனான். இது பக்தனின் பெயரல்ல. பக்திக்குக் கிடைத்த பெயர்.

திண்ணனின் கதையை சமஸ்கிருதத்தில் எழுதிய உபமன்யு முனிவர், ‘தீரன்’ என்றே குறிப்பிடுகிறார். ‘திண்ணன்- தீரன்- கண்ணப்பன்’ இம்மூன்று பெயர்களுமே பக்தியின் லட்சணங்களே!

அங்கும் இங்கும் வளையாத ஏகாக்ர சித்தமே ‘திண்ணனாக’ உருவெடுத்தது. சிதறாத விடாமுயற்சியே ‘தீரனின்’ குணம். மனக் கண்ணை சிதற விடாமல் அனைத்தையும் சிவ மயமாக தரிசித்தலே கண்ணை (பார்வையை) அர்பணித்தல். அதுவே ‘கண்ணப்பனின் லக்ஷணம்’.

புத்தி, அகங்காரம், சரீர செய்கை இவற்றை ஒரு முனைப்போடு, சிரத்தையுடன், சர்வ சமர்ப்பண உணர்வுடன் சிவனுக்கு அர்ப்பிப்பவன், லௌகீக வாழ்வில் எப்படிப்பட்ட அல்ப ஜீவியாக காணப்பட்டாலும், சிவனின் பார்வையில் அவனே மகாபக்தன்.

ஆதிசங்கரர், ‘சிவானந்த லஹரி’யில் கண்ணப்பனை மட்டுமே மகாபக்தனாக புகழ்ந்து, ‘வனசரோ பக்தாவதம் ஸாயதே’ என்று பாடியுள்ளார்.

ஸ்ரீகாளஹஸ்தி, அசலான தூய பக்தி தத்துவத்தை போதிக்கும் அற்புத தலம். சிரத்தையோடு கூடிய பக்தியை அரவணைத்துக் கொள்ளும் கருணாகரன் ஸ்ரீகாளஹஸ்தீச்வரன்.
சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது.

பாம்பு பூஜை செய்த முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.

தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்கு பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம்போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது.

கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இருந்தது.

இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார்.

மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதேபோன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.

இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம்.

Wednesday, December 28, 2022

*"பர்வதமலை"* தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬

*⛰️பர்வதமலை கிரிவலம்*
*"பர்வதமலை"* தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

ஆதி சிவன் கைலாச மலையிலிருந்து இறங்கி தென் பகுதியில் நுழைந்த போது அவர் முதலில் கால் பதித்தது இங்குதான். 

அதற்கான தடயங்களாக இறைவனின் பாதங்கள் இங்கு இன்றும் இருக்கின்றன. 

°ஆஞ்சநேயர் தூக்கி வந்த சஞ்சீவியின் மலையின் சில பாகங்கள் இங்கும் விழுந்துள்ளதால் இதற்கு பர்வத சஞ்சீவி மலை என்று பெயர்.

° கடல் மட்டத்தில் இருந்து 4560 அடி உயரமுள்ள இந்த மலையை ஏறி இறைவனை பார்ப்பது என்பது சிவன் மீது தீரா பற்றும் மற்றும் வைராக்கியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

*பர்வதமலை சர்வ தோஷ நிவர்த்தி ஸ்தலம் ஆகும்.*

°திருவண்ணாமலை மாவட்டம் போளூர்  To செங்கம் போகும் பாதையில் உள்ளது.

பர்வதமலையில் உள்ள குகையில் விடோபானந்தா சுவாமிகள் சுமார் 14 வருடம் கடும் மௌன தவம்  புரிந்தார்.

இந்த மலை நந்தி வடிவில் இருப்பதால் நந்தி மலை என்றும்,

சிங்க வடிவில் இருப்பதால் சிங்க மலை என்றும் கூறுவர்.

இங்குள்ள சக்திகளில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த இறைவனையும் இறைவியியையும் உருவாக்கி வழிபட்டவர் சித்தர் போகர்.

இன்றளவும் சித்தர்களும் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து இங்குள்ள இறைவனையும் இறைவியையும் சூட்சு ரூபத்தில் வழிபடுகின்றனர்.

நந்தியால் சுமக்கப்பட்டுள்ள இறைவனும் இறைவியும் பார்க்கும் அனைவரின் உயிரிலும் கலக்கின்றனர். அதனால்தானோ என்னவோ இந்த கோயிலில் எங்கு திரும்பினாலும் நந்தி சிலைகள்தான் காணப்படுகின்றன.

சர்வ தோஷ நிவர்த்தி ஸ்தலம்  இது. 

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 1ம் நாள் இங்கு பல்லாயிரக்கணக்கானோர் ( சுமார் 1 லட்சத்திற்கும் மேல் ) கிரிவலம் வருகின்றனர்.  

தன்னுடைய தோஷங்களை நீங்க சிவனை பிரார்த்தித்து கிரிவலம் வந்தால் அத்தனை தோஷங்களும் நீங்குகிறது என்பதால் ஒவ்வொரு வருடமும் கிரிவலம் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. 

காஞ்சி மகாபெரியவர் அவர்கள் மலை ஏற வந்த போது அந்த மலையே சிவனாக காட்சி அளித்ததால் மலையேறாமல் கிரிவலம் சென்றார்கள்.

*சிவாலயம் செல்வோம்...*

*சிவனருள் பெறுவோம்...*

🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬

சிதம்பரம்#நடராஜர்கோவில்#திருவாதிரை

#சிதம்பரம்
#நடராஜர்கோவில்
#திருவாதிரை
        இன்று மார்கழி திருவாதிரை திருவிழாவின் தொடக்கநாள். சிதம்பரம் நடராஜாக் கோவிலில் கொடியேத்தம் என்றழைக்கப்படும் துவஜாரோஹனம் காலை நடந்தது. சிவன் கோவில்களில் ரிஷபக் கொடி ஏற்றப்படும்.
     முதல் நாள் கொடியேத்தத்துடன் தொடர்புடைய "கொடிக்கவி" பற்றி பார்ப்போம்.   சைவ சித்தாந்த நூல்கள் மொத்தம் பதினான்கு. அவற்றை மெய்கண்ட சாத்திரங்கள் என்றே அழைப்பர்.
    " கொடிக்கவி" மொத்தம் நான்கு வெண்பாக்களை மட்டும் கொண்ட சிறிய நூலாகும். இது சாஸ்திரங்களில் பதினொன்றாவதாகக் கருதப் படுகிறது. 
     சந்தானக் குரவர்களில் நான்காவதாக வருபவர் உமாபதி சிவாச்சாரியார் ஆவார். அவர் நூல்கள் பல கற்று, வேதம் பயின்று ஒழுக்கமான வைதீக வாழ்க்கை  வாழ்ந்ததால் பல்லக்கில் போகவும் பகலில் தீவட்டி ஏந்தும் ஆட்கள் வைக்கவும் அதிகாரம் பெற்றிருந்தார். அவ்வாறு அவர் செல்லும் போது மறைஞானசமபந்தர் அதை பார்த்து " பட்டக் கட்டையில் பகல் குருடு காண்" என்றார்.பல்லக்கே பட்டக்கட்டை ஆனது, பகலில் தீவட்டி பிடித்ததால் அவர் பகற்குருடு ஆனார்.
     இதை கேட்ட உமாபதி சிவம் பக்குவமடைந்த ஆத்மா ஆதலால் அந்த நொடி  ஞானம் கைவரப் பெற்று, மறைஞானசம்பந்தரை குருவாக ஏற்று அவர் பாதம் பணிந்தார்.
    ஒருமுறை மறைஞானசம்பந்தர் நெசவு செய்தவர்களிடமிருந்து, துணிக்குப் போட வைத்திருந்த கஞ்சியை கைகளில் வாங்கி குடிக்கும் போது, முழங்கையில் வழிந்த கஞ்சியை உமாபதி சிவம் பிரசாதமாக உண்டார். ஆதலால் தீட்சிதர்கள் உமாபதி சிவத்தை ஜாதியிலிருந்து தள்ளி வைத்தனர்.  அவர் கொற்றவன்குடியில் மடம் அமைத்து தங்கினார்.
    இச்சம்பவத்தில் பின் வந்த திருவாதிரை திருவிழாவின் முதல்நாள் கொடியேத்தத்தின் போது கொடி ஏறவில்லை. அப்பொழுது ஒரு அசரீரி உமாபதி சிவத்தை அழைத்து கொடியேத்த செய்யுமாறு கூறியது.அவ்வாறே அவரை அழைத்து வந்தனர்.அவரும்,

"ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ...."

என்னும் பாடலைப் பாடி கொடியேத்த கொடியும் ஏறியது. மேலும் மூன்றுப் பாடல்களைப் பாட அதுவே கொடிக்கவி என்னும் நூலாக வைக்கப் பட்டது. சிறிய நூலென்றாலும் சைவ சித்தாந்தக் கருத்துகளை தன்னுள் அடக்கி நூலாகும்.
    இது நடந்தது பதினான்காம் நூற்றாண்டில்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள #நரசிங்கபுரம் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
           🙏#தினம்_ஒரு_திருத்தலம்...🛕*_ 
  #இடது_கையால்_தாயைஅணைத்தபடி  
                      #நரசிம்மர்... 16 நாகங்கள்...!!

#அருள்மிகு_லட்சுமிநரசிம்மர்திருக்கோயில்...!!

🌺 *இந்த கோயில் எங்கு உள்ளது?* 

🍒திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள #நரசிங்கபுரம் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.

🌺 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

🌺திருவள்ளூரில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் நரசிங்கபுரம் என்னும் ஊர் உள்ளது. நரசிங்கபுரத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

🌺 *இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?* 

🍂 இத்தல மூலவரான லட்சுமி நரசிம்மர் #ஏழரை_அடிஉயரத்துடன்_வலதுகாலை கீழே வைத்து, இடது காலை மடித்து, சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி, வலது கரத்தை #அபயஹஸ்தமாக காட்டி மிக அழகாக காட்சி தருகிறார்.

#சிரித்த_ முகத்துடன் பெருமாள் காட்சியளிக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பது போல் காட்சியளிப்பது தனிச் சிறப்பம்சமாகும்.

#ஐந்துநிலை_கொண்ட_கிழக்கு_கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடமும், துவஜஸ்தம்பமும் இக்கோயிலில் அமைந்துள்ளது.

🍂கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்த தேசிகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

🍂பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி ஆகியோர் காட்சி தருகின்றனர்.

🍂மேற்கு பிரகாரத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம்.

🍂 *வேறென்ன சிறப்பு?* 

#வசீகரமானசிரிப்புடன்_5அடிஉயரமுள்ளமரகதவல்லித்_தாயார்_அபயஹஸ்த_முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.

🍂இத்தல பிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சன்னதியும், வடகிழக்கில் 20 தூண்களுடன் கூடிய கல்யாண மண்டபமும் அமைந்துள்ளது.

🍂4 அடி உயரத்தில் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார், 16 நாகங்களை அணிகலனாக கொண்டு இங்கு காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

🍂மூலவரான நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்களில் வணங்கினால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

🌺 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

🌺நரசிம்ம ஜெயந்தி இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

🌺ஆனி பிரம்மோற்சவம் 10 நாட்கள், கருட சேவை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் ஆகியவையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

🌺 *எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

🌺நாகதோஷம் நீங்க, கடன்களை அடைக்க, நோய்களில் இருந்து விடுபட, திருமணத்தடை நீங்க மற்றும் சகல தோஷங்களும் நிவர்த்தியாக இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

🍂இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🍂இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் மூலவர் மற்றும் தாயாருக்கு அபிஷேகம் செய்தும், திருமஞ்சனம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

Tuesday, December 27, 2022

ஏன் மணி அடித்துக் கொண்டு இறைவனை வணங்குகிறோம்

ஏன் மணி அடித்துக் கொண்டு இறைவனை வணங்குகிறோம்…?
நாம் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவிலில் மணி அடித்து வழிபடுவது. இன்னும் சிலர், நாம் மணி அடித்து வழிபட்டால் தான் நமது வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்ப்பார் என்று அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தை சொல்வார்கள்.

பொதுவாக மணி அடிக்கும் போது எழுகின்ற ஓசைக்கும், நமது மூளைக்கும் இடையே தொடர்புகள் உள்ளது என்று சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி மணியிலிருந்து எழும் ஓசைக்குப் பின்னால் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. ஆகம விதிகளின் படி, வெண்கல மணியில் இருந்து எழுப்பப்படுகின்ற ஓசைக்கு எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கின்ற வல்லமை உண்டு.

உண்மையில் கோயிலில், செல்ஃபி எடுத்துக் கொண்டும், பிறர் கண்ணீர் கதைகளையும் பிரகாரங்களில் அமர்ந்து பேசுபவர்களின் காதுகளில் மணியின் சப்தம் கேட்டு, அவர்களின் கவனத்தை கடவுளை நோக்கித் திரும்புகிறது கோயில் மணி ஓசை.

மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் தெரியும். அதற்கு மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களின் கலப்பு தான் காரணமாகும்.

மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.

கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.

பூஜைகள் நடைப்பெறும் நேரங்களில், மணியடித்து, சப்தம் எழுப்பி, “இப்பொழுதாவது இறைவனை நோக்கி மனதை செலுத்தி நற்கதியைப் பெறுங்கள்” என்று பக்தர்களை மனதை ஒருமுகப்படுத்த கோயில் மணி உதவுகிறது.

கோவிலில் உள்ள மணி பொதுவாக (zync, nickel, lead, chromium, copper, manganese) உள்ளிட்ட ஆறு உலோகங்களால் ஆனது. கோவில் மணியை அடிக்கும்போது ஏற்படும் ஓசை நமது மனதை ஒரு நிலைப்படுத்தி நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களை (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரஹாரம்) சீர்படுத்துகிறது.

மணி அடித்த ஏழு வினாடிகளும் அந்த அதிர்வலைகள் நமது காதுகளில் ஒழிக்கும். அப்போது நமது மனது ஒரு நிலைப்படும். நமது வலது மற்றும் இடப்புற மூளை தெளிவடையும். இந்த நிலையை தான் டிரான் நிலை என்கிறோம்.

நாகபட்டினம் மாவட்டத்தில் திருவாலியில் இக்கோயில் அமைந்துள்ளது.குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

18 - #திருவாலி__திருநகிரி
                                          
திருவாலி #அழகியசிங்கர்_திருக்கோயில்

🍁மூலவர் - அழகியசிங்கர் (லட்சுமி நரசிம்மன்)

🍁உற்சவர்- திருவாலி நகராளன்

🍁தாயார் - பூர்ணவல்லி (அம்ருதகடவல்லி)

🍁தீர்த்தம்- இலாட்சணி புஷ்கரிணி

நாகபட்டினம் மாவட்டத்தில் திருவாலியில் இக்கோயில் அமைந்துள்ளது.குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது

🍁இத்தலத்தைச் சுற்றி 

⭕குறையலூர் உக்கிர நரசிம்மன்,

⭕மங்கைமடம் வீர நரசிம்மன்,  

⭕திருநகிரி யோக நரசிம்மன் 

 மற்றும் மற்றொரு நரசிம்மத் தலமான ⭕ஹிரண்ய நரசிம்மன் ஆகிய தலங்கள் உள்ளன.இத்தலத்தில் மூலவர் சந்நிதியில் மேல் உள்ள விமானம் #அஷ்டாட்சரவிமானம் எனப்படும்.இங்கு திருமங்கையாழ்வார் இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.

🍁பத்ரிகாசிரமத்திற்கு அடுத்த்தாக பெருமாள் திருமந்திரத்தைத் தானே உபதேசம் செய்த இடமாதலால் பத்ரிக்கு இணையானது இத்தலம். லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு " 
#லட்சுமி_நரசிம்ம_தீர்த்தம்" என்ற பெயரும் உண்டு.திருவாலியையும் தரிசிப்பதால் இங்கு #பஞ்ச_நரசிம்ம_தலங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை வேண்டினாள்.பெருமாள் கூறியபடி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாகப் பிறந்தாள்.பெருமாளைத் திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழி மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள், திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.இதை முன்னிட்டு ஆண்டுதோறும் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடதி...மந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது

🍁திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார்.இதனால் பயந்து பொன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமிதேவியை வேண்டினர்.அவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். 
#தேவியை_பெருமாள்_ஆலிங்கனம் செய்து கொண்டார்.எனவே, இவ்வூர் #திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்றது..அதுவே நாளடைவில் #திருவாலி ஆனது

திருமங்கையாழ்வார் குறுநில மன்னனாக இங்கு திகழ்ந்ததால் அவர் பெயர் #ஆலிநாடன் ஆயிற்று.

#திருநகிரி
----------------------

⭕மூலவர் _ தேவராஜன்

⭕உற்சவர்- கல்யாண ரங்கராஜன்

⭕தாயார்- அமிர்தவல்லி

⭕தீர்த்தம்- இலாக்ஷ புஷ்கரிணி

⭕நாகப்பட்டினம் தலத்திலுள்ள மற்றொரு ஊர் திருநகிரி

⭐குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள தலம்

🍒திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சந்நிதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார்.இவருக்கு எதிரே ஒரு கொடி மரமும்,பெருமாளுக்கு எதிரே ஒன்றும் ஆகிய இரு கொடிமரங்கள் இத்தலத்தில்

🌺பிரம்மாவின் புத்திரன் பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான்.அவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால் லட்சுமி கோபம் கொண்டு இத்தலத்தில் இருந்த தாமரை மலருகுள் ஒளிந்து கொண்டாள்.பெருமாள்  லட்சுமியைத் தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார்.அருகிலுள்ள திருவாலியும் இதே போல ஆலிங்கனகோலத்தில் இருப்பதால் இரண்டும் சேர்ந்து திருவாலி-திருநகிரி ஆயிற்று.

🌺திரேதா யுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸு மன்னனாக இத்தலத்தின்  புஷ்பீக விமானத்தில்  வரும்போது பறக்காமல் விமானம் அப்படியே நின்று விட்டது.எனவே இத்தலம் புண்ணியமான தலம் எனக் கருதி தனக்கு மோட்சம் கிடைக்க பெருமாளிடம் வேண்ட, கிடைக்கவில்லை.

🌺அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான்.அப்படியாயினும் தனுக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என்றார்.

🌺கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனனின் மகனாகப் பிறந்தான்.இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய எண்ணினான்.அவளோ, ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் உங்களுக்கு மனைவி ஆவேன்" என்றாள்.இந்த அன்னதானத்திற்கான பொருள் தீ ர்ந்தபடியால் நீலன் வழிப்பறியில் ஈடுபடலானான்.

அந்த நேரத்தில் பெருமாள் லட்சுமியைத் திருமணம் செய்துக் கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வந்த போது நீலன் மறித்து வழிப்பறி செய்ய,பெருமாள் #நீலனுக்கு_அஷ்டாட்சர_மந்திரத்தை உபதேசித்து ஆட்கொண்டார்.

இத்தல வரலாறும், திருவாலியின் வரலாறும் ஒரே வரலாறு

🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐

Monday, December 26, 2022

*காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு மதுராந்தகம் அருள்மிகு ஏரிகாத்த ராமர் ஆலயம்*

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
     *🙏"இன்றைய கோபுர தரிசனம்"..!!🙏*
           #ஏரி__காத்த__ராமர்_கோயில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
⭕*காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு மதுராந்தகம் அருள்மிகு ஏரிகாத்த ராமர் ஆலயம்*
        🙏*தினம் ஒரு கோபுர தரிசனம்*🙏

*காலை சூரிய உதயத்தில்*

*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

⭕ *மூலவர் : #ஏரி_காத்த_ராமர்*

⭕*உற்சவர் : கருணாகரப்பெருமாள், பெரிய பெருமாள்*

⭕*அம்மன்/தாயார் : ஜனகவல்லி*

⭕*பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்*

⭕*ஊர் : மதுராந்தகம்*

⭕*மாவட்டம் : காஞ்சிபுரம்*

⭕*மாநிலம் : தமிழ்நாடு*

🍑*திருவிழா*

*வைகுண்ட ஏகாதசி, சித்திரை நட்சத்திர நாட்களில் சுதர்சன ஹோமத்துடன் பூஜை நடக்கும்.*

*#தலசிறப்பு*

⭕*ராமருக்குரிய சிறப்பான கோயில்களில் இதுவும் ஒன்று. சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். ராமானுஜர் தீட்சை பெற்ற தலம்.*
 
⭕*திறக்கும் நேரம்*

*காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*

⭕*முகவரி

*அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக் கோயில் ,மதுராந்தகம் - 603 306 காஞ்சிபுரம் மாவட்டம்.*

*போன்*

*+91- 4115 253887, 98429 09880, 93814 82008.*

*#பொது_தகவல்*

⭕*ஆனியில் இங்கு #பிரம்மோற்ஸவம் நடக்கிறது. விழாவின் ஏழாம் நாளில் பெரிய பெருமாள் உற்சவம் நடக்கும். அன்று ராமர், புஷ்பக விமானம் போல அமைக்கப்பட்ட தேரிலும், மறுநாள் கருணாகரப்பெருமாள் மற்றொரு தேரிலும் உலா செல்வர். இவ்வாறு இங்கு ஒரே விழாவில் இரண்டு தேர்கள் ஓடும்.*

*#பிரார்த்தனை*

⭕*தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இத்தல இறைவனை பிரார்த்தனை செய்யலாம். குழந்தைகள் கல்வி யில் சிறப்புப் பெற, பெரியநம்பி ராமானுஜர் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பெரியநம்பி பூஜித்த குழந்தை கண்ணன் கையில் வெண்ணெயுடன், வலக்காலை மலர் மீது வைத்த நிலையில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு தொட்டில் சேவை செய்து வைத்து வேண்டுகிறார்கள்.*

*#நேர்த்திக்கடன்*

⭕*பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.*

*#தலபெருமை*

⭕*மனைவியின் கரம் பிடித்த ராமன்*

⭕*ராமபிரானுக்கு சீதை சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிக்கப்படுவதுண்டு. இந்தக் கோயில் மூலஸ்தானத்தில், சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். அருகில் லட்சுமணர் இருக்கிறார். ராமர் விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு காட்சி தந்ததாகச் சொல்வர். #தம்பதியர்_ஒற்றுமையுடன்_திகழ இவரைத் தரிசிக்கிறார்கள். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் மூலஸ்தானத்திற்குள்ளேயே இருக்கிறார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஜனக மகராஜாவின் மகளாகவளர்ந்ததால் இவளுக்கு இப்பெயர்.)*

*#பஞ்ச_அலங்காரம்*

⭕*ராமநவமி விழா இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படும். நவமியன்று காலையில் கோடலி முடிச்சுடன் பஞ்ச கச்ச அலங்காரம், ஒரு வஸ்திரம் மட்டும் அணிவிக்கும் ஏகாந்த அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையில் புஷ்பங்களுடன் வைரமுடி தரித்த அலங்காரம், இரவில் முத்துக் கொண்டை, திருவாபரணத்துடன் புஷ்ப அலங்காரம் என ஒரே நாளில் சுவாமிக்கு ஐந்து வித அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடக்கும். அன்று சுவாமி, சீதை, லட்சுமணருடன் தேரில் எழுந்தருளுவார். ராமானுஜர் பொதுவாக, காவி வஸ்திரம் அணிந்து காட்சி தரும் ராமானுஜரை, இத்தலத்தில் #வெண்ணிற_வஸ்திரத்துடன் கிரகஸ்தர் (குடும்பஸ்தர்) கோலத்தில் தரிசிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் இருந்த ராமானுஜர் துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் முன்பு இங்கு தீட்சை பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக இங்கு வெண்ணிற ஆடையுடன் காட்சியளிக்கிறார். மூலவர், உற்சவர் இருவருக்கும் வெள்ளை ஆடையுடனேயே அலங்காரம் செய்கின்றனர். ராமானுஜரின் இந்த தரிசனம் விசேஷமானது.*

*#ஏரியை_காத்தவர்*

⭕*ராமர் கோயிலுக்குப் பின்புறம் ஒரு ஏரி உள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பு ஏரி அடிக்கடி நிறைந்து கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால், வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிப்பிற்கு ள்ளாகினர். அப்போது, லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்தார். ஏரிக்கரையை பலப்படுத்த அவர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. ஒருசமயம் அவர் இக்கோயி லுக்கு வந்தபோது, அர்ச்சகர்கள் தாயார் சன்னதியை திருப்பணி செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அவர்""உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால், அவ்வருடம் பெய்யும் மழையில் ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால், நான் அப்பணியை செய்து தருகிறேன்,'' என்றார். மழைக்காலம் துவங்கவே வழக்கம்போல் ஏரி நிரம்பியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நிலையில், ஏரியைப் பார்வையிட அவர் சென்றார். அப்போது, அங்கே இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி நின்றனர். அந்த அம்பில் இருந்து மின்னல் போல் ஒளி கிளம்பியது. அதன் பிறகு ஏரிக்கரை உடையவில்லை. மகிழ்ந்த பிளேஸ், ராம லட்சுமணரே இளைஞர்களாக வந்ததை அறிந்தார். பின்பு, தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்தார்.*

⭕*இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னதியில் உள்ளது. ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு, "ஏரி காத்த ராமர்' என்ற பெயர் ஏற்பட்டது.*

*#பிரகலாத_வரதன்*

⭕*கம்பராமாயணம் எழுதிய கம்பர், அதை அரங்கேற்றும் முன்பு ராமன் தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது, ஓரிடத்தில் சிங்கம் உறுமும் சத்தம் கேட்டது. பயந்துபோன கம்பர், அவ்விடத்தைப் பார்த்தபோது நரசிம்மர் லட்சுமியுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் சிங்க முகமில்லாமல், மனித முகத்துடன் #சாந்த_நரசிம்மர் சிலை வடிக்கப்பட்டது. உற்சவரான இவரை "]#பிரகலாத_வரதன்' என்கின்றனர். சுவாதி நட்சத்திர நாட்களில் இவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும்.#ராமர்_பூஜித்த_கருணாகரர்ராமர்_தலமாக இருந்தாலும் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் #கருணாகரப்பெருமாளே (உற்சவர்) பிரதான மூர்த்தியாக அருளுகிறார். விபண்டகரால் பூஜிக்கப்பட்ட இவரே விழாக்காலங்களில் பிரதானமாக புறப்பாடாகிறார். பங்குனி உத்திரத்தன்று ஜனகவல்லித்தாயாரையும் போகிப்பொங் கலன்று ஆண்டாளையும் மணந்து கொள்பவரும் இவரே ஆவார். இங்கு வந்த ராமர், சீதையை மீட்க அருள வேண்டி இவரை பூஜித்துச் சென்றார். இதனால் இவருக்கு பிரதான இடம் பெற்றிருக்கிறார். தவிர ராமருக்கும் உற்சவ வடிவம் உண்டு.*

*#ராமானுஜர்_தீட்சை_பெற்ற_தலம்*

⭕*ஸ்ரீரங்கத்தில் சேவை செய்து வந்த ஆளவந்தாரின் சீடர் பெரியநம்பி, ராமானுஜருக்கு தீட்சை கொடுப்பதற்காக காஞ்சிபுரம் சென்றார். இவ்வேளையில் ராமானுஜர் அவரிடம் தீட்சை பெறுவதற்காக ஸ்ரீரங்கம் கிளம்பினார். இருவரும் இத்தலத்தில் சந்தித்துக் கொண்டனர். பெரியநம்பி ராமானுஜருக்கு ஆச்சார்யாராக இருந்து இத்தலத்திலேயே "#பஞ்ச_சம்ஸ்காரம்' என்னும் தீட்சை செய்து வைத்தார். இந்த வைபவம் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமியன்று இக்கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில் நடக்கும்.*

*#ராமர்_பூஜித்த_கருணாகரர்*

⭕*ராமர் தலமாக இருந்தாலும் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் கருணாகரப்பெருமாளே (உற்சவர்) பிரதான மூர்த்தியாக அருளுகிறார். விபண்டகரால் பூஜிக்கப்பட்ட இவரே விழாக் காலங்களில் பிரதானமாக புறப்பாடாகிறார். பங்குனி உத்திரத்தன்று ஜனகவல்லித் தாயாரையும், போகிப்பொங்கலன்று ஆண்டாளையும் மணந்து கொள்பவரும் இவரே ஆவார். இங்கு வந்த ராமர், சீதையை மீட்க அருள வேண்டி இவரை பூஜித்துச் சென்றார். இதனால் இவருக்கு பிரதான இடம் பெற்றிருக்கிறார். தவிர ராமருக்கும் உற்சவ வடிவம் உண்டு.*

*#யந்திர_சக்கரத்தாழ்வார்*

⭕ *பதினாறு கரங்களுடன் #அக்னி_கிரீடம் அணிந்த சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யந்திரத்துடன் சுவாமியை தரிசிப்பது நிறைந்த பலன் தரும். இவருக்குப் பின்புறமுள்ள யோக நரசிம்மர் நாகத்தின் மீது காட்சி தருகிறார். சித்திரை நட்சத்திர நாட்களில் இச்சன்னதியில் சுதர்சன ஹோமத்துடன் பூஜை நடக்கும்.*

*#குரு_சிஷ்யர்_தரிசனம்*

⭕*ராமானுஜரும், அவருக்கு தீட்சை கொடுத்த பெரியநம்பியும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். ராமானுஜர் தீட்சை பெறும் நிலையில் வணங்கிபடியும், பெரியநம்பி ஞானமுத்திரை காட்டியபடியும் இருக்கின்றனர். இவ்வாறு குரு, சிஷ்யர் இருவரையும் ஒரே சன்னதியில் தரிசிக்கலாம். குழந்தைகள் கல்வியில் சிறப்புப் பெற, இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்தச் சன்னதியில் பெரியநம்பி பூஜித்த குழந்தை கண்ணன் இருக்கிறார். இவர் கையில் வெண்ணெயுடன், வலக்காலை மலர் மீது வைத்த நிலையில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு தொட்டில் சேவை செய்து வைத்து வேண்டுகிறார்கள்.*

*#தீட்சை_முத்திரைகள்*

⭕*பெருமாள் பக்தர்களுக்கு தீட்சை தரும்போது, கைகளில் சங்கு, சக்கர முத்திரைகள் பதிப்பர். பெரியநம்பி, ராமானுஜருக்கு தீட்சை கொடுக்க பயன்படுத்திய சங்கு, சக்கர முத்திரைகள் இக்கோயிலில் உள்ளது. 1935ல் கோயில் திருப்பணி நடந்தபோது, இம்முத்திரைகள் இங்கு கிடைத்தது. இந்த சங்கு, சக்கர தரிசனம் கிடைப்பது மிக அபூர்வம்.*

*#இரண்டு_தேர்கள்*

⭕*ஆனியில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது. விழாவின் ஏழாம் நாளில் பெரிய பெருமாள் உற்சவம் நடக்கும். அன்று ராமர், புஷ்பக விமானம் போல அமைக்கப்பட்ட தேரிலும், மறுநாள் கருணாகரப்பெருமாள் மற்றொரு தேரிலும் உலா செல்வர். இவ்வாறு இங்கு ஒரே விழாவில் இரண்டு தேர்கள் ஓடும்.*

*வெண்ணிற ஆடை ராமானுஜர்*

*பொதுவாக, காவி வஸ்திரம் அணிந்து காட்சி தரும் ராமானுஜரை, இத்தலத்தில் வெண்ணிற வஸ்திரத்துடன் கிரகஸ்தர் (குடும்பஸ்தர்) கோலத்தில் தரிசிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் இருந்த ராமானுஜர் துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் முன்பு இங்கு தீட்சை பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக இங்கு வெண்ணிற ஆடையுடன் காட்சியளிக்கிறார். மூலவர், உற்சவர் இருவருக்கும் வெள்ளை ஆடையுடனேயே அலங்காரம் செய்கின்றனர். ராமானுஜரின் இந்த தரிசனம் விசேஷமானது.*

*#தல_வரலாறு*

⭕*சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷியின் ஆஸ்ரமத்தில் தங்கி, அவரது உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். மகரிஷியின் வேண்டுதலுக்காக அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் கல்யாண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். இதன் அடிப்படையில் இங்கு புஷ்பக விமானத்துடன் கோதண்டராமர் கோயில் எழுப்பப்பட்டது.*

*#சிறப்பம்சம்*

*#அதிசயத்தின்_அடிப்படையில்*

⭕*ராமருக்குரிய சிறப்பான கோயில்களில் இதுவும் ஒன்று. சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். ராமானுஜர் தீட்சை பெற்ற தலம்.*

*#அமைவிடம்*

*இருப்பிடம் செங்கல்பட்டில் இருந்து 23 கி.மீ., மேல்மருவத்தூரில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் மதுராந்தகம் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே கோயில் உள்ளது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்*

*செங்கல்பட்டு*

*அருகிலுள்ள விமான நிலையம்*

*சென்னை*

*தங்கும் வசதி*

*காஞ்சிபுரம்*

*வாழ்க வளமுடன்*

*வாழ்க வையகம்*

*🙏 ஶ்ரீ ராம ஜெயம் 🌷*

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஸ்ரீ கிருஷ்ணர் காலிங்கனை அடக்கி அதன் தலைமீது நின்று நர்த்தனம் ஆடியதே காளிங்க நர்த்தனம் எனப்படுகிறது

_காளிங்க நர்த்தனம்_


ஏழை எளியவர்களின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்த பகவான் 
கண்ணபிரான் ஆயர் மக்களை மிகவும் நேசித்தார். 

காளிங்கன் என்ற   ஐந்து தலைகளைக் கொண்ட  கொடிய விஷநாகமொன்று யமுனை நதியில் இருந்த மடு ஒன்றில் குடும்பத்தோடு   வசித்து வந்தது.  அந்நாகம் அந்த மடுவில் இறங்குபவர்களை எல்லாம் விழுங்கி வந்தது.   கால்நடைகளையும் கொன்று வந்தது.  இதனால் காளிங்கன் இருந்த மடுவில் அருகே யாருமே செல்லாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையை மாற்றி அந்த மடுவின் நீரை அனைவரும் பயன்படுத்தும்படிச்  செய்ய நினைத்தார் கண்ணபிரான். 
          
தோழர்களோடு விளையாடிக் கொண்டிருந்தக் கண்ணன் திடீரென்று காளிங்கன் இருக்கும் மடுவை நோக்கி வேகமாகச் சென்றார். அந்தமடுவில் இருக்கும்  காளிங்கனின் விஷம் பட்டு கண்ணன் இறந்துவிடுவானென நினைத்து குழந்தைகள் பயத்தில் கத்தினர். ஆனால் கண்ணனோ சற்றும் கலங்காமல்,  காளிங்கனின் மீதே   குதித்தார்.  சினங் கொண்ட காளிங்கன் ஆத்திரத்தோடு  கண்ணனைச் சுற்றி வளைக்க ஆரம்பித்தது. இதைக் கண்ட ஆயர் சிறுவர்கள்  பயந்து அலறினர்.
              
நந்நகோபன்,  யசோதை மற்றும் ஆயர்களும், ஆய்ச்சியர்களும்  கதறி அழுதனர். தனக்காக  எல்லோரும் வேதனையுறுவதைக் கண்ட கண்ணனும் காளிங்கன்,  தன்னை நெருக்காதபடி உடலை மிகவும் பெரியதாக்கினார். எனவே காளிங்கன்,  பகவானை விட்டு விலகியது. எனவே கண்ணன் அதன் தலைகளின் மீது  ஏறி நின்று நர்த்தனம் புரிய ஆரம்பித்தார். இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் காலிங்கனை அடக்கி அதன் தலைமீது நின்று நர்த்தனம் ஆடியதே  காளிங்க நர்த்தனம் எனப்படுகிறது.
             
கண்ணனை கீழே தள்ள முயன்று,  தோற்ற காளிங்கனும் இறுதியில் பகவானிடம் பணிந்தது.  இங்கிருந்து சமுத்திரத்திற்குச் சென்றுவிடு; இங்குள்ள மக்களை வாழவிடு!  என்றார் கண்ணன். கருடனுக்கு அஞ்சியே இந்த மடுவில் தஞ்சம் புகுந்தேன் சுவாமி! என்றது காளிங்கன். எனது பக்தனைக் கருடன் துன்புறுத்தாது!  என கிருஷ்ணரும் அருள் புரிந்தார். பகவானை வணங்கி, குடும்பத்தோடு காளிங்கனும் சமுத்திரத்தை அடைந்தது.  அனைவரும் காளிங்கனின் பயம் நீங்கிற்று என மகிழ்ந்துக் கண்ணனைக் கொண்டாடினர்.
      
இவ்வாறு ஆயர் மக்களை துன்புறுத்தி வந்த காளிங்கன் என்ற விஷ நாகத்தை அடக்கி அதன் தலை மீது நின்று கண்ணபிராரான் நர்த்தனம் ஆடிய புனிதமான  தினம் இன்று என்பதால் இன்றைய தினத்தை கண்ணபிரான் "காளிங்க நர்த்தனம்"  ஆடிய தினமாகப் பக்தர்கள்  கொண்டாடுவர். 
      
பார்த்தனுக்கு,  ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டிய கோலத்திலேயே காட்சி அளிக்கும் தலம்  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  ஆலயம்.  தேரோட்டிக்கு மீசையை கம்பீரத்தை தருவது என்பதால்  இங்கே பார்த்தசாரதிப்  பெருமாள்
மீசையோடு கம்பீரமாகக்  காட்சி அளிப்பார்.   இன்றைய தினம் பகவான் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய தினம் என்பதால் இன்று   திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் பகவான்
 ஸ்ரீகிருஷ்ணர் "காளிக நர்த்தன கோலத்தில்"   பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
  பார்த்தசாரதிப்பெருமாளே சரணம்.

(கோமாதா) பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர்_

_(கோமாதா) பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர்_


தலை - சிவபெருமான் 
நெற்றி - சிவசக்தி 
வலது கொம்பு - கங்கை 
இடது கொம்பு - யமுனை 
கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள். 
கொம்பின் அடியில் - பிரம்மன், திருமால் 
மூக்கின் நுனி - முருகன் 
மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள் 
இரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர்கள்.
 இரு கண்கள் - சூரியன், சந்திரன் 
வாய் - சர்ப்பாசுரர்கள் 
பற்கள் - வாயுதேவர் 
நாக்கு - வருணதேவர் 
நெஞ்சு - கலைமகள் 
கழுத்து - இந்திரன் 
மணித்தலம் - எமன் 
உதடு - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள் 
கொண்டை - பன்னிரு ஆதித்யர்கள் 
மார்பு - சாத்திய தேவர்கள் 
வயிறு - பூமிதேவி 
கால்கள் - வாயு தேவன் 
முழங்கால் - மருத்து தேவர் .
குளம்பு - தேவர்கள் 
குளம்பின் நுனி - நாகர்கள் 
குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள் 
குளம்பின் மேல்பகுதி - அரம்பெயர்கள் 
முதுகு - ருத்திரர் 
யோனி - சப்த மாதர் (ஏழு கன்னியர்) 
குதம் - லட்சுமி 
முன் கால் - பிரம்மா 
பின் கால் - ருத்திரன், தனது பரிவாரங்களுடன்.
பால் மடி - ஏழு கடல்கள் 
சந்திகள் - அஷ்ட வசுக்கள் 
அரைப் பரப்பில் - பித்ரு தேவதை 
வால் முடி - ஆத்திகன் 
உடல்முடி - மகா முனிவர்கள் 
எல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர் 
சிறுநீர் - ஆகாய கங்கை 
சாணம் - யமுனை 
ஜடதாக்கினி - காருக பத்தியம் 
வாயில் - சர்ப்பரசர்கள் 
இதயம் - ஆகவணியம் 
முகம் - தட்சரைக் கினியம் 
எலும்பு, சுக்கிலம் - யாகத் தொழில் .
   
            
பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார். ஆனால்  இலட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். அப்போது பசு இலட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள்  ஓரிடத்திலேயே  நிலைத்திருக்க மாட்டாய் என்றது  கோமாதா.
           எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டன.  கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது. லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு,  அங்கே வாசம் செய்தாள்.  
       
இலட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் இலட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகின்றன. பசுஞ்சாணம்  சிறந்த கிருமிநாசினியாகவும், பசுவின்  கோமியம் பல நோய்களை போக்கும்  சக்தியுடையதாகவும் உள்ளன.

மகாலட்சுமியே அருள்கவே

Friday, December 16, 2022

🌹இந்திரன் சாபம் நீங்கிய சக்திபுரீஸ்வரர் ஆலயம்*

🌹அகிலம்  காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனடியை சிந்திப்போம்  எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்..சிவமே என் வரமே 🌷
🌹இந்திரன் சாபம் நீங்கிய சக்திபுரீஸ்வரர் ஆலயம்*
 
   
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது சக்திபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

இந்திரனுக்கு, ஒரு முறை மரண பயம் ஏற்பட்டது.

‘தன்னை வீரபத்ரன் கொன்று விடுவாரோ?’ என்ற பயத்தில் ஓடத் தொடங்கினான். அவரிடம் இருந்து தப்பிக்கும் வழி தெரியாது ஓடிக் கொண்டே இருந்தான்.

 
ஆம் யார் இந்த வீரபத்ரன்? அவர் ஏன் இந்திரனை விரட்ட வேண்டும்? அது என்ன கதை?

பிரம்மதேவனின் பத்து புதல்வர்களில் ஒருவன் தட்சன். அவன் சிவபெருமானை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் கடுமையான தவம் இருந்து பல வரங்களைப் பெற்றான். அதில் ஒன்று, உமாதேவியை தனது மகளாக அடைந்து, அவளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து தர வேண்டும் என்பது.

அந்த வரத்தின்படி இமயமலை சாரலில் ஒரு சங்கு வடிவில் தவம் செய்து கொண்டிருந்த உமாதேவியை கண்டான் தட்சன். அவன் அந்த சங்கை கையில் எடுத்த மறுகணம், அது ஒரு பெண் குழந்தையாக உருமாறியது.

குழந்தையை வீட்டிற்கு கொண்டுவந்து, தாட்சாயணி என்று பெயரிட்டு, அவளை செல்லமாக வளர்த்து வந்தான் தட்சன். ஊருக்கு வெளியே ஒரு தவமாடத்தை அமைத்து ஆறு வயது முதலே சிவபெருமானை நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள் தாட்சாயணி. அவள் முன் தோன்றிய சிவபெருமான் அவளை விரைவில் மணப்பதாகக் கூறி மறைந்தார்.

அதற்கான நேரம் வந்தது. கன்னிகா தான மந்திரங்களைக் கூறி உமா தேவியின் கரத்தை சிவபெருமானின் கரத்தில் வைத்து தத்தம் செய்தான் தட்சன். மறுவினாடி சிவபெருமான் திடீரென மறைந்தார்.

கோபம் கொண்ட தட்சன், அவரை கடுமையான வார்த்தைகளால் தூற்றினான். இதனைக் கண்ட உமா தேவி மனம் வேதனைப்பட்டாள். மீண்டும் சிவபெருமானை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினாள். அவளது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், அவள் முன் தோன்றினார். அவளை தன் பக்கத்தில் இருத்திக் கொண்டு மீண்டும் மறைந்தார்.

இதனை அறிந்த தட்சனின் கோபம் உச்சத்தை அடைந்தது. தன் மகளை களவு கொண்டவன் என்றும், தன் குலத்திற்கே இழிவு தேடித் தந்தவன் என்றும் சிவபெருமானை இகழ்ந்தான்.

பின்னர் கங்கை ஆற்றின் கரையில் கனகலகம் எனும் இடத்தில், வேள்விச் சாலை அமைத்து பெரிய யாகம் ஒன்றைத் தொடங்கினான். தேவர்கள், அசுரர்கள், சப்தரிஷிகள் என அனைவரையும் அந்த யாகத்திற்கு அழைத்த தட்சன், சிவபெருமானை மட்டும் புறக்கணித்தான்.

தட்சன் செய்யும் யாகத்தினை கேள்விபட்டு அவனது தவறை திருத்தும் நோக்கத்துடன் சிவபெருமானிடம் அனுமதி பெற்று வேள்விச் சாலையை அடைந்தாள் உமா தேவி. அவளைக் கண்ட தட்சன் கோபம் தலைக்கேற, கொடிய வார்த்தைகளால் அவளை இகழ்ந்து பேசினான்.

உமாதேவி கோபம் கொண்டாள். கயிலையை அடைந்ததும் அந்த வேள்வியை அழிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். சற்றே தயங்கி பின் ஒப்புக் கொண்டார் சிவபெருமான்.

அந்த வேள்வியை யாரைக் கொண்டு அழிப்பது?

சிவபெருமானது கண்டத்தில் இருந்த கருத்த விஷத்தில் ஒரு கூறு, அவரது நெற்றிக் கண் வழியே குமாரனாக வெளிப்பட்டது. அந்தக் குமாரன், ஆயிரம் முகங்களும் இரண்டாயிரம் கரங்களும் அவற்றுக்கு உரிய ஆயுதங்களையும் உடையவனாய் இருந்தான். மணி மாலைகள், ஆமை ஓட்டு மாலைகள், பன்றி கொம்பு மாலைகள், கபால மாலைகள் ஆகியவற்றை அணிந் திருந்தான். சிங்க முகங்களைக் கோர்த்த மாலையுடன் பாம்பால் ஆன கச்சம் அணிந்திருந்தான். அவரே வீரபத்ரன்.

வீரபத்ரன், தட்சன் நடத்திய வேள்விச் சாலைக்குச் சென்றார். யாகம் துவம்சம் செய்யப்பட்டது. யாகத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும், மரணபயம் கொண்டு நான்கு புறமும் சிதறி ஓடினர்.

இந்திரனுக்கும் மரண பயம் ஏற்பட்டது. கருங்குயிலாக உருவெடுத்த இந்திரன் பறக்கத் தொடங்கினான்.

கருங்குயில் வடிவில் கருணாபுரம் என்ற இடத்திற்கு வந்தான். அங்குள்ள கருணா தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் சக்திபுரீஸ்வரரையும், ஆனந்தவல்லியையும் தினமும் வழிபட்டு வந்தான்.

இந்திரன் முன் தோன்றிய இறைவன், “என்ன வரம் வேண்டும்? கேள்” என்றார்.

தன் சுய உருவுக்குத் திரும்பிய இந்திரன் “இந்த கருணாபுரத்தில் கருணையாளனாக இருந்து எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும். இத்தலம் என் பெயரால் ‘கருங்குயில் நாதன் பேட்டை’ என்று அழைக்கப்பட வேண்டும்” என்று வேண்டினான். இறைவனும் அப்படியே அருள்பாலித்தார்.

இந்த சக்திபுரீஸ்வரர் ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நந்தியும் பலிபீடமும் இருக்க நுழைவுவாசலின் இடது புறம் விநாயகரும், வலது புறம் வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் வீற்றிருக்கிறார்கள்.

எதிரே கருவறையில் இறைவன் சக்திபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னை ஆனந்தவல்லி தென்திசை நோக்கி தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்புரிகிறார். மகாமண்டபத்தில் பிராம்மி, சாமுண்டீஸ்வரி, கவுமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி என சப்த மாதர்களின் திருமேனிகள் உள்ளன. இக்கோவிலின் தீர்த்தம் ‘கருணா தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தம் சகல வியாதிகளையும் தீர்க்க வல்லது என்கின்றனர் பக்தர்கள்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*அமைவிடம்*

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். நகரப் பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

சிவாய நம 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் ஆத்ம நமஸ்காரம் ஈசரே 🌹

உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ  வணக்கங்கள்.

அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜

Thursday, December 15, 2022

வீட்டில் வணங்க தக்க ஆஞ்சநேயர்

வீட்டில் வணங்க தக்க ஆஞ்சநேயர்.
குறிப்பிட்ட ஆஞ்சநேயர் வடிவங்களை நாம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். சிலர் ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்வதுண்டு. ஏனெனில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரை வழிபாடு செய்பவரும் திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவார் என்ற மூடநம்பிக்கை பரவி இருப்பதே இதற்கு காரணம் ஆகும். ஆனால் உண்மையில் அனுமன் ராமபிரானின் பக்தன் மட்டுமல்லாமல் ராமனின் உற்ற நண்பரும் ஆவார். சிவபெருமானின் அம்சமான ஆஞ்சநேயர் ஒரு பிரம்மச்சாரி மட்டுமல்ல ஒரு சிரஞ்சீவியும் ஆவார். பிரிந்து கிடந்த ராமன் மற்றும் சீதையை மீண்டும் ஒன்று சேர்த்தவர் வாயு புத்திரனான ஆஞ்சநேயரே ஆவார்.

இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தினால் உயிருக்கு போராடிய லட்சுமணனை சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உயிர்ப்பித்தவரும் ஆஞ்சநேயரே. தமது நண்பன் சுக்ரீவனுக்கும் நல்வழி காட்டியவர் ஆஞ்சநேயரே. நம் வீடுகளில் இருக்க வேண்டிய மூர்த்திகளில் ஆஞ்சநேயரும் ஒருவர். பஞ்சமுக ஆஞ்சநேயரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். ஆஞ்சநேயரின் வடிவங்களில் சஞ்சீவிராய ஆஞ்சநேயரே மிகவும் வலிமை மிக்கவர். இத்தகைய ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வணங்கும் போது கட்டாயம் ராமபிரானின் படம் இருக்க வேண்டும்.

வழிபாடு செய்யும் காலத்தில் ராம நாமத்தினை நாம் சொல்ல வேண்டும். நமது அனைத்து விதமான கோரிக்கைகளையும் அவரிடம் வைத்து வணங்க வேண்டும். கோரிக்கைகள் ஏதுமில்லாமல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யக்கூடாது. அவ்வாறு கோரிக்கை இல்லாமல் செய்யும் வழிபாட்டால் வழிபாடு செய்பவர் ஆஞ்சநேயர் போல் பிரம்மச்சாரியாகவே இருந்து விட வாய்ப்புண்டு. எனவே அனுமனிடம் திருமணத்தடை நீக்குமாறு வேண்டுவது உத்தமம். ஆஞ்சநேயரிடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். ராமனை துதிக்கும் மக்களின் துதியை கேட்பதற்காகவே ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக வாழ்ந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்....

25 வகையான ஏகாதசி என்னென்ன🔯*

*🔯25 வகையான ஏகாதசி என்னென்ன🔯*
*🔯திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும்.*

 *🔯ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் . இந்த திதியை புண்யகாலம் என்பர் .*

 🔯இதில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக இருக்கிறது. 

ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்கு பின் மோட்சமும் கிடைக்கும்.

ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. 

அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். 

அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, 

அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. 

முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம்

 சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும்.

 இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம்.

 இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. 

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று “பாரணை ” என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள்.

ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

ஏகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. 

இதனால் மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும்.

 விரதத்தை முடித்த உடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக் கூடாது.

 உபவாசத்தின் போது சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.

*🔯25 ஏகாதசிகள்*

1. சித்திரை வளர்பிறை ஏகாதசி  காமதா ஏகாதசி

2. சித்திரை தேய்பிறை ஏகாதசி  பாப மோசனிகா ஏகாதசி

3. வைகாசி வளர்பிறை ஏகாதசி  மோகினி ஏகாதசி

4. வைகாசி தேய்பிறை ஏகாதசி  வருதினி ஏகாதசி

5. ஆனி வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி

6. ஆனி தேய்பிறை ஏகாதசி அபரா ஏகாதசி

7. ஆடி வளர்பிறை ஏகாதசி விஷ்ணு சயன ஏகாதசி

8. ஆடி தேய்பிறை ஏகாதசி யோகினி ஏகாதசி

9. ஆவணி வளர்பிறை ஏகாதசி புத்திரத ஏகாதசி

10. ஆவணி தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி

11. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி பரிவர்த்தன ஏகாதசி

12. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி அஜ ஏகாதசி

13. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி

14. ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திரா ஏகாதசி

15. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி பிரபோதின ஏகாதசி

16. கார்த்திகை தேய்பிறை ஏகாதசி ரமா ஏகாதசி

17. மார்கழி வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி

18. மார்கழி தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி

19. தை வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்திர ஏகாதசி

20. தை தேய்பிறை ஏகாதசி சபலா ஏகாதசி

21. மாசி வளர்பிறை ஏகாதசி ஜெய ஏகாதசி

22. மாசி தேய்பிறை ஏகாதசி ஷட்திலா ஏகாதசி

23. பங்குனி வளர்பிறை ஏகாதசி ஆமலகி ஏகாதசி.

24. பங்குனி தேய்பிறை ஏகாதசி விஜயா ஏகாதசி.

25.   அதிக ஏகாதசி கமலா ஏகாதசி
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*🔯ஸர்வம் கிருஷ்ணார்ப்பயாமி*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

"மாதத்தில் நான் மார்கழி" என்றான் கீதையில் கிருஷ்ணன்

ஆண்டாள் அருளிய திருப் பாவை
 
               மார்கழி சிறப்பு

"மாதத்தில் நான் மார்கழி" என்றான்  கீதையில் கிருஷ்ணன்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்று சிலரும், திறக்காத கோயில்களும் திறக்கும் சிறந்த மாதம் இது !  என்றும், ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல்லையும் உளுந்தையும் சேமிக்கும் மாதம் என்று சிலரும் , தை மாதத்தில் கொண்டாடப் படும் அறுவடை விழாவைச் சிறப்பாக கொண்டாட மார்கழி மாதத்தில் கரும்பு , நெல் , உளுந்து , வாழை , மஞ்சள் போன்றவற்றைவீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள்
மார்கழி மாதத்தில் இல்லை என்றும் , அதனால் அது சூன்யமாதம் இல்லை என்று சிலரும் கூறுகின்றனர்.
போதாக்குறைக்கு ' மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான். ''

ஒவ்வொரு மாதத்திக்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு.அதில் மார்கழி 'கேசவன் ' என்பது பெயர்.கேசவன் என்பதற்குக் கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை
அழித்ததற்காகத் திருமாலுக்குப் அந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
"கேசி" என்னும் அரக்கனை அழித்ததால் கேசவன் என்ற பெயர் ஏற்பட்டதாக புராணம் கூறுகிறது.

மறைந்து கிடக்கின்ற எல்லாப் பொருள்களையும் ஆழ்ந்து அறியும் தன்மை உடையவர்கள் ஆழ்வார் எனப்படுவர் ஆழ்வார்கள் பன்னிருவர்.
இவர்கள், பொய்கையார்,  பூதத்தார்,  பேயார்,  திருமழிசை,  மாறன் (நம்மாழ்வார்),  மதுரகவி,  சேரர் பிரான் (குலசேகரன்),  திருமங்கை மன்னன், பட்டர்பிரான் (பெரியாழ்வார்),  கோதை நாச்சியார் (ஆண்டாள்),  தொண்டர் பாதப் பொடி (தொண்டர் அடிப்பொடி),  பாணன் (திருப்பாணாழ்வார்) ஆகியோர் ஆவர்.இவர்கள் அருளிச் செய்தவை "நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள்"  ஆகும். கி.பி. 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனி என்பவர் இவற்றைத் தொகுத்தார். 

ஆழ்வார்கள் பன்னிருவரில் கோதை நாச்சியார் என்றும்,  சூடிக் கொடுத்த சுடர் கொடி என்றும் போற்றப்படும் ஆண்டாள் ஒரு பெண் கவி. இவர் கவிதையில் பெண்மையின் ஏக்கம் முழுவதும் தொனிக்கும் கவிதைகள் ஏராளம். ஆழ்வார்களில் கடைக் குட்டியான இவர் மற்ற ஆழ்வார்களை நினைவு கூர்ந்தும், பரந்தாமனான கண்ணனை துயில் எழுப்பும் வண்ணமும் செய்த "திருப்பாவை" முப்பது பாடல்களும், தமிழ் மரபின் செழுமைக்கு  உதாரணமாகத் திகழ்கின்றன. அதனால்தான்!
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று பாடப் படுகிறது.

மாயவனை நினைந்து உருகும் மாதமாக மார்கழி திகழ்கிறது. இந்த மார்கழி மாதத்து பனிக்கு அணி சேர்த்து அழகு செய்வது ஆண்டாள் அருளிய திருப்பாவை. அந்த அரும் நூலை  நாமும் நாராயணனின் திருநாமத்தை சொல்லி படித்து வாழ்வில் நலம் பெறுவோமாக!

ஆண்டாள் அருளியது
பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்:
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்:
இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

நன்றி
இனியகாலைவணக்கம்
வாழ்கவளமுடன்நலமுடன்

Wednesday, December 14, 2022

*மார்கழி மாதத்தில்**கடைப்பிடிக்கபடும்* *முக்கிய* *விரதம்*...!!*

*ஸ்ரீராமஜெயம்* 🙏
 *மார்கழி மாதத்தில்*
*கடைப்பிடிக்கபடும்* *முக்கிய* 
*விரதம்*...!!*

மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழிவழியாகத் தொடர்ந்து 
கடைபிடிக்கப்படுகிறது.அந்த வகையில் மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் 
சிறப்பு வாய்ந்தது. 
மார்கழி மாதத்தில் விரதம்இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி 
செல்வ செழிப்புடன்வாழலாம். மேலும் திருமணத்தடை நீங்கும், குழந்தை 
பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

மார்கழி மாதத்தின்ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் 
கொண்டாடப்படுகிறது.ஸ்ரீமந்நாராயணனின்கேசவா, நாராயணா, கோவிந்தா, 
மாதவா, மதுசூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா,ஸ்ரீதரா, ரிஷிகேசா, 
பத்மனாபா, தாமோதரா என்ற பனிரெண்டு நாமங்களும், பனிரெண்டு 
மாதங்களாக கருதப்படுகின்றன.இதில்முதல் நாமமாக விளங்கும் 
ஸ்ரீமந்நாராயணனின்கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான 
மார்கழியாக விளங்குகிறது 
மார்கழியில் அதிகாலை எழுந்துஅழகானவண்ணக்கோலம்இட்டுஅதில் ஒரு 
பூசணிப்பூவையும்வைப்பதுதான்மரபு. 
இந்த மாதத்தில் கன்னிப்பெண்கள் பாவை நோன்புஇருந்து வழிபட்டால் 
அவர்களுக்கு வேண்டியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கண்ணனைகணவனாக மனதில் ஏற்றஆண்டாள் தன்னைஆயர்பாடி 
பெண்களில் ஒருத்தியாக மனதில் நினைத்துக்கொள்கிறாள்.

திருவில்லிபுத்தூரைஆயர்பாடியாகவும், வடபெருங்கோயில் நந்தகோபர் 
மாளிகையாகவும்,அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் 
நினைத்துஇடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள்.அந்நோன்பைப் 
பற்றித் திருப்பாவையிலும்கூறப்பட்டுள்ளது. 
இந்த மார்கழியில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின்போது விடியும்முன்பே 
எழுந்து விடுவார்கள். தனது தோழிமார்களானமற்ற கன்னி பெண்களையும் 
தூக்கம் கலைத்து எழுப்பிக்கொண்டு நீராடிஅருகில் உள்ள பெருமாள் 
கோயிலுக்கு சென்றுஇறைவனைத் துதித்து வழிபடுவதுதான்பாவை நோன்பின் 
முக்கியஅம்சம்.

பாவை நோன்புக் காலத்தில்ஆண்டாள்இயற்றிய திருப்பாவை , நாச்சியார் 
திருமொழி மற்றும்ஆழ்வார்கள் பாசுரங்களைமுழுவதும்அதிகாலையில் பாடி வர 
வேண்டும் 

நோன்பு காலத்தில் கன்னிப் பெண்கள் திருப்பாவை பாசுரத்தில்இரண்டாம் 
பாடலில் உள்ளது போல நெய் மற்றும் பால் உண்ணாமல் ,கண்ணுக்கு 
மையிடாமல் தலையைச் சீவிமுடித்து மலர்களைச்சூட்டிக்கொள்ளுதல் முதலிய 
அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தன்னைஅலங்கரித்துக்கொள்ளும் 
எந்த செயலையும் செய்யாமல்இறைசிந்தனையில் இந்த பாசுரங்களை தான்பாட 
வேண்டும். பெருமாளையும்ஆண்டாளையும் வழிபட வேண்டும் .இப்படி மார்கழி 
மாதம்முழுவதும் சரியாக செய்து வந்தால் கன்னிப்பெண்களுக்கு மனதில் 
நினைத்தது போலஅழகானகணவன்அமைவான்என்பதுஆன்மிக நம்பிக்கை.🙏🌹

திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலுக்கு அடுத்ததாக இந்த கோயில் புனிதமாக கருதப்பட்டு வருகிறது.

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
                 *தினம் ஒரு திருத்தலம்...

        #மூன்று_கோலத்தில்_பெருமாள்..     
      #வணங்கிய_நிலையில்_கருடாழ்வார்..

 
#___அருள்மிகு__கல்யாண_வேங்கடேச_பெருமாள்_திருக்கோயில்.

        *இந்த கோயில் எங்கு உள்ளது?* 

#ஆந்திரப்_பிரதேசம்_திருப்பதி மாவட்டத்தில் உள்ள #சீனிவாச_மங்காபுரம் என்னும் ஊரில் அருள்மிகு கல்யாண வேங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

🌺 திருப்பதியில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் சீனிவாச மங்காபுரம் என்னும் ஊர் உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

 *#இந்தகோயிலின்_சிறப்புகள்_என்ன?* 

🌺இத்தல மூலவர் மேற்கு நோக்கி இடது புறம் இரண்டு கைகளுடன், ஒன்றில் வரத முத்திரையுடனும், மற்றொன்றில் சக்ராயுதத்தினை தாங்கியும், வலது கை ஒன்றில் காதி முத்திரையுடன் சங்கினை பிடித்துக்கொண்டு மிக அழகாக காட்சியளிக்கிறார்.

🌺 இவர் திருமலையில் இருக்கும் பெருமாளை போலவே கம்பீரமாக #எட்டடியில்_காட்சி_தருகிறார்.

🌺இத்தலத்தின் கருவறையில் பெருமாள் #மூன்று_கோலங்களில்_காட்சியளிக்கிறார்.

🌺நடுநாயகமாக #சீனிவாசப்_பெருமாளாக_நின்றகோலத்திலும்,  

#வலதுபுறம்_லட்சுமிநாராயணராக_அமர்ந்த_கோலத்திலும்,  

#இடதுபுறம்_ரங்கநாதராக_சயனகோலத்திலும்_பெருமாள் இருப்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.

🦅 கருவறைக்கு எதிரில் கருடாழ்வார் பெருமாளை வணங்கிய நிலையில் காட்சியளிக்கிறார்.

 *#வேறென்ன_சிறப்பு?* 

🔥இந்த கோயிலில் இலட்சுமி நாராயண சுவாமி மற்றும் ஸ்ரீரங்கநாத சுவாமி ஆகியோர் சன்னதிகள் அமைந்துள்ளன.

🔥திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலுக்கு அடுத்ததாக இந்த கோயில் புனிதமாக கருதப்பட்டு வருகிறது.

🔥தனக்கு திருமணம் நடந்த #நாராயணவனத்தில்_5_அடி_உயரத்தில் 
பால்ய வடிவிலும்,  

🔥 #சீனிவாசமங்காபுரத்தில்_8_அடிஉயரத்தில் கம்பீரமாக யௌவன பருவத்திலும் (இளைஞன்), 

🔥 #திருமலையில்_6_அடி_உயரத்தில் சம்சாரக் கோலத்திலும் (குடும்பஸ்தன்) பெருமாள் காட்சி தருகிறார்.

🔥 #இம்மூன்று_மூர்த்திகளும் சீனிவாசப் பெருமாளின் ஒரே வடிவங்களே என்பது மிகவும் சிறப்பம்சமாகும்.

 *#என்னென்ன_திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

மாசியில் பிரம்மோற்சவம் 9 தினங்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

புரட்டாசியில் பவித்ரோச்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி இங்கு சிறப்பு திருவிழாவாகும். சனிக்கிழமைகளில் பெருமாள் தேவியரோடு மாடவீதியில் உலா வருகிறார்.

 *#எதற்கெல்லாம்_பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

🔥 அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேற இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

 *இத்தலத்தில் என்னென்ன #நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?* 

🔥 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாள் மற்றும் தாயாருக்கு அபிஷேகம் செய்தும், திருமஞ்சனம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.🙏🙏

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

குருவாயூர்_ஸ்தலம்பற்றிய_10சிறப்புகள்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
                        🪔🪔🪔🪔🪔🪔🪔
             *#குருவாயூர்_ஸ்ரீகிருஷ்ணர்*
                         🪔🪔🪔🪔🪔🪔🪔
          🐘🙏என்டே குருவாயூரப்பா.🙏🐘
#குருவாயூர்_ஸ்தலம்பற்றிய_10சிறப்புகள்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1.🌺 குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் #மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. #பாதாள_அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.

2.🌺 இந்த திருக்கோவிலில் கண்ணன்  
#குழந்தை_வடிவில்_காட்சி_தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.

3.🌺 குழந்தைக்குப் #முதல்_முதலாக_சோறு_ஊட்டும்_வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.

4.🌺 இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட #யானைகள்_மிகவும்_விஷேசம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.

5.🌺 இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். #வெற்றி_பெரும்யானைதான்_சுவாமியை_சுமக்கும்_பாக்கியம்_பெறும்.

6.🌺 இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை #நிர்மால்ய_பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.

7.🌺 #நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய #ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.

8.🌺 இந்த ஸ்தலத்தில் உள்ள #துலாபாரம்_சிறப்பு_எண்ணில்_அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்தில் பழங்கள், கல்கண்டு , பொருள், காசுகள், போன்ற எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

9.🌺 #குரு_பகவானும்_வாயு_பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற #குருவாயூர். கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டிக் கொள்ளாமல், குரு+ வாயு சேர்த்து #குருவாயூர் என பெயர் பெற்றது. இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

10.🌺 கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே #கிருஷ்ணாட்டம்_மயில்_பீலியை_கொண்டு_கிரீடம்_செய்து_ஆடுவார்கள். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.

  ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண

🙏#ஸர்வம்_ஸ்ரீ_கிருஷ்ணார்ப்பணமஸ்து🙏

#ஸ்ரீகுருவாயூரப்பன்ஸ்வாமிதிருவடிகளே_சரணம்

🐘🐘🌺🐘🐘🌺🐘🐘🌺🐘🐘🌺🐘🐘🌺🐘🐘

திருமோகூர்_ஸ்ரீகாளமேகப்_பெருமாள்கோயில்_108_வைணவத்திருத்தலங்களில்_46வது_திருத்தலமாகும்_ஒன்றாகும்

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

               #அமிர்தமழை_பொழியும்  
            #ஸ்ரீகாளமேகப்_பெருமாள்.....!!!
#திருமோகூர்_ஸ்ரீகாளமேகப்_பெருமாள்கோயில்_108_வைணவத்திருத்தலங்களில்_46வது_திருத்தலமாகும்_ஒன்றாகும். 

🍒மூலவர்: ஸ்ரீகாளமேகப் பெருமாள் 
திருமோகூர் ஆப்தன்

🍒தாயார்: ஸ்ரீமோஹனவல்லித் தாயார்

🍒புஷ்கரணி: க்ஷீராப்தி புஷ்கரணி

🍒விமானம்: சதுர்முக விமானம்

🍒பல லட்சம் வருடங்கள் பழமையான கோவில்

🍒நம்மாழ்வார் இவ்வூர் கோயில்மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

#பெருமாள்_மோகினி_அவதாரம்கொண்டு_அமிர்தத்தை_தேவர்களுக்கு_வழங்கிய தலம் என்பதாலேயே, இந்தத் தலம் #மோகன_க்ஷேத்திரம்_மோகினியூர்_மோகியூர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, இப்போது #மோகூர் என்று விளங்குகிறது. 

🍒 கோயிலினுள் நுழைந்ததும் துவஜஸ்தம்பம் நம்மை நெடிதுயர்ந்து வரவேற்கிறது. அதன் பீடத்தில் கம்பத்தடி பெருமாள் பளபளவென்று காட்சியளிக்க, அவருக்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். அருகே மண்டபத் தூணில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கும் வெண்ணெய்க் காப்பிட்டு,  நெய்தீபம் ஏற்றுகிறார்கள். இந்த #ஆஞ்சநேயருக்கு_ஆதிசேஷன்குடைபிடித்திருப்பது_கூடுதல்_சிறப்பு. வெளிப் பிராகாரத்தில் இந்த ஆஞ்சநேயருக்கு  இடப்புறமாக தனி சந்நதியும் உள்ளது. 

#க்ஷீராப்தி (பாற்கடல்) சயனராகப் பரிமளிக்கும் பெருமாளையும் தரிசிக்கலாம். உறங்குவதுபோல பாசாங்கு செய்யும் பெருமாளை, தாயார் எழுந்திருக்கு மாறு பிரார்த்தனை செய்வதாக ஐதீகம். பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிக்கொணர உதவுமாறு அவள் வேண்டிக்கொள்கிறாளாம். அதனாலேயே, பாற்கடல் கடையப்படும்போது இழு வேகத்தால் மந்தாரமலை தடுமாற, அதை நிலைநிறுத்தும் எண்ணத்தில் கூர்ம அவதாரம் எடுத்து மலைக்கு அடியே சென்று, அதனைத் தாங்கிக் கொண்டார், பெருமாள். அதுமட்டுமல்ல; #மோகினிஉருவெடுத்து_தேவநோக்கத்தை_நிறைவேற்றினார். ஆகவே இந்தக் கோலத்தை #பிரார்த்தனா_சயனக்கோலம் என்றும் வர்ணிக்கலாம். 

🍒 ஸ்ரீதேவியும் பூதேவியும் பகவான் காலடியில் அமர்ந்திருந்தாலும் அவர் பாதங்களைத் தொடாமல், இருகரம் கூப்பி அமர்ந்திருப்பதிலிருந்து இந்த வர்ணனை பொருத்தமான தாகவே அமைகிறது. 

🍒அடுத்து மோகனவல்லித் தாயார் தரிசனமளிக்கிறார். இவருக்குத் தனியே உற்சவம் கிடையாது என்பதால், இவரைப் #படிதாண்டா_பத்தினி என்று சிறப்பிக்கிறார்கள். இதனாலேயே, பங்குனி உத்திரத்தன்று, திருக்கல்யாண நிகழ்ச்சியின்போது, பெருமாள் தாயார் சந்நதிக்கு எழுந்தருள்கிறார். பெருமாள் வீதி புறப்பாடு செல்லும்போது ஆண்டாள் உடன் செல்கிறார். 

🍒 புலஸ்தியர் என்ற முனிவர்,  பெருமாளை நோக்கிக் கடுந்தவம் இயற்றினார். பாற்கடலைக் கடையும் சமயத்தில் திருமால் கொண்டிருந்த தோற்றத்தைத் தான் காண விரும்பினார். அதன்படியே திருமால் மோகினி அவதாரக் காட்சி தந்தார். 

#திருமோகூர்_நண்பன்!

#காளமேகம் (கருமேகம்) நீரைத் தனக்குள் தாங்கி, மக்களுக்கு மழையாய்த் தருவது போல் இங்கு திருமால் ஐந்து ஆயுதங்களைக் கரங்களில் தாங்கி, வலக்கையால் தன் திருவடிகளைச் சுட்டிக்காட்டி, #தன்அருளை_மழையாய்த்_தருகிறார்.

#உற்சவர்_நண்பன்” (வடமொழியில் ஆப்தன்) என்று அழைக்கப்படுகிறார். தன்னை நாடும் பக்தர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்கள் இறுதிக்காலத்தில் வழித்துணையாகவும் வந்து அருளுவதால் இந்தப் பெயர்.

🍒திருப்பாற்கடல் பொய்கைக்குக் #கிழக்கில்_ஒரு_விருட்சம்_இருக்கிறது. இந்த மரம் ஆதியில் கிருதாயுகத்தில் திவ்ய விருட்சமாகவும், திரேதாயுகத்தில் வன்னி மரமாகவும், துவாபரயுகத்தில் வில்வ மரமாகவும், கலியுகத்தில் அரச மரமாகவும் திகழ்கிறது.

🍒 இங்கு ஆதிசேடனுக்குத் தங்கக் கவசங்கள் இருப்பது சிறப்பு.

🍒திருமோகூர் என்ற இந்த திவ்ய தேசத்தில் இன்னொரு சிறப்பான அம்சம் - #சக்கரத்தாழ்வார்_தனி_சந்நதியில் கொலுவிருக்கும் இவருக்கு சுதர்ஸன ஹோமம் செய்து தங்கள் விருப்பங்களை பக்தர்கள் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். திருமணம், பிள்ளைப்பேறு, வேலை, நோய்கள், வியாபார அபிவிருத்தி, செய்வினைக் கோளாறு, கடன் தொல்லை, வழக்குகள் என்று பல பிரச்னைகளுக்கு இந்த சக்கரத்தாழ்வார்  ஆறுதலும் தீர்வும் அளிக்கிறார்.  

நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காமரூபங் கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்றென்னுமின் எத்துமின் நமர்காள்"

🍒🍒-என்று திருமோகூர் பெருமாளைப் போற்றிப் புகழ்கிறார் நம்மாழ்வார். ‘நமக்கு நல்ல அரணாக அமைந்து நம்மைக் காப்பாற்றுகிறார் இந்தப் பெருமாள்.  அப்படியும் தீமையே உருவான அசுரரை அண்டினோமானால், மோஹன ரூபம் கொண்டு, அந்த அசுரரை நிர்மூலமாக்கி நம்மைக் காக்கவல்லவன் இந்தப்  பெருமாள். இவனது திருநாமமே நம்மை எல்லாத் துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கும்’ என்கிறார். 

🍒கோயில் கலைச் சிறப்புகள்
இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி #உயரமான_அதிட்டானத்தின்மீது_அமைக்கப்பட்டுள்ள_கட்டுமான_கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.
இக்கோவிலின் #கம்பத்தடி இம்மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக்கொண்ட #ஒற்றைக்_கல்லினாலான_சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது.

🍒இந்த புகழ் பெற்ற திவ்ய தேசம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

🍒 மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் #ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு மதுரையில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது.

(🙏 நன்றி sri Sree Lakshme Saran  🙏🙏🙏)
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும்.

🕉️மந்திரமாவது நீறு 
திருஞானசம்பந்தர் பெருமான் பாடிய திருநீற்று பதிகத்தில் வரும் முதல் வரி..

திருநீறு எப்படி மந்திரமாகும்?

திருநீறை பலரும் பசுவின் சாணத்தைக் கொளுத்திய சாம்பல் என்று நினைக்கின்றார்கள். உண்மையில் மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு.

திருநீறு மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது.திருநீறே திருவைந்தெழுத்து மந்திரமாகிய சிவாயநம என்பதன் ஸ்தூல வடிவம் (உருவம்). கண்ணுக்குத் தெரியாத மந்திர ஆற்றலே திருநீறாகத் திகழ்கிறது
திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும்.

இறைவன் என்பவன் அழிவில்லாதவன். அவனின் அருட்கொடையான திருநீறுக்கு அழிவு என்பதே இல்லை. திருநீறானது வேறு பொருளாக மாறுவதும் இல்லை. எனவே திருநீறினை நெற்றியில் அணிந்து கொண்டால் அழிவில்லாத இறைவனை அடைவதற்குரிய வழி கிடைக்கும்.
நாம் ஒவ்வொரு முறையும் திருநீறினை அணியும்போது இறைவனாரின் திருவைந்தெழுத்தை கூற வேண்டும்.

🪔ஓம் நமசிவாய வாழ்க🪔
🪔திருச்சிற்றம்பலம்🪔

என்றும் சிவ பணியில் சிவ கீர்த்தனா ஆறுமுகம் 🙏🙏

பயம்போக்கும் பைரவர்- கோயில்கள்

#பயம்போக்கும் பைரவர்-  கோயில்கள்
காசி: 
காசியே சிவனின் தலைமைக்காவலரான பைரவரின் பிரதான தலமாகும். காசி விஸ்வநாதர் கோயிலின் வடக்கே பைரவநாத்தில் உள்ள காலபைரவர் சன்னதியே பைரவரின் தலைமையிடம் ஆகும். 

இந்த சன்னதி பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். காசியில் இறப்பவர்களின் பாவபுண்ணியக்கணக்குகளை சித்ரகுப்தன் எழுதாமல், காலபைரவரே எழுதி பலன்களை அளிக்கின்றாராம்.

 #ராமகிரி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அருகிலுள்ள வாலீஸ்வரர் ஆலயத்தினை ஒட்டி கால பைரவருக்கான தனி ஆலயம் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் அமைக்கப்பட்டது. 

இந்த பைரவ ஆலயத்தில் கால பைரவர் தனது சக்தியான காளி தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 #திருவொற்றியூர்:

 சென்னை - பாரிமுனையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தியாகராஜசுவாமி ஆலயத்தில் (மாணிக்கத் தியாகர் - வடிவுடையம்மை) வட்டப்பாறையம்மன் என்னும் துர்க்கை சன்னதிக்கு எதிரே

 சூர சூளாமணி பைரவருக்குத் தனிகோயில் உள்ளது. சீர்காழி சட்டநாதர் ஆலயம்: சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தானமாக விளங்குவது சீர்காழியாகும்.

 திருஞான சம்பந்தர் அவதரித்த மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் என்ற பெரிய சிவாலயம் உள்ளது.

 இத்தலத்திலுள்ள மலைக்கோயில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் காட்சி தருகிறார். இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோயில் உள்ளது.

 காஞ்சிபுரம் #வைரவேச்சுரம்: திருக்கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் உள்ளது.

 இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளிய பைரவருக்கும் தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்தான்.

 இதன் அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது.

 இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ளது. ÷க்ஷத்ரபாலபுரம் கால பைரவர்: பைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது. கும்பகோணம் மயிலாடுதுறை வழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த கால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது 

என்று கூறுவர். #தில்லையாடி கால பைரவ விநாயகர்: மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக செல்லும் வழியில் பொறையாரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் தில்லையாடி அமைந்துள்ளது. 

அஷ்ட பைரவ யாத்திரை தலங்கள்: காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு பகுதிகளில் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன.

 இவைகள் எல்லாவற்றையும் தரிசித்து வருவது இயலாத காரியம். ஆகவே மிக முக்கியமான எட்டு பைரவத் தலங்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதங்களில் அஷ்டமி தினத்தன்று இந்த வழிபாடு செய்யப்படுகின்றது. 

வடக்கே காசி நகரில் அனுமன் காட்டில், ருரு பைரவரும், துர்கா மந்திரில் சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரத்தில் அஜிதாங்க பைரவரும்,

 லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், திரிலோசனகஞ்ச்சில் சங்கார பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், காமாச்சாவில் வடுக பைரவரும், காசிபுராவில் பீஷாண (பூத) பைரவரும், காசி நகரில் சிறப்பாக வழிபடப்படுகின்றனர்.

 தெற்கில் திருப்பத்தூர், பைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி

 ஆகிய தலங்கள் அஷ்ட பைரவத் தலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவர்களைத் தரிசிக்க செல்வதே அஷ்ட பைரவ யாத்திரை எனப்படுகிறது.

 வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த வைரவன்பட்டியில் மகா பைரவர் சிவகுமரனாகத் தனிச்சிறப்புடன் வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார்.

 சென்னிமலை: ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் பைரவருக்கு தனிக்கோயில் உள்ளது. 

திருப்பத்தூர் யோக பைரவர்: யோக பைரவரின் அருட்தலமான இந்த திருப்பத்தூர் மதுரையிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

 இலுப்பைக்குடி வடுக பைரவர்: காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ள இந்த இலுப்பைக்குடித் தலத்தில் தான்தோன்றீஸ்வரர் - வடிவுடையம்மன் மூலவர் வடிவங்களாகத் திகழ்ந்தாலும் பரிவாரத் தெய்வமாகத் திகழும் வடுக பைரவரே சிறப்புத் தெய்வமாக வழிபடப்படுகிறார்.

 புதுச்சேரியிலுள்ள திரு ஆண்டார் கோயில் வடுக பைரவர், திருப்பாதிரிபுலியூர் கால பைரவர், 

திருமயிலை கபாலீஸ்வரர், திருஒற்றியூர் பைரவர், திருவான்மியூர் பைரவர் முதலிய தலங்களிலுமுள்ள பைரவ வடிவங்கள் அதிக சக்தி உள்ளவர்களாக வழிபடப்படுகின்றனர்.

 ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோயில் கொண்டுள்ள தலங்கள்: 

திருப்பதி ஏழுமலையான் சக்கரம் #ஸ்வர்ணஆகர்ஷண சக்கரம் என்பதால் பொன் பொருள் குவிகிறது. 

சிதம்பரம்: தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார்.

 விருதுநகர்: இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார். 

ஆடுதுறை: ஆபத் சகாயேச்வரர் கோயிலில் கால பைரவர் மட்டுமல்லாது ஸ்வர்ண பைரவரும் இருக்கிறார். தபசுமலை: புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தபசு மலையில் கௌசிக முனிவர் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும், முருகப் பெருமானையும் நேரெதிரே நிர்மாணித்து ஸ்வர்ண பைரவர், பைரவி உற்சவ மூர்த்தங்களை அமைத்துள்ளார்.

 காரைக்குடி: இங்கு புகைவண்டி நிலையத்திற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இலுப்பைக்குடி என்னும் தலம். இங்குள்ள பைரவர் தனாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். 

ஆலயம் சிவாலயம் என்றாலும் பைரவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. படப்பை: தாம்பரத்திலிருந்து காஞ்சி செல்லும் சாலையில் படப்பை என்னும் ஸ்தலமுள்ளது. 

அங்கு துர்க்கை சித்தர் அவர்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மூர்த்திகளை சிறப்புற அமைத்துள்ளார்.

 தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோயில் இங்கு தான் முதன்முதலில் கட்டப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார். 

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது. ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது. 

தாடிக்கொம்பு: திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் ÷க்ஷத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார். 

சிவன் கோயில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோயிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.

 பஞ்சமுக பைரவர்: முசிறி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யாளி வாகனத்தில் அமர்ந்து பஞ்சமுக பைரவர் அருள்பாலிக்கிறார். 

முக்கிய பைரவர் ஸ்தலங்கள்: வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும். 

திருக்கோஷ்டியூர்: பயம் போக்கும் பைரவர்- இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் #குழந்தை வடிவில் காட்சி தருகிறார்.

 நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர். பைரவபுரம்:

 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெண்பாக்கம் அருகில் உள்ளது பைரவபுரம். ஸ்வர்ண கால பைரவர் கோயில் இங்கே உள்ளது. 

சிவபுரம்: இது கால பைரவ ÷க்ஷத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோயிலாக விளங்குகிறது. 

இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

 எமனேஸ்வரம்: எமனேஸ்வரமுடையார் கோயிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

 காளையார் கோயில்: இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார். இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

 திருநாகை: நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.

 மதுரை: இங்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும், கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர். 

மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோயிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது.

 இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது. திருவண்ணாமலை: இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.

 திருமயம்: இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார்.

 இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை. 

பொன்னமராவதி புதுப்பட்டி: இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. சேந்தமங்கலம்: இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார்.

 எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும். 

முறப்ப நாடு: எந்தக் கோயிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார். ஆனால் முறப்ப நாடு கோயிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். 

ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர். இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.

 திருவாஞ்சியம்: தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். 

யம பயம் நீக்கும் தலம். திருச்சேறை: கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும். 

திருப்பாச்சேத்தி: மதுரை - ராமேஸ்வரம் சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். 

ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

 நாகை: இங்கு சம்ஹார பைரவராக தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார். கும்பகோணம்: வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள்.

 ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம். காளஹஸ்தி: இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.

 பழநி: அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான #விஜயபைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார். 

சீர்காழி: சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும். சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், 

ஆத்தூர் வட்டம் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய கால பைரவரை வணங்கி பயன் பெறலாம். 

சேலம்: இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார். 

மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.

 திருவான்மியூர்: சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன. இலுப்பைக்குடி: இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர். இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

 அந்தியூர்: ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோயிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோயிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார். 

சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது. திருவியலூர் (திருவிசநல்லூர்): கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயிலின் ஈசான்ய மூலை.

Followers

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

ஐவண்ணப்பெருமான்.. திருமூக்கீச்சுரம்.. பிரம்மன் வழிபட்ட தலம்..!! அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்...!!    *இந்த கோயில் எங்க...